GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு

சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சர்வே மற்றும் எல்லைகள் குறித்த சட்டக்குறிப்பு:-

அரசுக் காரியம் எதை செய்தாலும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சர்வே செய்யும்போது சர்வே மற்றும் புல எல்லை குறித்த சட்டம் 8/1923-ன்படி சர்வே செய்ய வேண்டும். இதில் 27 பிரிவுகள் உள்ளது. அவை பின்வருமாறு:

பிரிவு 4:-

சர்வே அதிகாரியின் பெயரிலோ (அல்லது) பெயரில்லாமலோ சர்வே செய்வது பற்றியும் அவரின் அதிகாரம், பணிவிவரம், காலம் பற்றிக் கூறுவதாகும்.

பிரிவு 5:-

ஒரு இடத்தை சர்வே செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட விவரம், தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும்.

  பிரிவு 6(1):-

சட்டப்பிரிவு 5-ன்படி நியமிக்கப்பட்ட சர்வே அதிகாரி, அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை வைத்து அவரை சர்வே செய்யும் இடத்தைப் பற்றி அவ்விடத்தின் சம்பந்தப்பட்டவர்களின் நலனுக்கான அந்த மாவட்டத்தில் பிராந்திய மொழியில் 2 பிரசுரம் செய்ய வேண்டும். அதில் நில உரிமையாளர்களோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ சர்வே அதிகாரி அழைக்கும்போது இடத்தினை காண்பிக்க வேண்டும். இதனை தண்டோரா போட்டோ / பிரசுகரத்தின் நகலை கிராம சாவடியில் ஒட்டியோ விளம்பரம் செய்ய வேண்டும். சார்வு செய்யும்போது 6(1)-ல் கையொப்பம் வாங்க வேண்டும்.

பிரிவு 7:-

சர்வே அலுவலர் பின்கண்ட சட்டப்படி சர்வே செய்ய வேண்டியது என்பதாகும்.

பிரிவு 8(1):-

நிலத்தை அளப்பதற்கான சர்வே கற்கள், கிரையத்தொகை, கூலியும் ஆகிய மொத்தத் தொகையை நில உரிமையாளர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு விகிதாசாரப்படி வசூல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதனை கிராம நிர்வாக அலுவலர் வரி வசூலுடன் சேர்த்து வசூல் செய்ய வேண்டும்.பிரிவு 8(2):-

இந்த கேட்பு நோட்டீஸ் கூறப்பட்ட செலவுத் தொகை சரியாக இல்லை என்ற நில உரிமையாளர் எண்ணினால் அதற்கான படிவத்தில் எழுத்து மூலம் மேல்முறையீடு செய்வதற்கு இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 8(3):-

இந்த நோட்டீஸ் கிடைத்த மூன்று மாத காலத்திற்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். கால தாமதத்திற்கான காரணம் சரி என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரி இந்த மனுவினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரிவு 8(4):-

மேல்முறையீட்டின் தீர்ப்பினை நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பிரிவு 9(1):-

சர்வே முடிந்தவுடன் நிலங்களின் எல்லைகள் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டு அளக்கப்பட்டுள்ளன என்றும், தனக்கு எல்லைப் பற்றி எவ்விததாவாவும் இல்லை என்று துணை ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் தீர்மானம் செய்ய வேண்டும்., இது சட்டப்பூர்வமான தீர்மானமாகும்.

பிரிவு 9(2):-

தீர்மானத்தை ஒரு நோட்டீஸ் மூலம் அனைத்து பட்டாதாரர் மற்றும் அரசுத் துறைக்கு தெரிவித்து ஒரு நோட்டீஸ் மூலம் சார்வு செய்ய வேண்டும். இது 9(2) எனப்படும். இந்த 9(2) நோட்டீஸ் அந்த நபருக்குரிய புல எண்கள், விஸ்தீரண விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும் 9(2) நோட்டீஸ் வரப்பெற்ற மூன்று மாத காலத்திற்குள் எல்லை அளவில் குறை இருந்தால் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும். மேலும், புலப்படம் தேவையானால், ஒரு புலத்திற்கு ரூ.10/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும். அரசிற்கு சொந்தமான புலத்திற்கு சம்மந்தப்பட்ட அரசுத்துறைக்கு 9(2) நோட்டீஸ் சார்வு செய்ய வேண்டும். இந்த நோட்டீஸை பட்டாதாரர்களுக்கும், அரசுத்துறைக்கும் நேரிடையாக சார்வு செய்ய வேண்டும்.

பிரிவு 10(1):-

நில அளவையின்போது மேல்முறையீடு செய்த மனுவின்மீது உரிய உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசாரணை செய்து அவரது தீர்ப்பை கைப்பட எழுதிவிட வேண்டும்.

பிரிவு 10(2):-

10(1)-ன் தீர்ப்பை அவர் கைப்பட எழுதி சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். அதற்குரிய படிவத்தில் எழுதிட வேண்டும். அதில் அவர் இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு இருந்தால் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும்.

பிரிவு 11(1):-

பிரிவு 9,10-ல் சொல்லப்பட்ட தீர்ப்பில் பாதிக்கப்பட்வர்கள் ஆட்சேபனை செய்து மேல்முறையீடு செய்துகொள்ள இது வகை செய்கிறது.

பிரிவு 11(2):-

பிரிவு 9,10,11(1)-ன்படி உள்ளவைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கோ அல்லது இதில் விருப்பமுள்ளவர்களுக்கோ நகல் அளிக்க இது வகை செய்கிறது.

பிரிவு 12:-

பிரிவு 11(1)-ன்படி மேல்முறையீடு செய்வதற்கான காரணத்தை பிரிவு 9,10ல் உள்ளதுபோல் ஒருமாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போது தீர்ப்பின், நகலை வைத்து மேல்முறையீடு செய்ய வேண்டும். 3 மாத காலத்திற்கு மேல் ஆகியிருந்தால் தாமதத்திற்கான காரணம் சரி எனத் தெரிந்தால் மேல்முறையீட்டினை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், 12வது இறுதி விளம்பரம் செய்த பிறகு மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளக்கூடாது.பிரிவு 13:-

இது இறுதி விளம்பரம் எனப்படும். 9(2) நோட்டீஸ் சார்வுசெய்து 3மாதம் கழித்து மாவட்ட அரசிதழில் கிராமம் சர்வே செய்து முடிந்து விட்டது எனவும், எல்லை அளவு பற்றி குறை இருப்பின் இந்த உறுதி விளம்பரம் மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்த தேதியிலிருந்து 3வருட காலத்திற்குள் சிவில் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்றும் இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த நகல் ஒன்றை கிராமத்தில் பொது இடத்தில் ஒட்டியும், தண்டோரா மூலமும் விளம்பரம் செய்ய வேண்டும்.

குறிப்பு(1)

9(2) நோட்டீஸ் கொடுத்த பின் மேல்முறையீடு வந்தால் அந்த விசாரணை முடிந்து, மறுபடியும் 3 மாதம் கழித்துதான் 13ம் நெம்பர் விளம்பரம் பிரசுரம் செய்ய வேண்டும்.

குறிப்பு(2)

இந்த கிராமத்தில் கடைசியாக 9(2) நோட்டீஸ் சார்வு செய்த தேதியை கணக்கில் கொண்ட பிறகு 8 மாதம் கழித்த பிறகு 13ம் நெம்பர் விளம்பரம் செய்ய வேண்டும்.

பிரிவு 14

பிரிவு 9,10,11ன் படி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், தங்களது எல்லைகளை நிர்ணயிக்கும் 13 வது இறுதி விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 வருட காலத்திற்குள் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து பிரிவு 13-ன் படியுள்ள நில எல்லைகளை மாறுதல் செய்ய இது வகை செய்கிறது.

பிரிவு 15(1)

ஒவ்வொரு நில உரிமையாளர்க்கும், அவசியம் சர்வே கற்களை பராமரிக்க வேண்டும். சர்வேயின்போது நடப்படும் கற்களை பராமரிப்பது அந்த கல்லை தொட்டுக்கொண்டிருக்கும் பட்டாதாரர்களின் கூட்டுப்பொறுப்பாகும். அவர்களை அந்த சர்வே கற்களை சொந்த செலவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் அந்த கற்களை எதுவும் செய்யாமல் இருந்தால் அரசே அந்த கற்களை புதுப்பித்து சர்வே கற்களின் கிரையத்தொகை(ம) கூலித்தொகையை விகிதாசாரப்படி பிடித்தம் செய்ய இப்பிரிவு வகை செய்கிறது.

பிரிவு 15(2)

சர்வேயின்போது நடப்படும் கற்களை பராமரிப்பது, அந்த கல்லை தொட்டுக் கொண்டிருக்கும் பட்டாதாரர்களின் கூட்டுப்பொறுப்பாகும் என்று பிரிவு 15(1)-ன்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வேயின்போது நடப்பட்டுள்ள கற்கள் காணாமல் போனால் அதை புதுப்பிக்கும் படி சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. இது 15(2) நோட்டீஸ் எனப்படும். இந்த நோட்டீஸ் கொடுத்த 15 தினங்களுக்குள் கிராம நிர்வாக அலுவலர் உதவியைக்கொண்டு அந்தப் பட்டாதாரர் அந்தக் கல்லை புதுப்பிக்க வேண்டும். தவறினால் அரசு அலுவலரால் அதனைப் புதுப்பித்து கல்கிரையம், கூலி ஆகியவை சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களிடம் சமமாக பகிர்ந்து வசூலிக்க வேண்டும் என இப்பிரிவு கூறுகிறது.பிரிவு 16

இதன்படி கிராம நிர்வாக அலுவலர் கிராமத்தில் சர்வேயின்போது நடப்பட்டுள்ள கற்களை தணிக்கை செய்வதற்கும், அது தொடர்பான அறிக்கை அனுப்புவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 22

இதன்படி கிராமத்தில் சர்வே செய்யும்போது எந்த இடத்தில் நுழைந்து சென்று அளவுகள் எடுக்கவும், அந்த இடத்தை சர்வே செய்யும்பொழுது மரம், செடி, வேலிகள், பயிர்கள் தடைபட்டால் அவற்றை அகற்றவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் தன் இஷ்டப்படி நிபந்தனை விதிக்க முடியுமாஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் தன் இஷ்டப்படி நிபந்தனை விதிக்க முடியுமா

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 ஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் தன் இஷ்டப்படி நிபந்தனை விதிக்க முடியுமா? இந்த வழக்கில் கண்ட எதிரி மீது திருட்டு

பொதுத் தொல்லையை (Public Nuisance) எதிர்த்து விசாரணைமுறைச் சட்டப்பிரிவு 91ன் கீழ் எவரும் வழக்குபொதுத் தொல்லையை (Public Nuisance) எதிர்த்து விசாரணைமுறைச் சட்டப்பிரிவு 91ன் கீழ் எவரும் வழக்கு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.பொதுத் தொல்லையை (Public Nuisance) எதிர்த்து விசாரணைமுறைச் சட்டப்பிரிவு 91ன் கீழ் எவரும் வழக்குத் தொடரலாம். பொது வழியை

லோக் அதாலத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்லோக் அதாலத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 131 நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். லோக் அதாலத் பெயர் விளக்கம்?நீதிமன்ற லோக் அதாலத் என்றால் என்ன? லோக்அதாலத் எப்போது

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.