
Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)
-
by admin.service-public.in
- 177
- Points / குறிப்புகள்:
- Legal notice / சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பும்போது அது ஒரு அறிவிப்பாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு எச்சரிக்கையாக இருக்ககூடாது.
- சட்ட அறிவிப்பு கடிதம், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டுமே தவிர, வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத நபர்களுக்கு கொடுக்க கூடாது.
- மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு சட்ட அறிவுப்பு அனுப்பவேண்டுமானால், அதை Cpc Act-80 ன் கீழ் அனுப்ப வேண்டும்.
- சட்ட அறிவ்வு கடித்தத்திற்கு குறைந்தது 14 நாட்கள் அவகாசம் கொடுக்கவேண்டும்.
- மாநில அரசு ஊழியர்களுக்கு சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்ப வேண்டுமென்றால், அந்த மாவட்ட ஆட்சி தலைவரையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பொதுவாக ஒரு சட்ட அறிவுப்பு கடிதம் அனுப்புவதன் நோக்கமே, ஒரு பிரச்னையை போலீசுக்கும், நீதி மன்றத்திற்கும் கொண்டு செல்லாமல் பேசி முடித்துகொள்ளலாம் என்பதாக இருக்கவேண்டும்.
- ஒரு மைனருக்கோ, புத்தி சுவாதீனமற்றவருக்கோ சட்ட அறிவிப்பு கடிதம் கொடுப்பது செல்லாது.
- சட்ட அறிவிப்புக்களை அஞ்சல் வழியாக அனுப்பலாம், சம்பந்தப்பட்ட இடத்தில் ஒட்டி தெரியபடுத்தலாம், உறவினர் வழியாக தெரியபடுத்தலாம், அல்லது செய்து பத்திரிகைகள் வழியாக அறிவுயப்பு செய்யலாம்.
- ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோடீஸ் கொடுக்கலாம், அப்போது, நபருடைய பெயர், வயது, பாலினம், தந்தை பெயர், செய்யும் தொழில், விலாசம், தொடர்பு எண் போன்றவை இடம் பெற்று இருக்கவேண்டும்.
- சட்ட அறிவிப்பு கடிதத்தை பொறுத்தவரை: Faire Notice, Public Notice, Implied Notice, Imputed Notice, Inquiry Notice, Due Notice, Constructive Notice, Actual Notice, Record Notice, Personal Notice போன்ற வகைகளில் உள்ளன.
- Courtesy: suruli min nilayam

🔊 Listen to this Points / குறிப்புகள்: Legal notice / சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பும்போது அது ஒரு அறிவிப்பாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு எச்சரிக்கையாக இருக்ககூடாது. சட்ட அறிவிப்பு கடிதம், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டுமே தவிர, வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத நபர்களுக்கு கொடுக்க கூடாது. மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு சட்ட அறிவுப்பு அனுப்பவேண்டுமானால், அதை Cpc Act-80 ன்…