RTI | Private hospitals also liable. தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.
-
by admin.service-public.in
- 62
தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு..!!
தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு நோயாளி தனது சிகிச்சையைப் பற்றிய தகவல்களை பெற உரிமை உண்டு.
தனியார் மருத்துவமனைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவப் பதிவுகளை வழங்க வேண்டும்.
மத்திய தகவல் ஆணையம்
கோப்பு எண்.CIC / AD / A / 2013 /001681SA நாள் 24-07-2014.
Nisha Priya Bhatia Vs Institute of AB&BS, GNCTD
நோயாளியின் சொந்த மருத்துவப் பதிவேடு கொடுக்கப்பட வேண்டிய தகவல்கள் ஆகும். மருத்துவ குறிப்புகள் அடங்கிய பதிவேட்டை ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 21 ஆரோக்கியத்திற்கான உரிமையையும், ஷரத்து 19 (1) வாழ்வதற்கான உரிமையையும் பற்றி கூறுகிறது. தகவல் பெறும் உரிமையும் அடிப்படை உரிமையாகும்.
இந்த உரிமை அரசுத்துறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதில்லை. தனியார் அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனிப்பட்ட மருத்துவர்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும்.
பிரிவு 2 (f) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தகவல் வரையறையின் மூலம் நாடாளுமன்றத்தின் ஆணையின்படி தகவல் ஆணையம் இதை அமல்படுத்த முடியும்.
எனவே நோயாளி ஒருவர் தனது மருத்துவ குறிப்புகளை அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

🔊 Listen to this தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு..!! தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு நோயாளி தனது சிகிச்சையைப் பற்றிய தகவல்களை பெற உரிமை உண்டு. தனியார் மருத்துவமனைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மருத்துவப் பதிவுகளை வழங்க வேண்டும். மத்திய தகவல் ஆணையம்கோப்பு…