Argue | You can argue your case yourself in court. That is our right | நீதிமன்றத்தில் உங்கள் வாழக்கை நீங்களே வாதாடலாம். அது நமது பேச்சுரிமை.

வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?

நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல் தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973-ன் விதி 2 (17) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908-ன் விதி 2 (15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் 1961-ன் பிரிவு 32-ம் தான் கூறுகிறது. முன்அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போது தான் வாங்க வேண்டும். நமக்கு நாமே வாதாடும் போது தேவையில்லை .ஏன் என்றால் நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ)ன்படி பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை.

வக்கீல்கள் எத்தனைதான் பட்டம் பெற்றிருந்தாலும் வழக்கறிஞர் அவையில் தொழில் செய்வதற்காக பதிவு செய்திருந்தாலும் வேறு நபருக்காக ஆஜராகும் ஒவ்வொரு வழக்கிலும் வழக்கறிஞர்கள் நீங்க அடுத்தவர்களுக்காக வாதாடனும் அப்படீன்னா, எப்படி நீதிமன்றத்தின் முன் அனுமதி வாங்கனுமோ அதே மாதிரி வக்கீலும் வாங்கித்தான் ஆகனும்.

இதைத்தான் வக்கீல்கள் ஒவ்வொரு வழக்கிலும் வக்காலத்து அதாவது தமிழில் பரிந்து பேசும் உரிமை கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இப்ப புரியுதா நீங்க வக்கீலுக்கு படிக்கா விட்டாலும் வக்கீல் தான் அப்படீன்னு.

AIARA

🔊 Listen to this வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல் தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973-ன் விதி 2 (17) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908-ன் விதி 2 (15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் 1961-ன் பிரிவு 32-ம் தான் கூறுகிறது. முன்அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *