சிவில் வழக்கில் தேவையில்லாமல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தால் இதுபோல செலவு தொகை கேட்டு மனு செய்தால் வழக்கு விரைவில் முடிய வாய்ப்பு இருக்கிறது!
மாண்பமை கணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,
……………………….
O.S.No…………… / 2023
இடைமனு எண்……… /2024
- ……………………..
2……………………….
* மனுதாரர் / பிரதிவாதி
-எதிர்-
1…………………………..
2……………………………
* எதிர்மனுதாரர் / வாதி
CPC 1908 இன் கட்டளை 17 விதி 2 –இன் கீழ் செலவு தொகை கோரும் மனு
இந்நிர் வழக்கின் பிரதிவாதி/ மனுதாரர் தரப்பில் வணக்கமாய் சமர்பிக்கம்படும் செலவு தொகை கோரும் மனு யாதெனில்…
- இந்நிர் வழக்கில் நாங்கள் பிரதி வாதி 1 மற்றும் 2 ஆவோம். இந்நிர் வழக்கின் ஒரு முக்கிய சாட்சியும் ஆவோம்.
- இந்நிர் வழக்கில் மனுதாராகிய நாங்களே வழக்கறிஞர் இன்றி வாதிட நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்றுள்ளோம்.
3) இந்தநிர் வழக்கின் பிரதிவாதி ஆகிய நாங்கள் எங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நாள்…………………. தேதி முதல் ………………… நாளது தேதிவரையில் தொடர்ந்து மாண்பமை நீதிமன்றத்தின் முன் நீதியின் நோக்கம் விரைவாக நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில் நேரில் ஆஜராகி வருகின்றோம்.
மேற்படி இந்த வழக்கின் மனுதாரர் ஆகிய………………….. மற்றும்…………………………….. மற்றும் அவரது வழக்கறிஞர்……………………….ஆகியோர் தொடர்ந்து மாண்பமை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் வீணான கால தாமதம் செய்து வருகின்றனர்.
4) இதனால் உ.வி.மு.சட்டம் 1908 கட்டளை 17 விதி 1 இன் கீழ் எவ்வித நியாயமான காரணங்கள் இன்றி தொடர் விசாரணை நடைபெறாமல் மாண்பமை நீதிமன்றத்தின் நியாயமான விசாரணை தாமதம் ஆகின்றது. இது நீதியின் நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது. மேலும் நியாயமான காரணம் இன்றி இந்நிர் வழக்கை CPC கட்டளை 17 விதி 2 இல் வகுத்துரைக்கப்பட்டவாறு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் வீண் காலதாமதம் செய்து வரும் இந்நிர் வழக்கின் மனுதாராரிடம் இருந்து நீதிமன்றம் உசிதமென கருதும் நியாயமான செலவு தொகை வழங்க உத்தரவிட வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்திக்கிறேன்.
மனுதாரர் / பிரதிவாதி
1.
2.
இதையே பிரமாணமாக இதில்……………….. தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது.