neethiyaithedi-நீதியைத்தேடி

Law advice | Neethiyaithedi by Warrent Balaw | சட்ட ஆராய்ச்சியாளர் வாரன்ட் பாலா எழுதிய “நீதியைத் தேடி”

நீதியைத்தேடி

கட்டுரை ஆக்கம்:  சட்ட ஆராய்ச்சியாளர்  வாரன்ட்   பாலா 

 • நூலின் வகை –  சட்டஞ்சார்ந்த விழிப்பறிவுணர்வு
 • மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
 • மின்னஞ்சல்: [email protected]
 • மின்னூலாக்கம் : சிவ கார்த்திகேயன்
 • மின்னஞ்சல் : [email protected]
 • உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
 • உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னைப்பற்றி

நாட்டுக்குப் பத்து, நமக்குப் பத்து என்ற கொள்கையோடு, 2010-க்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி, என்ற சட்ட விழிப்பறிவுணர்வு திட்டத்திற்காக 2000 ஆம் ஆண்டில், எனது சட்ட ஆராய்ச்சியைத் தொடங்கி, வெற்றிகரமாக முடித்துள்ள நான், திருவாரூர் மாவட்டம், பேரளம் என்ற ஊரில் பிறந்து, அரசின் தமிழ் வழிக்கல்வியில் மேல்நிலைக் கல்வி வரை மட்டுமே கற்றவன்.

படிப்புக்கு பயந்து, அதற்கு முழுக்கு போட்டு, தனியார் நிறுவனங்களில் உலகத்தர வெல்டராகவும், இயந்திரங்களை இயக்கும் சாதாரண தொழிலாளியாக வேலைப் பார்த்த போது, அங்கு நடந்த கொத்தடிமைச் செயல்கள், தொழிலாளர்களுக்கு சாதி, மத, இன, பேத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் நியாயத்துக்கு புறம்பான செயல்பாடுகள் எல்லாம் நிச்சயம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல மற்றும் இந்தியாவைப் பொருத்தவரை யாருக்குமே சட்டம் சரியாகத் தெரியாது என்கிற தெளிவான உள்ளுணர்வோடும் சட்ட ஆராய்ச்சியை தொடங்கினேன்.

இச்சட்ட ஆராய்ச்சியின் மூன்றாவது வருடமே நீதிபதிகளின் சட்ட அறிவின்மையால், என் மீது சட்டத்துக்கு புறம்பாக பிரப்பிக்கப்பட்ட வாரண்ட்டின்படி, என்னைக் கைது செய்ய வேண்டுமென சுமார் ஒன்றரை வருடம் சட்ட வழியில் போராடி, வெற்றி பெற்று, சென்னை மத்திய சிறைக்குச் சென்று கைதிகளுக்கு சட்ட விழிப்பறிவுணர்வூட்டி, பொய் வழக்குகளில் சிக்குண்டு, வெகுண்டெழுந்த கைதிகளை, அவரவர்களது தனித்திறனால் வாதாடி விடுதலையாக வித்திட்டேன்.

பனிரெண்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்ட என்னால், சட்டப் பட்டப் படிப்பை முடித்து, பல்லாண்டுகளாக வக்கீல் தொழில் செய்து, உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகளாக இருப்பவர்கள் உட்பட, பலருக்கும் புரியாத புதிராக இருக்கும் சட்டம், எனக்கு மட்டும் எப்படி, சர்வ சாதாரணமாக புரிந்தது என்பது, சாதாரண விடயம் அல்லவே!

இதனால்தானே, தமிழ்நாடு முழுவதும் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்தி பாமரர்கள் முதல் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் என பலரையும் தனக்குத்தானே வாதாட வழிகாட்ட முடிந்தது.

வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளின் (வி)(அ)பச்சார அவலங்கள் குறித்து தாத்தா மகாத்மா காந்தியின் கூற்றுகள் எனது சட்ட ஆராய்ச்சியின் எட்டாவது வருடத்தில், 2008 ஆம் ஆண்டிலேயே, தெரிய வந்தது. ஆனாலும், நீதியைப் பெறுவதற்கான மாற்றுத் தீர்வு என்ன என்பதை, தாத்தா மகாத்மா சொல்லாதது, எனக்காக வைக்கப்பட்ட கடமையே என்பதையும், அதனாலேயே பத்து வருட சட்ட ஆராய்ச்சியை நான் எடுக்க நேர்ந்துள்ளது என்பதையும் உணர்ந்தேன்.

 1. No law, no life. Know law, know life!
 2. நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்.
 3. நீதிமன்றத்தில் வாதாடி, பிணையில் வருவது மட்டுமல்ல, சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!
 4. நியாயம்தான் சட்டம்! அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்!!
 5. வாதாடுவது உங்களின் கடமை. நீங்கள் வாதாடினால் மட்டுமே கிடைக்கும் உங்களின் உரிமை.
 6. வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

என்கிற எதார்த்த தத்துவங்களை முன்மொழிந்துள்ளேன்.

எனது கொள்கைத் திட்டத்தின்படி, பத்து வருடச் சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என்ற பொதுத்தலைப்பின் கீழ்,குற்ற விசாரணைகள், பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? சட்ட அறிவுக் களஞ்சியம், சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி? என்ற ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் வாயிலாக எனக்கு தெரிந்த சட்ட விபரங்களை உங்களுக்கு தந்துள்ளேன்.

சட்டம் தனிப்பட்ட எவரின் பாட்டன், முப்பாட்டன் சொத்தன்று. மாறாக சமுதாயத்தின் பொதுச்சொத்தே என்பதை பறைச்சாற்றும் விதமாக, இவ்வைந்து நூல்களையும் வெளியிடும் போதே, யார் வேண்டுமானாலும், என்ன மொழியில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற வகையில் பதிப்புரிமையை பொதுவுடைமை என அறிவித்துள்ளேன்.

இப்பொதுவுடைமை நூல்கள் ஐந்தும் மத்திய சட்ட அமைச்சகம், தனக்குத்தானே வாதாடி நியாயத்தைப் பெற்ற மற்றும் உங்களைப் போன்ற சட்ட ஆர்வலர்களின் நிதியுதவியோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள சுமார் நான்காயிரம் பொது நூலகங்களுக்கும், ஆயிரத்து ஐநூறு காவல் நிலையங்களுக்கும், நூற்று இருபது சிறைச்சாலைகளுக்கும் மற்றும் எழுநூறு நீதிமன்றங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.

உரிமையின் பிறப்பிடம் கடமையே! கடமையைச் செய்யாமல், யாரும் உரிமையைப் பெற முடியாது என்பதை உணர்த்தும் வகையில், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ என்ற இருதிங்கள் இதழையும் ஆசிரியராக இருந்து எழுதியுள்ளேன்.

இதனை 2011 ஆம் ஆண்டிலேயே நூலாக தொகுத்து வெளியிட, கேர் சொசைட்டி திட்டமிட்ட பணி, இந்தி, கன்னட மொழிகளில் வெளியிட்ட முதல் நீதியைத்தேடி… நூலில் முடங்கிய முதலால், நின்று போய் உள்ளது. எப்படியாவது விரைவில், வெளி வரும் என நம்புகிறேன்.

எங்களது இச்சட்ட விழிப்பறிவுணர்வு கடமைப்பணி அகிலம் முழுவதும்உள்ள மக்களைச் சென்றடைய, உங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்குவீர்கள், நல்க வேண்டும் என கடமையாக கோருகிறேன்.

இச்சட்டப் பல்கலை ஏன்?

நாமெல்லாம் சட்டப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால், இதுதான் உண்மை!

சட்டப்படி வாழ்வதால்தான் வெளியில் இருக்கிறோம்! இல்லையென்றால் சிறையில்தானே இருப்போம்? சட்டம் தெரியாமலேயே சட்டப்படி வாழும் நமக்கு, அச்சட்டத்தை தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்?!

ஆனாலும், இதைப்பற்றிய அக்கறை குடிமக்களான நமக்கு அறவே இல்லை. இந்த அக்கறை இன்மைக்கு பற்பல காரணங்கள் உண்டு என்றாலும் கூட, ‘‘சட்டம் ஒரு இருட்டறை. அதில், வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு’’ என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று, சட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தைப்பற்றி ஒன்றும் தெரியாத நம் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்தது மிகமிக முக்கிய காரணமாகும்.

ஆம், சட்டம் தெரியாமலேயே, நாம் சட்டப்படி வாழும் போது, சட்டம் எப்படி இருட்டறையாக இருக்க முடியும்? அதில், கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களான வக்கீல்களின் வாதம் மட்டும் எப்படி, விளக்காக இருக்க முடியும்! ஒருபோதும் இருக்க முடியாது.

மாறாக, நிச்சயமாக வதமாகத்தான் (துன்பமாகத்தான்) இருக்க முடியும். அப்படித்தாம் இதுவரையிலும், இருந்து கொண்டிருக்கிறது.

ஆம்! எங்காவது ஒரு சில வக்கீல்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்காக (பாடாய்ப்படுத்தும் சட்டப் பட்டப்படிப்பு) வக்கீல்கள் மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம், கறுப்பு கொடி காட்டுதல், மனித சங்கிலி என சாலையில்தாம் போராடுகின்றனர்.
இவர்களின் பெரியப்பன் பிள்ளைகளான நீதிபதிகளோ, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு என்னும் வகையில், நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு வழக்கு நடத்த வாருங்கள் என வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்காத குறையாக அவ்வப்போது அறிக்கை விடுகிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

உண்மையில், வக்கீல்களுக்கு சட்டம் தெரியும் என்றால், தங்களது பிரச்சினைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடாமல், ரோட்டில் போராட வேண்டியதன் அவசியம் என்ன? அவர்களது பிரச்சினையையே அவர்கள் தீர்த்துக் கொள்ள வழி தெரியாமல் நடுத்தெருவில் நின்று போராடும் போது, உங்களது பிரச்சினையை எப்படி தீர்த்துத் தருவார்கள்?

மாறாக, அவர்களின் நல்வாழ்விக்காக, உங்களை தீர்த்துகட்ட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை செயல்களையும்தாம் செய்வார்கள். உண்மையில் சண்டக் கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் பாடசாலையில், கல்லூரியில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அனுதினமும் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். அவர்கள், எப்படிப்பட்ட சமூக அக்கறையோடு பாடங்களைப் படிக்கிறார்கள் என்பதை இவ்வொளி ஒலிக் காட்சியைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

நாமென்ன, மகாத்மா காந்தி அல்லது தந்தைப் பெரியாரை விட அறிவாளிகளா? இவர்களே, ‘‘வக்கீல் தொழிலை விபச்சாரம் என்று சொல்லி விட்ட பிறகு, அதற்கு மாற்று வழி வேறென்னவென்று சொல்ல வேண்டுமோ அவைகளைத்தாம், விளக்கமாக உங்களுக்காக சொல்லிக் கொண்டு இருக்கிறேன்’’.

எனவே, தேசிய கட்சியை வீழ்த்த, ரூபாய்க்கு மூன்றுபடி என, அரிசியை முன்னிருத்தி, ஆசை வார்த்தை பேசி , ஆட்சியைப் பிடித்த அண்ணா, தமிழக அரசியலில் வேண்டுமானால், பொய்யர்களுக்கெல்லாம் அறிஞராக இருந்திருக்கலாம். ஆனால், சட்டத்தில் வறிஞரே! என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அண்ணா மட்டுமல்ல; வக்கீல்கள் அனைவரும், வக்கீலாய் இருந்து நீதிபதிகளான நீதிபதிகளும் சட்டத்தில் அறிவு வறுமை யானவர்களே! என்பதை மனதில் நிறுத்தி சட்டத்தை படிக்க தொடங்குங்கள். எனது இக்கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்பதை விரைவில் அறிவீர்கள்.

நமது சந்தோசம் மற்றும் நல்வாழ்வுக்காக இயற்றப்படும் சட்டம் பற்றிய விழிப்பறிவுணர்வின்மையால், சட்டமானது சங்கடத்தை தரும் சங்கதியாகவே (செய்தியாகவே) தெரிகிறது. உண்மையில், நாட்டில் நடக்கும் செயல்கள் எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுவதே சட்டம்.

எந்த சட்டமும் திருடுங்கள், ஏமாற்றுங்கள், கொள்ளையடியுங்கள், கொலை செய்யுங்கள், தேர்தலில் தில்லுமுல்லு செய்தாவது தேர்ச்சி பெறுங்கள், அதிகாரத்துக்கு வர லஞ்சம் கொடுங்கள், அதிகாரத்துக்கு வந்ததும் லஞ்சம் வாங்குங்கள், கோடிக் கணக்கில் ஊழல் செய்யுங்கள், இயற்கை வளங்களை கொள்ளையடியுங்கள், அடுத்தவன் சொத்தை அபகரியுங்கள், மனைவியிடம் மணக்கொடை கேளுங்கள், ஏழை எளிய மக்களை வன்கொடுமை செய்யுங்கள், பெற்றவர்களை பிச்சை எடுக்க வையுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

மாறாக, இவைகளை எல்லாம், எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்றும், அப்படி மீறிச் செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும்தாம் அறிவுறுத்துகிறது. ஆனாலும், நம்மில் பலர் அச்சுப்பிசகாமல், அப்படியேச் செய்து விட்டு, தண்டனையை அடைந்திருக்கிறோம் அல்லது அடையக் காத்திருக்கிறோம் அல்லது இத்தண்டனையில் இருந்து தப்பிக்க என்ன வழி என பொய்யர்களிடம் ஆலோசனையை நாடிக் கொண்டிருக்கிறோம்.

பின், எப்படி சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஒட்டைகள் இருக்க முடியும்? இருக்கவே வாய்ப்பில்லைதானே! இல்லை என்பதுதாம் நமது ஆணித்தரமான கருத்து. ஒருவேளை, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் கூட, அது சரி செய்யப்பட வேண்டிய ஒன்றுதானே தவிர, அதையேச் சாக்குப்போக்காக சொல்லி தப்பிக்க முடியாது.

சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை இருக்கிறது என்று சொல்பவர்கள், அந்த ஓட்டையுள்ள சட்ட அதிகாரத்தில் இருந்து விலகாமல் அதைப்பிடித்துக் கொண்டே பிழைப்பு நடத்த வேண்டியதன் ரகசியம் என்ன என்பதைப்பற்றி நீங்கள் (நாம்) சிந்திப்பதில்லை.

ஆம்! சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று சொல்லக்கூடிய சட்ட அதிகார மிக்கவர்கள் எல்லாம், அச்சட்டத்தில்தான் அவர்களின் அடக்கு முறை அதிகாரங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது என, சட்டம் குறித்த தவறான புரிதலில் அல்லது அறிவு வெறுமையால் நம்புகிறார்கள்.

நமது ஊழியர்கள் ஆன அவர்கள் அனைவரும், (அதாவது, அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்தில் அல்லது நமது நல விருப்பத்திற்கு கூலிக்கு அல்லது மதிப்பு ஊதியத்திற்கு வேலை பார்ப்பவர்கள், அப்படி தவறாக நம்புவதற்கு அடிப்படை காரணம்) அவர்களுக்கு அரைகுறையாக தெரிந்த கொஞ்ச நஞ்ச சட்டம் கூட, உங்களுக்கு (நமக்கு) தெரியாமல் இருப்பதுதான்.

முதலாளியாக இருக்கும் நீங்கள், ஒருவரை வேலைக்கு வைத்து அவரை சரியானபடி வேலை வாங்க வேண்டுமென்றால், அவ்வேலைக்காரரை விட, அந்த வேலையில் நீங்கள் தெளிவானவராக இருக்க வேண்டும்தானே? அப்படி தெளிவில்லாது இருந்தால், அவ்வேலைக்காரர் என்ன சொல்கிறாரோ, செய்கிறாரோ அதுதானே சரி என நினைப்பீர்கள்!

இதுபோலவேதாம் சட்ட அறிவில், முதலாளிகளான நாம் இருக்கிறோம்! இதனாலேயே, நம் வேலைக் காரர்களான அரசு ஊழியர்கள் முதல் வக்கீல்கள், நீதிபதிகள் வரை நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது ஊழியர்கள் அனைவரும் சட்டத்தை தவறாக பயன்படுத்தி எப்படியெல்லாம் நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள், அதிலிருந்து நீங்கள், சட்டத்தை முறையாகப் பயன்படுத்தி தப்பித்து அல்லது தற்காத்து அல்லது தட்டிக்கேட்டு, உங்களின் வாழ்வை வளப்படுத்துவது எப்படி என வழிகாட்டவே இத்தளத்தை இயக்குகிறோம்.

சட்டமென்பது அனைவருக்குமான பொதுச் சொத்தே தவிர, குறிப்பிட்ட ஒரு சிலரின் அல்லது வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மக்களை ஏய்த்துப் பிழைக்க உதவும் பாட்டன், முப்பாட்டன் சொத்தோ அன்று. ஆனாலும், சட்டத்தை உங்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாததால் அன்று அப்படித்தான் நடந்தது.

ஆனால் கடந்த 2005 ஆண்டு முதல் நூல்கள் மூலம் மட்டுமல்லாது எளிய தமிழில், சாதாரண வழக்கு மொழியில், சாதாரண குடிமகன் முதல் குடியரசுத் தலைவர் வரை, சராசரியான சட்ட அறிவைப் பெற வேண்டும்; தனது பிரச்சனைக்காக தானே வாதாடி, தனது தரப்பு நியாயத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் நடத்தப்படும் உலகின் ஒரே சட்ட விழிப்பறிவுணர்வுக்கானத் தளம்.

கேர் சொசைட்டி

நாங்கள் அனைவருமே, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வேலை தேடி ஓசூர் வந்து, இங்கு அமைந்துள்ள பல தனியார் நிறுவனங்களில், தொழிலாளிகளாக இன்றும் வேலை பார்த்து வரும் சாதாரண தொழிலாளிகள்தான்.

வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்த நன்றாக சம்பாதிக்கும் நாங்கள், நம்மால் முடிந்த ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து ஓசூர் (சிப்காட்-2) நுகர்வோர் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சங்கத்தை 15-08-1998 இல் அமைத்து உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுகர்வோர் தொடர்பான களப்பணிகளை மட்டுமே ஆற்றி வந்தோம்.

2001 ஆம் ஆண்டில்தாம், எதிர்பாராத விதமாக, 2000 ஆம் ஆண்டில் தனது சட்ட ஆராய்ச்சியை தொடங்கி 2010 இல் ஆராய்ச்சியை முடிக்கும் நோக்கோடு, சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த நீதியைத்தேடி… என்ற சட்ட விழிப்பறிவுணர்வு மாத இதழின் இணை ஆசிரியரும், சட்ட ஆராய்ச்சியாளரும் ஆன திரு. வாரண்ட் பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர் மூலம் திரு.செந்தமிழ்க்கிழார் என்பவரின் அறிமுகமும் எங்களுக்கு கிடைத்தது.

அதுவரை நுகர்வோர் விழிப்புணர்வே பிரதானம் என்ற நிலையில் இருந்த நாங்கள், ‘‘ஒட்டு மொத்த சட்ட விழிப்பறிவுணர்வே பிரதானம் என்ற தெள்ளத் தெளிவான நிலைக்கு வந்தோம்’’.

இதன் அடிப்படையில் சங்கத்தின் பெயரை Consumer Awareness and Rural Education Society என்று 2005 ஆம் ஆண்டில் மாற்றி அமைத்தோம். இதன் சுருக்கம்தான் கேர் சொசைட்டி – CARE Society ஆகும். இதன் பிறகே இத்தளத்தை உருவாக்கி, திரு.செந்தமிழ்க்கிழாரை திறக்க வைத்தோம்.

ஆனால், 2006 ஆம் ஆண்டில், திரு.செந்தமிழ்க்கிழார், சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, நான் சொல்வதே சட்டம் என்றும், தானே அனைவருக்குமான சட்டத்தை இயற்றியும், தன்னைத்தானே இந்தியாவின் தலைமை நீதிபதி என்றும், குடியரசுத் தலைவர் என்றும் தான்தோண்றித் தனமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் அறிவித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.

போலி நீதிபதியாக கைது செய்யப்பட்ட செந்தமிழ்க்கிழார் மற்றும் அவரது வாசகர் லூர்துசாமி
இதன் விளைவாக 2010 ஆம் ஆண்டில், சென்னையில் போலி நீதிபதி கைது என்று அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம் பிடித்தார். பொய்யான அமைப்புக்களின் பெயரில் கட்டப்பஞ்சாயத்து

கூடவே, சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாது, நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆசைப்பட்ட வாசகர்கள் சிலரையும் சிக்க வைத்தார். காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதியாக நடித்த ‘‘டுபாக்கூர்’’ நபர் கைது.

போலி நீதிபதியாக வழக்கில் சிக்கி வாழ்க்கையை இழந்துள்ள செந்தமிழ்க்கிழாரின் சிஷ்யர் ஆறுமுகம்
முன்பாக, சட்டத்தில் மிகுந்த தெளிவுடைய திரு.வாரண்ட் பாலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட, திரு.செந்தமிழ்க்கிழார் தன்னைத் திருத்திக் கொண்டு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் முன் வராத காரணத்தால், வேறு வழியின்றி திரு.வாரண்ட் பாலா அவர்களுடன் மட்டும் இணைந்து நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம். சட்ட விழிப்புணர்வுக்கு மத்திய சட்ட அமைச்சகம் நிதி ஒதுக்குவது குறித்து அறிந்து அதற்கு விண்ணப்பித்ததில், நீதியைத்தேடி… இதழை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கு வழங்க, முதல் முறையாக 2006 இல் ரூ-15,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு மாத இதழை நூலகங்களுக்கு கொடுப்பதால், எவ்வித சட்ட விழிப்பறிவுணர்வும் சமுதாயத்தில் ஏற்பட்டு விடாது என்று தீர்க்கமாக நம்பிய திரு.வாரண்ட் பாலா, தனது பத்து வருட ஆராய்ச்சி திட்டப்படி நீதியைத்தேடி… இதழ்களின் தொகுப்பாக, அதே நீதியைத்தேடி… தலைப்பில், நூலாக வழங்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.

மேலும், அதற்கு தேவைப்படும் கூடுதலான தொகை சுமார் 50,000 ஐ தானே, பிச்சை எடுத்தாவது செய்து விட வேண்டும் என்றும் முடிவு செய்து, அதற்கான களப்பணியில் இறங்கினார். நல்ல வேளையாக மக்கள் இவரை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லவில்லை.

இவரது வழிகாட்டுதலில் தனக்குத்தானே வாதாடி தனது நியாயத்தை தக்க வைத்துக் கொண்டவர்களை, இவரே நேரடியாக அனுகி நன்கொடை கோரிய போது, ஒரு சிலரைத் தவிர பலரும் தந்ததால், அவரது அதிரடித் சட்ட விழிப்பறிவுணர்வுத் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமாகி, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே வேகத்தில் முடிந்தது.

நன்கொடை தந்தவர்களில், வாசகர்கள் மட்டுமல்லாது காவலர்கள், வக்கீல்கள், நீதிபதிகளும் உண்டு என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! எனவே, நமது இச்சட்ட விழிப்பறிவுணர்வுத் திட்டம், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதே இயற்கையின் திட்டம் போலும்!

இப்படி, இந்தியாவில் இதுவரை யாருமே செய்திராத வகையிலான, எங்களின் (நமது) சிறப்பான சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமையால், சட்ட மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவி 2007 இல் ரூ-30,000 ஆகவும், 2008 இல் ரூ-40,000 ஆகவும், 2009 இல் ரூ-30,000 ஆகவும், 2010 இல் ரூ-60,000 ஆகவும் கூடியது. திரு.வாரண்ட் பாலா அவர்களும் சுமார் இரண்டு, மூன்று மடங்கு பணத்தை நன்கொடையாக வசூல் செய்து, தான் திட்டமிட்டிருந்த ஐந்து நூல்களையும் எழுதி சமுதாயத்திற்கு பொதுவுடைமையாக அர்ப்பணித்துள்ளார் என்பதையும் பெருமையுடனும், பணிவுடனும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

திரு.வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள ஐந்து நூல்களும் எங்களால் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4000 பொது நூலகங்கள், 1500 காவல் நிலையங்கள், 120 சிறைச்சாலைகள் மற்றும் 700 நீதிமன்றங்கள் என அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

உங்களின் அவசிய மற்றும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இவ்வைந்து நூல்களையும் உரிய நன்கொடை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

எங்களின் இந்த சட்ட விழிப்பறிவுணர்வு சேவையில் நீங்களும் உங்கள் கடமையை ஆற்றிட அன்போடு அழைக்கின்றோம்.

எங்களின் முகவரி; கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா-635109.

1. நிதிபதிகளின் தீர்ப்புகளை, நிதிபதிகள் மேற்கோள்காட்டி தீர்ப்புரைக்க முடியுமா?!

1

சட்டத்தில் நீதிபதிகள் என்று குறிப்பிடப்படுபவர்கள் எப்பொழுதுமே நிதிபதிகள்தான்!

ஆமாம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 19 இல், ‘‘நீதிபதி பதிவியில் இருப்போர், அதாவது பதவியில் இருப்பது மட்டுமல்லாமல், உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் தெளிவான தீர்ப்பை உரைக்கும் அதிகாரம் பெற்றவர்களே, அதாவது தெளிவான தீர்ப்பை உரைக்கும் தகுதியுள்ளவர்களே நீதிபதிகள் ஆவர்’’.

எனது நியாயந்தான் சட்டம் என்கிற சட்ட ஆராய்ச்சியில், நீதிபதிகள் எவரும் சட்டம் மற்றும் நியாயத்திற்கு உட்பட்டு தெளிவானதொரு தீர்ப்பை வழங்குவதில்லை. ஆகையால்தான், சட்டம் (ஒ, ந)ன்றாகவே இருந்தாலும், பெ(ரு, று)ம் நி(நீதிப)திக்கு தக்கவாறு, நியாயத் தீர்ப்புகள் முன்னுக்குப்பின் முரணாக, அநியாயத் தீர்ப்புகளாக மாற்றிமாற்றி எழுதப்படுகின்றன.

இதன் உச்சகட்ட கொடுமையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளே தாங்களெழுதிய தீர்ப்புகளை மாற்றியெழுதுகிறார்கள். ஆகையால்தான், ஒட்டு மொத்த நீதிபதிகளையும், நிதிபதிகள் எனத் தெளிவாச் சொல்லுகிறேன். மேலும், இவர்கள் அடிப்படையில் மக்களின் வரிப்பணத்தில் பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகளாகவே இருக்கிறார்கள்.

இதனால்தான், ‘‘நிதிபதிகள் எழுதும் தீர்ப்புகளில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று தெரிந்தால், கழுதைக்கூட அக்காகிதத்தை திண்ணாது’’ என்றும் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறேன்.

மேலும், காசுக்காக எத்தொழிலைச் செய்வோருக்கும் கள்ளத்தனஞ் செய்யுங்குணம் இருக்கத்தான் செய்யும். இதிலும் அதிக கூலியும், அதிக அதிகாரமும் உள்ளதாக நினைக்கும் நிதிபதிகளுக்கு அதிகமாக இருக்கத்தானே செய்யும்.

இதனை மகாத்மா காந்தியும், ‘‘எது நியாயம் என்பது, தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியுமென்றும், இதில் மூன்றாம் ஆள் (யாரு, நிதிபதிகள்) கூறும் தீர்ப்பு எப்பொழுதுமே நியாயமாக இருந்துவிடப் போவதில்லையென்றும் ஆனால், நம் அறியாமையாலும், எதையும் நம்புந்தன்மையாலும், முன் பின் தெரியாத ஒருவர் (யாரு, நம் வரிப்பண கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகள்) பணத்தை வாங்கிக்கொண்டு நமக்கு நீதியை வழங்குகிறார் என்று நாம் எண்ணுகிறோம்’’ என்று, தனதுஇந்தியத்தன்னாட்சி நூலில் குறிப்பிடுகிறார்.

பகுத்தறிவு பெரியார் கூட, இதற்கான தீர்வு எனச் சொல்லும் பொழுது, ‘‘வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும். வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும், நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்’’ என்று சட்டங்குறித்த போதிய விழிப்பறிவுணர் வின்மையால் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கூற்றான வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை என்பது ஓரளவு உண்மையே என்றாலுங்கூட, வக்கீலென்கிற பொய்தொழிலே ஒழிக்கப்பட வேண்டும். இரண்டாவது கருத்து சட்டப்படியே முற்றிலுந்தவறு.

உண்மையில், சட்டத்தின் உண்மை நிலையென்ன என்பதுபற்றி இப்பொழுது சற்றே விரிவாகச் சொல்கிறேன்.

இந்திய சாசன கோட்பாடு 141-இன்படி, உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்ற ஆணித்தரமான, அசைக்க முடியாத கருத்து அனைத்துப் பொய்யர்களிடமும், நிதிபதிகளிடமும், இதனால் உங்களிடமும் இருக்கிறது. இது முற்றிலும் தவறான கருத்து.

அதன் உண்மையான கருத்து என்ன என்றால், ‘‘ஒரு வழக்கானது கீழ்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றை கடந்து உச்சநீதிமன்ற விசாரணைக்கு வரும் போது, அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு அதே வழக்கை விசாரணை செய்து தீர்வு கண்ட மற்ற கீழ்நிலை நீதிமன்றங்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்பதாகும்’’.

உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பானது இந்தியாவில் உள்ள தொடர்புடைய அந்த குறிப்பிட்ட வழக்கை விசாரணை செய்யாத மற்ற நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ‘‘இந்திய சாசன கோட்பாடு 142-இன்படி, ஒன்று, இந்திய நாடாளுமன்றம் அந்த தீர்ப்பை முன்னிருத்தி, சட்டமாக அறிவிக்கும் விதமாக சட்டத்தை இயற்ற வேண்டும். இல்லையென்றால், இந்திய நாடாளுமன்றம் சட்டமாக இயற்றும் வரை சட்டமாக கருத வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் மட்டுமே செல்லத்தக்கது ஆகும்’’.

ஆனால், இதை உணராத அன்றன்று, தங்களின் நிதி வசதிக்காக உணர மறுக்கும் கீழ் நீதிமன்ற நிதிபதிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நிதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் கீழ்நிலை நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் என இந்திய சாசனத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லையே! ஏன்?

ஒரு பேச்சுக்கு மேற்கோள் காட்டலாம் என எடுத்துக்கொண்டால், உண்மையில் இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதற்கு கீழான நீதிமன்றங்களை கட்டுப்படுத்துமா அல்லது இந்திய சாசனத்தின் கோட்பாடு 141-இல் சொல்லப்பட்டுள்ளதாக தவறாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உயர்நீதிமன்றத்துக்கு கீழான நீதிமன்றங்களை கட்டுபடுத்துமா? என்பது உட்பட தீர்க்க முடியாத பல்வேறு குழப்ப விளைவுகள்தான் ஏற்படும்.

இதேபோல, உயர்நீதிமன்ற நிதிபதிகள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தீர்ப்புரைப்பதையே நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

இதை விடக்கொடுமை என்னவென்றால், இந்நாள் உச்சநீதிமன்ற நிதிபதிகள் கூட இந்த நடை முறைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முன்னால் உச்சநீதிமன்ற நிதிபதிகள் உரைத்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டித் தான் தீர்ப்புரை செய்கிறார்கள்.

இப்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு நிதிபதியும் மற்ற நிதிபதிகள் சொன்ன தீர்ப்புகளை முன்னிருத்தி தான் தீர்ப்புரை செய்கிறார்கள் என்பதன் மூலம் எந்தவொரு நிதிபதிக்கும் சட்டத்தில் போதிய தெளிவில்லை என்பது தெள்ளத்தெளிவு.

இதனை அவர்கள் மறுத்தால், யாருக்கு சாதகமாக தீர்ப்பை எழுதவேண்டுமென நினைக்கிறார்களோ அதற்காகவும், இத்தவறான நிலைப்பாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளவுமே, மற்ற நிதிபதிகளின் தீர்ப்புகளை தங்களின் தீர்ப்பில் மேற்கோள் காட்டுகிறார்கள் என்று அர்த்தம்.

மேலும், அவன் அப்படிச் செய்தான். அதனால்தான், நானும் அப்படிச் செய்தேன் என குழந்தைகள் சாக்குபோக்கு சொல்வார்கள் தெரியுமா… அதுபோலத்தான், இவர்களும் சுய அறிவில்லாமல் இப்படிச் சொல்கிறார்கள் என்று அர்த்தம். இதில் அவர்கள் எதை ஒப்புக்கொள்ளப் போகிறார்கள்?

எதை ஒப்புக்கொண்டாலும் அவர்கள் நிதிபதிகள்தான்!

சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்பட வேண்டுமா? அல்லது தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்து, வழக்குகள் சட்டத்தின் அடிப்படையில்தான் பதிவு செய்யப்படுகின்றன என்பதால், சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு எழுத முடியுமே தவிர, தீர்ப்பின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால், வழக்குகளுக்கு தீர்ப்பின் அடிப்படையில் தீர்வு காண்பது முற்றிலும் தவறே.

நமது பரவலாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பு முறையில், நியாயம்தான் சட்டம் என்பதை நிலைநிறுத்தும் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள, இந்நாள் உச்சநீதிமன்ற நிதிபதிகள், முன்னால் உச்சநீதிமன்ற நிதிபதிகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டியோ அல்லது மேற்கோள்காட்டாமலோ அறிவித்த தீர்ப்புகள் தவறானால் கூட, அதுவும் திருத்தத்திற்கு உரியதே என்ற ஒரே காரணத்தால்தான், இந்திய சாசன கோட்பாடு 137-இன்படி, உச்ச நீதிமன்றத்துக்கு தான் பிறப்பித்த உத்தரவை தானே மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த மறு ஆய்வு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற நிதிபதிகள்கூட பல்வேறு வழக்குகளில், தாங்கள் தவறாக உரைத்த தீர்ப்புகளைக்கூட, மாற்றியுள்ளனர்.

தீர்ப்பை உரைப்பதில், உச்சபட்ச அறி(விலி, வாளி)களாக கருதப்படும் உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கே, தான் எழுதிய தீர்ப்பை மாற்றியெழுத உரிமையுள்ளபோது, அதற்கு கீழான நிதிபதிகளுக்கு மட்டும் உரிமையில்லாமல் இருப்பது எப்படி நியாயமாகும்?

இதிலும், உரிமையியல் விசாரணைகளில், அந்தந்த நிதிபதிகளுக்கே தீர்ப்புகளை திருத்தும் உரிமையுள்ளபோது, குற்றவியல் நிதிபதிகளுக்கு மட்டும் ஏன் வழங்க முடியாது. உரிமையியலுக்கு ஒரு நியாயம்? குற்றவியலுக்கு ஒரு நியாயமா?

இறதியாக, எந்தவொரு வழக்கிலும், எந்தவொரு நிதிபதி வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்க இயலாது என்று நான் மட்டுஞ்சொல்லவில்லை. உச்சநீதிமன்ற நிதிபதிகளே ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து நாளிதழில் வந்த செய்திதான் இது!

SCJ

இதனை நான் எழுதிய ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ மார்ச் – ஏப்ரல் – 2008 இதழில் எழுதினேன்.

நிதிபதிகளுக்கு என்ன பிரச்சினையோ… அவர்களுக்கு, பொய்யர்களின் மூலமாக வரவேண்டிய வழக்காளியின் நிதி வராமல் போயிருக்கலாம். அந்தக் கடுப்பில், இப்படியொரு சரியான கருத்தை தீர்ப்பில் சொல்லியிருக்கலாம்! யார் கண்டது?

எனவே, உங்கள் வழக்குகளில் தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டால், மேற்சொன்ன இவைகளையே காரணங்களாக கூறியும், சட்டப் பிரச்சினையை எழுப்பியும் மேல்முறையீடு செய்யலாம்.

2. பணம் ஒழிந்தால், இது தான் நடக்கும்!

இரவு 12 மணி…

இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை.

மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.

தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!

வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது.

Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது. உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!

மக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள் IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!

வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,

உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது, வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது,

ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்,

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது, பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,

பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள்.

திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி! காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!

அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!

ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை, சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை!

இந்த கனவும் அப்படித்தான் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!

பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய

பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது.

குறிப்பு: பொதுநலன் கருதி தலையங்கமாக வெளியிடப்படும் இந்த ஆக்கமானது, வெகுசில நாட்களாக சமூக வலைப்பக்கங்களில் உலா வருவதாகும்.

3. சான்று நகலைக் கோருவது எப்படி?

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தறுதலைச் சட்டமே என்பதும், நமக்கு தேவையான தகவல்களை சான்று நகல்களாகப்பெற சாட்சிய சட்டமே சரியானது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிவீர்கள்.

அடிப்படைச் சட்ட அறிவே இல்லாது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தகவலைக் கேட்கும் தறுதலைகள் குறித்து, அரசூழியர்கள் சொல்லும் போது, தங்களுக்கு தேவையான முக்கியமான தகவலைக் கேட்காமல், உங்கள் அலுவலகத்தில் எத்தனை நாற்காலி, மேஜை, துடப்பம் உள்ளது, எப்போது வெள்ளை மற்றும் ஒட்டை அடிக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளை கேட்பதாக குறிப்பிடுகின்றனர்.

மேலும், அவர்களுக்கு வரும் தகவல் கோரும் கடிதங்களுக்கு பெரும்பாலும், அடுத்த சில நாட்களிலேயே பதிலை தயார் செய்துவிட்டு, இறுதி நாளன்று அல்லது அதற்கு பின்னரே, முன்தேதியிட்டு அனுப்பவே வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார்களாம்.

சாட்சிய சட்டத்தின் கீழ் சான்று நகலைக் கோருவது எப்படி என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கவே செய்கிறது. இதனை தெளிவுப்படுத்தும் வகையில் பொதுநலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவு குறித்து அவர்களிடமே சான்று நகல் கோரப்பட்டுள்ளது, உங்களின் பார்வைக்காக பதிவிடப்படுகிறது.

நகலர்கள் விதிப்படி, மிகவும் அவசரமென்று சான்று நகல் கேட்டால், மூன்று நாட்களுக்குள்ளும், சாதாரணமாக கேட்டால் ஒரு வாரத்திற்கு உள்ளாகவும் வழங்கிட வேண்டும். அப்படி வழங்கிடவில்லையென்றால் அடுத்தடுத்து என்னென்ன சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005 இரண்டாவது சுதந்திரமா? அரசின் தந்திரமா! என்ற தலைப்பில் திருத்தி எழுதப்படும் நூலில் சொல்கிறேன்.

கேசொ / நிக / 19-2015 தேதி 23-04-2015

பெறுதல்
முதலமைச்சர் தனிப்பிரிவு
தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகம்.
சென்னை -9

பொருள்: நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சியச் சட்டம் 1872 இன் பிரிவு 76 இன் கீழ், முதலமைச்சர் தனிப்பிரிவு குறித்து சான்று நகல் கோருதல்…

அய்யா வணக்கம்.
கீழே குறிப்பிடும் ஆவணங்களானது, ‘நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சியச் சட்டம் 1872 இன் உறுபு 74 இன்கீழ், பொது ஆவணமாகும். இதனை இச்சட்டத்தின் உறுபு 76 இன்கீழ் சான்று நகலாகப் பெறுவதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது’.

எங்களுக்கு தேவையான சான்று ஆவணங்களாவன…

1. இம்முதலமைச்சரின் தனிப்பிரிவு எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

2. எந்த சட்ட அதிகாரத்தின்படி ஆரம்பிக்கப்பட்டது?

3. இம்முதலமைச்சரின் தனிப்பிரிவின் கொள்கையை குடிமக்களுக்கு விளக்கும் வகையில் மக்கள் சாசனம் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா?

4. வெளியிடப்பட்டிருந்தால் அது எங்கு கிடைக்கும், அதன் விலையென்ன அல்லது வெளியிடப்படவில்லை என்றால் அதற்கான சட்டக் காரணம் அல்லது அதிகாரம் என்ன?

5. மக்களின் சட்டரீதியான கோரிக்கைகளை நிறைவேற்றவென்றே பல்வேறு துறைகள் இருக்கும் போதும், அத்துறைகளில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் போதும், இத்தனிப்பிரிவின் அவசியத் தேவையென்ன?

6. இத்தனிப்பிரிவு நிர்வாகம் யாருடைய பொறுப்பில் அல்லது தலைமையின் கீழ் செயல்படுகிறது?

7. இத்தனிப்பிரிவில் மொத்தம் எத்தனைபேர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்?

8. பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்த கடிதத்தை எடுத்த எடுப்பிலேயே அனுப்பலாமா அல்லது சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத்தான் முதலில் அனுப்ப வேண்டுமா அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கும் அனுப்பலாமா?

9. பெரும்பாலும், பொதுமக்களால் முதலில் ஊழியர்களிடம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் மீது, அவ்வூழியர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே, அக்கோரிக்கைகள் குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும் நிலையில், இதனை மீண்டும் அதே அரசூழியர்களுக்குத்தான் அனுப்பி வைக்கவேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வமான காரணங்கள் என்னென்ன?

10. இந்திய அஞ்சல் சட்டவிதிகளின்படி, அத்துறைக்கு சமர்ப்பிக்கும் கடிதங்களைஅவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டுவாடா செய்தாலே போதுமானது என்ற அடிப்படையில்தான், குடிமக்களின் கோரிக்கை கடிதங்கள் உங்களிடம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அஞ்சல்துறை அதன்மீது சம்பந்தப்பட்டவர்களால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்பது யாவரும் அறிந்ததே!

11. இதேபோலவே, உங்களிடம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கை மனுக்களை பட்டுவாடா செய்வதுதான் இம்முதலமைச்சர் தனிப்பிரிவின் அதிகாரமா அல்லது ஏன் முதலில் நடவடிக்கை எடுக்கவில்லையென கேட்கும் அதிகாரம் உண்டா அல்லது சமர்ப்பித்தப்பின் சம்பந்தப்பட்ட ஊழியர்களை, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் அதிகாரம்தான் உண்டா? எந்த சட்ட அதிகாரத்தின் கீழ்?

12. இம்முதலமைச்சர் தனிப்பிரிவுக்கான பிரத்தியோக இணையப்பக்கத்தில், மக்கள் கருத்து என்ற ஒருபகுதியை வைத்திருக்கிறீர்கள். அதில் மக்கள் தங்களின் கருத்தை பதிவுச் செய்யத்தான் வழிவகை செய்யப்பட்டுளதே ஒழிய, பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படிக்கவோ அல்லது பார்வையிடவோ வசதி செய்யப்படவில்லையே ஏன்? எந்த சட்ட அதிகாரத்தின் கீழ்?

13. இத்தனிப்பிரிவு எப்படி செயல்படுகிறது என்பது குறித்த குடிமக்களின் கருத்தை அறிந்து கொள்ள, குடிமக்களுக்கே உரிமையில்லையா? எந்த சட்ட அதிகாரத்தின் கீழ்?

14. 01-01-2014 முதல் 31-12-2014 வரை குடிமக்களிடம் இருந்து, அஞ்சல் மூலமாகவும், இணையத்தின் வழியாகவும் வரப்பெற்ற கோரிக்கைகள் எத்தனை?

15. இக்கோரிக்கைகளில் எத்தனை கோரிக்கை நியாயமானதென முடிக்கப்பட்டுள்ளது மற்றும் நியாயமில்லையென எத்தனை நிராகரிக்கப்பட்டு உள்ளது?

16. நியாயமானதென்று முடிவெடுக்கப்பட கோரிக்கை குறித்து, குடிமக்கள் எத்தனைபேர் தங்களின் கருத்தை அஞ்சல் வழியாகவும், இ¬ணையத்தின் வழியாகவும் பதிவு செய்துள்ளனர்? அவை குறித்த முழுமையான விபரமென்ன?

என்பனவற்றுக்கான சான்று நகல்களை நகலர்கள் விதிகள் 1971 இன்கீழ், மிகவும் அவசரமாக இம்மின்னஞ்சல் வழியே அல்லது அஞ்சல் வழியெனில் கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர். அஞ்சல் குறியீட்டு எண் 635109 என்கிற முகவரிக்கு வழங்கிட கோருகிறோம்.

இதற்காக கட்டணம் எதையுஞ்செலுத்த வேண்டியிருந்தால், அதுகுறித்த தகவலை உரிய சட்ட வழியில் தெரிவித்தால், அதனை சரிப்பார்த்து செலுத்திட தயாராய் இருக்கிறோம். நன்றி!

ஒப்பம்
சரவணன், நடராஜன், அய்யப்பன், வேலு
புவனா, பிரேமா, சுகுணா, (நிர்வாகிகள்)
(கேர் சொசைட்டிக்கான நிர்வாகிகளில் சிலர்…)

நகல் பிரசுரிக்கப்படுகிறது:

இந்திய சாசனக் கோட்பாடு 51 அ-இன் கீழான குடிமக்களின் கடமை நோக்கத்திற்காக, சமூகத்தின் சுமூகத்திற்கென, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடும், குடிமக்களின் பங்களிப்பு நிதியோடும் எங்களால் பொதுவுடைமை நோக்கில் வெளியிடப்பட இருக்கிற சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களுக்கு…

4. பச்சைதான் எனக்கு புடிச்ச கலரு!

ஓர் ஆவணத்தில், சட்டப்படி சான்றொப்பம் இட வேண்டியதாக இருக்கின்ற போது, அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானே எழுதியதாக செய்யும் ஏற்புரையானது அவரை பொறுத்தமட்டில் போதுமான நிரூபணம் ஆகுமென இந்திய சாட்சிய சட்ட உறுபு 70 அறிவுறுத்துகிறது.இதன் விரிவான பொருள் விளக்கமாவது, அதாவது, எழுத்து மூலமாக உள்ள ஓர் ஆவணத்தில் சட்டப்படி சான்றொப்பம் இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானேதன் கைப்பட எழுதியதாக அல்லது தான் சொல்லச்சொல்ல வேறொருவர் எழுதியதாகவும் அல்லது தட்டச்சு செய்ததாகவும்,

அதனைப்படித்துப் பார்த்து சரியாக இருக்கிறது எனவும், அந்த ஆவணத்திலேயே குறிப்பிட்டு அந்நபர் செய்யும் ஏற்புரையுடன் கூடிய கையொப்பமானது, அவரைப் பொறுத்தமட்டில் வேறு எவ்விதத்திலும் நிரூபிக்க தேவையில்லாத, போதுமான நிரூபணமாகும்.

ஆம், இதன்படிதாம் நம்மில் இருந்து குடியரசுத் தலைவர் வரை எல்லோருமே கையெப்பம் போடுகிறோம். கையெழுத்து போட தெரியாதவர்கள் கைரேகையை பதிக்கிறோம். இந்த கையொப்பமும், கைரேகையுமே; சான்றொப்பமும் ஆகும். எப்படி?

நாமே கையால் எழுதும் அல்லது நம் சார்பாக வெறொருவர் எழுதும் அல்லது தட்டச்சு செய்யும் ஆவணத்தில் நாம் கையெழுத்திட்டாலோ அல்லது கைரேகையை பதிவு செய்தாலோ போதும்.

சான்று உறுதி எனப்படும் நோட்டரி பப்ளிக் உட்பட வேறு யாரிடமும் சான்றொப்பம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

இதேபோல், நாம் கையெழுத்திட வேண்டாத ஓர் ஆவணத்தில், அதனை நாம்தாம் கொடுத்தோம் என்பதற்கு அடையாளமாக அதில், நாம் கையெழுத்திட்டு அல்லது கைரேகையை பதித்து கொடுத்தலுக்கு பெயரே சான்றொப்பம்.

இந்த சட்டம் 1872 ஆம் ஆண்டு முதல் அதாவது சுமார் 142  வருடங்களாக அமலில் இருந்தாலுங்கூட, இதுபற்றி மத்திய அரசுக்கு இன்றுதாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறது. இந்த சட்டப்பிரிவின் சங்கதிகள் தெரியாமத்தான், சம்பிரதாய கூத்தாடிகள் போலவே கூத்தடிக்குறாங்க!

No need attest

உயிரோடு இருந்த ஒருவர் இறந்து விட்டார் என்று நாமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகவோ அல்லது சாட்சி சொல்வதற்காகவோ சட்டப்படி மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதை அந்நபரே உறுதிப்படுத்தினால் போதும்.

ஆமாம், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சொன்னாலே போதும். நான் உட்பட வேறு யாரும் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில், உண்மையில் உயிரோடு இல்லாத நீங்கள், உயிரோடு இருக்கிறேன் என்று பொய்ச்சொல்ல முடியாது அல்லவா, அவ்வளவே!

நோட்டரி சட்ட விதிகளின்படி, நாம் கொடுக்க வேண்டிய பனிரெண்டு ரூபாய் கூலியை விட கூடுதலாக பெற்றுக் கொண்டு, பொய்ச்சான்று ஒப்பமிடும் இரண்டாந்தர, மூன்றாந்தர அரசூழியர்கள் மற்றும் நோட்டரி பொய்யர்களே பச்சை மையில், சட்டப்படியான சம்பிரதாய ஒப்பமிடும் போது…

முதல்தர முதலாளி சான்றாளர்களான நாம், இந்திய சாட்சிய சட்ட சான்றொப்பாளர்களாக அதே சட்ட சம்பிரதாய பச்சை மையில் ஒப்பமிட என்ன தடை இருக்க முடியும்; இனியும் ஏற்படுத்த முடியும்!

ஆதலால், அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரையில், எந்தவொரு ஆவணத்தில் கையொப்பம் இட நேர்ந்தாலும், ‘கையொப்பத்தை மட்டும் பச்சை மையில் போடுங்கள்; கைரேகையாக இருந்தாலும் பச்சையிலேயே பதியுங்கள்; தனி முத்திரையை(யும்) பதியுங்கள்!!’

கையொப்பம் தவிர, மற்றபடி கையால் எழுதினால், அநீதிக்கு எதிரான செய்திகளை கருப்பு நிற மையிலும், மற்ற செய்திகளை நீல நிறத்திலும் எழுதுங்கள். கணினியில் தட்டச்சு செய்து பிரதி எடுப்பதாக இருந்தால், உங்களின் வசதியைப் பொறுத்தும், சொல்லும் செய்திகளைப் பொறுத்தும் பல்வேறு நிறங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். இவைகள் நமது வெற்று சம்பிரதாயங்கள் அன்று. நிறங்கள் குறித்த ஆராய்ச்சியின் நிஜங்கள்.

பச்சை : மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது.

நீலம் : மகிழ்ச்சியின் தூதன். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

கருப்பு : வருத்தம், சோகம், எதிர்ப்பு.

இயற்கை என்றாலே பச்சை. அதில் ஆங்காங்கே, அவ்வியற்கையே விரும்பும் வேறுபல நிறங்கள். பகலில் வானின் வண்ணம் வெளிர்நீலம். கருப்பு நிறத்தை அளவாகவே காணவேண்டும் என்பதற்காகவே, இரவில் தூக்கம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான அடிப்படையே என்றாலும், மனிதர்களில் சிலருக்கு அவரவர்களின் பகுத்தாராயும் அறிவாற்றலைப் பொறுத்து மாறுபடலாம்.

ஆகவே, வண்ணமே எண்ணத்திற்கான அடித்தளம் என்பதால், இனி எண்ணம்போல் வாழ்க்கை என்று யாருக்கேனும் அறவுரை சொல்ல நேர்ந்தால், வண்ணம்போல் வாழ்க்கை என பொருத்தமாகவே சொல்லுங்களேன்!

எனவே, நமது விருப்பத்திற்கு மாறாக, குறிப்பிட்ட வண்ணத்தைதாம் பயன்படுத்த வேண்டும் என்பது, இயற்கை நியதியை மீறிய செயலே.

இனியாவது, ஓர் அசல் சான்றின் மீது, ‘இது அசல் சான்றுதான் என சான்று வழங்க’, அச்சான்றை உருவாக்கியவரைத் தவிர, வேறு யாருக்கேனும் தகுதியிருக்க முடியுமா… இருக்க முடியும் என்றால், முதலில் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பணத்தின் மீதும், நீங்களே சான்றொப்பமிட்டு கொடுங்கள். அப்போது மட்டுமே அப்பணம் அசலானதாகும்.

நீங்களே இந்த அரசு ஊழியத்தில் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள் என அரசு ஊழியர்களையும், தீர்ப்பை எழுதினீர்கள் என நிதிபதிகளையும், வேறொருவர் உறுதிப்படுத்தி சான்றை வழங்க வேண்டுமென கேளுங்கள். சான்று உறுதி குறித்த சர்ச்சைகள் சரியாகிவிடும்.

இப்படித்தான், நான் கடந்த பத்து வருடங்களாக சாதாரண குடிமகனில் ஆரம்பித்து, குடியரசுத் தலைவர் வரைக்கும் அனுப்பும் ஆவணங்களில் பச்சையில் கையொப்பமிட்டும், சான்றொப்பமிட்டும் வருகிறேன்.

சட்ட விழிப்பறிவுணர்வில் தெளிவான வாசகர்கள் பலரும் இப்படித்தாம் கையொப்பமிட்டு வருகிறார்கள். இப்ப நீங்க..!?

5. அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை!

 மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி சொல்லியுள்ள விசயத்தில், ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு மருத்துவத்தை மிகச்சரியானபடி உபயோகித்துக் கொண்டனர் எனக் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மை.

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று நெடுங்காலமாகி விட்டப்பின்னுங்கூட, அவர்களது பழக்க வழக்கங்களை அப்படியேப் பின்பற்றுவதால் அனைத்து விதத்திலும் அடிமைகளாய் இருக்கிறோம்.

இயற்கையின் அற்புதப்படைப்புளான உடல் உறுப்புகள் எல்லாம் அறிவு வறுமை ஆங்கில மருத்துவர்களால், அறுவை சிகிச்சை என்கிற பெயரில் வெட்டியெறிந்து, உயிருடன் உள்ளபோதே பாதி பிரேத பரிசோதனை முடித்து விடுகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்துள்ள, சதுரங்க வேட்டை என்கிற திரைப்படத்தில் கூட, ‘ஏழைகளின் உடலை வைத்து மருத்துவத்தைக் கற்றுக்கொள்; அதனை பணக்காரனுக்கு பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக்கொள்’ என்று மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை வெட்ட வெளிச்சமாகவே சொல்கிறார்கள்.

ஒருபக்கம் உரிமைக்காக போராடவேண்டிய நிலையென்றால், மறுபக்கமோ உடல் ஆரோக்கியத்திற்காகவும், உயிருக்காகவும் போராடிக் கொண்டே இருக்கிறோம் என்பதால், இவற்றைக் குறித்தும் விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவேதான், இதனை அப்படியே பதிவிடுகிறேன்.

சில தினங்களுக்கு முன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செல்லநேர்ந்த போது, உண்மையில் நாட்டில் இவ்வளவு புற்றுநோயாளிகள் இருக்கிறார்களா என எண்ணத்தோன்றியது. பாரம்பரிய வைத்திய முறையை பரப்புவோர், முகாமிட வேண்டிய இடம், இதுபோன்ற நோய் உற்பத்தி மருத்துவனைகளேயன்றி வேறில்லை.

6. எனது (அ, எ)ருமை தமிழர்கள்

எனதருமை தமிழர்களே என அழைக்க வேண்டியவர், ‘எருமைத் தமிழர்கள்’ என்று தன் நூலுக்கு மிகத் தைரியமான நெஞ்சுரத்தோடு தலைப்பிட்டு, தமிழர்களால் கொஞ்சங்கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும் தமிழைக் காப்பாற்ற, தமிழர்களை அழைத்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இரா. திருமுருகன்.

இந்நூலில் தொன்மை வாய்ந்த தாய்மொழித் தமிழானது, எப்படி தமிழர்களால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை தனக்கே உரிய உயரிய தமிழ்நடையில் விளக்கியிருக்கும் இவர், இலக்கணம், மொழி வளர்ச்சி, இலக்கியம், பாடல் இசை மற்றும் வரலாறு என்கிற துறைகளின் கீழ் சுமார் முப்பது நூல்களை எழுதியுள்ள இவர், எருமைத் தமிழர்கள் நூலை 1998 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.

இந்நூலில் இருந்து எனக்கு பிடித்த, சிந்திக்க வேண்டிய சில வரிகள்…

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, நாற்காலிக்கே முதலிடம்; ஆங்கிலத்திற்கு அடுத்த இடம்: தமிழுக்கு மூன்றாமிடந்தான்!

இவர்கள் தமிழ்ப்பயிரை, இந்தி மாடு மேயாமல் வேலி போட்டுக் காப்பதை மட்டுமே தமிழ்ப்பணி என்று நினைக்கிறார்கள். வேலிக்குள்ளே இருந்து பயிரை வயிறார மேய்ந்து வரும் ஆங்கில ஆட்டுக்குத் தண்ணீர் குடிப்பாட்டித் தட்டிக் கொடுக்கிறார்கள்!

தமிழே எழுதப்படிக்கத் தெரியாமல், கையெழுத்தை மட்டும் கோலம் போடுவது போல், தமிழில் போடக் கற்றுக் கொண்டவன் கூட, M. பழனி என்பது போல, அதில் ஓர் ஆங்கில எழுத்தையாவது சேர்த்துக் கொள்வதே பெருமை என நினைக்கிறான். தமிழனின் உயிரணுக்களில் அப்படி ஒரு ஆங்கில அடிமைத்தனம் ஊறிக்கிடக்கிறது!

அன்று 6 ஆம் வகுப்பில் மட்டுமே எட்டிப்பார்த்த ஆங்கிலம், இன்று முன்மழலை வகுப்பிலேயே புகுந்து கொண்டு நம் குழந்தைகளை ஆங்கிலேயர்களாக வளர்த்து வருகின்றது.

முகவரி : ஏழிசைச் சூழல், 62 மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி – 605001.

7. சட்டப் பயிற்சி வகுப்புகள் – ஓர் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாகவே, நீதியைத்தேடி(டும்)… வாசகர்கள் சிலர் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் கோட்டை முதல் குமரி வரை நீதியைத்தேடி…. அல்லது நீங்களே வாதாடலாம் அல்லது நீங்களே வாதாட வழிகாட்டுதல் என்கிற பெயரில் ஆங்காங்கே நடத்தப்படும் சட்டப்பயிற்சி வகுப்புகள் குறித்தும், அத்தோடு எங்களுக்குள்ள தொடர்புகள் குறித்தும், அங்கு உங்களது நூல்கள் விற்பனைக்கு கிடைக்குமா என்றும் கேட்டு வருகிறார்களாம்.

நாங்கள் அப்படி எதுவும் தற்போது நடத்தவில்லை என்று தெரிவித்த போது, நீதியைத்தேடி… நூல்களில் குறிப்பிட்டுள்ள சிலரே, அப்பயிற்சி வகுப்புகளை முன்னின்று நடத்துவதால், தங்களது வழிகாட்டுதலில்தான் அப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள் என நினைத்தோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இவர்களுக்கெல்லாம் சட்டப்பயிற்சி வகுப்பெடுத்தேன் என்பதும், அவர்களின் ஓரிரு சட்டச் சாதனைகள் குறித்து நீதியைத்தேடி… நூல்களில் எழுதியிருக்கிறேன் என்பதும் உண்மைதான்.

இதனாலேயே, அவர்கள் எனது வழிகாட்டுதலில்தான் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள் என நினைப்பது, முற்றிலும் தவறு!

ஆமாம், 2000 ஆம் ஆண்டு சட்ட ஆராய்ச்சியை தொடங்கிய நான், 2010 ஆம் ஆண்டு அதனை முடிக்க இருக்கிறேன் என 2008 ஆம் ஆண்டு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில், நான் பகிரங்கமாக அறிவித்தப் பின்னர், கிளம்பிய வாசகக் கூட்டமிது. அன்று ஒன்றாக இருந்த இக்கூட்டம், இன்று பலவாகவும், பல்வேறு பெயர்களிலும் பிரிந்து கிடக்கிறது.

இது தெரியாமல், தெரிந்தும் இதன் பின்னால் போனால் என்னவாகும் எனப் புரியாமல், என்னுடன் தொடர்பில் இருந்த வாசகர்கள் சிலரே இக்கூட்டத்தின் பின்னால் சென்று, பல விதத்திலும் பட்டுத் தெளிந்தப்பின், அவைகுறித்த வாக்குமூலங்களை எனக்கு அளித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும், நான் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்தியதே, ஆராய்ச்சியுடன் கூடிய அனுபவ நூல்களை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் என்கிற வகையில், அந்நூல்களை எழுதி, பொதுவுடைமை என அறிவித்து விட்டேன்.

ஆனால், இச்சட்டப் பயிற்சி வகுப்புகளில், அப்பொதுவுடைமை நீதியைத்தேடி… நூல்கள் கிடைக்காது. ஆனால், மதிப்புள்ளவை மட்டுமே திருடப்படும் என்கிற வகையில், இந்நூல்களின் கருத்துக்கள், அவரவர்களது ஆராய்ச்சிக் கருத்துக்களாக கிடைக்கும். அவ்வளவே!

அப்படியானால், ‘எங்களுக்கான உங்களது சட்டப்பயிற்சி வகுப்பு’ என கேட்பவர்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான்.

நீதியைத்தேடி… நூல்களை முதல் நூலில் இருந்து வரிசையாக படியுங்கள். தெளிவாக புரியும். ஏனெனில், அந்நூலை நான் எனக்காகவோ அல்லது எனக்கிருக்கும் சட்ட அறிவு (எ, இ)வ்வளவு என்பதை வெளிப்படுத்துவதற்காகவோ எழுதவில்லை.

உங்கள் ஒவ்வொருவருக்காகவுமே எழுதியுள்ளேன். அதனால்தான், அதனை சமுதாயத்தின் சொத்தாகபொதுவுடைமை எனவும் அறிவித்துள்ளேன்.

இந்நூல்கள் ‘‘கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் அன்று. சமைக்கத் தேவையான சுரைக்காயே, ஏடாகவும், எழுத்தாகவும், எழுதுதுக்கள் பேச்சாகவும் இருக்கிறது’’என்பதை படிக்கப்படிக்க நன்கு உணர்வீர்கள்.

இதனை உணர்ந்து வாதாடி, யாருடைய வழிகாட்டுதலம், பயிற்சியும் இல்லாமல் வாதாடி, நியாயத்தைப் பெற்றவர்கள் பலர் என்றால், தினமணி, தீக்கதிர், துக்ளக், விடுதலை, உண்மைஉட்பட எத்தனையோ இதழ்கள், இதனைக் குறிப்பிட்டே மதிப்புரைகள் எழுதியுள்ளன. இவைகள் அந்தந்த மறுபதிப்பு நூலிலும் தொகுக்கப் பட்டுள்ளன.

இதற்கு மேலும், புரியாத பகுதி எதுவும் இருந்தால், என்னிடம் கேளுங்கள். விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுவரை கேட்டவர்கள்தான் யாருமில்லை.

அக்கறையுள்ளவர்கள் இப்பதிவை தேவையான இடங்களில் பதிவிடுங்கள் அல்லது பயன்படுத்துங்கள். விழிப்பறிவுணர்வை ஊட்டுங்கள்.

8. கூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்…

ஒவ்வொருவரது நியாயத்தையும் திருடும் பொய்யர்களை, திருடர்களை சட்டமும், சமூகமும் வக்கீல் என்கிறது. இந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுபவர்களை நீதிபதிகள் என்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இவர்கள் நியாயத்தை திருடும் கொள்ளையர்கள், கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகள் என்பதுதான் எனது ஆராய்ச்சி முடிவு.

ஆனால், இவை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் அவ்வப்போது தெரிய வருகிறது. இந்த வகையில், இன்று இந்தச் செய்தி வெளி வந்துள்ளது.

இது நீதித்துறை குறித்து, அ(ந்)நீதித்துறையே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் என்பதால், யாரும் மறுக்கமுடியாது. ஆகையால், நிதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்கள் ஒருபோதும் மறக்கவும் கூடாது.

இதனையெல்லாம் நீதியைத்தேடி… சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? என்கிற நூலில், ‘‘நீதிபதிகள் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகள்’’ பகிரங்கமாகவே எழுதி அவர்களுக்கும் படிக்க கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. உண்மையைத் தானே எழுதியிருக்கேன்னு, நிதிபதிகள் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க!

இதுல, இன்னொரு கொடுமை என்னான்னா, அறக்கட்டளையின் தலைவர் பதவியில் இருந்து பதவி காலத்திற்கு முன்பே என்னை விலக்கியதால், தனக்கு இருபது லட்சம் நட்டம் என்பதோடு, அறக்கட்டளை நிர்வாகிகளோ முப்பது லட்சம் கேட்டு தன்னை மிரட்டினார்கள் என்கிறார், வழக்கு போட்டவர்.

அறக்கட்டளைகளில் அறஞ்சார்ந்த செயல்கள் எதுவும் நடப்பதில்லை. தொண்டு என்கிற பெயரில் ஃபண்டை சுருட்டும் பணிதான் நடக்கிறது என்கிற எனது ஆய்வு முடிவும் அப்படியே அரங்கேற்றப்பட்டுள்ளன.

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!

9. சுகி சிவம்

சொல்வேந்தர் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டுள்ளேன். இந்த வகையில் 26-10-2014 அன்றைய தங்களது இந்தநாள், இனியநாள் சொற்பொழிவின் மீதான எனது சட்டரீதியான மறுப்பை பதிவு செய்கிறேன்.

அன்றைய நிகழ்ச்சியில், தாங்கள் சிறந்த நீதியரசர் என நம்பும் பிரபா ஸ்ரீதேவன் அவர்களது ஒரு கட்டுரையை முன் வைத்து சிறையில் அடைப்பட்டு கிடக்கும் கைதிகள் குறித்தும், சட்டத்தின் மொழி குறித்தும், காவலர்கள் மற்றும் பொய்யர்களின் (வக்கீல்களை நான் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள், இடைத்தரகர்கள் என்றும், நீதிபதிகளை நிதிபதிகள் என்றே சொல்லுவேன்) பொறுப்பற்ற தன்மை குறித்தும் பேசியுள்ளீர்கள்.

ஆனால், நிதிபதிகளின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மேலும், தங்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, நிதிபதி பிரபா ஸ்ரீதேவனை முன்னிருத்தியே பேசினீர்கள் என்பதன் மூலம், தங்களுக்கு சட்டத்தைப்பற்றிய போதிய புரிதலில்லை என்பது தெளிவாக புலனாகிறது. என்னால் இயன்ற அளவு சட்டத்தை தெளிவுபடுத்தும் முயற்சியே இம்மடல்.

உண்மையில், தாங்கள் சிறந்த நீதியரசர் என நம்பும் நிதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் என்பதற்கு அவர் தீர்ப்புரைத்த வழக்கு எண்ணோடு, செய்த தவறென்ன என்பது குறித்த (கு, க)ட்டுரையை இங்கே படித்துப் பாருங்கள்.

இவர்கள் எந்த காரணத்திற்காக நீதிமன்ற அவமதிப்பில் தண்டித்தார்களோ, சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளி ஜான் டேவிட்டின் விடுதலை தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இவர் மட்டுமன்று, இந்தியாவில் உள்ள எல்லா நிதிபதிகளுமே இப்படித்தான் என்பதற்கு நம் தமிழகத்தை சேர்ந்த நிதிபதி கேனச் சந்துரு மற்றும் சாதா சிவம் ஆகியோர் குறித்த, ஆதாரப்பூர்வமான இக்குட்டுரைகளை படித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் அறியாத நானென்ன; நீங்கள் நன்றாகவே அறிந்த மகாத்மா காந்தி, பொய்யர்களையும், நிதிபதிகளையும் ‘‘விபச்சாரிகள்’’ என்றும், பகுத்தறிவுப் பெரியார் ‘‘ஈனப்பிறவிகள்’’ என்றும் குறிப்பிடுவதையும் முதலில் படித்துக் கொள்ளுங்கள். கூடவே, இதே வக்கீல் தொழிலை காந்தி எவ்வாறு செய்தார் என்பதை, ‘‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்ற தலைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் தெளிவுபட வேண்டிய சங்கதிக்கு வருவோம். நியாயந்தான் சட்டம். அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் என்பது நான் முன்மொழிந்துள்ள தத்துவங்களில் ஒன்று. இது குறித்து தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரையிது.

இப்படிப்பட்ட பொய்யர்களின் அறிவாற்றல் எவ்வளவு என்பது, தங்களுக்கு தற்போது விளங்கியிருக்கும். இவர்கள் சட்ட நூலை மொழிபெயர்த்தால் எப்படியிருக்கும்? நீங்கள் சொல்வது போல, சட்டம் கடபுடா என்ற வார்த்தைகளில் இல்லை. வேறாக, அதனை எழுதியவர்கள்தான் கடபுடாக்கள்!

காவல்துறை நினைத்தால் எவர் ஒருவரையும்ல பொய் வழக்கில் உள்ளே வைத்துவிடலாம் என்று எழுதியுள்ளதாக சொல்வதன் மூலம், நீதிமன்றக் காவலில் வைக்க போதிய முகாந்திரம் இருக்கிறது என்று குற்றவியல் நடுவர் அல்லது நிதிபதி கையெழுத்திட வேண்டும் என்பதுகூட தெரியாத பிரபா ஸ்ரீதேவனா, உங்களுக்கு நீதியரசர்?

இதைப்பற்றி நீங்கள் சற்றும் சிந்திக்கவில்லையா? இந்தியாவில் மன்னராட்சியா நடக்கிறது, நீதியரசர் என்பதற்கு? போதிய முகாந்திரம் இல்லாமல் நிதிமன்ற காவலில் வைக்க கையெழுத்திடும் நடுவரை அல்லது நிதிபதியை சட்ட விழிப்பறிவுணர்வுள்ள ஒருவர் எப்படியெல்லாம் வறுவறுயென வறுத்தெடுக்க முடியும் என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குற்ற விசாரணை முறை விதி 167(2) ஒருவரை விசாரணை கைதியாக அறுபது நாட்கள் முதல் தொண்ணூறு நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், இப்படியொரு சட்ட விதி இருக்கிறதென்பது எந்தவொரு பொய்யருக்கும், நிதிபதிக்கும் தெரியாது என்பதை பலமுறை நிரூபித்து, நீதியைத்தேடி… வாசகர்களை பிணையில் வர வைத்துள்ளேன்.

இதில் உங்களுக்கு சந்தேகமென்றால், உங்களுக்கு தெரிந்த பொய்யர் அல்லது நிதிபதியிடம், பிணையில் வருவதற்கென்று மொத்தம் எத்தனை சட்டவிதிகள் உள்ளனயென்று கேட்டுப்பாருங்கள். 436 முதல் 439 வரை சொல்லுவார்கள். ஆனால், நான் எழுதியுள்ள பிணையெடுப்பது எப்படி நூலில் ஐம்பத்தியிரண்டு சட்ட விதிகளை ஆராய்ந்து எழுதியுள்ளேன். இதில், ஒன்றுதான் 167(2) ஆகும்.

இப்படி, ஏற்கெனவே நூற்றாண்டுகளுக்கும் மேலாக பொய்யர்களும், நிதிபதிகளும் அடிக்கும் சட்டத்துக்கு புறம்பாக கூத்துக்களை கருத்தில் எடுத்துக்கொண்டு, சட்ட விழிப்பறிவுணர்வு என்கிற பெயரில் விழிப்பறிவுணர்வில்லாத தகவலை தங்களைப் போன்ற பிரபலங்கள், ஊடகங்களில் தருவதன் மூலம் மக்களிடையே (பீ, பே)தியையும் ஏற்படுத்தி வருகிறீர்கள்.

எனவே, இதுகுறித்து உண்மையை ‘அதே இந்தநாள் இனியநாள்’ பகுதியில் தகவலைச் சொன்னால், தாங்கள் அடைந்த இந்த சட்ட விழிப்பறிவுணர்வை, தங்களின் ஆதரவாளர்களும் அடைவார்கள். செய்வீர்கள் என நம்புகிறேன். எது எப்படியிருப்பினும், இதனை எனது ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’ நூலில் பதிவு செய்ய உள்ளேன். நன்றி!

10. மனு வரையுங்கலை!

பதினைந்தாயிரம்
முப்பதாயிரம்
நாற்பதாயிரம்
முப்பதாயிரம்
அறுபதாயிரம்
இருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது)
எழுபதாயிரம்

ஆமாம், இது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவி எழுபதாயிரத்தோடு, இவ்வருடத்தில் வெளிவர உள்ள ஏழாவது பொதுவுடைமை நூலாகும்.

கடந்த 09-10-2014 அன்று தலைநகர் தில்லியிலுள்ள மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திற்கு நேரில் சென்று, ஆறாவது நூலாக வெளிவந்துள்ள ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூல் அதுவரை வெளிவராமல் இருப்பதற்கு போதிய நிதியின்மைதான் காரணம் என்றும், எனவே இனி வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தேன்.

ஆனால், எனது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டவர்கள், மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, மிகக்குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துவிட்டு, உங்களின் முயற்சிக்கு எங்களால் இயன்ற நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் எனவும் உறுதியளித்திருந்தனர்.

அதன்படியே, ஒதுக்கப்பட்ட குறைந்த நிதியில், அதிகபட்ச நிதியாக ரூபாய் எழுபதாயிரத்தை ‘மனு வரையுங்கலை!’ நூலுக்காக நமக்கு ஒதுக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களான உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் நம்பிக்கையோடு வாக்குறுதி கொடுத்ததற்கும், அதனை நிறைவேற்றியதற்கும் அடிப்படைக் காரணம், ‘‘அந்நூலுக்கு அதுவரையினான வாசகர்களின் நிதிப்பங்களிப்பு பட்டியலை காண்பித்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நூலை வெளியிட்டு, அதன் பிரதிகளை அனுப்பி வைப்பதாக, நானும் உறுதிகூறி, அதன்படியே அனுப்பி வைத்ததேயாகும்’’.

ஆகையால், இதன் பெருமையனைத்தும், தேவையான நிதியுதவியை அளித்த உங்களையேச் சேரும்! இந்நூலுக்கு 19-01-2015 அன்று தினமணி நாளிதழ் வழங்கியுள்ள மதிப்புரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.

பொதுவாக தங்களின் வாழ்வாதாரம் என்னவென்பது தெரியாமலேயே, ஒவ்வொரு நூலுக்கும் உங்களின் பங்களிப்பை கோருகின்றோம். அதன்படியே, இம்மனு வரையுங்கலை நூலுக்கும் உங்களின் பங்களிப்பைக் கோருகிறோம். இவ்விடத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.

மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், நமக்கு கொடுக்கும் நிதி எவ்வளவோ, அதற்கு எவ்வளவு நூலை வெளியிட முடியுமோ, அதனை வெளியிட்டாலே போதும். ஆனால், அந்நூல்கள் நாம் கொடுக்க விரும்பும் அனைத்து இடங்களுக்கும் போதுமானதாக இருக்காது என்பதை தாங்களும் நன்கு அறிவீர்கள்.

உங்களின் பங்களிப்பின் மூலமே, இந்நூல் வழக்கம்போலவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்துப் பொது நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று சேரும் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

நமது சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் எப்படி தன் பங்களிப்பைக் கடமையாக கொடுக்கிறதோ, அப்படியே நாமும் நம் பங்களிப்பைச் செய்வது நமது கடமையாகும்.

எனவே, பங்களிப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதுபற்றிய விருப்பத்தை தெரிவிக்கலாம். நிதிப்பங்களிப்பைச் செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 2015 க்குள் (இந்நூலை செப்டம்பர் 2015க்குள் வெளியிட வேண்டிய கட்டாயம் இருப்பதால்)

Account Name : CARE Society

Account Number : 768307417

Account Type : Saving Bank Account

IFSC code : IDIB000H011

Bank Name : Indian Bank, Hosur – 635109

என்கிற வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, உங்களின் பங்களிப்பை கணக்கில் வரவு வைக்க ஏதுவாக பணஞ்செலுத்திய விபரத்தை திரு. அய்யப்பன் 9842909190, 9150109189, திரு. நடராஜ் 9842399880, திரு. சரவணன் 9789488105 ஆகிய ஏதோவொரு உலாப்பேசி எண்களில் ஏதாவது ஒன்றிலும்

மற்றும்

[email protected] & [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிகளில், மின்னஞ்சல் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் அஞ்சலட்டை மூலம் தகவலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலுக்கு பங்களிப்புத் தொகை தருவதாக உறுதியளித்ததன் பேரில், அந்நூலின் பட்டியலில் இடம்பெற்று, இதுவரையிலும் அப்பங்களிப்புத் தொகையைச் செலுத்தாதவர்கள் உடனே செலுத்திவிட்டு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பங்களிப்புப் பட்டியலில் எப்படியும் தம் பெயர் இடம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆசையில், வாக்குறுதி அளித்தபடி பங்களிப்புத் தொகையைத் தராமல் இனியும் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறேன்.

இந்நூலில், அனைத்து வகையான பிரச்சினைகளையும், எளிதில் எதிர்கொள்களும் விதமாக பொய்யர்களைப் போல் அல்லாமல், தத்தமது தொணியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த சட்டப்பூர்வ அறிவிப்பு, பதில் அறிவிப்பு, பிரமாணப்பத்திரம், இடைமனுக்கள், அசல் அல்லது பிணை அல்லது சீராய்வு அல்லது மேல்முறையீட்டு மனு தயார் செய்தல், கேவியட், தடையுத்தரவு, நீதிப்பேராணை (ரிட்) ஆகியவை குறித்து விரிவாக விளக்கியும், இதுவரை நான் தயார் செய்த அனைத்து மனுக்களையும் தொகுத்தளிக்க உள்ளேன்.

இதில், நீதியைத்தேடி… மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் இல்லாத, உங்களுக்குத் தேவையான அடிப்படை சட்டங்குறித்த சந்தேகங்களைச் சொன்னால், அதையுஞ்சேர்த்து எழுத வசதியாய் இருக்கும்.

11. நிதிபதிகள் எப்பொழுது வழிகாட்ட முடியும்!

பவானி சிங் நியமண வழக்கில், மூவர் அமர்வின் தீர்ப்புரையை படித்துப் பார்த்ததில், என்ன காரணத்திற்காக குற்றத்தண்டனைக்கு ஆளானவர்களால், மேல்முறையீடு செய்யப்பட்டதோ, அதற்கான சட்டப்பூர்வமான வாய்ப்பை வழங்காமல், அதாவது பவானி சிங்கின் வாதத்தை ஏற்கக்கூடாது என்றும், அன்பழகன் மற்றும் கர்நாடக அரசின் வாதங்கள் தீர்ப்பில், வெளிப்பட வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியுள்ள நிலையில், குற்றத்தண்டனைக்கு ஆளானவர்களின் வாதத்தையும் உ(ய)ரிய முறையில் பரிசீலனைச் செய்ய வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மட்டுமே தந்திருக்க வேண்டும்.

மாறாக, குற்றத்தண்டனைக்கு ஆளானவர்களின் வாதங்குறித்து எதையுமே சொல்லாதது, ஏதோ வெறுப்பில் எழுதப்பட்ட தீர்ப்பிது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேல்நிலை நிதிபதிகள், கீழ்நிலை நிதிபதிகளுக்கு, சட்ட வழிகாட்டு உத்தரவைச் சட்டப்படியே பிறப்பிக்க முடியும் என்றாலும், அதற்கென்று சில வரையறைகள் உள்ளன.

ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில், வழக்கு தரப்பினர்கள் யாராவது ஒருவரோ அல்லது இருவருமோ, குறிப்பிட்டதொரு சட்டப்பிரச்சினையை எழுப்பி, அதுகுறித்து முடிவெடுக்க கோரும்போது, தான் அல்லது தாங்கள் சொல்லும் இந்தக்கருத்து சட்டப்படி ஏற்றக்கத்தக்கதுதானே என்கிற சந்தேகம் தங்களுக்கு எழும்போது, அதுகுறித்து தங்களது மேல்நிதிபதிக்கு அனுப்பி கருத்துக்கேட்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும். இதன் பேரில், அந்நிதிபதி மேல்நிலை நிதிபதிக்கு அனுப்பி, தனக்கு வழிகாட்டுமாறு கோரவேண்டும்.

இதனை நிதிபதி வழக்கு தரப்பினர்களின் வலியுறுத்தல் இல்லாமல், என்ன முடிவெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியாத அறிவுவறுமையில் இருக்கும் நிதிபதிகள் சுயமாகவும் கேட்கச் செய்யலாம். ஆனால், இந்தியாவில், அறிவுவறுமையில் உள்ள எந்த நிதிபதியும் கேட்டதாக சரித்திரமில்லை.

இதற்கு காரணம் என்னவென்று யோசித்தால், நம்மைப் போன்றுதானே அவரும் அறிவுவறுமையில் இருக்கிறார். நாம் எதற்கு அவரிடம் கேட்க வேண்டும் என்கிற எண்ணமாகவே இருக்கிறது. உண்மையில், இந்தியாவில் உள்ள அத்தனை நிதிபதிகளுமே, அறிவுவறுமையில்தான் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது அவர்களின் தீர்ப்புரைகள் வாயிலாக வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவுவறுமைக்கும் ஓர் அளவு வேண்டாமா?

ஆனால், இவர்களின் அறிவுவறுமை எவ்வளவு என்பதற்கு ஓர் அளவேயில்லை என்பதுதான் நமது சட்ட ஆராய்ச்சியின் சாதனை. பவானி சிங் நியமணம் செல்லாது என்கிற வழக்கும் இதற்கு நல்லதொரு உண்மை.

சரி, நம்ம இடையில் விட்டுவிட்ட முக்கியமான சட்டப்பிரச்சினைக்கு வருவோம்.

அப்படியொரு நிதிபதி குறிப்பிட்டு அனுப்பும் சட்டப்பிரச்சினைகள் குறித்து, வழிகாட்டும் விளக்கத்தைதான் மேல்நிலை நிதிபதிகள் வழங்க முடியுமேயன்றி, தன்னிடம் நேரடியாக வந்ததொரு வழக்கில், தன் இஷ்டம்போல் வழிகாட்டும் உத்தரவென்கிற பெயரில், விசாரணை நிதிபதியின் விசாரணையில் குறுக்கிட இயலாது.

ஆனால், மூன்று நிதிபதிகள் கொண்ட அறிவுவறுமை குழு, தான்தோண்றித்தனமாக தங்களது இஷ்டம்போல, தீர்ப்பை எழுதியுள்ளனர். ஆகையால்தான், தீர்ப்புரையில் இந்தெந்த சட்ட விதிப்படி, இதையிதை செய்யவேண்டும் எனச் குறிப்பிட்டுச் சொல்லாமல், பொத்தாம் பொதுவாக எழுதியுள்ளனர்.

இதெல்லாம் அரசியல் சாசன அமர்வின் அவலநிலையென்றால், மற்ற நிதிபதிகள் குறித்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

இதையெல்லாம், நிதிபதி குமாரசாமி சட்டப்படி ஏற்க வேண்டுமென்கிற அவசியமில்லை என்றாலுங்கூட, அவரது அறிவுவறுமையை வைத்துதானே அவர் முடிவெடுக்க முடியும் என்பதைத்தவிர, வேறென்ன சொல்லமுடியும்.

சரி, என் பார்வையில் இதற்கென்ன தீர்வு….

குற்றத்தண்டனைக்கு ஆளானவர்கள் தீர்ப்பில் உள்ள இக்குறைபாட்டினை, இந்திய சாசனம் வழங்கியுள்ள அடிப்படையுரிமை சட்டப்பிரச்சினையாக எழுப்பி, அவர்களது தரப்பு வாதுரையைச் சமர்ப்பித்து, இவ்வாதுரை சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பதை தீர்ப்பு வழங்கிய உச்சநிதிபதிகளுக்கே அனுப்பி கேட்டுக்கொள்ள, மேல்முறையீட்டை விசாரணை செய்யும் நிதிபதியைக் கோர சட்டப்படியான எல்லா உரிமைகளும் உண்டு.

ஆனால், மடியில் கணமில்லை என்றால், வழியில் பயமில்லை என்பதுபோல, தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை உணருபவர்களால்தான், இதுபோன்ற சட்டப்பிரச்சினைகளையெல்லாம் எழுப்பயியலும்.

ஊடக விவாதங்களில் பங்குபெறுவோர், நிதிபதிகளின் தீர்ப்பை எப்பொழுதும் விமர்சிக்கமாட்டார்கள். ஆனால், தற்போது அச்சூழ்நிலை மாறி விமர்சிக்க ஆரம்பித்திருப்பது, ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமேயாகும்.

12. கிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்…!

ம் நாட்டில், அரசு வேலைக்குப் பலரும் போட்டி போட காரணமே, நோவாமல் நோம்பு எடுக்கலாம் என்ற சட்ட விழிப்பறிவுணர்வு இன்மைதான்.

அரசுப் பணிக்கு வருபவர்களுக்கு என்னென்ன சட்டக் கடமைகள் இருக்கின்றன, அக்கடமையை ஆற்றாமல் போனால் ஏற்படும் விளைவுகளுக்கு, சட்டப்படி எப்படியெல்லாம் பொறுப்பாக்கப்படுவோம்; நோண்டி நொங்கெடுக்கப் படுவோம்; தண்டிக்கப்படுவோம் எனத் தெளிவாக தெளிந்தால், நிச்சயமாக ஒருவர்கூட அரசுப் பணிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.

ஆனாலும், விரும்பி வருவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களின் சட்ட அறியாமை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், நமக்கென பணியாற்றக்கூடிய அவ்வரசு ஊழியர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என மக்களாகிய நமக்கும் தெரிவதில்லை என்பது, அனைத்து விதத்திலும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இத்தோடு, அரசு அலுவலர்கள் என்றால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாத அசுர பலம் மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களின் அடிமனதில் பதிந்து கிடக்கிறது.

உண்மையில் அவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால், நமக்கான பணிகளைச் செவ்வனே செய்வதற்காக, நமது வரிப்பணத்தில் இருந்து, ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்களே என்பதால், அவர்களை அலுவலர்கள், அதிகாரிகள் என்ற ஆங்கிலேயர் காலத்து பட்டப் பெயர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுவதே, சொல்வதே, அழைப்பதே, எழுதுவதே ஜனநாயகத்தில் மிகவும் சரியானது.

நமது வேலைக்காக நம்மால் பணியமர்த்தப்படும் வேலைக்காரர் செய்யும் வேலையில் அவரைவிட நமக்கு நல்ல பரிச்சயம் இருந்தால் தானே, அவர் செய்த வேலையில் குற்றம் குறைகளைக் கண்டறிந்து, குறைகளைக் களையெடுக்கவும், கற்பிக்கவும் முடியும். அப்படியில்லாத போது, அவ்வேலைக்காரர் என்ன செய்கிறாரோ, சொல்கிறாரோ அதுவே சரியானது என்பதைத்தானே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்?

இன்று இப்படித்தானே நமது நிலைமை இருக்கிறது!?

நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், அரசு ஊழியர்கள் தங்களின் கடமைகளைச் சரியாக செய்யாததுதான் என்று சொன்னால், சற்றும் மிகையல்ல; சாலப் பொருந்தும்.

நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்று சொல்லாடல், சொல் அளவில் கையாளப்படுகிறதே ஒழிய, செயல் அளவில் அத்தகைய கிராமங்களில் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்களும், அக்கிராமங்களில் வாழும் நாமும் செலுத்துவதில்லை என்பதே உண்மை.

மக்களின் நல்வாழ்விலும், குற்றங்களைத் தடுப்பதிலும், காவல் நிலைய ஊழியர்களை விட, கிராம நிர்வாக ஊழியர்களே அதிக அக்கரை உள்ளவர்கள்/செலுத்த வேண்டியவர்கள். அதனால்தான், ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராம நிர்வாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், காவல் நிலையங்ளோ பல கிராமங்களுக்கு ஒன்று என்ற அளவிலேயே இயங்குகிறது என்பதன் மூலம் கிராம நிர்வாகத்தின் அதிமுக்கியத்துவத்தை, எவரும் எளிதாக எடை போட்டு விடலாம்.

கிராமம் என்பது, நாம் எல்லோரும் மனதளவில் நினைப்பது போல குக்கிராமங்கள் மட்டுமே அல்ல. மாறாக, குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் கிராமங்களாக வரையறை செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்தையும் சரியான முறையில் பராமரிக்க வழிகாட்டும் வகையில், “கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல் என இரண்டு தொகுதிகள் (பாகங்கள்) உள்ளன”.

முதல் தொகுதியில் காவல் கடமை, நிலவரி வசூல், பல்வகைப்பட்டவை, மக்கள் நல்வாழ்வு மற்றும் துப்புரவு, கொள்ளை நோய்கள் மற்றும் இதர நோய்கள், நச்சுக்கடி மற்றும் கொட்டுதல், நஞ்சிடுதல் மற்றும் தற்செயலாக நிகழும் விபத்து ஆகியவற்றைக் கையாள வேண்டிய விதம் குறித்த அறிவுறுத்தலும், இவ்வறிவுறுத்தல்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான உரிய படிவங்களை இரண்டாவது தொகுதியிலும் அரசு தொகுத்துள்ளது.

ஆனால், இந்த இவ்விரு தொகுதி நூல்களையுமே, தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு அச்சிட்டு விற்பனை செய்யவில்லை என்பதால், தற்போது பணியில் உள்ள கிராம நிர்வாக ஊழியர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களிடம் இல்லைவே இல்லை என்று சொல்வதை விட இப்படியொரு நடைமுறை நூல் இருக்கிறதா என என்னிடம், கேட்ட ஊழியர்களே அதிகம்.

அப்படி கேட்டவர்களுக்கெல்லாம் நகல் பிரதி எடுத்துக் கொடுத்து வந்தோம். தற்போது, இந்நூல் நம் குடிமக்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மிகுந்த சிரமத்திற்கு இடையில், பொது மக்களின் நலன் கருதி முதல் தொகுதியை மட்டும் நூலாகவே வெளியிட்டு உள்ளோம். இந்த முதல் தொகுதியை ரூ-225 நன்கொடை செலுத்தி பெற விரும்புவோர் திரு.அய்யப்பன் +910842909190 அல்லது +919150109189 என்கிற உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நூலின் ஒரு பிரதியாவது நமக்கு கிடைக்காதா என தேடிக் கண்டுபிடிக்கவே எனக்கு சுமார் மூன்று வருடம் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அந்த அளவிற்கு இப்புத்தகம் குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. அப்படி தெரிந்தவர்கள் ரகசியம் காப்பது போல யார் கண்ணிற்கும் புலப்படாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இதன்படி, கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர், கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசின் பிரதிநிதியாக முழு நேர காவல் ஊழியம் உட்பட பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியவர். மற்ற மூவரும் பகுதி நேர ஊழியர்கள் ஆவர். தஞ்சைப் போன்ற நெல் பயிரிடும் டெல்டா மாவட்டங்களில் பாசனக் காவலரை, தலையாரி என்பர்.

கிராமத்தின் மக்கள் தொகை, வருமானம், பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடுதலாக அல்லது குறைவாகவே இருக்கும்.

பொதுவாக ஒரு கிராமம் முதல் ஓரிரு கிராமங்கள் வரை, ஒரேயொரு கிராம நிர்வாக ஊழியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கிராம நிர்வாக ஊழியரின் ஆலோசனைப்படி, தாம் நியமிக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்யக் கடமைப்பட்டவர்களே தவிர, அவரின் வீட்டு வேலைகளைச் செய்ய கடன்பட்டவர் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில் இவர்கள் கடனைக் கடமையாகவும், கடமையைக் கடனாகவும் செய்பவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்தான்.

கிராம நிர்வாக ஊழியர் என்றால், நினைத்த போது வேலைக்கு வருவதும், போவதும் பொது மக்களில் எவராவது சான்றிதழ் கேட்டு வந்தால், அதிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள லஞ்சத்தைக் கவனிக்க வேண்டியதைக் கவனித்தால் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுத் தருவது மட்டுமே பிரதானப் பணி என்கிற அளவிற்கு மிகவும் உயர்வானதொரு கடமைப் பணியை, மிகக் கீழ்த்தரமான கடமைப் பணியாக மாற்றி விட்டார்கள்.

இதற்கு மேலும், இவர்களை இப்படியே விட்டு வைக்காமல், குடிமக்களாகிய நாம்தான் நமக்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் நோக்கத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இனியும் நாம் இக்கடமையைச் செய்யத் தவறினால், நம் வீடு மட்டுமல்ல; நாடே நாசமாகி விடும்.

முழு நேர ஊழியர்களான கிராம நிர்வாக ஊழியர்களுக்கு, தமது ஊழிய வரம்புக்குள் எவ்வித குற்றமும் நடைபெறாமல் தடுப்பது, கிராமத்தில் நடமாடும் கொள்ளைக் கூட்டத்தினர், தப்பி வந்த கைதிகள், சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்லது பொருள் தயாரிப்பில் ஈடுபடுவோர், மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்களைப் பற்றி தெரிய வரும் போது அவர்களைப் பற்றி விசாரணை செய்வது, தேவைப்பட்டால் காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கும் தகவல் அளிப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது காவல் கடமையாகவும்,

திடீர் மரணங்கள், அசாதாரண மரணங்கள், விபத்து மரணங்கள், விமான விபத்துக்கள் ஆகியவை நிகழும் போது உடனே அங்குச் சென்று அதற்கான காரணங்களை ஆராய்வது, பைத்தியக்காரர்கள் அல்லது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோரைத் தம் பாதுகாப்பில் கொண்டு வருவது இதுபற்றி காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் தேவைப்பட்டால் தகவலை அளிப்பது பாதுகாப்பு கடமையாகவும்,

தான் ஊழியம் ஆற்றும் கிராமத்தில் நடக்க இருக்கின்ற திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், தகாத சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும் பதினைந்து நாட்கள் முன்பாகவே அது குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு அளிப்பது ஆகியன பாதுகாப்பை நிலைநிறுத்தும் கடமையாகவும்,

நீர் நில வரி வசூல், ஆக்கிரமிப்பு, பட்டா பதிவு, கிணறுகள், ஓடைகள், ஏரிகள் அரசு பொது கட்டிடங்கள், புராதன கட்டிடங்கள், புதையல்கள், கனிம வளங்கள், இதர அரசாங்கச் சொத்துக்கள், ஊராட்சி நிதிகள், கால்நடை பட்டிகள் & நோய்கள், பிறப்பு & இறப்பு புள்ளி விபரங்கள், இயற்கை இடற்பாடுகளால் ஏற்படும் போக்குவரத்து தடையை நீக்குதல், எடை அளவுகளை ஆய்வு செய்தல், அஞ்சல் துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குதல் உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் பல்வகை கடமையாகவும்,

தண்ணீர், கழிப்பிட பராமரிப்பு, குப்பை மேடுகள், இடுகாடுகள் & சுடுகாடுகள், இறந்த விலங்குகள், வாந்தி பேதி, மஞ்சல் காமாலை, மூளைக்காய்ச்சல், பிளேக், மலேரியா, வெறி நாய் கடி, பாம்புக்கடி, தேள் கொட்டுதல் உட்பட பல்வேறு விடயங்களைச் செம்மைப் படுத்துவது ஆகியன மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராம துப்புரவு கடமைகளாக, கிராம நிர்வாக ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டே, “கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒருவேளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களுக்கு, நிர்வாக ஊழியராக நியமிக்கப்படும் போது, அதில் ஏதாவதொரு கிராமத்தில் வசிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் 01-01-2011 தேதிய கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 12,620 கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் பத்து சதவிகித கிராம நிர்வாக ஊழியர்கள் கூட அவர்களின் பொறுப்பு கிராமங்களில் வசிப்பதில்லை. கிராமத்தில் வசிக்க வேண்டியவர்கள் நகரத்தில் வசிக்கிறார்கள் என்றால், நகரத்தில் பணியாற்றுபவர்கள் கூட தங்களின் வசதிக்காக அடுத்தடுத்த நகரங்களிலும் வசிக்கும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு அடிப்படை காரணமாக, கிராமத்தில் போதிய வசதியில்லை என்ற அற்ப காரணத்தையே பலரும் முன் வைக்கின்றனர். அப்படியானால், அக்கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் சராசரி மக்கள் இல்லையா? பணி நியமன ஆணையைப் பெற்ற போது கிராமத்தில் தங்களுக்குப் போதிய வசதி கிடைக்காது என்பது தெரியாத அப்பாவிகளா இவர்கள்? ஒரு பேச்சுக்குத் தெரியாமல்தான் சேர்ந்தார்கள் என்றாலும் கூட, தெரிந்த பின் இந்த வேலை நமக்கு ஒத்து வராது என்று பணியை துறந்துவிட்டு வேறு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே?

இதற்கு வக்கில்லாதவர்கள், எப்படிப்பட்ட கிராமமாக இருந்தாலும் அங்கே தானே தங்கி ஊழியம் ஆற்ற வேண்டும்? மக்களின் வேலைக்காரர்களான இவர்களின் கூற்று, “சாமியே சைக்கிள்ல போகுதாம்; பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்!” என்ற கதையாகத்தான் இருக்கிறது.

இவர்களை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்ட ஆட்சியர்கள் கூட, தாங்கள் எல்லாம் அரசு என்னும் ஒரு சாதி ஊழியர்கள் என்ற அடிப்படையிலும், தனது கையாலாகாத்தனத்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இந்நூலின் பிரிவு 43-இல் கிராம நிர்வாக ஊழியர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமான அறிவிப்பை எப்படி சார்பு (சேர்க்க) வேண்டும், அதற்கு அவர் எப்படி பதில் அளிக்க வேண்டும், அவர் மீதான வழக்கிற்கு அரசு ஆதரவு தருமா? என்பன போன்று குடிமக்கள் நடவடிக்கை எடுக்க தேவையான பல விடயங்கள் அடங்கியுள்ளன.

உங்களுக்கு ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்:

ஓர் அரசு ஊழியர் தனக்கு தெரியாமல் தவறு ஏதும் செய்து விடக்கூடாது என்பதில் சட்டம் தெளிவாகவே இருக்கிறது. ஆனால், இந்தத் தெளிவு அரசு ஊழியர்கள் எவருக்குமே இருப்பதில்லை. நான் இப்படிச் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என உங்களுக்குத் தெரிந்த அரசு ஊழியர்களிடமே உண்மையாக கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைத்த தகவலை மறக்காமல், இக்கட்டுரைக்கான பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.

அதாவது ஒரு அரசு ஊழியர் செய்த தவறுக்காக அவர் மீது சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை நாம் அனுப்பினால், அதற்கு அவர் பதில் தர வேண்டும் என்றுதானே நினைப்போம். இது ஓரளவுக்குத்தான் சரி. பதில் கொடுப்பதில்தான் அவர்களுக்கு சிக்கலே இருக்கிறது. ஏனெனில், அவர்கள் நேரடியாக நமக்கு பதில் கொடுக்க முடியாது. மாறாக, நமது சட்டப்படியான அறிவிப்பையும், அதற்கு நமக்கு என்ன பதில் கொடுக்க வேண்டுமோ அதையும் எழுதி தனது மேல்நிலை ஊழியருக்கு உரிய முகப்பு கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். அதனைப் பெற்ற அந்த மேல்நிலை ஊழியர் அப்பதிலில் தேவையான திருத்தங்களைச் செய்து, மேலொப்பமிட்டுதான் நமக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், இச்சட்ட விபரம் அரசு ஊழியர்கள் எவருக்குமே தெரிவதில்லை. ஆதலால், நேரடியாகவே வீரமாகவும், மிரட்டலாகவும் பதில் அனுப்பி, எடுத்த எடுப்பிலேயே வசமாக சிக்கிக் கொள்வார்கள். பின், ஆளை விட்டால் போதும் என காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயங்கமாட்டார்கள் என்பது எனக்கு பல அரசு ஊழியர்களிடம் இருந்து கிடைத்த அனுபவம்.

இந்த ரகசியத்திலும், ரகசியம் என்னவென்றால், இப்படியொரு சூழ்நிலை கீழ்நிலை ஊழியருக்கு நேரும் போது, மேல்நிலை ஊழியர் எந்த விதத்திலும் வக்காலத்து வாங்க முடியாமல் போய் விடும். அப்படி வக்காலத்து வாங்கினால், அவரது மேலதிகாரியிடம் அவர் சிக்க வேண்டியிருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் ஆட்சியராக இருந்த திரு.சகாயம் அவர்கள் சட்டத் தெளிவு உள்ளவர். அவரது அதிரடி சட்ட நடவடிக்கைக்குப் பயந்த கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்க ஆரம்பித்தார்கள். “மேயிற மாட்டை நக்கின மாடு கெடுத்த கதையாக”, கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கம் மக்களின் ஆட்சியருக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்ததால், மக்களும் வெகுண்டெழுந்து ஆட்சியரின் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக போராட்ட களத்தில் இறங்கி கிராம நிர்வாக ஊழியர்களையும், அவர்களின் சங்கத்தையும் பணிய வைத்தனர்.

தங்கம் செய்யாத வேலையைச் சங்கம் செய்யும் என்பது, சங்கத்தின் செயல் பாடுகளைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறியாதவர்களின் கூற்று. இன்றைய சங்கங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு (வெகுஜன மக்களுக்கு)ச் சங்கடம் தரும் வேலைகளைத்தான் செய்கிறது.

நம் தாத்தா மகாத்மா காந்தி அவர்கள் கூட, “எந்த நோக்கத்திற்காக சங்கம் தோற்று விக்கப்படுகிறதோ, அச்சங்கமே முதலில் அந்நோக்கத்தை கெடுக்கும்” என தென்னாப்பிரிக்க சத்தியாகிரக நூலில் முன்மொழிந்து உள்ளார். எனது ஆய்விலும், இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்த பிறகே, தாத்தாவின் கூற்றை வழிமொழிய கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் ஆட்சியர் இன்று மதுரையை ஆட்சி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நம்பிக்கையோடு அனுப்பப்பட்டு விட்டாலும் கூட, நாமக்கல் மாவட்டத்தில் அவரின் ஊக்கப் பயிற்சியாலும், தங்களின் தன்னார்வத்தாலும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர்கள் பலராலும், கிராம நிர்வாக ஊழியர்கள் இன்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மற்ற மாவட்டங்களில் இப்படிப்பட்ட கண்காணிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.

நமது நாமக்கல் மாவட்டத்தைப் போலவே, அனைத்து மாவட்ட கிராமங்களிலும், கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்கி தங்களின் பணியை ஆற்ற வேண்டும் என்ற நோக்கோடு, அண்மையில் நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையைச் சேர்ந்த திரு.விவேகானந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றதன் மூலம் இந்த விடயத்தைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்துள்ளார்.

VAO-news

இதற்கு மேல், இதனைக் கண்காணித்து முன்னெடுத்துச் செல்லும் கடமை, ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் நம்மைப் போன்ற தன்னார்வலர்களுடைய கடமையே ஆகும். இவ்விடத்தில் இப்படிப்பட்ட கடமை நிகழ்வொன்றை சொல்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கோவை தெலுங்குபாளையம் பகுதியில் பொது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த பின், அதனை வீட்டோடு கூடிய சுற்றுச்சுவர் மூலம் தன்வசப்படுத்தும் முயற்சி நடந்ததை அடுத்து, அப்பகுதியில் வசிக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர் திரு.கண்ணன் என்பவர் அதனைத் தடுக்க கோரி கிராம நிர்வாக ஊழியரிடம் பிரிவு 2-இன்படி மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதாவது இந்தப் பிரிவின்படி, ஒவ்வொரு கிராம நிர்வாக ஊழியரும், தாங்கள் வேலை செய்யும் கிராமத்தில் குற்றம் ஏதும் நடக்காத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும். குற்றம் என்பது குற்றவியல் என்பதால் அதையே உரிமையியலில் பிரச்சினை என நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உங்களுக்கு இப்படி விளக்கிச் சொல்லுவது போல, மனுவில் சொல்வது கிடையாது என்பதால், அவர்கள் என்னமோ, ஏதோ என பயப்படுவார்கள்.

அதைப் படித்துப் பார்த்த அவ்வூழியர், அப்பிரிவின் வில்லங்க விளக்கம் தெரியாததால், கொஞ்சமும் பொறுப்பில்லாமல், இதெல்லாம் என் வேலை கிடையாது. நீங்க நீதிமன்றத்துல கேஸ் போட்டு ஸ்டே வாங்கி தடுத்து நிறுத்திக்குங்கோ என்று கூறி மனுவைத் திருப்பி தந்து விடவே, அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனைக் கேட்டார். மனுவை வாங்க மறுத்ததால் கூரியர் மூலம் சார்பு செய்யப்படுகிறது என மனுவிலேயே குறிப்பு எழுதி அனுப்பி வைக்கச் சொன்னேன். அவரும் அதன்படி செய்து விட்டார்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கெல்லாம் கூரியர் கிடைத்ததோ இல்லையோ, சட்டப்பிரிவு எல்லாம் போட்டு இருக்கிறதால, நமது வேலைக்கு வேட்டு வந்து விடும் என அவ்வூழியர் விழுந்தடித்துக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் ஆஜரானதோடு, இனி இது போன்ற சட்ட விரோத ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடமாட்டேன் என எழுதியும் வாங்கி கொண்டார்.

வேறு வழியில்லாமல் ஆக்கிரமிப்பு ஆசையில் ஏற்கனவே இருந்த இடித்து தள்ளிய வீட்டு சுற்றுச்சுவரை மீண்டும் அதே இடத்தில் கட்டும்படியானது. வேறு வேலையாக திருப்பூர் வரை சென்ற போது, இவ்விடத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்று பார்த்தேன். ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ஒரு பகுதி சுற்றுச்சுவர் மட்டும் புதிதாக எழுப்பப்பட்டு சுண்ணாம்பு கூட அடிக்காமல் காட்சியளித்தது எனக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

சட்ட விழிப்பறிவுணர்வோடு, இப்படி எளிதாக ஒரு நாள் பொழுதிற்குள் காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, தலைமுறை தலைமுறையாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களை என்னவென்று சொல்வது? இதனைப் படிக்கும் நீங்கள்தான் எப்படியெல்லாம் சட்டம் அருமையாக இருக்கிறது என ஊற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் எடுத்துச் சொ(செ)ல்லவும் வேண்டும்.

இப்படி சட்ட விரோத சம்பவங்கள் ஒவ்வொன்றுக்குமே, நாட்டில் ஏதாவதொரு இடத்தில் திட்டம் போட்டுதான் நிறைவேற்றப்படுகின்றது. இதேபோல, திட்டங்களை நிறைவேற்றிய பின், நாட்டின் ஏதாவதொரு இடத்தில்தான் தங்க வேண்டியுள்ளது என்கிற எதார்த்த நிலையில், கிராம நிர்வாக ஊழியர்கள் தத்தமது ஊரிலேயே தங்கி, தங்களுக்குச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றினாலே, சட்ட விரோத செயல்கள் பலவற்றைத் தடுத்து விடலாம்.

இதேபோல், கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிற்கோ அல்லது தெருவிற்கோ பிரச்சினை ஏற்படும் போது, அதனைச் சட்ட முறையில் தீர்த்து வைக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள கிராம நிர்வாக ஊழியர்கள் ஒரு தரப்பிடம் லஞ்சப்பிச்சை பெற்றுக் கொண்டு ஒரு தரப்பாக நடந்து கொள்வது, சான்றிதழ் என்ற பெயரில் கண்மூடித்தனமாக எதையாவது எழுதி கொடுத்து அநீதி இழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதோர் மிக மிக குறைவே.

அரசு ஊழியர்களின் அலட்சிய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் நமக்குள் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, அதனைத் தீர்த்து வைக்க வேண்டிய அரசு ஊழியர்களை விட்டு விடுகிறோம். இது சட்டப்படியும், சம தர்மப்படியும் முற்றிலும் தவறு.

நமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடும் போது, கிராம நிர்வாக அதிகாரி மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட எந்த அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும், நம்மிடம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இன்மையால் யாரும் அவ்வளவாக எடுப்பதில்லை என்பதே அவ்வூழியர்களின் அலட்சியப் போக்கு மற்றும் அட்டூழியங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.

ஆம்! இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவுகள் 119-இன்படி, குற்ற நிகழ்வைத் தடுக்க கடமையுள்ள அரசு ஊழியர் தடுக்க முயலாததால் குற்றம் நிகழ்ந்தால், அக்குற்ற தண்டனையில் பாதி முதல் பத்து ஆண்டுகள் வரையிலும் தண்டனை கிடைக்கும். சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல், அதிலிருந்து தவறும் போது பிரிவு 166 இன்படி, ஒரு வருடம் வெறுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், துன்பம் இழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுச் சட்டத்திற்கு உட்படாத ஆவணத்தைத் தயார் செய்யும் போது பிரிவு 167 இன்படி, மூன்று வருட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என சட்டம் அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு அறிவுறுத்தினாலும், இவைகள் குறித்த அறிமுகம் நமக்கு இல்லாததால் அரசு ஊழியர்களிடம் அல்லோலப்படுகின்றோம்.

எனவே, அறிவோம் அரசு ஊழியர்களின் சட்டக் கடமைகளை! அறிவிப்போம் அவர்களின் சட்ட விரோத செயல்பாடுகளின் விளைவுகளை! அப்படியும் திருந்தவில்லையா, உரிய தண்டனைக்கு ஆளாக்கி, நியாயம் பெறுவோம்; நிம்மதியாய் வாழ்வோம்!

14. சட்ட அமைச்சக உதவிகள்

சட்ட விழிப்புணர்வுக்கு மத்திய சட்ட அமைச்சகம் நிதி ஒதுக்குவது குறித்து அறிந்து, கேர் சொசைட்டி சார்பில் அதற்கு விண்ணப்பித்ததில், முன்பாக நான் இணையாசிரியராக எழுதிய நீதியைத்தேடி… இதழை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கு வழங்க, முதல் முறையாக 2006 இல் ரூ-15,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உண்மையில், தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், தன்னார்வ அமைப்புகள் கனிசமான தொகையை ஏப்பம் விட்டு விடுவார்கள். ஆனால், கேர் சொசைட்டியைப் பொறுத்தவரை, அனைவரும் தனியார் நிறுவனங்களில் கை நிறைய ஊதியம் பெருபவர்கள் என்பதால், பல சமயங்களில் அவர்களின் சொந்த பணத்தை, சொசைட்டிக்காக செலவு செய்வார்கள்.

இந்நிலையில், எனது விசாலமான சிந்தனையோ ஒரு மாத இதழை மட்டும் நூலகங்களுக்கு கொடுப்பதால், எவ்வித சட்ட விழிப்பறிவுணர்வும் சமுதாயத்தில் ஏற்பட்டு விடாது என்று தீர்க்கமாக முடிவுக்கு வந்தது. மேலும், எனது பத்து வருட ஆராய்ச்சி திட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகமே அங்கீகாரம் வழங்கி உள்ளதாக உணர்ந்தேன்.

ஆதலால், நீதியைத்தேடி… இதழ்களின் தொகுப்பு நூலாக, அதே பெயரில் அச்சிட்டு வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், கேர் சொசைட்டி அங்கத்தினர்களோ, ‘‘சட்ட அமைச்சகம் இதழாக கொடுக்கச் சொன்னதை, நூலாக கொடுத்தால், ஒப்புக் கொள்வார்களா என்கிற கேள்வியை என் முன் வைத்தனர்’’.

நூலாக கொடுக்கச் சொன்னதை, இதழாக கொடுத்தால், ஊழல் செய்து விட்டதாக நிச்சயம் கேள்வி எழும். ஆனால், இங்கு ஊழல் அல்ல. மாறாக, சூப்பரான சூழல் அல்லவா உருவாகியுள்ளது.

நீங்கள் என்னிடம், ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவுக்கான விளக்கத்தை கேட்கிறீர்கள். அதற்கு நேரடியாக பதில் சொல்லி புரிய வைப்பது சற்றே கடினம் என கருதி, அதற்கு முன்பாக வேறு ஒரு விளக்கத்தை சொல்லிய பின் நீங்கள் கேட்ட விளக்கத்தை சொல்லி எளிதாக புரிய வைத்தால், உண்மையில் நீங்கள் மகிழ்ச்சிதானே அடைவீர்கள்! இதை எப்படி முறையற்றதாக கருத முடியும்? என்றதும் ஒப்புக் கொண்டார்கள்.

இவர்களின் கேள்வியை தவறு என்று சொல்ல முடியாது. ஏனெனில், நான் எதற்காக பணம் கொடுத்தேனோ அதை மட்டும்தான் செய்ய வேண்டும் என அற்பத்தனமாக கேள்வி கேட்கும் அதிபுத்திசாலிகள் அரசாங்கத்தில் இருக்கவே செய்கிறார்கள்.

நூலாக வெளியிடுவதற்கு குறைந்தது மூன்று மடங்கு பணம் தேவை என்கிற இன்னொரு சிக்கலும் எழுந்தது. இதனை நீதியைத்தேடி… இதழால் பலனடைந்த பல்வேறு வாசகர்களிடம் கேட்பது கிடைக்கவில்லை என்றால், பிச்சை எடுத்தாவது நூலாக அச்சடித்து கொடுத்து விட வேண்டும் என்றும் முடிவு செய்து, அதற்கான களப்பணியில் இறங்கினேன்.

நிச்சயம் உதவியிருக்க வேண்டிய, லட்சக் கணக்கில் பலனடைந்த ஒரு சிலர் கண்டு கொள்ளவே இல்லை என்றாலும், பலர் கண்டு கொண்டனர். தங்களால் இயன்றதை கொடுத்தனர். இதில், பலனடையாதோரின் பங்கும் வந்தது. பங்கு நன்கொடை தந்தவர்களில், பாமரர்கள் முதல் முனைவர் பட்டம் பெற்ற வாசகர்கள் மட்டுமல்லாது காவலர்கள், வக்கீல்கள், நீதிபதிகளும் உண்டு.

நமது நூல் வெளியீட்டு விழா புகைப்படத்தோடும், ஐந்து நூல்களோடும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததில், அவர்களே ஆச்சரியப்பட்டு போனார்கள். 2007 ஆம் ஆண்டில், நாங்கள் நேரடியாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு செல்ல நேர்ந்த போது, மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, ஊக்கப்படுத்தியதோடு, இந்தியாவில் இதுவரை யாருமே செய்திராத வகையிலான, எங்களின் (நமது) சிறப்பான சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமைக்கு, கடமையாக 2007 இல் ரூ-30,000 ஆகவும், 2008 இல் ரூ-40,000 ஆகவும், 2009 இல் ரூ-30,000 ஆகவும், 2010 இல் ரூ-60,000 ஆகவும் நிதியுதவி அளித்து எனது திட்டம் நிறைவேற முக்கிய காரணமாய் அமைந்தார்கள்.

எனவே, உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக சட்ட அமைச்சகம் நிதியுதவி வழங்கியது கடமை என்றாலும் கூட, நீதியைத்தேடி… வாசகர்களும், சில தன்னார்வலர்களும் வழங்கிய நிதியுதவிக்கு நீங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டவர்கள். இச்சட்ட விழிப்பறிவுணர்வு நிச்சயம் சமூகத்திற்கு தேவை என்கிற உள்ளுணர்வு உங்களுக்கு எழுந்தால், உங்களால் இயன்ற வகைகளில் எல்லாம் கடமையாற்றுங்கள்.

கடமையில், தாமே நேரடியாக களப்பணியில் இறங்கி கடமையாற்றுவது அல்லது அப்படி கடமையாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான கடமைகளை செய்வது என்ற இரண்டே கடமைகள்தாம் உள்ளது. இதில், சட்ட அமைச்சகம் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்தது.

இதில் நீங்கள் எந்த வகை..?

15. தத்துவங்கள்

 1. No law, no life. Know law, know life!
 2. நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான்.
 3. நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!
 4. வாதாடுவது உங்களின் கடமை; அப்போதே, கிடைக்கும் உங்களின் உரிமை.
 5. நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!
 6. வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

தத்துவ விளக்கங்கள்.

1. No law, no life. Know law, know life!

ஆங்கிலேயர்களே நமக்கு சட்டத்தை தந்தார்கள். No law, no life. Know law, know life! என சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை எளிதாகவும், எதுகை, மொகனையோடு புரியும் படியும், ஆங்கிலத்திலேயே விளக்க முடிகிறது. இதனாலேயே இது, நமது முதல் தத்துவம் என்கிற மதிப்பை பெறுகிறது.

2. நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான்.

மற்ற உயிரினங்களில் இருந்து, மனிதன் மாறுபட்டவன் என்பதற்கு அடிப்படைக் காரணமே, எவ்வுயிரினத்திற்கும் இல்லாத அவனது பேச்சு, எழுத்து, கருத்து, சிந்தனை ஆகிய திறன்களே! இதனால், இதனை சட்டப்படி அடிப்படை உரிமை என்றுதாம் சொல்ல வேண்டும். அதாவது, நமக்கு தேவையானதை யாருடைய அனுமதியும் இல்லாமல் நாமே எடுத்துக் கொள்வதற்கு அல்லது அனுபவிப்பதற்கு பெயரே அடிப்படை உரிமை.

இந்த அடிப்படை உரிமையையும் கூட, நமக்குக்காக நாமே எடுத்துக் கொள்ளும் உரிமை மற்றும் நமக்காக அடுத்தவரிடம் கேட்டுப் பெறும் உரிமை என்று இரண்டு வகையாக பிரித்து, இவைகள் குறித்ததொரு சட்ட விளக்கத்தை தரவேண்டி உள்ளது.

அதாவது, உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சட்டப்பிரச்சினைக்கு தீர்வு என்னவென்று தெளிவதற்காக சட்டம் குறித்த தகவல் ஏதுவும் கிடைக்காதா என்று உங்களுக்கு சொந்தமான கணினியில், இணையத்தில் தேடுகிறீர்கள்.

அப்போது இந்நீதியைத்தேடி… தளம் உங்களின் பார்வைக்கு கிடைக்கிறது. எனவே, இப்போது நீங்கள் இதை படித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்படி படிப்பதற்கு முன்பாக நீங்கள், என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ அனுமதி கேட்கவில்லைதானே? இதுவே நமக்காக நாமே எடுத்துக் கொள்ளும் அடிப்படை உரிமையாகும்.

இதையே நூலகத்திற்குச் சென்று தேடி கண்டு பிடிக்கிறீர்கள். மகிழ்ச்சியில், அங்கேயே அமர்ந்து படிக்கிறீர்கள். ஆனாலும், முடிக்க முடியவில்லை. சரி, வீட்டுக்கு கொண்டு வந்து படிக்கலாம் என நினைக்கிறீர்கள். இதற்காக நீங்கள் சட்டப்படி உறுப்பினராய் இருக்க வேண்டும் என்பதோடு, நூலகரின் அனுமதியைப் பெற்றே, நூலை வீட்டிற்கு கொண்டு வந்து படிக்க முடியும். இதுவே, நமக்காக அடுத்தவரிடம் கேட்டுப் பெறும் உரிமையாகும்.

இங்கு நாம், விளங்கிக் கொள்ள வேண்டியது இவ்விரண்டுமே சட்டப்படியான உரிமைகள்தாம். ஆனாலும், எதை கேட்காமலே எடுத்துக் கொள்வது, எதை கேட்டுப் பெறுவது, கேட்டுப் பெற வேண்டியதை கேட்டும் கொடுக்கவில்லை என்றால், அதனை சட்டப்படி எப்படி எடுத்துக் கொள்வது என்பதேயாகும்.

சரி, இதில் உள்ள தத்துவ விடயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆதலால், வக்கீல் வைத்து வாதாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, நாமே வாதாடுவது என்று முடிவெடுத்து விட்டீர்கள். இந்நிலையில், நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான் என்கிற அசைக்க முடியாத கருத்தில் மனுதாரராக அல்லது எதிர்மனுதாரராக அல்லது சாட்சியாக நமக்காக நாமே வாதாடும் போது, நீதிமன்றத்தில் ஏதாவது தவறாக பேசி விட்டால், நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி தண்டித்து விடுவார்களோ என்கிற ஒரு சிறிய சந்தேகம் வருகிறது. இது குறித்து நீங்கள்தாம் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில், நாமே நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற ஒரு விடயத்தையும், இப்படி வாதாடுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை என்கிற விடயத்தையும் ஆராய்ந்து சொல்வதே பெரிய காரியம். இப்படி சொல்வது கூட, உங்களில் ஒரு சிலருக்கு புரியாமல் போகலாம் என்பதற்காகவே, இதையும் எளிதாக்கி நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான் என்று சொல்லியுள்ளேன். இதற்கு மேலும் சிந்திக்காமல் இருந்தால், நீங்கள் உங்களை மனிதன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்றவர்கள் என்கிற சூழ்நிலையில் உங்களுக்கு எதற்கு உரிமைகள் என்பதுதாம் எனது கேள்வி?

ஆம்! கடந்த காலங்களில் இப்படியும் என்னை கேள்வி கேட்டு பலரும் தங்களின் அறிவின்மையை பறைச்சாற்றி இருக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இப்படிப்பட்வராக இருந்து, இது குறித்த விளக்கத்தை நீங்கள் என்னிடமே கேட்டுப் பெறுவதுதான் சரியானது எனவும் நினைக்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

இங்கு நான் உங்களுக்காக, உங்களது வரிப்பணத்தை கூலியாக பெற்று பணியாற்றக் கூடிய அரசின் அடிமை ஊழியனாக இருந்தால், நான் உங்களது வரிப்பணத்தில் வாங்கும் கூலிக்காக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது எனக்கான சட்டக் கடமை. ஆனால், நானோ இங்கு உங்களைப் போன்று ஒரு சாதாரண குடிமகனே!

ஆனாலும், உங்களை (நாட்டை) முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், கூட்டாகவும் இணைந்து கடமையாற்ற வேண்டும் என்கிற இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ&இன்படி, நானும், கேர் சொசைட்டி உறுப்பினர்களும் இணைந்து, எங்களுக்கு தெரிந்த இந்த சட்ட ரகசியத்தை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, நாங்களே சொந்த செலவு செய்து இத்தளத்தை நடத்துகிறோம் என்பதால், உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எதுவுமே சட்டப்படி இல்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், எனக்கு தெரிந்தவரை சொல்லியுள்ளேன். இதிலிருந்து நீங்கள் எப்படியெல்லாம் யோசிக்க முடியும் என நீங்கள்தாம் யோசிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில்தாம் இருக்கிறோம். இப்படி சொல்வதற்கு அடிப்படை காரணம், உங்களது சிந்தனையாற்றல் வளர வேண்டும்; அப்போதுதான் நீங்கள் உங்களது காரியத்தில் வெற்றி பெற முடியும்.

உண்மையாக, நாம் குழந்தைப் பருவத்தில் பற்பல தவறுகளை செய்திருக்கிறோம். அதற்காக நமது அம்மா, அப்பா நம்மை எடுத்த எடுப்பிலேயே அடித்து தண்டித்து விடவில்லை. இப்படி பேசக் கூடாது; அப்படி செய்யக் கூடாது என சொல்லிக் கொடுத்தார்கள். நாமும் நமது குழந்தைகளுக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறோம்.

இதேதான் சட்டத்தின் நிலையும், சட்டப்படி செயல்பட வேண்டிய நீதிமன்றத்தின் நிலையும் என்பதை எளிதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தாம், நீதிமன்றத்தில் வாதாடுவது அடிப்படை உரிமை என்று கூறி, இதற்கு விளக்கம் சொல்லுவதை விட, அம்மா அப்பாவிடம் பேசுவதுபோல்தான் சொல்லியுள்ளேன்.

3. நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதாம்!

சமுதாயத்தில் குற்றம் புரிவோர் அனைவருமே, சிறைக்கு செல்லாமல் எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்து, முன்பிணை (முன்ஜாமீன்) கோருகிறார்கள். எனது ஆராய்ச்சியில் முன்பிணை கோருபவர்கள் எல்லாம், தான் செய்ய குற்றத்தை முறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

இது குறித்த பற்பல ஆராய்ச்சி விபரங்களை ஐந்து நூல்களில், இரண்டாவது நூலான பிணை எடுப்பது எப்படி நூலில் சொல்லியுள்ளேன். தேவைப்பட்டால் படித்துக் கொள்ளுங்கள்.

உண்மையில், குற்றம் புரியாதவர்கள் முன்பிணை கேட்கமாட்டார்கள். இதனை மிகவும் அழகாக மௌனம் சம்மதம் என்கிற தமிழ் திரைப்படத்தில் காண்பித்து இருக்கிறார்கள் என்பதைதாம் மேலே கண்ட கானொலி காட்சியில் பார்த்தீர்கள்.

நியாயத்துக்காக போராடுவோர் கூட, சிறையைப் பார்த்து பயப்படுகிறார்கள். இதனாலேயே அவர்களது நியாயம் தடைப்படுகிறது. எனவே, நியாயம் வேண்டுமா… சிறை செல்லவும் தயாராய் இருங்கள்!

நீங்கள் நினைத்தால், உங்களின் வசதிக்கு தக்கபடி உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். ஆனால், நீங்கள் நினைத்தாலும் சென்று வர முடியாத ஒரே இடம் சிறைச்சாலைதாம். உண்மையில், இது சிறைச்சாலையே அல்ல; தவச்சாலை. ஆதலால்தாம், அங்கு போவதற்கு பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. குற்றம் புரியாது, தனது நியாயத்திற்காக சிறை சென்று வருவோர், நிச்சயம் ஞானத்தைப் பெறலாம். ஞானம் என்றால், இறையுணர்வில் முக்தி என்று மட்டுமே பொருளல்ல.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி உட்பட பலரும், தங்களின் நியாயமான சுதந்திரத்திற்காக, அவ்வப்போதும், ஆண்டுக்கணக்கிலும் சிறைக்கு சென்று வந்ததால்தாம் மன ரீதியாக வலிமைப் பெற்றார்கள். ஆதலால், சிறைக்கு செல்வதற்கும், ‘‘ஓர் அதிர்ஷ்டம்’’ வேண்டும். ஆதலால், வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.

ஏனெனில், எனக்கு கிடைத்த அவ்(வ,வுய)ரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், உடனே பிணையில் வந்தப்பின், அதற்காக பதினைத்து மாதங்கள் போராடிய, அவலச் சூழ்நிலைகளின் கொடுமைகளை, அனுபவித்தவன் என்பதால், சொல்கிறேன். அல்ல அல்ல; நல்லெண்ணத்தோடு எச்சரிக்கிறேன்!

4. வாதாடுவது உங்களின் கடமை. அப்போதே கிடைக்கும், உங்களின் உரிமை!

நான் ஏன் இச்சட்ட விழிப்பறிவுணர் செயலைச் செய்கிறேன், நீங்கள் ஏன் இச்சட்ட விழிப்பறிவுணர்வை பெற ஆவலோடு முயற்சிக்கிறீர்கள் என்றால், இரண்டுக்கும் ஒரே காரணம், நமது வரிப்பணத்தில் அல்லது சொந்தப்பணத்தில் கூலி பெறுபவர்கள் அதற்கான கடமையைச் செய்யாமல் நம்மை ஏமாற்றி நமது உரிமைகளைச் சுரண்டி, உயிர்களைப் பறிப்பதால்தாம் என்பதைத் தவிர வேறு காரணம் எதையுமே சொல்ல முடியாது. இதற்குள்ளேயே அத்துனை, அத்துனை அர்த்தங்களும் அடங்கி விட்டன.

சரி, சட்டத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால், ‘‘சட்டப்படி நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றப் போகிறோம்’’ என்று பளீரென்று பதில் சொல்லப் பலருக்கும் தெரிவதில்லை.

நாம் உழைக்காமல் நமக்கு கூலி கிடையாது என்பது போல, நமது உரிமைக்காக, நாமே வாதாடுவதை கடமையாக கொள்ளாமல், நமக்கான உரிமையைப் பெற முடியாது.

5. நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!

சாதாரணமாக ஒரு பிரச்சினை நடக்கிறது என்றும், அப்பிரச்சினை குறித்த முழு விபரங்களும் உங்களுக்குத் தெரியும் என்றால், அதில் எது நியாயம் என்பதை நீங்கள் எளிதாக சொல்ல முடியும். இதற்காக நீங்கள் எதையும் படித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றும் பல கிராமங்களில் இப்படிப்பட்ட நியாயத் தீர்ப்புகளை, மக்கள் தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்தின் தலைவரே கொடுக்கிறார்கள்.

ஆதலால்தாம், ‘‘மக்கள் தங்களது பிரச்சினைகளை, தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்’’ என மகாத்மா கூட அறிவுருத்தியுள்ளார்.

இப்படி அவர்கள் நடுநிலையோடு கொடுக்கும் தீர்ப்பு எப்படிப் பார்த்தாலும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில்தாம் இருக்கும். ஏனெனில், சட்டமும் அப்படித்தான் இருக்கிறது. இருந்தும், நியாயத் தீர்ப்பை வழங்கியவர், மழைக்காக கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டார்.

ஆனால், அவர்கள் எப்போது நடுநிலை தவறுகிறார்களோ, அப்போதே அது கட்டப்பஞ்சாயத்து என்ற பிரச்சினை எழுந்து, தீர்ப்பு சொன்னவரே, நிதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியதாகி விடும்.

எனக்கு தெரிய வேறு யாரும் ‘‘நியாயம்தான் சட்டம்’’ என்பதை எழுத்துப்பூர்வமான தத்துவமாக முன்மொழியவில்லை. ஆனால், இதன் விபரீதம் புரியாமல், ‘‘கண்ணை கருப்புத் துணியால் கட்டியும், கையில் தராசு கொடுத்தும் நீதிதேவதை என்கிற உருவத்தின் மூலமாக சொன்னார்கள்’’.

நமது அறிவு வறுமை மிக்க நீதிபதிகளோ, தத்தமது இஷ்டம்போல கண்ணை மூடிக் கொண்டு, யார் எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தீர்ப்பு சொல்லலாம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று புளுகுகிறார்கள்.

சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. அதை ஒழுங்காகப் படித்து, சரியான, நியாயமான தீர்ப்பை எழுது என்று சொல்லும் விதத்தில், நீதிதேவதையின் இடது கையில் நியாயம்தான் சட்டம் என்கிற நூலையும், வலது கையில் பேனாவையும் கொடுத்து நீதிதேவதையை வடிவமைத்து உள்ளேன்.

மொத்தத்தில், நமது இந்திய சாசனம் (அரசமைப்பு) நியாயமான சட்டத்தையே, ‘‘சட்டம்’’ என கோட்பாடு 13 இன் கீழ் பிரகடனம் செய்கிறது. அப்படியில்லாத சட்டங்கள் எதுவுமே செல்லத்தக்கதல்ல. எனவேதாம், ‘‘நியாயம்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!’’ என்கிறேன்.

6. வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

ஒரு குழந்தையை பார்த்து, அதன் மீது அக்கறை கொண்டவர்கள் கேட்கும் கேள்விகளில், எதிர் காலத்தில், நீ வக்கீலா, டாக்டரா, இஞ்சினியரா என்று கேட்பார்கள். இப்படி என்னையும் பலர் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம், நாமே ஒரு மர மண்ட, நம்ம போயி எங்க இதெல்லாம் என்று நினைத்தேன். அதேபோல, பனிரெண்டாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டேன்.

ஆனால், இயந்திரவியல் சம்பந்தமான துறைகளில் ஆர்வம் இருந்ததால், பனிரெண்டாம் வகுப்பில் இயந்திரவியல் துறையையே பாடமாக எடுத்து, ஆர்வத்தோடு படித்து தேர்ச்சியும் பெற்றேன். அதன் பின் வேலைப் பார்த்த பால்மர் லாறி என்கிற கண்டெய்னர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உலகத்தர வெல்டராக தேர்ச்சி பெற்றேன்.

இப்போது சமூகம் சார்ந்த சட்டங்கள் குறித்த ஆய்வுகளை, நூல்களாக, இதழ்களாக, கட்டுரைகளாக, ஒலியாக, ஒலி ஒளியாக மற்ற பிற வடிவங்களில் எழுத்துகளாகவும், கருத்துகளாகவும் பதிவு செய்து கொண்டு இருக்கிறேன். இதற்காக, கணினியையும், இணையத்தையும் கையாளும் திறனையும் கற்றுக் கொண்டேன்.

எனவே, ஒருவருக்கு எப்போது, எப்படிப்பட்ட சிந்தனைகள் தோண்றும் என்று அவருக்கோ அல்லது மற்ற யாருக்குமோ தெரியாது. ஆதலால், குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதையே படிக்க வைத்தால், நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்காகவே, எனது படிப்பு விடயத்தை முன்னிருத்துகிறேன்.

சரி, இப்போது நீங்கள் கேட்ட தொழில்கள் எல்லாம் கவுரவமானதா என்று ஆராய்வோம்.

நாட்டின் ஏழை எளிய, வறிய மக்களை வாட்டி, அவர்களது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதில் இம்மூன்று துறைகளுமே முன்னணியில் இருக்கிறது. பொறியாளராக ஆக குறைந்தபட்சம் புளு பிரிண்ட் வரையத் தெரிய வேண்டும். இதேபோல மருத்துவராக, குறைந்தபட்சம் ஊசியாவது போடத் தெரிய வேண்டும். இதேபோல், நீதிக்காக வாதாடும் வக்கீல்களுக்கு குறைந்தபட்சம், ஒருவரின் நியாயத்தை கணித்து அதனை எடுத்துச் சொல்ல தெரிய வேண்டும்.

ஆனால், வக்கீல்களுக்கு தெரிந்ததெல்லாம் பொய்யே! இடைத்தரகே!! ஒருசிறு பொய்யே, நன்மை அளிப்பதாக இருந்தால், பேருண்மை எவ்வளவு நன்மையளிக்கும்! ஆதலால், உண்மையின் மதிப்பு எவ்வளவு என்பதை கூட, உணர மறுக்கும் மற்றும் உணர திறனில்லாத மூடர்களே வக்கீல்கள்.

ஆம்! பொய்யே வக்கீல்களது மூலதனமும், மூடத்தனமும் ஆகும். இதிலேயே, வக்கீல்களது அண்டப் புளுகும், ஆகாசப் புரட்டும் உள்ளடங்கி விடுகிறது.

ஆதலால்தாம், வக்கீல் தொழிலை கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களின் தொழில் என்றும், ஆங்கிலத்தில் Lawyers அல்ல; Liars என்று அழகாகவும், அர்த்தத்தோடும் சொல்கிறோம்.

மகாத்மா காந்தி, எனது கட்சிக்காரருக்கு நியாயமிருக்கிறது என்று எப்படி வாதாடி, நியாயத்தை நிலை நிறுத்த முயன்றாரோ அதுபோலவே, வழக்கின் தன்மைக்கும், நேர்வுக்கும் ஏற்ப, எனது கட்சிக்காரர் குற்றம் அல்லது தவறு புரிந்திருக்கிறார். எனவே, அவருக்கு உரிய தண்டனையை கொடுங்கள் அல்லது அவரது உரிமைகோரும் மனுவை (நான் போட்ட மனுவை) தள்ளுபடி செய்யுங்கள் என இவரது தரப்பின் அநியாயத்தை, (அதாவது, எதிர்தரப்பின் நியாயத்தை) நிலை நிறுத்த ஒருபோதும் தவறியதில்லை.

இதனை, அவரது சுயசரிதையான சத்திய சோதனையில் அறியலாம். இப்படி நியாய, அநியாயத்தை புரிந்து வாதாடிய வக்கீல்கள், உலக வரலாற்றில் வேறு எவருமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன். இதனால்தாம், இவருக்கு உலகில் வேறு யாருக்குமே கிடைக்காத மகாத்மா பட்டம் கிடைத்ததோ!
அப்படியானால், இன்றைய வக்கீல்கள் யார்?
நன்றாக படிப்பவர்கள் எல்லாம் டாக்டர், இஞ்சினியர், தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவு சார்ந்த தொழிலுக்கு சென்று விடுகிறார்கள். அப்படியில்லாதவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் துறையே சட்டத்துறை. இவர்களே பின்னர் நீதிபதியாகிறார்கள் என்பது நீதித்துறையின் நடக்கும் கொடுமைகளின், உச்சகட்ட கொடுமை என்பது 2006 ஆண்டைய நிலைப்பாடு.

ஆனால், தற்போது சட்டப்படிப்பு படிப்பவர்களில் சுமார் அறுபது சதவிதிதத்தினருக்கு மேல் குற்றச்சாற்றப் பட்டவர்களே! தண்டனை அடைந்தவர்களே!! ஆவார்கள். இவர்களால் நேரடியாக படிக்க முடியாத போது, அவர்களது மகன் அல்லது மகளை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்கள்.

இதனையே நீதியைத்தேடி… வாசகர்கள் பலரும் செய்துள்ளார்கள். நயினாரின் உலாப்பேசி உரையாடல். இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.நயினார் என்கிற வாசகரின் உலாப்பேசி உரையாடலே நீங்கள் மேலே கேட்டதாகும்.

இப்படி படிக்க வைப்பதன் முக்கிய நோக்கம், நாமெல்லாம் ஒரே வக்கீல் ஜாதி என்றுச் சொல்லி, தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்கிற அறிவு வறுமைச் செயல்தாம்.

நீங்கள், எந்த குற்றத்தை வேண்டுமானாலும் செய்து விட்டு, உங்களின் பலத்தால், பணத்தால், அதிகாரத்தால் நீதிபதிகள் உட்பட யாரை வேண்டுமானாலும் குறுக்கு வழியில் சரிகட்டி தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால், இயற்கையின் தண்டனையில் இருந்து யாரும், எப்பொழுதும் தப்பியதில்லை; தப்பவும் முடியாது.

நான் எவ்வளவுதான் விளக்கமாக சொன்னாலும், சட்டம் புரியவில்லை என்று சொல்வதே பலரின் வாடிக்கையாக இருக்கிறதே, இது ஏன் என ஆராய்ந்தேன். ஆய்வின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது. ஆம், சட்டம் குறித்து எவ்வளவு விளக்கம் சொல்லியும், சுயமாக படித்தும் புரியவில்லை என்றால், அவர்களிடம் போதிய நியாயம் இல்லை அல்லது நியாய உணர்வு அறவே இல்லை என்பதே அம்முடிவு.

அதாவது, தாம் மட்டுமே நூற்றுக்கு நூறு சதவிகிதம் நியாயவான் என்கிற குறுட்டுத்தனமான நம்பிக்கை. வக்கீல்களும், நீதிபதிகளும் நியாயத்திற்காக அல்லாமல் தங்களின் தொழிலுக்காக படிப்பதாலேயே, பட்டம் பெற்ற அவர்களுக்கும் கூட, சட்டம் புரியாத புதிராக இருக்கிறது. இனிமேலும், இப்படியேத்தான் இருக்கும்.

இவ்வளவு சொல்லியும் கூட, வக்கீல்கள் பொய் சொல்லது என்ன அவ்வளவு பெரிய, பேரியக்க குற்றமா என்று நீங்கள் எண்ணலாம். ஆம்! ஒருவர் பொய்ச் செல்வதை மட்டும் விட்டுவிட்டால், அவர் காமுகன், திருடன், அயோக்கியன், கொள்ளைக்காரன், கொலைகாரன் என்று எண்ணிலடங்கா, விவரிக்க முடியாத அத்துனை தீயச் செயல்களில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

ஆம்! இவைகளுக்கெல்லாம் மூலக்காரணம் பொய்யே! நன்றாக யோசித்துப் பார்த்தால், பொய் என்கிற ஒன்றை விட்டு விட்டவரால், இவற்றில் எதையுமே செய்ய முடியாது என்கிற அடிப்படை உண்மையும் புரியும். அத்தோடு, இதனையே தங்களின் மூலதனமாக வைத்துள்ள வக்கீல்களும், முன் வக்கீலாய் இருந்த நீதிபதிகளும் யார்யார், எப்படிப்பட்டவர்கள் என்பதும் மிக நன்றாகவே விளங்கும்.

ஆதலால்தாம், அப்படிப்பட்ட குற்றங்களை புரிபவர்களுக்காக, வக்கீல்கள் தலைமை தாங்கி வாதாடுகிறார்கள். முன் வக்கீலாய் இருந்த நீதிபதிகள் வக்கீல்களின் வக்காலத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மேலும் விளங்கவில்லையென்றால், நீங்கள் விலங்காக இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கையில் சிறந்து விளங்க தகுதியில்லாதவராகத்தாம் இருக்க வேண்டும்.

உண்மையானது, இயல்பாக வருவது. ஆதலால், அதற்கு ஞாபக சக்தி அதிகம் தேவையில்லை. ஆனால், பொய்யானது புனைந்து வருவது. ஆதலால், யாரிடம் என்ன பொய்யை, எதற்காகச் சொன்னோம் என ஞாபகம் வைத்துக் கொள்ள அதீத ஞாபகசக்தி தேவை.

உண்மைக்கு துணையையும், துணிவையும் தரும் அற்புதமான ஞாபக சக்தி, பொய் என்னும் அர்ப்பத்தால், அபகரிக்கப்பட்டு சாகடிக்கப்பட்டு விடுவதால்தான், நம் நல்வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை நம்மால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது என்கிற உண்மையை வக்கீல்கள், நீதிபதிகள் மட்டுமல்ல, நாமும் உணராத வரை வாழ்வில் உ(ரு)(று)ப்படவே முடியாது.

எனவே, வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! அது நானாகவே இருந்தாலும் அப்படித்தான். ஆதலால்தாம், நான் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ விரும்பாமல், சமுதாயத்திற்கு சட்ட விழிப்பறிவுணர்வு ஊட்டுவதையே கடமையாக கருதுகிறேன்.

16. நியாயம்தான் சட்டம்

நியாயம்தான் சட்டம்!

அதற்குத் தேவையா?

தேவை-யில்லை; தேவையே-யில்லை விபச்சார வக்கீல் பட்டம்!

உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரே நாடு நமது இந்தியா தான்.

இதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா? என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலும் கூட அது பற்றிய விழிப்புணர்வு இன்மையே.

நாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப இயலாது. ஆனால் அது உண்மை.

ஆம்! சட்டப்படி வாழ்வதால்தான் “வெளியில் இருக்கிறோம்”இல்லையென்றால் “சிறையில்தானே இருப்போம்?” சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஒன்றுமே இல்லை என்பது தான் எனது ஆணித்தரமான  கருத்து.

நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறைதான்“சட்டம்”. எனவே, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்பதெல்லாம் அதை கையாள்பவர்களின் கையாலாகாத்தனமே தவிர சட்டத்தின் தன்மையல்ல.

நாம் முன்னரே படித்தவாறு சட்டம் என்பது எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக யார், யார் எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதப்பட்ட அதிகார வரையறை தொகுப்பே. இந்த அதிகாரத்தை எவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தினாலும் சட்டம் ஒன்றும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம், ”அது எழுத்து மூலமான ஓர் அறிவுறுத்தல் தொகுப்புத்தானே தவிர, நம்மைப்போல் வாய் உள்ள நபர் அல்ல” என்பதை முதலில் நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டில் எந்த விதத்திலும் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நமது நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடிமகன் வரை ஒவ்வாருவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியாளாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் எல்லாருமே ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும் தான்.

சட்டம் என்பது நாம் நினைப்பது போல் மிகவும் கடினமான ஒன்றல்ல. எளிமையான விஷயமே. சட்ட விழிப்புணர்வு பெற இருக்கிற சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நமது உடம்பில் எப்படி ஐம்புலன்கள் முக்கியமோ அதுபோல, நாட்டில் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற இந்த 5 சட்டங்கள் மிகமிக முக்கியம்.

இந்திய அரசமைப்புதான், “இந்தியாவின் தலையாய சட்டம்”.

இதில் சொல்லப்பட்டுள்ளபடிதான் நாடு இயங்க வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் முதல் அனைத்து விதமான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதோடு தமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமைகளை  ஆற்ற வேண்டும்.

இதில் என்ன விசித்திரம் என்றால், சட்ட விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால் கடமையைச் செய்வதில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.

உரிமையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் கூட அதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது அல்லவா? இதற்கு என்ன காரணம்? யாருமே கடமையைச் செய்யாதுதான்.

ஒருவர் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால் மட்டும்தானே அதன் மூலமாக பல பேருக்கு கிடைக்க வேண்டிய உரிமை பலனாகக் கிடைக்கும். எல்லோருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படிக் கிடைக்கும்?

சாதாரண ஆவணம் முதல் சான்று ஆவணங்கள் வரை, ஆண்டி முதல் அரசன் வரையிலான சாட்சிகள் எவை எவை எத்தன்மை வாய்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சாட்சிய சட்டம் வழங்குகிறது.

இந்திய தண்டனைச் சட்டமோ, நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது, எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாததை செய்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விளக்குகிறது.

எந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க குற்றம் நடக்கும் போது அதற்கான முதல் தகவல் அறிக்கை, புலனாய்வு, கைது, பிணை, விசாரணை, தண்டனை அல்லது விடுதலை ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவதே குற்ற விசாரணை முறை விதிகள்.

எந்த ஒரு சட்டத்தின் கீழ் நமது உரிமையைக் கோருவதாக இருந்தாலும், அதற்கு மனு தாக்கல், பதில் மனு தாக்கல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் ஆய்வு, தீர்ப்புரை என அனைத்தும் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துவது உரிமையியல் விசாரணை விதிமுறைகள்.

இந்த ஐந்து சட்ட விஷயங்களை சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். தப்பு தண்டா ஏதும் செய்து விடாமல் நல்ல முறையில் நமது வாழ்க்கையை கழித்துவிடலாம்.

ஒருவேளை தப்பு தண்டா ஏதும் செய்துவிட்டால்கூட அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேராக நீதிமன்றம் சென்று ஒப்புக் கொண்டு விட்டால் “முதல் குற்றம் என்ற காரணத்தால் அதிகபட்சம் மன்னிக்க வாய்ப்புண்டு அல்லது மிகக்குறைந்த தண்டனையே கொடுப்பார்கள். அத்தண்டனை நாம் நமது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு வழிகோலாக அமையும்”.

நாமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? என்று உங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக “நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் வாதாடலாம்!”

நம் வழக்குக்காக நாமே வாதாடுவதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. இனி விதிக்கவும் முடியாது. ஏன் தெரியுமா?

உங்களிடம் நான் தற்போது எதன் அடிப்படையில் பேசிக் கொண்டு இருக்கிறேனோ அதே அடிப்படையில் நீங்கள் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானலும் உங்களின் நியாயத்துக்காக வாதாட முடியும். இப்படி வாதாடுவது உங்களின் அடிப்படை உரிமை.

அடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதி கேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும்.

நீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும்.

வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் தாங்களே வாதாடி ஒரே நாளில் நிவாரணம் பெற்றனர். 

“நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்’ என்ற கருத்தை, ஆழமாக உணர்ந்து வாதாடியவர்களே, செலவில்லாமல், ஏமாறாமல், விரைவாக தனக்கான நீதியைப் பெற்றார்கள். இந்த நற்கொள்கை மிக்க உணர்வை ஏன் இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பின்பற்றக் கூடாது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை 04-05-2009 அன்று தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டது. சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை உணர்த்துவதற்கு இக்கட்டுரையே போதுமானது என்பதால், ஆர்வலர்கள் தங்கள் பகுதிகளில் இதனையே பேனராக வைக்கலாமே!

17. பொதுவுடைமை சீடிகள்

1. நீ வாழ, நீயே வாதாடு!

நான் உங்களிடம் சட்டம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறேனோ, அதை அப்படியே நமது இயல்பான பேச்சு வழக்கில் புத்தகமாக எழுதியுள்ளேன். ஆதலால், எளிமையாக புரிகிறது. இதன் காரணத்தால், சிவகங்கை மாவட்டம், மான்கொம்பு என்கிற கிராமத்தைச் சேர்ந்த திரு.நெமிலியப்பன் என்பவர், நமது முதல் நூலான குற்ற விசாரணைகளை, நூலகத்தில் எடுத்து படித்து விட்டு, தன் மீது சாற்றப்பட்ட பொய்யான வரதட்சினை வழக்கில், வாதாடி விடுதலையாகி விட்டார்.

இதற்கு முன்பாக, திருப்பத்தூரில் யார் மூத்த வக்கீலோ அவரை நியமித்திருந்தும், அவர் முறையாக வாதாட முன் வராமல், புகார் கொடுத்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவரை சமரசத்திற்கு அழைக்க, அதனை ஏற்க மறுத்து, ‘‘பொய் வழக்கு என நிருபித்து விடுதலையாக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாதாடி விடுதலையாகி விட்டார்’’.

வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, நான் எப்படியும் சென்னையில்தாம் இருப்பேன் என்று அனுமானித்து, எனது நூல்கள் குறித்தும், தொடர்பு எண் அல்லது முகவரி பெறும் பொறுட்டு, ஒவ்வொரு புத்தககடையாக ஏறியிறங்கியும், பலன் இல்லாததால் திரும்பி போய் விடுகிறார்.

பின் விடுதலையானதும், ‘‘என்னைப் பார்க்காமலேயே செத்து விடுவோமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டு விடவே’’, மீண்டும் சென்னைக்கு வந்து ஒவ்வொரு புத்தக கடையாக, அனைத்து விபரங்களையும் சொல்லி ஏறி இறங்க, ஏதோ ஒரு கடையில் இவ்விணையதள முகவரியை கொண்டு, என்னை எளிதாக கண்டு பிடித்து விடலாம் என ஆலோசனைச் சொல்லி கணினி மையத்தை தொடர்பு கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.

உடனே இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா கணினியில் தேடி கண்டு பிடிக்க எவ்வளவு செலவாகும்? அதிகபட்சம் பத்து ரூபாய்தான் கேட்பார்கள் என்று சொல்லவே, அதன்படி, அங்கு சென்ற போது கேட்ட போது, பத்து ரூபாய் வாங்கி கொண்டு எனது உலாப்பேசி எண்ணை தேடிப் பிடித்து கொடுத்துள்ளனர். அதன் பிறகு என்னை தொடர்பு கொண்டு, சந்திக்க வருகிறார்.

ஒரு நூலின் வெளியீட்டாளர் யாரோ அவர்களை தொடர்பு கொண்டால், அந்நூலின் ஆசிரியரை தொடர்பு கொள்ள முடியும் என்கிற புரிதல் கூட இல்லாமல் இருந்தவர், ஒரு குற்ற வழக்கில் வாதாடி விடுதலை பெற்றிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! என்னை தேடி கண்டு பிடிக்கும் வரை, அந்நூலை நூலகத்திற்கு கொடுப்பதில்லை என்று கருதி, அதற்கு மேலட்டை போட்டு, வருடக் கணக்கில் பத்திரமாக வைத்திருந்து, கையோடு கொண்டு வந்து விட்டார். நூல் காணாமல் போய் விட்டது என்று சொல்லி, அதற்குறிய பணத்தை கட்டியிருக்கிறார்.

இருநூறு அடி தூரத்திற்கு முன்பே, என்னைப் பார்த்த சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறார். பின் வணக்கம் சொன்னார். அவ்வணக்கம் ஒரு சொற்றொடர்போல் இருந்தது. ஆனால், எதிர்காற்று அடித்ததால் என்ன சொன்னார் என்பது புரியவில்லை. அருகில், வந்ததும் என்ன சொன்னீர்கள் என்று கேட்டேன்.

அவரோ, முதல் வணக்கம் சொன்னேன் என்றார். இல்லையே, ஏதோ சொற்றொடர் போல் சொன்னீர்களே என்றேன். அதுவா, ‘‘திருவாரூர் திருமகனே, பேரளம் பெற்றெடுத்த பெருமகனே வணக்கம்’’ என்றேன் என்றார்.

இவரின் திறமையை சமயோசித்தமாக அந்நொடியே எடை போட்டு விட்டேன். சமயோசித்தமாக அவர் வழக்கில் வாதாடியதாக சொன்ன அனுபவங்களை, அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவு செய்து விட்டேன். அப்படி பேசுகையில், அவரின் உடலும் பேசியது. இதனை ரகசிய கேமரா வைத்து எடுத்திருந்தால், அவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

பின், அவ்வொலிப்பதிவை அவருக்கு போட்டுக் காண்பித்த போது, சற்று அதிர்ச்சியாகி விட்டார். அதிர்ச்சிக்கு காரணம், அவ்வழக்கில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு மரியாதையும் தந்து பேசியிருந்தார்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சங்கதிகள் பல இருந்தாலும், ‘‘இவர் வாதாடிக் கெண்டிருந்த போது நீதிபதிக்கு பசி எடுத்து விடவே, இன்னுமொரு அரை மணி நேரமாகுமா, சாப்பிட்டு வந்துடட்டுமா என்று இவரிடம் அனுமதி கேட்டுள்ளார், நீதிபதி’’ சபாஷ்!

ஆனாலும், அவ்வொலிப்பதிவை அவருக்கு போட்டுக் காண்பித்த எனது செயல் அவருக்கு மிகவும் பிடித்துப் விட்டது. இதை விட சிறப்பாக பேசுகிறேன். அதனை வெளியிடுங்கள் என கேட்டுக் கொண்டார். எதார்த்தமாக நீங்கள் பேசியதைதாம் நன்றாக இருக்கும் எனச் சொன்னேன்.

இக்கருத்தை அவர் ஏற்றுக் கொண்ட பின்னரே, இக்குறுந்தகடு 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலுடன் வெளியிடப்பட்டது. இரண்டு குறுந்தகடுகளைக் கொண்ட இதன் நன்கொடை ரூ 50 ஆகும். நூல்களோடு சேர்த்து வாங்கினால் கொரியர் செலவு கிடையாது.

2. நீதியா! அநீதியா? நீதிக்குச் சமாதியா?!

நீதித்துறையில் வக்கீல்களாலும், நீதிபதிகளாலும் என்னென்ன குறுக்கீடுகள், அவலங்கள் செய்யப்படுகின்றன என்பதை நீதித்துறையால், பழிவாங்கப்பட்ட ஒரு நீதிபதியே (குற்றவியல் நடுவர்) ஒலி ஒளி வடிவில் ஆதாரப் பூர்வமாக பேசியுள்ளார்.

இவரது பேச்சில் சதி செய்யும் சாதியும், மதம் பிடித்த மதமும் நீதித்துறையில் பரவலாக ஊடுருவி உள்ளதை உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு குற்றவியல் நடுவர் சிறையில் அடைக்கப்பட்டு, மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருப்பது இவராகத்தாம் இருக்க முடியும். இவரைப் பற்றி பிணை எடுப்பது எப்படி என்கிற இண்டாவது நூலில், ‘‘நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும்’’ என்கிற தலைப்பில் எழுதியுள்ளேன். அதைப் படித்தப் பின்னரே என்னை தொடர்பு கொண்டார்.

குற்றச்சாற்றின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர், எப்படி பதவி உயர்வு பெற தகுதியானார்? பதவி உயர்வு பெற தகுதியான ஒருவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்? இதில் எது உண்மை என்பதுதாம் நான் நூலில் எழுப்பியிருந்த கேள்வி.

2008 ஆம் ஆண்டில், இவர் என்னை முதன் முதலில் தொடர்பு கொண்டு சொன்னது, நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும் என்ற தலைப்பில் எழுதியுள்ளீர்கள். எனக்கு தெரிந்த ஒரே வழி நீதிபதிகளை செறுப்பால் அடிப்பதுதான் என்றார். யாரோ ஒரு பாதிக்கப்பட்ட பாமரன் பேசுகிறார் என நினைத்து சற்றே அதிர்ச்சியாகி, நீங்கள் யார் என்று கேட்ட போதுதான் அனைத்து விபரங்களையும் சொன்னார்.

முதலில், இவரை திருத்துறைப்பூண்டியில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் தனியறையில் அடைத்து, இவரின் மேல் சிறுநீர் கழித்து, பைத்தியமாகும் அளவிற்கு சித்தரவதை செய்து மகிழ்ந்தவர்கள், பின் இவருக்கு பதவி உயர்வுடன் சிதம்பரத்தில் பணியமர்த்தினர்.

பதவி உயர்வுக்கு பிறகு, இவருக்கு ஓய்வூதியம் கூட கிடைக்க கூடாது என திட்டம் தீட்டி, தற்காலிக வேலை நீக்கமோ அல்லது நிரந்தர பணி நீக்கமோ அல்லது பணி முடிப்போ செய்து ஆவண உத்தரவு எதையும் வழங்காமல், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களை திடீரென்று வேலை இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்புவார்களே அதுபோல் கட்டாய ஓய்வளித்து உள்ளார்கள்.

இவருக்கு கிடைக்க வேண்டிய பணிக்கால பலாபலன்கள் எதுவும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. மீண்டும் வேலைகொடு என்று ஒரு தரப்பாக போராடிக் கொண்டிருந்தவர், எனது ஆலோசனையில் பேரில், என் மீதான குற்றத்தை நிறுபித்து தண்டனை வழங்கு எனவும் போராடி வருகிறார்.

இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தேன். தமிழ்நாடு உள்துறையும், சென்னை உயர் நீதிமன்றமும் சேர்ந்து பற்பல கூத்துகளை, குளறுபடிகளை அறங்கேற்றி உள்ளதை உள்ளங்கை நெல்லிக்கணியாக உணர முடிந்தது. அதன் பிறகே, இதனை ஆவணப்படமாக்க வேண்டும் என ஆக்கி உள்ளேன்.

நீதித்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பாமரன், அப்படி தன்னை பாதிக்கச் செய்த நீதிபதியை செறுப்பால் அடித்த (சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது செறுப்பு வீச்சு) சம்பவங்கள் பல உண்டு. ஆனால், நீதித்துறையில் பணியாற்றிய ஒருவரே, தனக்கு மேலான நிதிபதிளை செறுப்பால் அடிக்காமல் விடுவதில்லை என்று சொல்வது, எங்கே நடந்து விடுமோ என்றே கருத வேண்டியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, மற்ற நீதித்துறை ஊழியர்கள் போல் அநியாயமாக அல்லாமல், இவரும் ஓரளவு சட்டத்தை மீறி பற்பல காரியங்களைச் செய்துள்ளார். ஆனாலும், அவைகள் எந்த விதத்திலும் அநியாயம் என்று சொல்லுவதற்கில்லை. மாறாக, முள்ளை முள்ளால் எடுப்பது போல, குற்றம் புரிவதையே வாடிக்கையாக கொண்டவர்களுக்கு, இவரும் அதிகாரத்தின் பெயரில் குற்றம் புரிந்து, குற்றத்தால் ஏற்படும் வலியை எடுத்துக் காட்டியுள்ளார் என்பதே என் கருத்து.

எது எப்படி இருப்பினும், நான் அவரை பேட்டி எடுத்தவரை போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால்தாம் இந்நிலைக்கு சென்றுள்ளார் என்பது எனது முடிவு.

இக்குறுந்தகடு 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலுடன் வெளியிடப்பட்டது. இரண்டு குறுந்தகடுகளைக் கொண்ட இதன் நன்கொடை ரூ 100 ஆகும். நூல்களோடு சேர்த்து வாங்கினால் கொரியர் செலவு கிடையாது.

18. வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழியதுன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாகஇருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளைதங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

வக்கீல் தொழில்,விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால்,எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…

வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன்பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும்பாசாங்கு (நடிப்பே) ஆகும். 

ஆதாரம்தாத்தாமகாத்மாகாந்தி1909 – ஆம்ஆண்டுதனதுநாற்பதாவதுவயதில்எழுதியமுதல்நூலானஇந்தியசுயராஜ்யம்நூலின்11 – வதுகட்டுரையில்இருந்துசுருக்கித்தொகுத்தவர்சட்டஆராய்ச்சியாளர்வாரண்ட்பாலா.

தமிழ் வெளியீடுகாந்திய இலக்கியச் சங்கம்மதுரை – 625020. நிலைப்பேசி எண்04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15

நவஜீவன் பப்ளிகேசன்ஸ்அகமதாபாத் – 380 041. தொலைபேசி, +91-79-2754132,  இணையதளம்:www.navajivantrust.org 

மகாத்மாவின் பொற்காலம் 02-10-1869 முதல் 30-01-1948 வரை.

அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து தந்தைப் பெரியார்…

வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள்.இவ்விரண்டும் இந்த நாட்டில் பிரபுத் தன்மையை காப்பாற்ற இருக்கிறதே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை.

நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும், நாணயக்குறைவும், தரித்திரமும், மக்களுக்குக் கஷ்டமும், அலைச்சலும், எதிரெதிரான ஏழைத்தன்மையும், பணக்காரத்தன்மையும் இருப்பதற்கு காரணமும் இவ்விரு தொழில்களே. ஏழைகளையும், மத்தியத்தர மக்களையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவது, இவ்விருதொழில்களுமே தவிர, வேறொன்றுமில்லை.

சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு, பணக்காரனாய் இருப்பவன் பணத்தின் மகிமையால், 100 க்கு 90 வழக்குகளில், தன் இஷ்டப்படி நியாயம்பெறுகின்றான். நீதிபதிகளும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூறாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்குஅனுகூலமாகவும் இருக்கின்றார்கள்.

இன்றைய வக்கீல் முறையே, மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும்.அதுமாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்வது சிறிதும்மிகைப்பட கூறுவதாகாது.

நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்துகொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம். விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள்.

பிரச்சினைகளில் மக்களுக்கு அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படுவதற்கு வக்கீல்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும், நீதிமன்றங்கள் அதிகமாக  கூடுவதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள். உண்மையைஒளிக்காமல் தெளிவாய் சொல்லப் வேண்டுமானால், மக்கள் அயோக்கியர்கள் ஆனதற்கும், நாணயக் குறைவாய் இருப்பதற்கும் கூட, வக்கீல்களே மிகமுக்கியபொறுப்பாளிகள் ஆவார்கள்.

வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காணமுடியாத, அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணையக் குறைவுகளும்,நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன.

இதனால் ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர்.

சிவில் நீதிமன்றங்களில், அழைப்பானை சார்பு செய்யும் சேவகன் முதல் குமாஸ்தா உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஒழுக்கத்திலும், நாணயத்திலும், யோக்கியப்பொறுப்பிலும் மிக மிக மோசமாக நடந்து கொள்ள வெகுகாலமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும்,வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக் கூட தகுதியுடவை அன்று.

வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத்துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஒரு அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது.

இதனால், வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதை விட, நீதிமன்றம் மூலமும்,வக்கீல்கள் மூலமும் பிடுங்கிக்  கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும் மிகவும் சுலபமானதும், சட்டப் பூர்வமானதுமான காரியமாகவே இருந்துவருகிறது.

இம்முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாய் போய் விட்டதால், அவர்களும் சந்தோசத்தோடும், முழுப் பலத்தோடும் ஆதரிக்கிறார்கள்.

நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காகஅடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட,எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள்.

ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும்உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்.

வக்கீல் மாதம் 100 ரூபாய் முதல் அக்கிரமமும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும் அளவிற்குத் தக்கபடி படிப்படியாய்கெட்டிக்காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறும்படியான யோக்கியதை உடையவனாகிறான்.

ஒரு வழக்கு தொடுத்து 20 வருடத்திற்கு மேலாகியும், இன்னமும் முடிவுறாது இருக்கிறதென்றால், விசாரணை முறையில் இருக்கும் யோக்கியதையைச்சொல்ல வேண்டுமா?

உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணயமற்றதென்றும், வெளிப் படையாய் தெரியும் படியாக நடந்து கொள்ளும் இத்தொழில்கள், “ஈனத்தொழில்களே”.

இத்தொழிலில் இவ்வளவு அக்கிரமத்திற்கான காரணமும், தீர்வும்…

வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும்.வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும்,நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்.

மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்கு வழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுப்பதையும், நிறுத்திடவேண்டும். வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக் கிருமிகளைவளர்ப்பதற்கே ஒப்பாகும். 

ஆதாரம்: 10-05-1931 தேதியிட்டகுடியரசுவாரஇதழின்தலையங்கத்தில்இருந்துதேவைக்குஏற்பசுருக்கியும்ஒருங்கிணைத்தும்தொகுத்தவர்சட்டஆராய்ச்சியாளர்வாரண்ட்பாலாஅவர்கள்.

தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை!

நாம் இயற்கையை அனுசரித்துப் போனால், இயற்கையாகவே சட்டம் நமக்கு உதவுகிறது என்பதால், வக்கீல் தொழிலில் பொய்யைஅனுசரித்ததே இல்லை. இதனால், நியாயமான வழக்குகள் மட்டுமே என்னிடம் வர, பொய் வழக்குகள் எல்லாம், வராமல் போய் எனது வேலை மிக எளிமையாகிவிட்டது. வக்கீல்கள் மத்தியில் என் மதிப்பும் அதிகமாகியது.

வழக்கு தரப்பினர்களிடம் நட்பு கொண்டு, பிளவுப்பட்டிருக்கும் அவர்களை ஒன்றாக்கி, சமரசம் செய்து வைப்பதுதாம் உண்மையான வக்கீலின் கடமை.இக்கடமையைத்தாம் இருபது ஆண்டுகள் ஆற்றினேன். சமரசம் என்பது, இருதரப்புக்கும் வெற்றியைத்தரும் அழகுணர்ச்சி என்பதால், வக்கீல்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மைதானே தவிர, எவ்விதத்திலும் நட்டமில்லை.

வழக்கு செலவுக்கு மீறிய கட்டணத்தை வாங்கியதே கிடையாது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் வழக்கு செலவுத்தொகையே எனது கட்டணம். வழக்கை நடத்தமுடியாமல் போனால், வாங்கிய கட்டணத்தை திருப்பித் தந்து விடுவேன். வழக்கின் வெற்றி தோல்வியை வைத்து, கட்டணத்தை நிர்ணயித்ததில்லை.ஆனாலும், எதிர்பார்த்ததை விட, தொழிலும் வருமானமும் நன்றாகவே இருந்தது. எனது இவ்வருமான தொழிலைக் கூட, பெரிய மனம் படைத்தோர் சேவைஎன்றே கூறினர்.

கட்சிக்காரருக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மற்றும் தண்டனையைப் பெற்றுத்தர தவறியதில்லை. அவமானம் என்பது குற்றம் புரிவதில்தாம் இருக்கவேண்டுமே தவிர, அக்குற்றத்திற்காக சிறை செல்வதில் அல்ல என்பதால், கட்சிக்காரருக்கு தண்டனையைப் பெற்றுத்தருவதும் நியாயமே.

அதேபோல, உரிமைகளுக்காக சிறை செல்லவும் தயாராய் இருக்க வேண்டும். எனது வாழ்நாளில், உரிமைகளுக்காக வருடக்கணக்கில் சிறையில்இருந்துள்ளேன்.

சட்டங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சாட்சிய சட்டத்தில் ஓரளவு தெளிவுண்டு.

தெரியாத சட்ட விசயத்தில், கட்சிக்காரர்களிடம், தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டதோ, வழக்கை நடத்தி தருகிறேன் என முன் வந்ததோ இல்லை. ஆனாலும்,கட்சிக்காரர்கள் நானே நடத்த வேண்டும் என விரும்பினால், மூத்த வக்கீலிடம் ஆலோசனையைப் பெற உரிய கட்டணத்தைப் பெற்றும், உரிய ஆலோசனையைப்பெற்றும் நடத்திக் கொடுத்தேன்.

எனதுதிறமையைசக்தியைபெரியவிசயங்களில்போராடுவதற்காகசேமித்துவைத்துக்கொண்டேன்பொதுநலனுக்காகவழக்குநடத்தியுள்ளேனேதவிரஎனதுசொந்தவழக்கைநடத்தியதில்லைஒரேசமயத்தில்நான்ஏற்றுநடத்தியஎழுபதுவழக்குகளில்ஒன்றுமட்டுமேதோற்றது.

சத்தியமானது மலர் போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானது.

சரியாக சிந்திக்காத சொல் எதுவும் என் நாவில் இருந்தோ அல்லது பேனாவில் இருந்தோ வெளிவந்ததில்லை.

ஆதாரம்மகாத்மாகாந்திஅவர்கள்1925 இல்தம்முடையஅறுபத்திஆறாவதுவயதில்எழுதியசுயசரிதையானசத்தியசோதனையில்இருந்துஒருங்கிணைத்துதொகுத்தவர்சட்டஆராய்ச்சியாளர்வாரண்ட்பாலா.

சத்தியாக்கிரகத்தின் சக்தி!

சட்டத்தால், சட்டத்தை, சத்தியத்தின் வழியில் நின்று மீறுவதே, “சத்தியாக்கிரகம்”.

சத்தியாகிரகம் என்பது, தர்மத்துக்கு விரோதமான சட்டங்களை சட்டப்பூர்வமான முறையில் எதிர்த்து, அதற்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனையைமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகும்.

நியாயமற்ற சட்டங்களுக்கும், உத்தரவுகளுக்கும் பணிவது ஆண்மையற்ற செயல் என்பதை நாம் உணர்ந்திருந்தால், எந்தச் சட்டமும், உத்திரவும் நம்மைஒன்றும் செய்திட அல்லது அடிமைப்படுத்தி விட முடியாது.

தனது உடமைகள், போலி கௌரவம், உறவினர்கள், மரணம் என எதற்கும் அஞ்சாதவர்களே, சத்தியாக்கிரகத்தை பின்பற்றவும், வெற்றியடையவும் முடியும்.

சத்தியாக்கிரகியின் அகராதியில், “எதிரி” என்ற சொல்லே இருக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் பொய்ச் சொல்ல ஏமாற்ற, துன்புறுத்தக் கூடாது. தனதுஉயிரைத் துறந்தாகிலும், பிறரது உயிரைக் காக்க வேண்டும்.

சத்தியாக்கிரக கைதி, தனக்கும் சாதாரணக் கைதிக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதக் கூடாது. சிறையில், சிறப்புச் சலுகை எதையும் பெறக்கூடாது. சுயக்கட்டுப்பாட்டில், சக கைதிகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்.

ஒரு சத்தியாக்கிரகி, வெளியில் இருப்பதை விட, சிறைக்குள் இருக்கும்போதுதான், தனது லட்சியத்துக்கான தகுதியைப் பெறுகிறார். எந்த அளவிற்கு,அகிம்சையோடு சிறை விதிகளை மதித்து நடக்கிறாரோ, அந்த அளவிற்கு கொள்கையில் உயர்வார்.

அகிம்சைஎன்பது,இம்சையைஅறிந்தேஅனுபவிப்பது.

ஒத்துழையாமைஎன்பது,அநீதிக்குஒத்துழைக்காமல்இருப்பது.

பலமும், அறிவும் உள்ள ஒரு சத்தியாக்கிரகி, தானே முன்வந்து அநீதிக்கு ஒத்துழைக்காது, இம்சைகளை ஏற்பதால் மட்டுமே, நீதியைக் காக்கவும்,அவதூறுகளைப் போக்கவும் முடியும்.

சத்தியாக்கிரகம் ஒன்றே, சமத்துவம், சமாதானம், சமநீதிக்கான சரியான வழி. மற்றவை எல்லாம் அழிவுக்கான வழியே; பகையே!

ஆதாரம்: மகாத்மாகாந்தி1924 ஆம்ஆண்டுஎரவாடாசிறையில்இருந்தபோதுஎழுதிய, சத்தியாக்கிரகம்என்னும்நூலில்இருந்துஒருங்கிணைத்தும், சுருக்கியும்தொகுத்தவர், சட்டஆராய்ச்சியாளர்வாரண்ட்பாலா.

19. லட்சாதிபதியும், பிச்சாதிபதியும்!

காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க…
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க…
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க…
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க…

கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்…
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்…
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்…
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்…

நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்…
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்…
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்…
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்…

இது புரியாமல் பணமிருந்தால் பத்தும் செய்யலாம், லட்சமிருந்தால் எந்த லட்சியமும் இல்லாமல் வாழலாமென என்கிற எண்ணத்தில், வாழ்க்கையைஅலட்சியம் செய்து விதிமீறல்களை தெரிந்தே செய்கிறார்கள். இதனால், நம் வாழ்க்கை எவ்விதத்திலம் பாதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள்.

அடுத்தடுத்து என்ன செய்யலாமெனவும் திட்டந்தீட்டுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களது வாரிசுகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாதுஎன்பதற்காக அத்திருட்டு திட்டத்தில் தங்களது வாரிசுகளையுஞ் சேர்த்துக்கொள்கிறார்கள்.

உன்னுடைய திருட்டில் என்னை சேர்க்காதே என எந்த வாரிசும் சொல்வதில்லை. மாறாக, தந்தையே சேர்க்காவிட்டால் கூட, தகராறு செய்யும் வாரிசுகளாகவும்,தேவைப்பட்டால் தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவர்களுக்கு தெரியாது சொத்துக்காக கொலை செய்தால், வாரிசு உரிமையை இழந்து விடுவோம்என்பதோடு, சட்டப்படி சொத்தும் கிடைக்காது என்பது!

கோடிகோடிக்குஅதிபதியாகஇருந்தவர்நொடிப்பொழுதில்பிச்சைகாரன்ஆனார்என்பதோடுவிதிமீறல்களில்ஈடுபட்டகேடியாகவும்ஆக்கப்பட்டுவிட்டார்சென்னைமௌலிவாக்கத்தில்இடிந்துவிழுந்தஅடுக்குமாடிகட்டிடத்தின்உரிமையாளரும்அவரதுவாரிசும்.

இவர்கள் அடுத்து எங்கு வலைத்துப்போடலாம் என்பது உட்பட எத்தனையெத்தனை திட்டங்களைத்தீட்டி, எத்தனையெத்தனை வண்ணக் கனவுகளோடுஇருந்திருப்பார்கள்? எல்லாம் ஒருநொடிப்பொழுதில் நாசமாகி விட்டது. இந்த நாசத்தில் இருந்து இரண்டு மூன்று தலைமுறைகள் மீறுவதே (கு, க)ஷ்டமப்பா!

இதற்காகவே இந்நேரம் பல பிணந்தின்னிப் பொய்யர்கள் உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறேன் என அவர்களை நோக்கி படையெடுத்திருப்பார்கள்;இந்த வழக்கு நம்மிடம் விசாரணைக்கு வராதா என நிதிபதிகள் கணக்குப்போட்டு காத்துக்கொண்டிருப்பார்கள்!!

என்ன விதிமீறல் இருந்தால் நமக்கென்ன? நமக்கு இடம் கிடைத்தால் போதுமென அவ்வடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கியவர்கள், கட்டடத்தை கட்டஒப்புக்கொண்டவர்கள் என எத்தனையெத்தனை பேர் பெரும் இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?

இவர்களில் யாராவது ரமணா திரைப்படத்தை பார்க்காமலா இருந்திருப்பார்களா என்றால், வெளிமாநிலத்தில் இருந்து கூலிவேலைக்கு வந்தவர்களைத்தவிர,மற்றவர்கள் எல்லாம் நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் எப்படி துணிந்தார்கள்?

இதையெல்லாம் தட்டிக்கேட்க நிஜத்தில் ரமணா வரமாட்டாரென சந்தடிச்சாக்கில் நக்கலடிக்கிறார்கள். சிலர், இவ்விடம் குறித்த பதிவுத்துறை வரைபடத்தைவலைப்பக்கத்திலிருந்து எடுத்து தங்களுக்கு தெரிந்ததைச் சொல்கிறார்கள்.

ஆவணப்பதிவேடுகளாக இருப்பதையே தங்களுக்கு பாதிப்பென வரும்போது திருத்தும் அயோக்கியர்களான அரசூழியர்களுக்கு, இணைய வலைப்பக்கத்தில்இருப்பதை மாற்ற எத்தனை நிமிடங்கள் ஆகும்? கட்டிடம் இடிந்தது என தெரியவந்த அடுத்த நொடியே நிச்சயம் இதைத்தாம் செய்திருப்பார்கள்.

இவ்வளவு ஏன், பிரபல தனியார் தொழிற்நிறுவனமான டி.வி.எஸ் கூட, இதைத்தாம் செய்தது என்பதை பதிவு செய்துள்ள கட்டுரை விபரங்களை இங்குசொடுக்கிப் படித்தறியலாம்.

நாங்களெல்லாம் மீட்பு பணியில் ஈடுபட்டோமெனவும், எங்களுக்கு சிலர் உணவுப்பொருட்களை வழங்கியதாகவும் பதிவு செய்கிறார்கள். இவர்கள் உண்மையில்,மனிதாபிமானம் என்கிற வகையில், மெய்மறந்து இதுபோன்ற மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனை தார்மீக கடமையென்று கருதுகிறார்கள். கடமையை மடமையாகவும், மடமையை கடமையாகவும் செய்பவர்களே ஏராளம். இதில், அரசின் பங்குஅதிகம்.

இது பொய்யர்கள் செய்யும் தொழில்போல!

ஆம், விதிமீறல் செய்யாதோர், இதுபோன்ற விதிமீறல்களில் சிக்கமாட்டார்கள் என்பதை கருத்தில்கொண்டு, ஒரேயொருமுறை மீட்புப்பணிகளில் ஈடுபடாமல்விட்டால் மட்டுமே, வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடுவோரையும், இதற்கு துணைபோவோரையும் கொஞ்சமாவது யோசிக்கச் செய்யமுடியும்.

இல்லாவிட்டால், இதற்கு முன்பாக இதுபோன்று எத்தனையோ இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்திருந்துங்கூட, இது நடந்திருக்குமா அல்லது இனியாவதுநடக்காமல்தாம் இருக்குமா?

இதுபற்றி மேலோட்டமாக மேயாமல், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதன் நீதிமுறை அடிப்படை நோக்கமுங்கூட, இதுதாம்என்பது புரியும்!

ஆனால், இந்நீதிமுறையுங்கூட, பணத்தால் விதிமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு நெடுங்காலமாகி விட்டதன் விளைவே, இதுபோன்ற சர்வ சாதாரணமான ஒவ்வொருவிதிமீறல்களுக்கும் அடிப்படை காரணமாகிவிட்டது.

எனவே, முதலில் நீதிமுறையை ஒழுங்குபடுத்தால், எந்த விதிமீறலையுமம் தடுக்கமுடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருனமிது.செயல்பட வேண்டியது தர்மம்.

இந்த வகையில், நியாயந்தான் சட்டம் என்பதை அடிப்படை தத்துவமாக எடுத்துக்கொண்டு, எனது சட்ட ஆலோசனைகளைஆரம்பத்திலிருந்தே ஒழுங்குபடுத்த ஆரம்பித்ததன் விளைவே, எடுத்துக்கொண்ட கொள்கையில் கொஞ்சஞ்கொஞ்சமாக முன்னேற முடிந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, உங்க கருத்தென்ன என்பதை இதுவரை பதிவு செய்யவில்லையே என சில அன்பர்கள் வம்படியாக கேட்கிறார்கள். இப்படிஉண்மையை எழுதி பலபேர்கிட்ட நான் திட்டுவாங்க வேண்டுமென்பதே, எனது கருத்தின்மீது அளவுகடந்த அன்புகொண்ட வம்பர்களது ஆக்கப்பூர்வமானஆர்வமாக இருக்கிறது.

ஆமாம்ரமணாபடத்தில்வருவதுபோன்றுஎல்லோரும்குடியேறியபிறகுஇச்சம்பவம்நடந்திருந்தால்விதிமீறலில்துணிந்துஈடுபடுவோருக்கும்,அதற்குதுணைநிற்போருக்கும்நல்லதொருபாடமாகஇருந்திருக்கும்

ஆனால் பாவம், இதையெல்லாம் அறியாத எங்கிருந்தோ வந்த பற்பல அப்பாவி தொழிலாளர்கள் வாழ்வை இழந்து விட்டனர். நாமும் விசாரணையில்சிக்குவோமென, இத்தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள் கூட, மக்கி மண்ணாகி விடட்டும் என்று, அன்று எத்தனைபேர் வேலை செய்தார்கள் எனசொல்லமாட்டார்கள். அடையாளங்காட்ட பயந்து அநாதையாக விட்டு விடுவார்களே?!

(இ, உ)றுதியாக, இப்படியொரு தலையங்கமெழுதும்  இவன் எவ்வளவு கேவலமானவனா, வக்கிரபுத்தியுடையவனா இருப்பான் என இப்போது நீங்கள்நினைத்தால், அடுத்து இதுபோன்றதொரு சம்பவம் நடக்கும்போது, இதிலுள்ள உண்மையை உணர்வீர்கள்.

21. மகத்தான மக்களாட்சி மலர…!

உலகில் மற்ற எந்த நாடுகளும் வழங்காத சாதி, மதம், இன, பேத, மொழி ஆகியவைகளை கடந்து ஒருவர் எந்த மதத்தை, இனத்தை,மொழியை, நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அவர்களுடைய நாட்டில் என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அவ்வுரிமைகளை எல்லாம்அப்படியே வழங்கிய ஒரே நாடு என்பதால்தான், உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குறியதாக திகழ்கிறது, நமது இந்திய தாய்திருநாடு.

ஆனால்உண்மையில்மக்களாட்சிநடக்கிறதாஎன்றால்மக்களாட்சிஎன்கிறபெயரில்தேர்ந்தெடுக்கப்படும்அவ்வேட்பாளர்களதுமனைவிதுணைவி,மக்கள்எனநடக்கிறதுஎன்பதேகேள்வியும்பதிலுமாகஇருக்கிறது.

தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் புலம்புவதையே வாடிக்கையாகவைத்துள்ளன. இதிலும், ஆளுங்கட்சிகளே அதிகமாக புலம்பும் அளவிற்கு, ஐந்து வருடம் செய்த ஆட்சியின் நம்பிக்கையின்மை இருக்கிறது.

மக்களாட்சி என்றால், மக்களால் பொதுத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், மக்கள் ஏன் பிரச்சினையிலேயே வாழ்கிறார்கள்? என்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை பலரும்அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, மக்களாட்சி அரசாங்கத்தை அமைக்க, மாபெரும் பொறுப்புல்ல தேர்தல் ஆணையமேஅறியாமல்தான் இருக்கிறதா அல்லது அறிந்தும், அறியாதது போல நடந்து கொள்கிறதா என்பது தெரியவில்லை.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 19(1)(இ)-இல், சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் கீழ் இயற்றப்பட்டசட்டங்களின் அடிப்படையில்தான், சங்கங்கள் மட்டுமல்லாது, அறக்கட்டளைகளும், இயக்கங்களும், மக்களாட்சி அரசை நிறுவ போட்டாப்போட்டி போடும்அரசியல் கட்சிகளும் பதிவு செய்யப்படுகின்றன.

இப்படி பதிவு செய்யப்பட்ட சங்கம், அறக்கட்டளை, இயக்கம், அரசியல் கட்சியில் முக்கியமானதொரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றால்,பொதுக்குழுவை கூட்டி, அதன் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவை அவசியம் பெற வேண்டும். இதனை ரத்தினச் சுருக்கமாகபெரும்பான்மை பலம் என்பார்கள். இப்பலத்தை பெறவில்லை என்றால், அம்முக்கிய முடிவு நிறைவேறாது முடங்கிப் போய் விடும்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சங்கதியே, மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெற வேண்டிய சங்கத்தில், இயக்கத்தில், கட்சியில் கூடும்அனைவருமே கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பார்கள் அல்லது முக்கிய முடிவை எட்ட வேண்டிய பிரச்சினைக்கு உரிய சங்கதியைப்பொருத்தமட்டில் சிறுபகுதியினர் கருத்து வேறுபட்டவர்களாய் இருப்பார்கள்.

இதில், மேன்மேலும் சச்சரவு வரவோ, வளரவோ கூடாது என்ற அடிப்படையில்தான், முன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மை முடிவுநிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஆட்சியைப் பிடிக்க போட்டா போட்டி போடும் கட்சிகளைப் பொருத்தவரை நாற்காலி கொள்ளைக்காக, கூட்டணி போடுகிறார்களே ஒழிய, அடிப்படைகொள்கைக்காக அல்லவே அல்ல என்பது நானறிந்த விசயமட்டுமன்று; ஊரறிந்த உண்மைதான்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவத்தோடு, தேர்தலுக்கு தேர்தல், மாறிமாறி ஆட்சி செய்யும்இருகட்சிகளில் எக்கட்சியில் நம்மைப் போலவே யார்யார் கூட்டு சேருவார்கள் அல்லது சேருகிறார்கள், அதில் எக்கூட்டணி வெற்றி பெறும் என்பதை மட்டுமேகணித்து, கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் நாளொரு நட்பு, நடப்பு நிலைப்பாடு நாடே அறிந்த விசயம்தான்.

இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி என எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்என்றாகி விட்டது.

ஆனால், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம் இதுவரையிலும், மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சிசெய்ததில் எப்போதுமே தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விளங்கும் இருகட்சிகளுக்கு மட்டும் இதுவரையிலும்பொருந்தாமல் போனது ஏனோ?!

இனி பொருந்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும், இவ்விரு கட்சிகளுக்கும்மக்கள் தங்களின் வாக்குரிமை மூலம், மாறி மாறித்தரும் பெரும்பான்மையும், அங்கீகாரமுமே ஆகும்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம், இது வரை தனிப்பெரும்பான்மையோடு நாட்டை ஆட்சிசெய்துள்ள எதிரெதிர் பிரதாண கட்சிகளு க்கும் பொருந்தி விட்டால், மகத்தான மக்களாட்சிக்கும் மக்களுக்கும் பிரச்சினையே இல்லை.

நம் நாட்டைப் பொருத்தவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு சிலவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் ஆயிரத்து முன்னூறு உள்ளனஎன்பது தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கை. அரசியல் கட்சிகளின் பதிவு என்பதும், அங்கீகாரம் என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானது.

சங்கத்தையோ, அரசியல் கட்சியையோ சட்டப்படி பதிவு செய்ய குறைந்தது ஏழு பேர் இருந்தாலே போதுமானது. ஆனால், அங்கீகாரம் என்பது அப்படியல்ல.அச்சங்கத்தை அல்லது கட்சியை அதனோடு உறவாடுவோர்கள் அங்கீகரிக்க வேண்டும். தமக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அல்லது நடந்து கொள்ள முயலும்என முதலாளி நம்புகிற தொழிலாளர் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அங்கீகரிக்கிறாரோ அதுபோலவே, நமக்கு நல்லது செய்யும் என நம்புகிற கட்சியைபெரும்பான்மையான மக்கள் தேர்தலின் மூலம் அங்கீகரித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்.

பெரும்பான்மையை இழந்த கட்சிகளோ, பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தங்கள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம்என்ற எண்ணத்தில் செய்யும் செயல்பாடுகளை எதிர்த்து, தடுத்த நிறுத்தும் எதிர்கட்சிகளாக இருக்கும். இப்படி, எதிர்கட்சியாக தனது கடமையை செவ்வனேசெய்த அரசியல் கட்சிகள் தாம் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களால் சாதாரணமாகவே அங்கீகரிக்கப்படும் அல்லது சாதனையாக பெரும்பான்மையோடுஆட்சியில் கூட அமர்த்தப்பட்டுள்ளது.

இதிலும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற தகுதியை பெறுவதற்கு, பதிவு செய்யப்பட்ட ஓர் கட்சியானது, ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பதிவான ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் குறைந்தது 6% வாக்கைப் பெற வேண்டும் என்பது அங்கீகாரத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோளாகும்.

இந்த அளவுகோளின்படி, இன்றைய நிலையில், அதாவது கடந்த பொதுத்தேர்தல் முடிவின்படி, தேசிய அளவில் ஏழு கட்சிகளும், தமிழ்நாடு மாநில அளவில்மூன்று கட்சிகளுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. மற்றவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரத்திற்காக காலம் காலமாககாத்திருக்கும் அல்லது காலா காலத்திற்கும் காத்திருக்கப் போகும் கட்சிகளே என்ற நிலையில்தான் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எல்லாமேஉள்ளன என்றால் மிகையல்ல.

ஏனெனில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் எல்லாம், தேர்தல் வரும் போது, பிரபல கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அல்லது பிரபல கட்சிவேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டாலே நாம் பிரபலமடைந்து விடுவோம், மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விடுவோம் என்றகுறுட்டுத்தனமான நம்பிக்கையில்தான் இருக்கிறார்களே ஒழிய, வளர்ந்த கட்சிகள் எப்படி வளர்ந்தன? மக்களால் எப்படி அங்கீகரிக்கப்பட்டன? என்பதைஆராய்ந்தறிந்து அதற்கு ஏற்றபடி, மக்களுக்கான களப்பணியை ஆற்றுவதில்லை.

மாறாக, வளர்ந்து விட்ட அக்கட்சிகள் தற்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனவோ, அதே நிலைப்பாட்டில் தங்களையும் ஒத்த கருத்துள்ளவர்களாய்கூட்டணி கட்சியை தேவைப்படும் போது அல்லது ஆட்சிக்கு ஒருமுறை என மாறிமாறி மாற்றிக் கொள்வதனாலேயே, தேர்தல் களத்தில்தனிப்பெரும்பான்மையோடு வெல்வதும் இல்லை. இனியும் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போவதும் சாத்தியமில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியல்லாது மக்களுக்கான களப்பணியோடு, தனியாத அரசியல் ஆர்வத்தில், தனியொரு நபராக, சுயேட்சையாக போட்டியிடும்தன்னார்வலர்களை, எங்கே தங்களைவிட்டு போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் மக்கள் அவர்களை அவ்வளவு எளிதில் அங்கீகரித்து தேர்ந்தெடுப்பதில்லை.

அப்படியே அங்கீகரித்து அனுப்பி வைத்தாலும் கூட, பத்தோடு ஒன்னு, பதிணொன்னு. அத்தோடு இதுவொன்னு என்ற நிலையில்தான் செல்லவேண்டியிருக்கிறதே ஒழிய, சுயேட்சையாக போட்டியிட சுயமாக முடிவெடுத்தது போல், சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எதையுமே சுயமாகசெய்ய முடிவதில்லை.

போட்டி என்றாலே, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சரிநிகர் சமம் என்ற அடிப்படையில் வயது, எடை, அறிவு போன்ற ஏதோவொரு வகையில் ஒத்திருக்கவேண்டும் என்பதே நியாயமானது என்பதால், அதுவே விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தகுதிக்கான அளவு கோலாக நிர்ணயிக்கப்படுகிறது.

விளையாட்டாக விளையாடும் விளையாட்டுக்கே இப்படி தகுதி நிர்ணயிக்கப்படும் போது, அரசாள போட்டி போடுபவர்களுக்கு அனைத்து விதத்திலும் சரிநிகர்சமமான தகுதியை நிர்ணயிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கட்டாய கடமையல்லவா?

ஆனால், அரசாள போட்டி போடும் அரசியல் கட்சிகளின் போட்டியைப் பொருத்தவரை இப்படிப்பட்ட நியாயமான எவ்வித தகுதியுமோ போட்டியாளர்களுக்குநிர்ணயிக்கப் படுவதில்லை. இதனால், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம், தங்களின் வலிமையை, பலத்தை, தகுதியை, தன்னைவிட அனைத்துவிதத்திலும் தகுதியில் குறைந்த சாதாரண எதிர்கட்சி வேட்பாளரிடம் போட்டி போட்டு நிலைநாட்டும் வெற்றி எப்படி உண்மையான, சரி நிகர் சமமானநியாயமான வெற்றியாக கருத முடியும்?

ஆனாலும், மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த வேதனையான வெற்றிகள் எல்லாம் கடந்த காலங்களில் ஐம்பதாண்டு சாதனைகளாக சட்டப்பேரவையிலேயே கொண்டாடப் பட்டுள்ளது. இவர்களின் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது, இவர்களே முதல்வராகபொறுப்பேற்று உள்ளார்கள்.

உண்மையில், கட்சியின் தலைவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில், யாராவது வெற்றி பெற்றால் மட்டுமே, அது மாபெரும் வெற்றியாகும்.இப்படியும் கூட, நடக்குமா என்ற சந்தேகமே வேண்டாம். இதுவும், தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளது.

எனவே, நியாயமாக பார்க்கப்போனால், அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒரே தொகுதியில் போட்டியிட தேவையான சட்டக் கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சித்தலைவரின் கட்சி வெற்றி பெறும் போது மட்டுமே, அவர் தலைமையிலான ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும்.

ஒருவேளை கூட்டணிக்கட்சி தலைவர் வெற்றி பெற்றால், அவர் தலைமையில் ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும். இவ்விரண்டு சாதக சூழ்நிலைகளும்இல்லாத போது, அதற்கான மாற்று வழிவகைகளையும் செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன் மூலமே, தொங்கு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற கூட்டணி ஆட்சியில் நிகழும் குழப்பங்களான, எங்களுக்கு இத்தனை மந்திரிபதவி வேண்டும் அல்லது எங்கள் தலைமையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம் அல்லது எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், எந்தநேரத்திலும் அரசுக்கு தந்த ஆதரவை விலக்கி கொள்வது மற்றும் பெரும்பான்மையைப் பெற மற்ற கட்சிகளுக்கு விலை பேசுவது போன்ற பல்வேறு கூட்டணிகுழப்பங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பிரபல கட்சித் தலைவர், தன்னை விட தகுதி குறைந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக அல்லது பிரதம அமைச்சராகபொறுப்பேற்பது, மக்களாட்சிக்கான பொதுத்தேர்வு என்னும் பொதுத்தேர்தலில் அடிப்படையில் நிகழும் முதல் தோல்வி என்றால், தேர்தலின் முடிவில்உண்மையில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியே, மறைமுகமாக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பது மக்களாட்சியின் முடிவான தோல்வியாகஇருக்கிறது. எப்படி?

ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போதோ தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலின் முடிவில் ஒருகட்சியோ அல்லது ஒருகட்சியின்தலைமையிலான கூட்டணி கட்சிகளோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நேர்வுக்கு ஏற்ப அதிகாரம் மிக்க ஆளுநரால் அல்லது குடியரசு தலைவரால்வெற்றி பெற்ற அக்கட்சி அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆட்சியை அடிப்படையில் மக்கள்தானே தேர்ந்தெடுத்தார்கள். அப்படியானால், ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதை கொடுத்தாலும்,கொடுக்காவிட்டாலும், விலையை ஏற்றினாலும், ஏற்றாவிட்டாலும், தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்பொறுமையாக ஏற்றுக் கொள்வதுதானே வாக்களித்த மக்களின் கடமை!

ஆனால், உண்மையில் மக்களாட்சியில், மக்களாட்சிக்காக வாக்களித்த மக்களின் நிலை என்ன? ஆட்சியாளர்கள் விலையை ஏற்றினாலோ அல்லதுஅத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவில்லை என்றாலோ அல்லது தங்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்றாலோ போராட்டம், ஆர்பாட்டம்,சாலை மறியல் போன்ற சட்டத்துக்கு உட்படாத செயலில் இறங்குவது ஏன்?

இப்படி இறங்கியவர்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாக தங்களின் தவறுகளை, சட்ட விரோத செயல்களை சரி செய்து நல்லதொருமக்களாட்சியை, மக்களுக்கு விருப்பமான ஆட்சியை நிலைநாட்டுவதுதானே ஆட்சியாளர்களின் கடமை?

ஆனால், உண்மையில், கடந்த காலங்களில் நாமறிந்தவரை என்ன நடந்துள்ளது? மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களாட்சியில், மக்களை மகிழ்ச்சியில்வைத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், மக்களின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துவது, வழக்கு பதிவு செய்து தண்டனையைபெற்றுத்தருவது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன்? இதுதான் வாக்களித்தமைக்கு கொடுக்கும் பரிசா?

முன்னுக்கு பின் முரணான இவ்விரண்டு செயல்பாடுகளுக்கும் அடிப்படை காரணம் என்ன என அடிப்படையில் ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு, மக்கள்தங்களின் வாக்குகளை செலுத்தி, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அம்மக்களை ஆள ஆட்சியில் அமர்த்தப்பட்டிருப்பதுபெரும்பான்மை மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதே!

உண்மையாக, தேர்தலில் நான்கு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போடுவதாகவும், நூறு சதவிகித வாக்குகள் பதிவாவதாகவும் எடுத்துக் கொள்வோம்.இதில் முதல் கட்சிக்கு 27 வாக்குகளும், இரண்டாவது கட்சிக்கு 25 வாக்குகளும், முன்றாவது மற்றும் நான்காவது கட்சிக்கு சராசரியாக தலா 24 வாக்குகளோஅல்லது ஓரிரு வாக்குகள் ஏறக்குறைய வாக்குகளாகவோ பதிவாகிறது என்று எடுத்துக் கொள்வோம்.

இங்கு27 வாக்குகளைப்பெற்றமுதல்கட்சிதானேவெற்றிபெற்றதாகஅறிவிக்கப்பட்டுமக்களாட்சிஎன்றபெயரில்ஆட்சிசெய்யஅமர்த்தப்படுகிறது.ஆனால்உண்மையில்இப்படிஅமர்த்தப்படும்கட்சியைஎதிர்த்துமற்றமூன்றுகட்சிகளுக்கும்வாக்களித்தவர்களின்ஒட்டுமொத்தஎண்ணிக்கை73நபர்கள்அல்லவா?

இப்படி, பெரும்பான்மை எதிர்போடும், சிறுபான்மை ஆதரவோடும் நடைபெறும் ஆட்சி எப்படி உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியாகஇருக்க முடியும்?

நான்கு கட்சிகள் போட்டி போட்டு, பொறுப்புணர்வோடு நூறு சதவிகித வாக்குகள் பதிவாகும் மக்களாட்சியே, உண்மையான மக்களாட்சியாக இல்லாத போது,கணக்கிலடங்கா கட்சிகளோடு, சுயேச்சைகள் வேறு போட்டி போடும் பொதுத்தேர்தலில், அதிகபட்சமாக சற்றேறக் குறைய எழுபது சதவிகித வாக்குகளேபதிவாகிற வாக்குப்பதிவில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற உறுதியில்லா மின் வாக்குப்பதிவு, கள்ள வாக்கு, இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும்வாக்கு, இலவசங்களை கொடுத்து இலவசமாக பெறும் வாக்கு, விருப்பம் இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக பதிவாகும் வாக்கு என பல்வேறு தரப்பட்டவாக்குப்பதிவுகளின் மூலமே வெற்றி பெற்று நடைபெறும் ஆட்சி எப்படி மாண்புமிக்க மக்களாட்சியாக இருக்க முடியும்?

மாறாக, நிச்சயமாக, மனசாட்சி இல்லாத, மக்களின் மதிப்பை பெறாத ஆட்சியாகத்தானே இருக்க முடியும். அன்றன்று; அப்படித்தானே இருக்கிறது.அப்படியானால், உண்மையான நியாயமான, மகத்தான மக்களாட்சி மலர இதில் நாம் சொல்லும் சீர்கேடுகள் எல்லாம் இந்திய அரசமைப்பு மற்றும் மக்கள்பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக களையப்பட வேண்டும்.

இதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைப்பெற்ற தேர்தல்களில் எல்லாம் செலுத்தியதை விட, தனது சுய அதிகாரத்தை தேர்தல் ஆணையம், தற்போதையபொதுத்தேர்தலில் முழு முனைப்போடு செலுத்தி, மகத்தான மக்களாட்சி மலர முதற்கட்டமாக களமிறங்கி, சீர்கேடுகளை களையெடுக்க முயற்சிக்க வேண்டும்.

22. தவறுகளுக்கு வழிவகுக்கும் தகவல் தொழில் நுட்பம்!

நாம் மாணவர்களாக இருந்த போது, படிச்சி வக்கீலாகப் போறியா, டாக்டராகப் போறிய, இஞ்சியராக போறிய என பல்போன பொக்கைவாய் பாட்டி கூடகேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி கேட்பது தற்போது குறைந்து, சாப்பிட்டு வேர் இஞ்சினியர் ஆகப் போறியா என கேட்க தொடங்கி விட்டார்கள்.

இப்படி யாராவது என்ன முன்பாக கேட்டால், படித்து பொய்யனாக போறியா, கொலைகாரனாக போறியா, மோசடிக்காரனாக போறியா என்று மாற்றி கேளுங்கள்என்பேன் அல்லது அவர்கள் முன்பாக நானே கேட்டு விடுவேன்