புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசானை வெளியிடபட்டது
அரசுக்கு தேவையில்லா புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கிட அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், அரசுக்கு சொந்தமான நிலங்களில்
நீர்நிலைகள் புறம்போக்கு உள்ளாட்சிக்கு சொந்தமான சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் தவிர்த்து ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தங்களுக்கு என்று எந்த ஒரு நிலமும் இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 3 சென்ட் இலவச வீட்டுமனை வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தாலே 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றும் இதற்காக தனியாரிடம் இடத்தை வாங்கி இலவச வீட்டு மனைகளை வழங்கவும் முடிவு செய்திருப்பதாகவும் ஆறு மாதங்களில் இலவச வீட்டுமனைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்
தகுதியின் அடிப்படையில் 6 மாதங்களில் 3 சென்ட் அளவிற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடைய குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா பெற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.