- அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா.
- இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
- இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ராதிகா மனு அளித்திருந்தார்.
- மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ராதிகா மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:
- அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.
- அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
- ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்த வேண்டும்.
- அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
- தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும்.
15.03.2022https://www.dinamalar.com/news_detail.asp?id=2983878