GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை

சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை

சொத்துரிமையை தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் சார் பதிவாளருக்கு இல்லை எனவும் சார்பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை பதிவு செய்து கொடுப்பதும் அதன் உண்மை நகலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பாது காத்து வைப்பதும் அதன் நகல் தேவைப் படுபபவர்களுக்கு சட்டப்படி நகல் வழங்கவும் தான் அதிகாரம் உள்ளது என்று ஒரு வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது இந்நிலையில் நில ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்புக்கு எதிராகவும் மற்றும் மோசடி ஆவணப்பதிவுகளை ரத்து செய்யவும் முறையான சட்டங்களை இயற்றவும் திருத்தவும் உச்ச நீதி மன்றம் தமிழ் நாடு மாநில அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியும் அதற்குரிய சட்டங்களை இயற்றாத தமிழ்நாடு மாநில அரசாங்கம் ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு சார்பதிவாளருக்கு சில அதிகாரங்களை வழங்கும் வகையில் உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முரனான ஒரு சட்டத்தை இயற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும் பொழுது உச்ச நீதி மன்ற தீர்ப்பை அதில் சுட்டிக் காட்டாமல் மறைத்து இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் பெற்று சட்டமாக்கியது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முரனாக ஒரு மாநில அரசாங்கம் சட்டம் இயற்ற முடியாது என்றும் இதை எதிர்த்து சமூக ஆர்வலர்களோ அல்லது வழக்கறிஞர்களோ வழக்கு தொடுத்தால் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுவிடும் என்ற கருத்தை நான் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த சட்டத் திருத்தம் சம்மந்தமான வழக்கில் மதராஸ் உயர் நீதி மன்றம் வழங்கியுள்ள 117பக்க கொண்ட தீர்ப்பில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை முன்னிலை படுத்தி பதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தில் உச்ச நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டி காட்டப்படாமல் உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது எந்த ஒரு ஆவணத்திலும் உண்மை மறைக்கப் பட்டிருக்குமானால் அது ஏற்கத்தக்கது அல்ல என்ற சட்ட அறிவு நுனுக்கத்தையும் தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது நன்றி

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்-passport) புதுப்பிக்கவும் புதிதாக எடுக்கவும் உரிமை உண்டா?கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்-passport) புதுப்பிக்கவும் புதிதாக எடுக்கவும் உரிமை உண்டா?

Views: 47 கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கடவுச்சீட்டு புதுப்பிக்க உரிமை உண்டா? புதுப்பித்தல் என்பது புதிய கடவுச்சீட்டு வழங்குவதிலிருந்து வேறுபட்டதா? மேலும், “கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தாலும் புதுப்பிப்புக்கு தடையில்லை” என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்துமா? இந்த

காசோலையில் கையெழுத்து ஒரு பேனாவிலும், மற்றவை மற்றொரு பேனாவிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம்காசோலையில் கையெழுத்து ஒரு பேனாவிலும், மற்றவை மற்றொரு பேனாவிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம்

Views: 451 காசோலை மோசடி வழக்கு – காசோலையில் புகார்தாரரின் கையெழுத்து ஒரு பேனா மையிலும், மற்றவை மற்றொரு பேனா மையிலும் எழுதப்பட்டிருந்தால் அந்த காசோலை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. (Even though in cheque payee

போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?

Views: 13 போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா? பொய் வழக்கில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள கீழ் கண்டவாறு செயல்பட்டால் நீங்கள் உங்களை தற்க்காத்து கொள்ளமுடியும் என்று party in persion ஆக வாதாடி பல சாதனை புரிந்த திரு. இராஜேந்திரன்,