GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் காரைகால் வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் B. ஷாஜஹான் அவர்களின் வாக்குறுதி (இதுவும் ஒரு சட்டப்பதிவே)

காரைகால் வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் B. ஷாஜஹான் அவர்களின் வாக்குறுதி (இதுவும் ஒரு சட்டப்பதிவே)

காரைக்கால் வடக்கு தொகுதியில் ஷாஜஹான் ஆகிய என்னை பலூன் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால்……
மக்களுக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகள்
1. முழு சுகாதார பகுதி
காரைக்கால் வடக்கு தொகுதி விபத்து இல்லாத தரமான சாலை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதுடன் குப்பையில்லாத , சாக்கடை, கொசுக்கள் இல்லாத முழு சுகாதாரப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, டெங்கு மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கும் வகையில், இலவச மருந்து மாத்திரைகளுடன் கூடிய மருத்துவமனையும் மற்றும் சுகாதார மையங்களும் அமைக்கப்படும் . அவசர மேல் சிகிச்சைக்கு தொகுதியிலேயே வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வரப்படும்.
2. படித்த பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 18% பிராந்திய இட ஒதுக்கீடு
அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் அரசு வேலை உறுதி செய்யும் வகையில் 18%சதவிகித பிராந்திய இட ஒதுக்கீடு பெற்று தரப்படும்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில் VAO, LDC, UDC, IAS, IPS மற்றும் தாசில்தார் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும்.
3. மீனவ மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்
மீனவ சொந்தங்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் ஒவைசி மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மானியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4. ஆதிதிராவிடர் நலன் மற்றும் நிதியை முழுமையாக ஆதிதிராவிடருக்கே பயன்படுத்துதல்
ஆதிதிராவிடர் மக்களுக்கு உள்ள அனைத்து திட்டங்களையும் 100 சதவீதம் செயல்படுத்துவதுடன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒதுக்கப்படும் நிதியை 100 சதவீதம் ஆதிதிராவிடருக்கே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
5. இட ஒதுக்கீடு மற்றும் இருக்கின்ற இடஒதுக்கீடு பாதுகாப்பு
சிறுபான்மை மக்களின் இட ஒதுக்கீடு 2 சதவீதத்திலிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் BC, OBC, MBC, EBC, SC/ST இடஒதுக்கீடு பறிபோகாமல் பாதுகாக்கப்படும். மேலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள வக்ஃபு வாரியம் கலைக்கப்பட்டு, முறையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. நிலக்கரி ரயில் கட்டுப்பாடு மற்றும் பயணிகள்ரயில் போக்குவரத்து ஏற்பாடு
காரைக்காலில் நிலக்கரி சரக்கு ஏற்றும் ரயில் ஒரு நாளைக்கு 15 முறைக்கு மேல் செல்வதால் புதிய பஸ்டாண்டு , ராஜாத்தி நகர், ராயல் மஹால் மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே (Gate) கேட்டினால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நிலக்கரி ரயில் அடிக்கடி செல்வதால் காரைக்கால் வடக்கு தொகுதியில் வசிக்கும் மக்களும் மற்றும் அனைத்து மக்களுக்கும் எதிர் காலத்தில் நுரையீரல் நோய், இதய நோய் மற்றும் கேன்சர் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் , காரைக்கால்-பேரளம் மார்க்கத்தில் இயக்கப்படும் நிலக்கரி ரயிலை கட்டுபடுத்தி பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
7. மின் கட்டணம் முறைபடுத்துதல் மற்றும் மின் துண்டிப்பு தடுப்பது.
வடக்கு தொகுதி பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் விவசாயிகளை மிக கடுமையாக பாதிக்கும் வகையில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கும் மிண் கட்டணத்தை தடுத்து முறைபடுத்தி பொதுமக்களை சிரமபடுத்தாத வகையில் மாதாமாதம் பில் வசூலிக்கும் முறையையும் , தவணை முறையில் மின்கட்டணம் கட்டுவதற்கும் மிண் துண்டிப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
8. தடையற்ற ரேசன் கடை மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம்
முழு உத்திரவாதத்துடன் ரேசன் கடை திறக்கப்பட்டு தடையற்ற முறையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9. சமையல் கேஸ் தட்டுபாடு மற்றும் சீரான விநியோகம்
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு நீக்கப்பட்டு சீரான விநியோகம் சமையல் கேஸ் தட்டுபாடுகளினால் பல வீடுகளில் இல்லத்தரசிகளும், ஹோட்டல்களும், வியாபாரிகளும் கடும் நெருக்கடியை சந்திப்பதை கருத்தில் கொண்டு நமது வடக்கு தொகுதியில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடை முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு சீரான மற்றும் முறையான விநியோகம் செய்யப்படும்.
10. மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு உயர்த்துதல்
வடக்கு தொகுதியில் உள்ள அனைத்து மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் – குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
11. ராஜாத்தி நகர் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது.
மக்கள் வரிப்பணத்தில் ராஜாத்தி நகரில் 10 ஆண்டுகளாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
12. விவசாயிகள் மானியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை.
விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு மானியம் உயர்த்தி வழங்க குரல் கொடுக்கப்படும்.
13. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு தொழிற் வாய்ப்புகள்
வடக்கு தொகுதியில் உள்ள படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு தொழிற் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு IT மற்றும் AI துறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
14. அரசு தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்.
வடக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களும் நிரப்பப்படும்.
15. அரசு தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்.
குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள்மற்றும் நகராட்சியில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வளர்ச்சி ….வளர்ச்சி…. என்று பொய் வாக்குறுதி கொடுப்பவர்கள் மத்தியில் நீங்கள் பலூன் சின்னத்தில் வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதுடன் உண்மையான வளர்ச்சியை தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்….
என்னும் மக்கள் பணியாற்ற….
வெற்றியை நோக்கி…..மக்கள் தீர்ப்பை எதிர்ப்பார்த்து……
உங்களின் தோழன்….
ப ஷாஜஹான்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

Views: 49 முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்” வழக்குரைஞர் :அ.அக்பர் பாஷா குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் | Tamil Nadu State Election Commissionதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் | Tamil Nadu State Election Commission

Views: 74 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்Tamil Nadu State Election Commission தேர்தல்கள் நடத்துதல்1. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் :உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பட்டியலானது அவ்வுள்ளாட்சிப் பகுதிக்கு தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியின் நடப்பு வாக்காளர் பட்டியலை

பணம் செலுத்தியும் நில அளவை செய்துத் தராவிட்டால் எப்படி சட்ட அறிவிப்பு (Legal notice) கொடுப்பது?பணம் செலுத்தியும் நில அளவை செய்துத் தராவிட்டால் எப்படி சட்ட அறிவிப்பு (Legal notice) கொடுப்பது?

Views: 44 நில அளவை செய்வதற்கு பணம் செலுத்தியும் அளவீடு செய்யவில்லையா.. கவலை வேண்டாம் நீங்களே சட்ட அறிவிப்பானை அனுப்பிவிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு தொகையை பெறலாம்.. மாதிரி அறிவிப்பானை: வழக்குத் தொடருமுன் அறிவிப்பானை. _ மாவட்டம், _