GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

பட்டா நிலத்திற்கு செல்வதற்கான பொதுபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஆம் முடியும்!

ராஜம்மாள் என்பவர் ஒரு விவசாயி. அவருக்கு சொந்தமாக பட்டா நிலம் உள்ளது, அந்த நிலத்தில் அவர் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறார், இந்நிலையில் சிலர் ராஜம்மாளின் பட்டா நிலத்திற்கு அருகிலுள்ள, பொதுப் பாதையான, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அதில் குப்பைகள் மற்றும் மணலை கொட்டி வைத்து ராஜம்மாள் விவசாய நிலத்துக்கு செல்ல தடை ஏற்படுத்தினர்.

இதனால் பட்டா நிலத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை, விவசாயமும் செய்ய முடியவில்லை, இதனால் பாதிக்கப்பட்ட ராஜம்மாள், மாவட்ட ஆட்சியரிடம் பொதுப் பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும், என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்தார்,
அந்த மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காததால், ராஜம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,
பொதுப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது, அது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாதை ஆக்கிரமிப்பு என்று மனு தாக்கல் செய்யப்பட்டால், உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது.

ராஜம்மாளின் மனு மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், விசாரணை நடத்த வேண்டும் என்று கலெக்டர் முடிவு செய்தால் ராஜம்மாள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அந்த விசாரணையை 10 நாட்களுக்குள் நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

CASE: W. P. NO – 34103/2016
02.01.2019.

ராஜம்மாள் Vs மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பலர், 2019-1-TLNJ-CIVIL-227.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பாகப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல்பாகப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல்

Views: 22 பாகப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல். இந்தியாவில் கூட்டு குடும்பங்களாக அதிகமாக சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்களும் சேர்ந்து இருக்கிறது. அதை எந்த பிரச்னையுமின்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளதான், இந்த பாகப் பத்திரம் பயன்படுகிறது. இந்த பாகப் பத்திரத்தை,

விவாகரத்து இன்றி வேறொரு திருமணம் செய்ததாக வரும் புகாருக்கு போலீஸ் வழக்கு FIR பதிவு செய்யக்கூடாது. Madras.HC (Tex-Pdf)விவாகரத்து இன்றி வேறொரு திருமணம் செய்ததாக வரும் புகாருக்கு போலீஸ் வழக்கு FIR பதிவு செய்யக்கூடாது. Madras.HC (Tex-Pdf)

Views: 481 முறையான விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணத்திற்கு எதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கையில் காவல்துறை அதிகாரம் என்ன மாண்புமிகு உயர்நீதிமன்ற தீர்ப்பு கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு ஒருவரை திருமணம் செய்தால்., CRL. OP. NO

லலிதா குமாரி எதிர் உ. பி. உத்திர பிரதேச மாநில வழக்கு | Lalita Kumari vs Govt. of U.P., (2014) 2 SCC1லலிதா குமாரி எதிர் உ. பி. உத்திர பிரதேச மாநில வழக்கு | Lalita Kumari vs Govt. of U.P., (2014) 2 SCC1

Views: 11 Lalita Kumari vs Govt. of U.P., (2014) 2 SCC1 உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள, காஜியாபாத் (Ghaziabad) என்ற நகரைச் சேர்ந்தவர் லலிதகுமாரி என்ற பெண்மணி. இவர் தன்னுடைய மகள் கடத்தப்பட்டது சம்பந்தமாக அங்குள்ள காவல்துறையில் புகார்