கூட்டுறவு சங்கங்கள் தகவல் உரிமை சட்டத்தில் தகவல் வழங்க வேண்டும் – தகவல் ஆணையம் தீர்ப்பு
தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.19, அரசு பண்ணை கிராமம், பேர்ன்பேட்டை, நந்தனம், சென்னை – 600 035. (Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515590
விசாரணை நடைபெற்ற இடம் :
வழக்கு எண். SA 8280/A/2020
ஆணை நாள் – 25.03.2022
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் மாவட்டம்.
முன்னிலை
திரு ப. தனசேகரன், B.A., LLB.,
மாநில தகவல் ஆணையர்
திரு. T.S. சிவக்குமார்,
/எதிர்/
பொதுத் தகவல் அலுவலர்/ துணைப்பதிவாளர் (பொவிதி), கூட்டுறவு அலுவலக வளாகம், மோகன் குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி, ஈரோடு – 638 009.
மேல்முறையீட்டாளர்/பொது அதிகார அமைப்பு
ஆணை
**
மனுதாரர் / மேல்முறையீட்டாளர், 22.11.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் பொதுத்தகவல் அலுவலர் / கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், சென்னை 10 அவர்களுக்கு தகவல் கோரி அனுப்பிய மனுவில் எண் K290, அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது அதிகார அமைப்பின் கீழ் வருகிறதா என்றும் இதுகுறித்து மேலும் 5 இனங்களில் தகவல்களை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதனைப் பெற்ற பொதுத்தகவல் அலுவலர் / கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக இணைப்பதிவாளர் (சட்டம் & பயிற்சி), சென்னை அவர்கள் ந.க.75622/2019/நி.அ.1, நாள் – 28.11.2019 கடிதத்தின் மூலம் பொதுத்தகவல் அலுவலர் / துணைப்பதிவாளர் / பணியாளர் அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், ஈரோடு மண்டலம் அவர்களுக்கு மனுவினை மாற்றம் செய்துள்ளார்.
- அதனைப் பெற்ற பொதுத்தகவல் அலுவலர் / துணைப்பதிவாளர் / பணியாளர் அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், ஈரோடு மண்டலம் அவர்கள் ந.க.எண்.7767/2019/சப, நாள் – 06.12.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் பொதுத்தகவல் அலுவலர் / துணைப்பதிவாளர் (பொ.வி.தி), ஈரோடு அவர்களுக்கு மனுவின் மீது உரிய நடவடிக்கைகாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(3)(i)ன் கீழ் மாற்றம் செய்துள்ளார். இந்நிலையில் பொதுத்தகவல் அலுவலர் / துணைப்பதிவாளர் (பொவிதி), ஈரோடு அவர்கள் ந.க.எண்.3215/2019, பொவிதி.2, நாள் 12.12.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் பொதுத்தகவல் அலுவலர் / செயலாளர், அந்தியூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், அந்திர் வட்டம், ஈரோடு அவர்களுக்கு மனுவின் மீது உரிய நடவடிக்கைகாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(3)(ii)ன் கீழ் மாற்றம் செய்துள்ளார்.
- அதனைப் பெற்ற அந்தியூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், அந்தியூர் வட்டம், ஈரோடு அவர்கள் தங்களது அமைப்பானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(h)(d)(i)ன் பொது அதிகார அமைப்பின் வரையறைக்குள் வராது என 23.12.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் மனுதாரருக்கு தகவல்களை வழங்கியுள்ளார். அதன்மீது மனநிறைவு கொள்ளாத மனுதாரர் / மேல்முறையீட்டாளர் 13.03.2020 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 19(1)-ன் கீழ் மேல்முறையீட்டு அலுவலர் / துணைப்பதிவாளர் (பொவிதி), ஈரோடு அவர்களுக்கு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனைப் பெற்ற மேல்முறையீட்டு அலுவலர் / துணைப்பதிவாளர் (பொவிதி), ஈரோடு மண்டலம் அவர்கள் நக.682/2020/பொவிதி.2, நாள் 09.04.2020 தேதியிட்ட கடிதத்தின் மூலம் W.A.No.2500-2013, நாள் 29.04.2015ல் தேதியிட்ட வழக்கின் தீர்ப்புகளை மேற்கொள் காட்டி மேற்சொன்ன சங்கமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(h)(d)(i)ன் பொது அதிகார அமைப்பின் வரையறைக்குள் வராது என குறிப்பிட்டு மனுதாரருக்கு தகவல்களை வழங்கியுள்ளார். அதில் திருப்தியடையாத மனுதாரர் / மேல்முறையீட்டாளர் 16.09.2020 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 19(3)-ன் கீழ் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். அதனைப் பெற்ற ஆணையம் SA8280/A/2020-ஆக பதிவு செய்து விசாரணைக்கு ஏற்றது.
- Covid-19 காரணமாக தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கிணங்க காலதாமதமாக மேற்சொன்ன இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனுதாரர் / மேல்முறையீட்டாளர் கோரிய இனங்களுக்கு உரிய தகவல்களை 02.09.2021-க்குள் மனுதாரருக்கு வழங்குவதற்கு இறுதி வாய்ப்பு வழங்கி பொதுத் தகவல் அலுவலருக்கு 12.08.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுத்தகவல் அலுவலரால் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்றாலோ, முழுமையற்ற தகவல்கள் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறான, குறைபாடான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தாலோ, மேல்முறையீட்டாளர் ஆணையத்திற்கு 13.09.2021-க்குள் கடிதம் வேண்டும் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டது. மனுதாரர் 7 மூலம் தெரிவிக்க
- அதனைப் பெற்ற பொதுத்தகவல் அலுவலர் 7 துணைப்பதிவாளர் (பொ.வி.தி), ஈரோடு மண்டலம் மனுதாரருக்கு தகவல்களை வழங்கிவிட்டதாகக் கூறி அதற்குரிய ஆவணங்களை ந.க1808/2021/பொவிதி2, நாள் – 21.09.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரிடமிருந்து எந்தவித கடிதமும் ஆணையத்திற்கு கிடைக்கப் பெறாத நிலையில் மனுவின் மீது விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு 25.03.2022 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தகவல் ஆணைய விசாரணைக்கு மனுதாரர் மற்றும் பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு விசாரணை அறிவிப்பு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டது.
- அழைப்பாணையைப் பெற்று மனுதாரர் திரு. T.S. சிவக்குமார் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. அவருடைய வருகையின்மை ஆணையத்தால் பதிவு செய்து கொள்ளப்பட்டது. பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு. கே. கந்தசாமி, பொதுத்தகவல் அலுவலர் / துணைப்பதிவாளர் (பொவிதி), கூட்டுறவு அலுவலக வளாகம், ஈரோடு அவர்கள் நேரில் ஆஜரானர்.
- இன்றைய விசாரணையில் கலந்துக் கொண்ட பொதுத்தகவல் அலுவலர் மனுதாரரால் இதே பொருள் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டு அவற்றிற்கு தகவல் ஆணைய வழக்கு எண். SA3370/C/2018, நாள் 22.10.2018ன் மூலம் தகவல் ஆணையர் அவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(h)(d)(ii)ன் பொது அதிகார அமைப்பின் வரையறைக்குள் வராது என தீர்வு காணப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு தவல்களை வழங்கவில்லை எனக் கூறினார். ஆணையம் அதனை பதிவு செய்து கொண்டது.
- கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கமானது பொதுமக்களிடமிருந்து ஈட்டு வைப்பு பெற்றும், மத்திய கூட்டுறவு வங்கி, மாநில கூட்டுறவு வங்கி மற்றும் NABARD போன்ற அமைப்புகளிலிருந்து நிதி ஆதாரங்களை பெற்றும் இயங்கி வரும் அமைப்பு ஆகும். மேற்கூறிய கூட்டுறவு வங்கிகளை பொறுத்த வரை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமே அமல்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களின் ஈட்டு வைப்புகளை கையாள ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி கையாள இயலாது.
- மேலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும் என்று ந.க.95879/2013/நிஅ1, நாள்: 18.01.2014 தேதியிட்ட கடிதத்தின் மூலம் திருமதி. இரா. பிருந்தா, எம்.காம்., சிஏஐஐபி., இணைப்பதிவாளர் (சட்டம் மற்றும் பயிற்சி) பொதுத் தகவல் அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், சென்னை அவர்களால், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், இணைப்பதிவாளர் (பொவிதி-I&II), சென்னை மற்றும் அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூட்டுறவுச் சங்கங்களும் பொது அதிகார அமைப்பின் கீழ் வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கீழ் வரும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் அரசு நிதி உதவி செய்து வருகிறது. அனைத்து கூட்டுறவு வங்கிகளும் பொது மக்களிடமிருந்து வைப்பீடு பெற்று செயல்படுகிறது. அனைத்து கூட்டுறவு பணியாளர்களும் அரசு ஊழியர்களாக கருதப்பட வேண்டுமென்று போராட்டங்கள் நடத்தியுள்ளனர். உயர்நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொறுப்பை தட்டி கழிக்கின்ற வகையில் கூட்டுறவு சங்கங்கள் பொது அதிகார அமைப்பின் கீழ் வராது என்கின்றனர். மேலும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் கீழ் வருகிறது என T.P.C.C.(No.707/2012 SCICC) OJTRANSEE RED CASE(C) NO.91/2015, DATED: 16.12.2015 தீர்ப்பின்படி இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திருமதி. K. பிரமிளா, கூடுதல் பதிவாளர் (ICDP)/ மேல்முறையீட்டு அலுவலர், கூட்டுறவுச் சங்கங்கங்களின் பதிவாளர் அலுவலகம், அவர்கள் RC No.66860/2013 AR(1), Dated: 06.09.2013 நாளிட்ட சுற்றறிக்கையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 2(h)-இன் கீழ் பொது அதிகார அமைப்பாக கருதப்படும் என்றும் அதற்காக உதவிப் பொதுத் தகவல் அலுவலர், பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதையும் ஆணையம் பதிவு செய்துகொள்கிறது.
- இதனடிப்படையில், தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களும் பொது அதிகார அமைப்பின் கீழ் வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுத்தகவல் அலுவலரின் வாதத்தை நிராகரித்து கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பித்து இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு முற்றாக்கம் செய்யப்படுகிறது.
மனுதாரர் / மேல்முறையீட்டளார் 22.11.2019 தேதியிட்டு தகவல் அறியும் உரிமை சட்ட மனு 6(1)ல் கோரும் தகவல்களை இவ்வாணையத்தின் உத்தரவு கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி மேல்முறையீட்டாளருக்கு அனுப்பிவைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுகிறது. அவ்வாறு தவறும்பட்சத்தில் பொதுத்தகவல் அலுவலர் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1) மற்றும் 20(2)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஒம்/-(ப.தனசேகரன்) மாநில தகவல் ஆணையர்
//ஆணைப்படி//
வழக்கு எண். SA 8280/A/2020
பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்
பெறுநர் பொது அதிகார அமைப்பு:பொதுத் தகவல் அலுவலர் / துணைப்பதிவாளர் (பொவிதி), கூட்டுறவு அலுவலக வளாகம், மோகன் குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி, ஈரோடு -638009
