பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கீதா, 2023 – பிணை (Bail) தொடர்பான சட்டப்பிரிவுகள்
1. பிணை என்றால் என்ன?
- பிரிவு 2 (Subsection 1) பிணையை வரையறுக்கிறது.
- ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரை, அல்லது குற்றம் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை, சட்டப்படியான காவலில் இருந்து விடுவிப்பதே பிணை (Bail).
- இது நிபந்தனைகளோடு அல்லது நிபந்தனைகள் இன்றி வழங்கப்படலாம்.
- காவல் என்பது ஜூடிசியல் கஸ்டடி (Judicial custody) அல்லது போலீஸ் கஸ்டடி (Police custody) ஆகிய இரண்டிலும் இருக்கலாம்.
2. பிணை உத்தரவை யார் வழங்கலாம்?
- அதிகாரி (Officer) அல்லது நீதிமன்றம் (Court).
- காவல் நிலையத்தில் அதிகாரி வழங்கும் பிணை பொதுவாக “ஸ்டேஷன் பெயில்” என்று அழைக்கப்படுகிறது.
- சட்டத்தில் “by an officer” என்று கூறப்படுவது, அதிகாரம் பெற்ற காவல் அதிகாரியை குறிக்கிறது.
3. பிணை வழங்கும் முறைகள்
- பிணை உத்தரவு வழங்கும்போது:
- Bond (பாண்டு) மூலம், அல்லது
- Bail Bond (பெயில் பாண்டு) மூலம் விடுவிக்கலாம்.
Bond என்றால் – தனிப்பட்ட நபர் எழுதி கொடுக்கும் undertaking (சூரிட்டி தேவையில்லை).
Bail Bond என்றால் – சூரிட்டி / ஜாமீன்தாருடன் எழுதிக் கொடுக்கும் undertaking.
4. Bail மற்றும் Bail Bond வித்தியாசம்
- Bond – சூரிட்டி இல்லாமல் விடுதலை (ஜாமீன்தார் தேவையில்லை).
- Bail Bond – சூரிட்டியுடன் வழங்கப்படும் பிணை.
5. Bail தொடர்பான முக்கிய பிரிவுகள் (BNSS 2023)
- Section 478 – Bailable offence-களுக்கான பிணை மனு (முந்தைய CrPC 436).
- Section 479 – Under-trial prisoners:
- குற்றத்திற்கு விதிக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையின் பாதி காலம் சிறையில் இருந்துவிட்டால் → கட்டாயமாக பிணையில் விட வேண்டும்.
- முதன்முறை குற்றவாளி (First-time offender) என்றால், அதிகபட்ச தண்டனையின் மூன்றில் ஒரு பங்கு காலம் சிறையில் இருந்தால், பாண்டு மூலம் கட்டாய விடுதலை செய்ய வேண்டும்.
- ஆனால், Public Prosecutor வாதங்களை கேட்டு, போதுமான காரணம் இருந்தால் நீதிமன்றம் விடுதலையை மறுக்கவும் முடியும்.
- மனுவை தாக்கல் செய்வது சிறை சுப்ரிடெண்டின் கடமை.
- Section 480 – Non-bailable offence-களுக்கான பிணை மனு (முந்தைய CrPC 437).
- Section 481 – Convicted persons pending appeal:
- குற்றவாளி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராக bail bond எழுதி கொடுத்து, தண்டனை நிறுத்தி வைக்கப்படலாம்.
6. முன்ஜாமீன் (Anticipatory Bail)
- முந்தைய CrPC 438 → இப்போது BNSS Section 482.
- ஒரு non-bailable offence தொடர்பாக, கைது செய்யப்படும் முன்னரே, உயர்நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணை பெறலாம்.
- நிபந்தனைகள்:
- போலீஸ் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
- சாட்சிகளை மிரட்டக்கூடாது, தடுக்கக்கூடாது.
- இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது (நீதிமன்ற அனுமதி இல்லாமல்).
7. முன்ஜாமீன் தொடர்பான விதிவிலக்குகள்
- BNSS Section 65 – Rape (சில குறிப்பிட்ட சூழ்நிலைகள்): குற்றம் சாட்டப்பட்டவர் முன்ஜாமீன் கேட்க முடியாது.
- BNSS Section 70 (Subsection 2) – Gang rape: குற்றம் சாட்டப்பட்டவர் முன்ஜாமீன் கேட்க முடியாது.
8. சுருக்கம்
- Bail = சட்டபூர்வ காவலில் இருந்து விடுதலை.
- Bond = சூரிட்டி இல்லாமல்.
- Bail Bond = சூரிட்டியுடன்.
- 478 → Bailable offences.
- 479 → Under-trial prisoners (½ அல்லது ⅓ தண்டனை காலம் முடிந்தால் கட்டாய விடுதலை).
- 480 → Non-bailable offences.
- 481 → Appeal pending (convicted persons-க்கு bail).
- 482 → Anticipatory bail.
- விதிவிலக்குகள் – Section 65 (Rape), Section 70 (Gang rape): முன்ஜாமீன் கிடையாது.
Courtesy: “Win Law Chamber” Youtube Chennal & Mr. M. P. Murugan Ma., LL.B., Addl District Judge, Kuzhuthurai.