Youtube original title: According to the Mohammedan Act 1937, the great-grandson who personally claimed the place of his
இது ஒரு புதுவகையான வழக்கு.
இந்த வழக்குல என்ன சொல்லப்பட்டிருக்கு அப்படின்னா — முக்கியமாக முஸ்லிம்களுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கு. அந்த சட்டத்தின் அடிப்படையில ஒரு ஆவணம் பதிவு செய்யப்படுது. அந்த ஆவணத்தின் அடிப்படையில, “எனக்கு பட்டா கொடுங்க” அப்படின்னு சொல்லி ஒரு நபர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கு. அந்த வழக்கு எண் என்னன்னு பாத்தீங்கன்னா W.P. (MD) No.16694 of 2025.
இந்த வழக்கு 20-6-2025 அன்று மாண்புமிகு நீதியரசர் எஸ். சௌந்தர் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முஸ்லிம் தனிநபர் சட்டம் (1937)
இந்த வழக்குல முக்கியமானது — அந்த புதுமையான சட்டம் தான்.
அந்த சட்டம் என்னன்னு பாத்தீங்கன்னா “முகமதிய சட்டம்” என்று சொல்லக்கூடிய முஸ்லிம்களுக்கான தனிநபர் சட்டம். இது 1937-ல் கொண்டு வரப்பட்டிருக்கு.
இந்த சட்டத்தின் அடிப்படையில, அசையா சொத்துக்கள் (immovable property) சம்பந்தமாக — அதாவது 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் — ஒருவர் இன்னொருவருக்கு எழுதிக்கொடுத்து வழங்கலாம்.
அந்த ஆவணம் தான் ஹீபா (Hiba) ஆவணம் என்று சொல்றாங்க.
ஹீபா ஆவணம்
நம்ம நிறைய ஆவணங்கள் பார்ப்போம் —
- சொத்து பரிமாற்ற ஆவணம்
- பாக பிரிவினை ஆவணம்
- குடும்ப ஏற்பாட்டு ஆவணம்
இந்த மாதிரி ஆவணங்களில் ஒன்றுதான் ஹீபா ஆவணம்.
இந்த ஆவணம் முகமதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.
வழக்கின் பின்னணி
மனுதாரர் என்ன சொல்றார் என்றால்:
- இந்த சொத்து என்னுடைய கொள்ளுத்தாத்தா (great-grandfather) 29-9-1938 அன்று பதிவு செய்த ஆவணத்தின் அடிப்படையில அவருக்கு வந்தது.
- அதன் பிறகு, கொள்ளுத்தாத்தா அந்த சொத்தை 23-3-1968 அன்று ஹீபா ஆவணமாக என்னுடைய தகப்பனாருக்கு கொடுத்தார்.
- பின்னர், தகப்பனார் அந்த சொத்தை 27-9-2009 அன்று எனக்கு ஹீபா ஆவணமாக கொடுத்தார்.
அப்படியிருக்க, இந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த சொத்து எனக்கு பூர்வீகமானது.
மனுதாரரின் கோரிக்கை
இந்த சொத்தை சப்-டிவிஷன் செய்து எனக்கு தனி பட்டா வழங்கணும்.
அதற்காக நான் தாசில்தாருக்கு 19-2-2025 அன்று ஒரு representation letter (கோரிக்கை மனு) கொடுத்தேன். ஆனால் தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால், நீதிமன்றம் தாசில்தாரை விசாரணை செய்து எனக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் பண்ணியிருக்கிறார்.
நீதிமன்றம் சொன்னது
- மனுதாரர் சொல்றார் — ஹீபா ஆவணத்தின் அடிப்படையில சொத்து எனக்கு வந்திருக்கு.
ஆனால், வருவாய் துறையின் பதிவில் (patta records) கொள்ளுத்தாத்தா பெயருடன் மற்ற 9 பேரின் பெயரும் உள்ளது. - எனவே, நீங்க வாரிசுச் சான்றிதழ் (legal heirship certificate) இரண்டு வாரத்துக்குள் தாசில்தாருக்கு கொடுக்கணும்.
- தாசில்தார் என்ன செய்யணும் என்றால்:
- மனுதாரர், அவரது உடன்பிறப்புகள் மற்றும் இணை பட்டாதாரர்களுக்கு எல்லாருக்கும் அறிவிப்பு (notice) கொடுக்க வேண்டும்.
- அதன்பிறகு விசாரணை செய்து, முழுமையான அறிக்கையின் அடிப்படையில தீர்மானிக்க வேண்டும்.
- இந்த விசாரணை முடிந்து, 16 வாரங்களுக்குள் (112 நாட்கள்) உத்தரவு பிறப்பிக்கணும்.
- பட்டா வழங்கினாலும்,
- நிராகரித்தாலும், காரணத்தையும் மனுதாரருக்கு தெரிவிக்கணும்.
முன்னாள் காணொளியுடன் இணைப்பு
ஏற்கனவே நம்ம முந்தைய காணொளியில “பகுத்தி பட்டா” (Sub-division Patta) பற்றி பதிவு செய்திருக்கோம்.
பூர்வீக சொத்தை பேரன்கள்/மக்கள் பெயரில் பட்டா மாற்றிக் கொள்வது சிரமமாக இருந்தது. அதை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு “பகுத்தி பட்டா” முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
அதற்கான சுற்றறிக்கை பற்றியும் நம்ம வீடியோவில் பதிவு பண்ணியிருக்கோம்.
முடிவுரை
அதனால், இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியது:
- வாரிசுச் சான்றிதழை தாசில்தாருக்கு கொடுக்க வேண்டும்.
- தாசில்தார் அனைத்துப் பாத்திரங்களுக்கும் அறிவிப்பு கொடுத்து, விசாரணை செய்து, 16 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.