*அரசுக்கு கோரிக்கை மனு வழங்கி எந்தவொரு நடவடிக்கையும் – பதிலும் அரசுத்துறை வழங்காமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நீதி நடவடிக்கை மேற்கொள்ள சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்*
*சட்டம் அறிவோம்! மக்கள் அதிகாரத்தை பயன்படுத்துவோம்!*
*சட்ட அறிவிப்பு*
……………. மாவட்டம்,……………. வட்டம், ………… .. … தெரு, ……. கதவு எண்ணில் குடியிருக்கும். ………. என்பவரின் மகனான …………… வயது………… ஆகிய நான்
…………….. மாவட்டம் …………… வட்டம், .. ……….. அஞ்சல் குறியீட்டு எண்…………….. ………………… .அலுவலர் அலுவலகம் ஆகிய தங்களுக்கு எனது – ……… கோரிக்கை மனுவினை கடந்த ………….. தேதியன்று வழங்கியுள்ளேன். அம்மனுவினை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் தமிழ்நாடு அரசாணை எண் 73/2018 – நாள் :11-06-2018 இல் வகுத்துரைக்கப்பட்டவாறு 5 தினங்களுக்குள் மேற்காணும் எனது கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதையும்,
மேற்காணும் அரசானை விதிகளில் வகுத்துரைக்கப்பட்டவாறு 30 தினங்களுக்குள் நிறைவேற்றுகை செய்து வழங்க வேண்டும் என்றும், இயலாது போனால் அதற்கான நியாயமான காரணத்தை மனுதாருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கான நடைமுறை விதிகளை வகுத்துள்ளது இவ்விதிகளுக்கு முரணாக மனுதாரர் ஆகிய எனது கோரிக்கை மனு மீது மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும்,
மேற்காணும் சங்கதிகள் தமிழ்நாடு அரசு குடிமை பணி விதிகள் 17 (2) , மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகள் – 1975 இன் 20வது பிரிவு படியும், இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 166வது பிரிவு படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பதையும்,
இதன் மூலம் அறிவிக்கலாயிற்று.
மனுதாராகிய எனது கோரிக்கை மனுவினை இந்த அறிவிப்பு தங்களுக்கு கிடைத்த 15 தினங்களுக்குள் நிறைவேற்றுகை செய்ய தவறும் பட்சத்திலும், வீணான அலைக்கழிப்பு செய்ய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு எனக்கு திருப்தி அளிக்காத பதில் வழங்கினாலும் / பதில் வழங்க தவறினாலும் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 106 வது பிரிவு படி மேற்கண்ட குற்றச் செயல்களை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக கருதப்படும் என்பதையும்,
மேற்காணும் சங்கதிகளுக்காக மனுதாராகிய எனது வேலையிழப்பு / வீண் அலைச்சல் / மன உளைச்சல் ஆகியவற்றுக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிக்க லாயிற்று.
மேலும் எனது கோரிக்கையை நிறைவேற்றுகை செய்யாத பட்சத்தில் மனித உரிமை பாதுகாப்பு சட்டம் – 1993 இன் படியும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 1986 இன் பிரிவு 12 இன் படியும் நுகர்வோர் குறைதீர் மன்றத்திலும் வழக்கு தொடுக்க இதுவே ஆவணமாகி விடும் என்பதையும், எனக்கான நஷ்ட ஈட்டு தொகையான ரூ.10, இலட்சம் மற்றும் வழக்கு செலவினங்கள் ஆகியவற்றிற்கு தாங்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் இதன் மூலம் அறிவிக்க லாயிற்று.
தங்கள் உண்மையுள்ள .
தேதி: XX. XX. XXXX
இடம்:
*With Regards*
*DR. Tai P.PANDIAN,B.,A.,B.L., PGDFM., PGDPT.,*
*Advocate/Commissioner of oaths – Madras High Court*