GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

மனு மாதிரிகள் பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம்.

பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம் தகவல்அறியும்உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் 7(1)ன்கீழ்பதிவுஅஞ்சல் மூலம் தகவல் வேண்டி மனு.*

அனுப்புனர்:

பெறுநர்:

பொதுத் தகவல் அலுவலர் அவர்கள்,
வட்டாச்சியர் அலுவலகம்
…………….மாவட்டம்.

பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) ன் கீழ் மற்றும் பிரிவு 7(1) ன் படி ………….மாவட்டம் , ……….. வட்டம்,……….வருவாய் கிராமத்திற்கு உட்பட்டசர்வே எண் —–, மற்றும் ——-அதன் உட்பிரிவுகள் , சமந்தப்பட்ட பற்றிய தகவல் வழங்க வேண்டிவிண்ணப்பம் .

அலுவலர் அவர்களுக்கு,

  1. மேற்படி கிராமத்தில் சர்வே எண்——–UDR நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு யாருடைய பெயரில் பட்டா இருந்தது மற்றும் பட்டா எண் மற்றும் அதன் சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் .
  2. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ————UDR நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு உள்ள FMB வரைபடம் சான்றிட்டநகல் தர வேண்டுகிறேன் ,
  3. மேற்படி கிராமத்தில் இருந்த சர்வேஎண்—— தற்போது எந்த வருவாய் கிராமத்தில் பதிவேட்டில் உள்ளது அதன் சர்வே எண்கள் மற்றும் உரிமையாளர் விபரம் தர வேண்டுகிறேன் .
  4. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ————- க்கு உரிய இடம் தற்போது என்ன வகையான நிலம், தற்போது யாருடைய அனுபவத்தில் உள்ளது, அதன் உரிமையாளர் பெயர் விபரம் தர வேண்டுகிறேன்.
  5. மேற்படி கிராமத்தில் சர்வே எண்———- க்கு உரிய இடம் வேறு கிராமத்துடன் இணைக்கபட்டிருந்தால் அதன் விபரம் மற்றும் மூல ஆவணம் நகல் தர வேண்டுகிறேன் .
  6. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ——— க்கு உரிய இடம் உட்பிரிவு செய்யப்பட்டு இருந்தால் உட்பிரிவு செய்யப்பட்ட போது சமர்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் மேலும் தற்போதைய உட்பிரிவு செயப்பட்ட சர்வே எண் மற்றும் பட்டா எண் அதனுடைய சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் .
  7. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ———பதிலாக புதிய சர்வே எண் வழங்கப்பட்டிருந்தால் அந்த புதிய சர்வே எண் விபரம் தர வேண்டுகிறேன் .
  8. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ——- க்கு தற்போதைய உரிமையாளர் பெயர் மற்றும் பட்டா எண் மற்றும் எந்த ஆவணங்கள் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது அதன் மூல ஆவணங்களை சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் .

9.மேற்படி கிராமத்தில் சர்வே எண் —– க்கு கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக பதிவேட்டில் மேற்படி சர்வே எண்கள் மற்றும் அதற்குரிய பட்டா சமந்தப்பட்ட பதிவுகள் பதியப்பட்டுள்ள பக்கங்களின் சான்றிட்ட ஒளி நகல் தர வேண்டுகிறேன் .

  1. மேற்படி கிராமத்தில் சர்வே ————சர்வே எண்கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் உரிய கீழ்க்கண்ட ஆவணங்களை சான்றொப்பமிட்ட நகல் தர வேண்டுகிறேன்.

10.1. UDR க்கு முந்தய FMB வரைபடம் நகல் தர வேண்டுகிறேன்,

10.2.O.S.R (Old Settlement Register) நகல்தர வேண்டுகிறேன் ,

10.3. R.S.R (Re-Settlement “ A”Register) நகல்தர வேண்டுகிறேன் ,

10.4. S.L.R (Settlement Land Register ) நகல் தர வேண்டுகிறேன் ,

10.5 UDRகை சிட்டா நகல் தர வேண்டுகிறேன்,

10.6 UDR “A” Register (அ –பதிவேடு )நகல்தர வேண்டுகிறேன் ,

  1. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ———சர்வே எண்கள் விவசாயநிலம் எனில் அதற்கான தீர்வை செலுத்தப்பட்டுருந்தால் யாருடைய பெயரில் தீர்வை செலுத்தப்பட்டது அதன் 1979 முதல் தற்போது வரை சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன்.
  2. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ——–சர்வே எண்களுக்கு உரியநிலம் முன்பு வரிசைப்படுத்தப்பட்ட பட்டா எண் விபரம் மற்றும் மேற்படி பட்டா எண்க்கு தற்போதைய உரிமையாளர் பெயருக்கு முந்தைய உரிமையாளர் பெயர் தங்கள் பதிவேடுகளின்படி தர வேண்டுகிறேன் .
  3. மேற்படி கிராமத்தில் ——— சர்வே எண்ணுக்கு உரிய தற்போதைய சிட்டா எண் என்ன? அதன் நகலை வழங்கவும் மேற்படி புலஎண்களுக்கு உட்பட்டுவரும் சர்வே எண்கள் யாருடைய பெயரில் முதன் முதலில் சிட்டா வழங்கப்பட்டது? சிட்டா பெயர் மாற்றம் செய்ய மேற்படி புல எண்களுக்கு மனு பெறப்பட்டதா ஆம் எனில் எப்போது ? தற்போது சிட்டா மற்றும் அடங்கல் யாருடைய பெயரில் உள்ளது அதன் நகலை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.
  4. மேற்படிமேற்படி கிராமத்தில் சர்வே எண் ——-சர்வே எண்களுக்குஉரிய தற்போதைய நில வரைபடத்தின் நகல் தர வேண்டுகிறேன் .
  5. மேற்படிமேற்படி கிராமத்தில் சர்வே எண் ——-சர்வே எண்களுக்கு பசலிக்கான தீர்வை காரணமாக பசலி(தீர்வை ) வரி 1899 ஆம் ஆண்டு முதல்2021 ஆண்டு வரை யாருடைய பெயருக்கு வழங்கப்பட்டது. கொடுத்த இரசீதின் நகலை தரவேண்டுகிறேன்.
  6. மேற்படிமேற்படி கிராமத்தில் சர்வே எண் ——க்கு அதன் மொத்த அளவுகள் எத்தனை சென்ட், உட்பிரிகள் அவற்றின் நகல்களை தரவேண்டுகிறேன்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

2 thoughts on “பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம்.”

  1. சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் நடுவலூர் கிராமம் சர்வே நெம்பர் 181,182,183 என்ற புலப்படம் U DR க்கு முன்புள்ள புலப்பட நகலும் அ பதிவேடு நகலும் தேவைப்படுகிறது

Leave a Reply to K R SURESH Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The High Court of Madras (Conduct of Proceedings by Party-In-Person) Rules, 2019. (Eng-Tex, Tamil-Video)The High Court of Madras (Conduct of Proceedings by Party-In-Person) Rules, 2019. (Eng-Tex, Tamil-Video)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 55 JUDICIAL NOTIFICATIONS The High Court of Madras (Conduct of Proceedings by Party-In-Person) Rules, 2019.(Roc.No. 83831-A/2019/F1) No.

கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை மீது சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்.கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை மீது சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 *அரசுக்கு கோரிக்கை மனு வழங்கி எந்தவொரு நடவடிக்கையும் – பதிலும் அரசுத்துறை வழங்காமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நீதி நடவடிக்கை

இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 இன் கீழ் மாதிரி மனு :இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 இன் கீழ் மாதிரி மனு :

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 இ ன் கீழ் மாதிரி மனு : அரசு மற்றும் அரசு சார்ந்த

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)