GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized பதிவு செய்யப்படாத சீட்டை நடத்தி வருபவர் ( Unregistered Chit) சீட்டுப் போட்டவரிடமிருந்து பணத்தை வசூலிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுமா?

பதிவு செய்யப்படாத சீட்டை நடத்தி வருபவர் ( Unregistered Chit) சீட்டுப் போட்டவரிடமிருந்து பணத்தை வசூலிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுமா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பதிவு செய்யப்படாத சீட்டை நடத்தி வருபவர் ( Unregistered Chit) சீட்டுப் போட்டவரிடமிருந்து பணத்தை வசூலிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுமா?
சீட்டு நிதிச் சட்டம் 1982 ( Chit funds Act) பிரிவுகள் 4 மற்றும் 76- அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம்.
1)Revathi,2) Jayakkodi vs S.Murugesan
CPC-115 Review
C.R.P(NPD) No.2506 of 2012 and M.P.No.1 of 2012
Mr.Justice G.Rajasuria
DOJ:- 02-08-2012

ஏலச்சீட்டு கம்பெனி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் :-

ஏலச்சீட்டில் சேர்ப்பதற்கு முன் உறுப்பினர் பற்றிய, முழுவிபரத்தை நேரில் சென்று களஆய்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, முகவரி சரியாக உள்ளதா? அடையாள சான்று சரியாக உள்ளது? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஜாமீன் தகுதி இருக்கிறதா..!
ஏலச்சீட்டில் சேர்பவர், ஏலம் எடுத்த பின்பு கம்பெனியில் இருந்து ஏலத்தொகை பெறுவதற்கு தக்க ஜாமீன் கொடுப்பதற்கு தகுதி உள்ளவரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏலச்சீட்டில் சேர்பவர், அவரது குடும்பத்தில் அவரை சார்ந்து எத்தனை நபர்கள் உள்ளனர். அவரது வருமானம் எவ்வளவு மற்றும் சந்தா தொகையை சரிவர கட்டுவதற்கு தகுதி உள்ளவரா என்பதையும் ஆதாரத்துடன் பார்க்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் வேறு யாராவது ஏலச்சீட்டில் சேர்ந்த விபரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.

1982 ஆண்டு சிட்பண்டுகள் சட்டம்..!

ஒவ்வொரு சந்தாதாரருக்கும் முறைப்படி 1982 ஆம் ஆண்டு சிட்பண்டுகள் சட்டப்படி உள்ள விதியின் படி சீட்டு ஒப்பந்தம் செய்த பின்புதான் ஏலச்சீட்டில் சேர்க்க வேண்டும்.

ஏலம் எடுத்த பின்பு, ஏலம் எடுத்த சீட்டு மாதத்திலிருந்து பின்வரும் காலங்களுக்கு உள்ள தவணை தொகையினை கணக்கிட்டு இரு மடங்கு மதிப்புள்ள ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சந்தாதாரர்கள் பற்றி முழு விபரங்களை தெரிந்து கொண்டு ஏலச்சீட்டில் உறுப்பினராக சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

ஒவ்வொரு சந்தாதாரருக்கும், வாரிசுதாரர், நாமினி விபரம் அடங்கிய குறிப்புகளை முறைப்படி கம்பெனியில் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு மாதமும் ஏலம் எடுத்தவர் விபரம், ஏலத் தொகை மற்றும் பெற்றுக் கொண்ட ஜாமீன் இவைகளை அந்தந்த தேதிக்குள் சீட்டு பதிவு அலுவலகத்தில் காலத்தை கடத்தாமல் தெரிவித்து ஃபைல் செய்வது அவசியம்.

நுழைவுக் கட்டணம்..!

சந்தா தொகையை சரிவர கட்டாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு கட்டாயம் கசறு தொகை வழங்கக் கூடாது. இதற்கு ஏலம் எடுத்தவர், எடுக்காதவர் என்ற பாகுபாடு கிடையாது.

ஒவ்வொரு ஏலச் சீட்டிற்கும் நுழைவுக் கட்டணம் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதிக வாக்குறுதிகளைக் கொடுத்து உறுப்பினர்களை சேர்ப்பது மிகவும் ஆபத்து.

ஒவ்வொரு கிளை துவங்கும் பொழுது சீட்டு பதிவாளரிடன் அனுமதி அவசியம் பெற வேண்டும்.

உறுப்பினர்கள் பற்றிய முழு விபரத்தினை சட்டப்படி வாங்கும் போது சீட்டு பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன் ஒப்பளிப்பு ஆணை வாங்கும் முன் வங்கி ஒன்றில் சீட்டின் மதிப்பிற்கு நிரந்தர வைப்பு சீட்டு குரூப் முடியும் காலம் + ஒரு மாதம் சேர்த்து கணக்கிட்டு நிரந்தர வைப்பு செய்து தக்க ரசீதினை சீட்டுபதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சீட்டு பதிவாளர் அலுவலகம் எந்த வங்கியில் நிரந்தர வைப்பு போட சொல்கிறார்களே அதே வங்கியில்தான் பணம் டெப்பாசிட் போட வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கை..!

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை உறுப்பினர்களின் முகவரி மற்றும் அனைத்து விபரங்களை நேரில் சென்று சரிபார்த்தால்தான் சீட்டு நடத்தும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு. (சீட்டு குரூப் முடியும் காலம் வரை)

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றினால் எந்த சீட்டு நிறுவனமும் கண்டிப்பாக நலிவடைய வாய்ப்பு ஏற்படாது.
நன்றி..!!
S.SURESH (Advocate)
PERAMBUR
CHENNAI
9500005764

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Sentencing Powers of Criminal Courts under BNSS, 2023Sentencing Powers of Criminal Courts under BNSS, 2023

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 ✅ Sentencing Powers of Criminal Courts under BNSS, 2023 ◾ 1. High CourtThe High Court has

RTI தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் பொதுத்தகவல் அலுவலருக்கான வழிகாட்டி. (Pdf)RTI தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் பொதுத்தகவல் அலுவலருக்கான வழிகாட்டி. (Pdf)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

உங்களுடைய வழக்குத் தோல்வியடைய யார் காரணம்? (Text + Video)உங்களுடைய வழக்குத் தோல்வியடைய யார் காரணம்? (Text + Video)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 29 அறிமுகம் தவறான அணுகுமுறைகள் சட்டத்தை தொடங்குவது எப்படி? தவறான நம்பிக்கைகள் சரியான வழக்கறிஞரைத் தேர்வு செய்த பின் ஆவணங்களை சரியான நேரத்தில்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)