GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized பட்டாவின் மெய் தன்மையை நிருபிக்க என்ன செய்யவேண்டும்?

பட்டாவின் மெய் தன்மையை நிருபிக்க என்ன செய்யவேண்டும்?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பட்டாவின் மெய் தன்மை

பட்டாவின் மெய் தன்மையை நிருபிக்க

அ. கம்ப்யூட்டர் பட்டாவாக இருந்தால் பட்டா எண்ணை வைத்து தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும்.

ஆ. மேனுவல் பட்டாவாக இருந்தால் பெரும்பாலும் நத்தம் பட்டா (அ) T.S.L.R ( டவுன் சர்வே பட்டா) ஆக இருக்கும்.

அதனை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் நேரிடையாக சென்று விசாரிக்க வேண்டும்.
பட்டாவில் இருக்கும் கீழ்க்கண்ட விவரங்களும், விற்பனை செய்பவரின் கிரைய பத்திரத்திற்கும் பொருந்தி போகிறதா என்று பார்க்க வேண்டும்

அ. பட்டாவிற்கும், பத்திரத்திற்கும் ஒரே பெயர்.

ஆ. பெயரில் எழுத்து பிழைகள்.

இ. ஒரு நபர் இரு பெயர் பிழைகள்.

ஈ. பட்டாதாரரின் தந்தை பெயரில் பிழைகள்.

உ. சர்வே எண்/ உட்பிரிவு எண்.

ஊ. நஞ்சை / புஞ்சை என்ற நிலத்தின் தன்மை.

எ. நிலத்தின் அளவு ( பட்டாவில் மெட்ரிக் அளவு முறையில் இருக்கும், பத்திரத்தில் பிரிவின் முறையில் இருக்கும் அதனை நேர் செய்து பார்க்க வேண்டும்.

பட்டா கிராம நத்தம் பட்டாவாக இருக்கும் பட்சத்தில் செய்ய வேண்டியது

அ. நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் உங்கள் கைகளில் இருப்பது தூய பட்டாவா (அ) தோராய பட்டவா என்று பார்க்க வேண்டும்.

ஆ. தோராய பட்டா என்றால் இன்னும் உறுதி படுத்தபடவில்லை என்று அர்த்தம். எதிர்காலத்தில் அளவுகளில் தெளிவு மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது!

இ. தோராய பட்டாவை ஆட்சேபித்து நத்தம் அலுவலகத்தில் யாராவது மனு கொடுத்து இருக்கிறர்களா என்று பார்க்க வேண்டும்.

ஈ. தூய பட்டாவாக இருந்தால் அது இறுதிபடுத்தப்பட்ட பட்டா என எடுத்து கொள்ளலாம்.

பட்டா T.S.L.R பட்டாவாக இருக்கும் பட்சத்தில் செய்ய வேண்டியது

அ. பெரும்பாலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இந்த பட்டா வழங்கப்படும், சில இடங்களில் கணினி மயமாகவும் எல்லா இடங்களில் மேனுவலாகவும் பட்டா இருக்கும்.

ஆ. நாம் வாங்கும் நிலம் சிறிது காலத்திற்கு முன் கிராமமாக இருந்து பின்பு நகராட்சியோடு இணைக்கப்பட்டு இருந்தால் ரீசர்வே எண், வார்டு, பிளாக் நம்பர் மிக சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இ. இடத்தின் வரைபடம், பட்டாவின் பின்புறம் வரைந்து இருந்தால் அதனுடைய அளவுகள் சரியாக குறிப்பிட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அசைன்மென்ட் பட்டா / ஒப்படை பட்டா / A. D. பட்டா / இலவச பட்டா போன்ற பட்டாவாக இருந்தால்

அ. மேற்படி பட்டாவின் மூலம் அரசு நிலத்தை ஒப்படைத்து இருக்கும். நபர்களின் இடங்களை வாங்க நேர்ந்தால் அந்த பட்டாவில் இருக்கும் கண்டிசன்களை பார்க்க வேண்டும்.

ஆ. குறிப்பிட்ட வருஷத்திற்குள் விற்க கூடாது. குறிப்பிட்ட சாதியினருக்கு தான் விற்க வேண்டும் என கண்டிசன்களை கவனித்து நிலம் வாங்க வேண்டும்.

இ. அரசு இந்த கண்டிசன் பட்டாக்களை மேனுவலாக தான் கொடுத்து இருக்கும், நிலம் வைத்து இருப்பவர் பெயருக்கு அரசின் LPR பட்டாவில் பெயர் ஏறி இருக்கும். மேற்படி LPR பட்டா எடுத்து வந்து உங்களிடம் விற்பனைக்கு வந்தால் அதனை தீவிரமாக ஆய்வுக்கு உட்படித்தியே நிலம் வாங்க வேண்டும்.

ஈ. இன்னும் சில இடங்களில் அரசின் இலவச பட்டாக்களை அரசின் கணக்கில் ஏற்றாமலேயே வைத்து இருப்பார்கள் எப்போழுது அரசின் கணக்கில் ஏறும் என கள விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

வாங்கும் இடம் கூட்டு பட்டாவில் செய்ய வேண்டியது

அ. ஒரே புல எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால் கூட்டு பட்டா, இதில் ஒரு பட்டதாரர் விவசாய கடன், உரக்கடன், டிராக்டர் கடன் என வாங்கி இருந்தால் மேற்படி இன்னொரு பட்டாதாரரிடம் இருந்து இடம் வாங்கும் போது கடன் வாங்கிய நபரை அங்கு வைத்து வாங்க வேண்டும்.

ஆ. கூட்டு பட்டாவில் நீங்கள் கிரயம் வாங்கி விட்டு நீங்கள் ஏதாவது லோனுக்கு போகும் பொழுது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு கூட்டு பட்டாதாரர் கை கையெழுத்தோ , ஆட்சேபனையின்மையோ வேண்டும் என்ற சிக்கல்கள் வரும்! அதனை தவிர்க்க கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற வேண்டும்.

சிட்டா/ அடங்கல் / அ. பதிவேடு / புலப்படம் பற்றி இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

அ. பட்டாவை எப்பொழுதும் கிராம கணக்கில் இருக்கும் 10 எண் புத்தகத்தில் (சிட்டா) ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சிட்டாவில் பட்டாதரர் பெயர் நேர் இல்லாமல் நேர் செய்ய வேண்டும். சிட்டா தான் வெளியில் சுற்றி வருகிற பட்டாவை கட்டுபடுத்துகிறது. எனவே நாம் வாங்கும் நிலத்தின் பட்டாவோடு கட்டுபடுகிறதா என பார்க்க வேண்டும்.

ஆ. அடங்கல் ( கிராம கணக்கு 2) என்பது ஆண்டுதோறும் நிலங்களில் என்ன பயிர், யார் செய்கிறார்கள் என்று பதிவு செய்து வைக்கின்ற பயிர் பதிவேடு! மேற்படி பெயரில் பட்டாதரர் இல்லாமல் வேறு நபர் பெயர் இருக்கிறதா என பார்க்க வேண்டும். எதற்காக என்றால், பெருபாலும் பட்டாதரர் வெளியூரில் இருந்தால்,உள்ளூர் விவசாயிடம் நிலத்தை ஒத்திக்கோ, குத்தகைக்கோ விட்டு இருந்து அவர் பயிர் செய்து வருவார் ஆனால் குத்தகைதார் பெயர் அடங்களில் இருக்கும். நீங்கள் நிலம் வாங்கும் பொழுது குத்தகை ,ஒத்தி ( உரிமையாளர் , குத்தகைதாரர் சிக்கல்கள்) இருக்கிறதா என பார்த்து கொள்ள வேண்டும்.

இ. குத்தகைத்தார், விவசாய கடன், உரக்கடன், இன்சூரன்ஸ் க்கு மேற்படி அடங்கலை காட்டி கடன் வாங்கி இருக்கலாம். அவை எல்லாம் முற்றிலும் நேரான பின்னரோ, அல்லது கட்டறுத்த பிறகோ, கிரயம் வாங்கலாம்.

ஈ. ஒரு கிராமத்தை ஒட்டு மொத்தமாக அளந்து ரீ சர்வே செய்தார்கள் என்றால் அப்பொழுது உருவாக்கும் ரெக்கார்டு அ.பதிவேடு , இது கிராம கணக்கில் ( கணக்கு 1 ஆகும்) பெரும்பாலும் இடம் வாங்கும் பொழுது பழைய ஆவணங்களில் இருக்கும் பபழைய சர்வே எண்ணை இந்த அ.பதிவேடுடன் ஒப்புமைபடுத்தி கொள்ள வேண்டும்.

உ. புலப்படம் (FMB) வைத்து தான் ஒரு சொத்தின் பரப்பளவு , நீளம், அகலம், சர்வே கற்கள் போன்றவற்றை ஆவணங்களுடன் ஒப்புமைபடுத்தி பார்த்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?பக்கத்து வீட்டுக்காரரின் மரங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

முஹம்மதியன் சட்டம் 1937 படி ஒரு வழக்கில் நடந்த சம்பவங்களும் தீர்ப்பும் (Video+Text)முஹம்மதியன் சட்டம் 1937 படி ஒரு வழக்கில் நடந்த சம்பவங்களும் தீர்ப்பும் (Video+Text)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 Youtube original title: According to the Mohammedan Act 1937, the great-grandson who personally claimed the place

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)