கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிடாத ஊராட்சி மன்ற தலைவர் அல்லது தனி அலுவலர் & ஊராட்சி செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாதிரி மனு.
ஆகஸ்ட் 15 க்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்
அனுப்புநர்
……..
………
……
பெறுநர்
ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
………….. மாவட்டம்.
பொருள்: கிராம சபை கூட்டம் அறிவிப்பு வெளியிடப்படாதது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக.
அன்புடையீர், வணக்கம்.
நான் என்னுடைய ஊராட்சியின் கிராம சபை உறுப்பினர்.
- என்னுடைய கிராமத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று சட்டப்படி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3(2)(a)-ன் படி கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கூட்ட வேண்டும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 46(1)(a)-ன் படி கிராம சபை கூட்டத்தை கூட்டுவது ஊராட்சி மன்ற தலைவரின் அலுவல் ஆகும். இதற்காக ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
- கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு கிராம சபை கூட்டம் கூடுவதற்கு 7- நாட்களுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட வேண்டும் துண்டு பிரசுரங்கள் பிளக்ஸ் பேனர் தண்டோரா போன்ற வகைகளில் கிராம சேவை தொடர்பான கூட்ட அழைப்பு பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் விதிகள் அரசாணைகள் மூலமாக ஊராட்சியின் செயல் அலுவலரான ஊராட்சி மன்ற தலைவர் கடமை விதித்துள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை ஊராட்சி மன்ற தலைவர் கிராம சபை கூட்ட அறிவிப்பினை பொதுமக்களுக்கு வெளியிட வில்லை.
- தமிழ்நாடு கிராமசபை கூட்டம் கூட்டம் (கூட்டுதல் நடத்துதல் குறைவெண்) விதிகள் -1998 விதி எண் 3- ன் படி குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பாக கிராம சபை கூட்ட அறிவிக்கை ஊராட்சி தலைவரால் வெளியிடப்பட வேண்டும் தண்டோரா மற்றும் துண்டு பிரசுரங்கள் தெரிவிக்க முடியும் வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவருக்கு சட்டம் கட்டளையிடுள்ளது.
- தமிழ்நாடு கிராமசபை கூட்டம் கூட்டம் (கூட்டுதல் நடத்துதல் குறைவெண்) விதிகள் 1998 விதி எண் 3(1) ன் படி ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் தண்டோரா மூலமாக கிராமசபை கூட்டம் நடக்கும் நாள் இடம் நேரம் கூட்டப் பொருள் அஜென்டா ஆகிய விபரங்கள் ஊராட்சி மன்ற தலைவர் தெரியப் படுத்த வேண்டும்
- தமிழ்நாடு கிராமசபை கூட்டம் கூட்டம் (கூட்டுதல் நடத்துதல் குறைவெண்) விதிகள்-1998 விதி எண் 3(2) ன் படி ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகை, பள்ளி கட்டிடங்கள், மதிய உணவு கூடம், தொலைக்காட்சி அறை, கிராமக்கோவில்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் எழுத்து மூலமான கூட்ட அறிவிப்பினை பொதுமக்களுக்கு பார்வையில் படும் வண்ணம் வெளியிட வேண்டும்
- தமிழ்நாடு கிராமசபை கூட்டம் கூட்டம் (கூட்டுதல் நடத்துதல் குறைவெண்) விதிகள்-1998 விதி எண் 3(3) ன் படி கூட்ட அறிவிப்பின் நகல் மற்றும் பொருள் ஊராட்சியின் ஆய்வாளருக்கு 7 நாட்களுக்கு முன்பு கட்டாயம் அனுப்பப்பட வேண்டும் என்று சட்டம் ஊராட்சி மன்ற தலைவருக்கு கட்டளையிட்டுள்ளது.
- மேலே குறிப்பிட்ட கடமைகளை ஊராட்சி மன்ற தலைவர் கட்டாயம் செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர் அவர் விரும்பினால் செய்யாமல் இருப்பதற்கான அதிகாரத்தை சட்டம் வழங்கவில்லை.
- ஆனால் கிராம சபை கூட்டம் அறிவிப்பு இந்த நிமிடம் வரை சட்டப்படி வெளியிடப்படவில்லை தண்டோரா மூலமாக அறிவிப்பு மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதம் மூலமாக என்று எந்த வகையிலும் கிராம சபைக் கூட்ட அறிவிப்பு வெளியிடவில்லை.
- மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் முறையாக நடப்பதை கண்காணிக்க வேண்டிய கடமையும் அதிகாரமும் ஊராட்சிகளில் ஆய்வாளர் என்கின்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது.
- ஊரக வளர்ச்சி துறை கிராம சபை பற்றிய வழிகாட்டுதல்களை பொருள் விபரம் வெளிட்ட பின்னரும் எங்கள் ஊராட்சி தலைவர் தனி அலுவலர் தமிழ்நாடு ஊராட்சி சட்ட விதிகளை மதிக்க தவறிய குற்றம் இழைத்து வருகின்றார்
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் விதிகள் படி கட்டாயம் செய்ய வேண்டிய கடமையான ஏழு நாட்களுக்கு முன்பாக கிராம சபை கூட்ட அறிவிப்பினை வெளியிடவும் விளம்பரப்படுத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவும் செய்ய தவறிய ஊராட்சி மன்ற தலைவர் தனி அலுவலர் ஊராட்சி செயலாளர் மீது சட்டப்படியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள
நாள்:
இடம்:
நகல்கள்
- ஆளுநர் அவர்கள்
ஆளுநர் மாளிகை
கிண்டி சென்னை 600 022 - தமிழக முதல்வர் அவர்கள்
தனி முறையிட்டு பிரிவு
தலைமைச் செயலகம்
சென்னை 600 009 - அரசு முதன்மைச் செயலாளர் ஊரக வளர்ச்சித் ஊராட்சித் துறை துறை 600 009
- இயக்குனர் அவர்கள் ஊரக வளர்ச்சித் மற்றும் ஊராட்சி இயக்ககம் பனகல் மாளிகை சைதாப்பேட்டை சென்னை 600 015
- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
…………. மாவட்டம் - திட்ட இயக்குனர்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
………… மாவட்டம் - உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)
………. மாவட்டம் - ஆணையாளர்
…………. ஊராட்சி ஒன்றியம் - வட்டார வளர்ச்சி அலுவலர்
(கிராம ஊராட்சிகள்)
……………………. ஊராட்சி ஒன்றிய அலுவலகம். - காவல் துறை ஆய்வாளர்
…….. காவல் நிலையம் - அமைச்சர் அவர்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை 600 009.
பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் அவர்கள் பதிவு இது.