காவல் நிலையம் ஒரு குற்ற வழக்கை குற்றம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து குற்ற இறுதி அறிக்கை எனப்படும் (ஜார்சீட்) காவல் துறையினர் தாக்கல் செய்யாமல் நீண்ட காலமாக இழுத்தடித்துக் கொண்டிருந்தால் இதுபோல மனுசெய்து குற்றப் பத்திரிக்கை, குற்ற இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான மனு மாடல்.
கணம் மாண்பமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
……………………………
குற்றம் பல்வகை மனு எண் :
உள் காவல் நிலைய குற்ற எண்:
மனுதாரர்
……………………………..
த/பெ…………………….
……………………………..
………………………….. /மனுதார் /
/எதிர்/
திரு.காவல் ஆய்வாளர் அவர்கள்,
……………………………………
……………………………………
கு. எண்……………………20../ us. ………..ipc
( குற்ற பதிவாளர்/ குற்றம்சாட்டுபவர்)
, கு. வி. மு. ச.1973 இன் 156(3) மற்றும் 302 (2) வது பிரிவுப்படி இந்த எண் வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரும் மனு.
1)………………………..மாவட்டம்……………………………..தாலுகா ,………………………..அஞ்சல்…………………
கதவு எண் …………………………தெருவில்…………………… என்பவர் மகனாகிய…………………… வயது………………. இந்து ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 – இன் பிரிவு 70 – இன் கீழ் ஏற்புரை செய்து , அகத்தூய்மையோடும் உளப்பூர்வமாகவும் இந்நிர் வழக்கில் குற்ற புகார்த்தாரர் நிலையில் இருந்து நீதியின் நோக்கம் நிறைவேற தாக்கல் செய்யும் (அபிடவிட்) சத்தியபிரமாணம் யாதெனில்.,
2) மனுதாரர் ஆகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன்………………………….. காவல்நிலையம் கு. எண்……………….20../ u/s…………………………….. Ipc. Date:…………………………………………
வழக்கில் மனுதாரர் ஆகிய நான் குற்ற புகார்த்தாரரும் /ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன்.
3) இந்நிர் வழக்கில்……………………. காவல் நிலையத்தினர் குற்ற முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து……………. நாட்கள் ஆகிறது. நாளது தேதிவரை குற்ற இறுதி அறிக்கை காவல் துறையினரால் தாக்கல் செய்யப்படவில்லை. கு. வி. மு. ச.1973 இன் 167 இல் வழங்குவதற்கான கால வரம்பை நிர்ணயத்துள்ளது. இந்த சட்ட விதிகளுக்கும் முரணாக குற்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து……………. நாட்கள் ஆகியும் நாளது தேதி வரை குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் …………………… காவல் நிலையத்தினர் இருந்து வருகிறார்கள். விரைவான விசாரணை (Speedy trial) என்பது இந்திய அரசியலமைப்புச்சட்டம் உறுபு 21 ன் கீழ் ஒரு அடிப்படை உரிமை (Fundamental right)ஆகும். – Usha Ahuja Vs. State of Haryana, 1999 (3) CTC 177 (SC). என்று உச்ச நீதிமன்றம் வலிமையான தீர்ப்பு வழங்கி உள்ளது.
4) காவல்துறையினர் ஒவ்வொரு வழக்கிலும் வழங்கும் இறுதி அறிக்கையானது (PSO) காவல் நிலை ஆணை 658இல் படிவம் எண். 89 இன்படி குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 173 இன்படி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பது குறித்து விளக்கியுள்ளது. மேலும் ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 157(1) வது பிரிவுப்படி பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு சம்பந்தமான வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறும் விருப்புரிமை உள்ளது என்று காவல் நிலை ஆணை (PSO)562 இல் தெளிவுபடுத்தி உள்ளது.
5) ஆகையால் கு. வி. மு. ச.1973 இன் 156(3) இன் படி எனது இந்த மனுவை ஏற்று கொண்டு இந்த நிர் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை மற்றும் குற்ற இறுதி அறிக்கை வழங்குவதற்கு……………………காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட வேண்டுமாயும், கு. வி. மு. ச.1973 இன் 302 (2) வது பிரிவில் வரையறுக்க பட்டவாறு குற்ற புகார்தாரர் தரப்பில் இருந்து வழக்கு நடத்தவும்/ நீதிமன்றத்தில் மனு செய்யவும் /அரசு தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக /துணையாக செயலாற்றவும் தகுந்த உத்தரவு வழங்கி மனுதாரின் நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கபடுகிறது.
மனுதார்
Party in persion
இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் பிரிவு 70 இன் படி இதையே பிரமாணமாக இதில் ………………..தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.