ஊராட்சி தணிக்கை முறைகள்
ஊராட்சி தணிக்கையாளர் வரவு செலவுகளில் காணப்படும் நிதி விபரம், நிதி இழப்பு
மற்றும் இதர முறைகேடுகள் குறித்து கிராம ஊராட்சி மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தணிக்கை உதவுகிறது.
தணிக்கையாளர் :
1.• துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை)- கிராம ஊராட்சி வரவு செலவு
கணக்குகள்
2 • ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) (அரசாணை எண்.265, ஊ.வ.துறை நாள்.22.12.99)
தணிக்கை எப்பொழுது செய்ய வேண்டும்
ஒரு நிதி ஆண்டின் ஆண்டுக்கணக்குகள் முடிக்கப்பட்டு, ஆண்டுக் கணக்கினைஅடுத்த நிதி ஆண்டின் மே மாதம் 15ம் தேதிக்குள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை)க்கு அனுப்ப வேண்டும். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) கிராம ஊராட்சி அலுவலகத்தில் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கணக்குகள் ஊராட்சிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரண்டு மாதங்களுக்குள் துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் (தணிக்கை), தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தணிக்கை செய்ய வேண்டிய இடம்
கிராம ஊராட்சி அலுவலகத்தில் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தணிக்கையாளருக்கு அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
ஊராட்சி நிர்வாக அலுவலர் / பணியாளரால் தணிக்கைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் முழுவதும் அளிக்கப்பட வேண்டும். பணியாளர், தணிக்கையாளர் கோரும் ஆவணங்களையும் மற்றும் ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும். (பிரிவு-243 (16)) (அரசாணை எண்.142இ ஊ.வ.துறை, நாள்.21.7.99)
தணிக்கையாளரின் அதிகாரங்கள்
தணிக்கையாளரின் வேண்டுகோளை நிறைவேற்றத் தவறினால் நூறு ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். (அரசாணை எண்.59, ஊ.வ.துறை நாள்.7.3.2000).
தணிக்கையாளரின் கடமைகள் :
1 • குறிபிட்ட செலவினத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்படும்.
2•தலைவரது கவனமின்மை, தவறான நடத்தை, அலட்சியப்போக்கு ஆகியவற்றால் ஏற்படும் நிதி இழப்பு/நிர்வாக முறைகேடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
3 • ஒதுக்கப்பட்ட நிதி முறையாக, குறித்த காலத்திற்குள் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்படும்.
4 • சிறப்புத் திட்டத்தின் நெறிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுதல், குறிக்கோள் எட்டப்படுதல், தொடர்பாகவும் ஆய்வு செடீநுயப்படும்.
5 • சட்ட விதிமுறைகள் / அரசாணைகள் விதி மீறல்கள் குறித்தும் ஆய்விடப்படும்.
6• உரிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். (அரசாணை எண்.142, ஊ.வ.துறை நாள்.21.7.99)
தணிக்கைக்கு தயார் நிலையில் வைக்க வேண்டிய ஆவணங்கள்
1• முந்தைய ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் ஆய்வறிக்கை
2• மாதாந்திரக் கணக்குகள் (படிவம் 30) மற்றும் ஆண்டுக் கணக்கு நகல்
3• வங்கிக் கணக்கு மற்றும் அஞ்சலகக் கணக்குகளின் இணக்க அறிக்கை நகல்கள்
4• முதலீடுகளின் விவரங்கள்
5• நடப்பு ஆண்டு ஒப்புதலளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் (க்ஷரனபநவ)
6• செலவுச் சீட்டுக் கட்டு
7• வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்கள்/ரொக்கப் புத்தகங்கள்/ வேலைகள் தொடர்பான அளவுப் புத்தகங்கள்
8 • தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள்
9 • தீர்மானப் புத்தகம்
10 • இருப்பு பதிவேடு
தணிக்கையின் போது உடனிருக்க வேண்டிய அலுவலர்கள்
1 • நிர்வாக அலுவலர்/ கிராம ஊராட்சித் தலைவர்
2 • கிராம ஊராட்சி செயலாளர்/பகுதி நேர எழுத்தர்
பூர்வாங்கத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஆவணங்கள்
1 ரொக்க இருப்பு,
2 அஞ்சல் தலைகள் இருப்பு,
3 பண மதிப்புள்ள படிவங்களின் இருப்பு.
4 முதலீடுகள் இறுதி இருப்பு,
5 பத்திரங்கள் இருப்பு,
6 தீர்மானப் புத்தகம் மற்றும்
7 ஊராட்சி தொடர்பான அனைத்து பதிவேடுகள்.
தணிக்கையில் ஆய்வு செய்யப்பட வேண்டிய விவரங்கள்
1 • ரொக்க கையிருப்புத் தொகையும் புத்தக இருப்புத் தொகையும் சரியாக உள்ளது என சரிபார்த்தல்.
2 •வங்கிக் கைச்சாத்துக்களில் குறிப்பிட்டுள்ள இறுதி இருப்பும் ரொக்கப்புத்தகத்தின் படியான வங்கி இறுதி இருப்பும் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
3 • வங்கியில் செலுத்தப்பட்டுள்ள அனைத்து வரவினங்களும் விடுபடாமல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதும் சரி பார்க்கப்படும்.
4 • ரொக்கப்புத்தகத்தில் உள்ள செலவுத்தொகை, செலவுச்சீட்டுகள் உள்ள தொகை மற்றும் வங்கிக் காசோலை அடிக்கட்டுகளில் உள்ள தொகைகளின் சரித்தன்மை உறுதி செய்யப்படும்.
5 • சட்ட ரீதியான வரவினங்கள் / மான்யங்கள் பெறப்பட்ட விவரம் மற்றும் நிலுவை இனங்களை வசூலிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரங்கள் குறித்தும் ஆடீநுவு செடீநுயப்படும்.
6 • செலவினங்கள் ஊராட்சி மன்றத்தின் தீர்மானம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது சரி பார்க்கப்படும்.
7 • வரவு செலவு அறிக்கையில் உட்பட்ட விவரங்கள் (Budget Allotments)
8 • ஊராட்சி பணியாளர்கள் தொடர்பான பணிப்பதிவேடுகள், பங்குத்தொகை செலுத்தப்பட்ட விபரங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்படும்.
தெருவிளக்கு உதிரிப்பாகங்கள், மின்மோட்டார் உதிரிப்பாகங்கள், கைப்பம்பு உதிரிப்பாகங்கள் தளவாடங்கள், எழுது பொருட்கள் வாங்கும் முறை தொடர்பான தணிக்கை
- அரசு நிர்ணயித்துள்ள வரன் முறைகள் மற்றும் நடைமுறைகள் அனுசரிக்கப்பட்டுள்ளதா எனத் தணிக்கையில் ஆய்வு செய்யப்படும்.
- மதிப்பீட்டுத்தொகை ரூ.2000/-க்கு மேற்பட்ட வேலைப்பணிகள் தொடர்பான தணிக்கை
- விதிப்படி ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, குறைவான ஒப்பந்தப்புள்ளி அளித்தவருக்கு பணி ஒப்படைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதா எனத் தணிக்கையில் ஆடீநுவு செடீநுயப்படும்.
4 • மத்திய அரசு/மாநில அரசு நிதித் திட்டப்பணிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனத் தணிக்கையில் ஆய்வு செய்யப்படும்.
5 • ஒப்பந்ததாரர்கள் தடை செடீநுயப்பட்ட இனங்களில் விதிமுறைகளை அனுசரித்து, பணிகள் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனத் தணிக்கை செய்யப்படும்.
முன்பணங்கள் தொடர்பான தணிக்கை
1 • தனிநபருக்கு முன் பணம் அளிக்கப்படவில்லை என தணிக்கையில் உறுதி செய்யப்படும்.
2 • தினக்கூலிப் பணியாளர்களுக்கு கூலி வழங்க கிராம ஊராட்சியின் குறிப்பான தீர்மானத்தின் மூலம் முன்பணம் அளிக்கப்பட்டுள்ளதா எனத் தணிக்கையில் உறுதி செய்யப்படும்.
3 • பெறப்பட்ட முன்பணத்தில், செலவுத்தொகை உறுதி செய்யப்பட்டு, எஞ்சிய தொகை மீளவும் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச் சீட்டு சரி பார்க்கப்படும்.
4 • அளிக்கப்பட்ட முன்பணங்கள் அனைத்தும் உரியதான செலவுச் சீட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிலுவையின்றி ஈடு செய்யப்பட்டுள்ளதா எனவும் தணிக்கையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
5 • ஒரு முன் பணம் நிலுவையில் இருக்கும் போது அடுத்த முன் பணம் ஏதும் அளிக்கப் படவில்லை எனவும் தணிக்கையில் உறுதி செய்யப்படும்.
தண்டச் சான்றிதழ் வழங்குதல்
பிரிவு- 242(2) (XVI) (XVII) (XVIII) விதி, அரசாணை எண்.32, ஊ.வ.துறை, நாள்.11.2.2000
கிராம ஊராட்சித் தலைவர் கிராம ஊராட்சி நிதிக்கு இழப்பு ஏற்படுத்தினாலோ, சட்டத்திற்குப் புறம்பான செலவினம் மேற்கொண்டாலோ அல்லது தவறான நடத்தையின் காரணமாக எந்த ஒரு பணத்தையும் கணக்கில் கொண்டு வர தவறினாலோ, அவர்கள் மீது தண்டச் சான்றிதழ் வழங்கலாம். (தண்டச் சான்றிதழ் வழங்கும் அலுவலர் – ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை))