கிரிமினல் சிவில் – ஐகோர்ட்- மாதிரி மனுக்கள்
கே. என்.நேரு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சர் மீது எங்கள் ஆசான் திரு செந்தமிழ் கிழார் அவர்கள் வழக்கு தொடுப்பதற்கு மனு கொடுத்து அவர் மந்திரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கிய சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு உரிமையியல் விசாரணை முறை சட்டம், கட்டளை-46, விதி -1 இன் படி கடந்த 2005 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வழங்கிய மனு மாடல்
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,
சென்னை
அசல் வழக்கு எண் /2005
செந்தமிழ்க்கிழார்,
தற்காலிக தலைவர்,
பாதிக்கப்பட்டோர் கழகம்,
5/105, பெரியார் பாதை மேற்கு,
சூளைமேடு,
சென்னை -94.
மனுதார்
திரு. கே.என்.நேரு
போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள்,
கோட்டை, சென்னை -9
எதிர்மனுதார்
உ.வி.மு.ச. கட்டளை 46 விதி 1-ன்கீழ் மனு
1.மனுதாராகிய நான் மேற்படி வழக்கை சட்டப்படி தாக்கல் செய்துள்ளபோது இந்த நீதிமன்றம் சரியல்லாத காரணங்களைச் சொல்லி திருப்பிவிட்டுக் கொண்டே இருப்பது சரியல்ல.
2.இம்முறை மீண்டும் தாக்கல் செய்தபோது, ஊழியர்கள் ஒரு கருத்தை தெரிவித்தனர். இதுபோல் பொதுத் தொல்லை குறித்த வழக்கை இதுவரை யாரும் தாக்கல் செய்யவில்லை எனவும், அதனால் இந்த வழக்கை விசாரிப்பதில் தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
3.இதற்கு முன் இதுபோல் ஒரு வழக்கை யாரும் தாக்கல் செய்யவில்லை என்பதானாலேயே இந்த மனு செல்லாமல் போகாது.
4.மேலும் எதிர்மனுதார் தற்போது போக்குவரத்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், அவரை இந்த நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பதில் சந்தேகமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
5.எதிர்மனுதார் அமைச்சராக உள்ளார் என்பதாலேயே அவரை அழைத்து விசாரிக்க முடியாது என்பது சரியல்ல.
6.இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 78-வது பிரிவின்படி ஒரு நடுவர் நல்லெண்ணத்தின் பேரில் அதிகாரத்தை மீறிய உத்தரவினைக்கூட பிறப்பிக்க இயலும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, எதிர்மனுதாரை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்பது சரியல்ல.
7.மேற்கண்ட காரணங்களால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத் தக்கதே.
8.எனினும் மனுதாரின் போதிய லிளக்கம் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் ஏதேனும் சட்டப்பிரச்சனை வரலாம் என்று கருதினால் இந்த மனுவை உயர்நீதிமன்றத்திற்கு கட்டளை 46 விதி 1-ன்கீழ் அனுப்பி வைத்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவேண்டுமாய் மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது.
ஒப்பம் – செந்தமிழ்க்கிழார்
மனுதார்