GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.

பட்டா மற்றும் பத்திரம் பற்றிய பல தீர்ப்புகள்.

முக்கியச் செய்தி
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!
பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு,
பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,
உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.

(Land Disputes)

  1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது
    பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018
W. P. No – 491/2012, dt – 4.6.2014
W. P. No – 16294/2012, dt – 4.4.2014

  1. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
    அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
    மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019

  1. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
    ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
    தவறு செய்யும் விஏஓக்களை
    பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 13916/2019, dt – 1.7.2019

  1. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
    வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
    உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No – 18489/2009, dt – 1.7.2011

  1. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
    பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

  1. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
    பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No – 2060/2001, dt – 2.11.2012
S. A. No – 1715/1989, dt – 25.6.2002
W. P. No – 16294/2012, dt – 3.4.2014

  1. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
    நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
    பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No – 18754, 20304, 2613/2005
DT – 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)

  1. பட்டா பெயர் மாற்றம் செய்ய
    நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
    W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)
  2. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
    பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court

  1. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்
    பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 – 3 – CTC – 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No – 16294/2012

.மோசடி ஆவணம் குறித்த புகார் மனுவின் மீது, பதிவுச் சட்டம் பிரிவு 83- ன் படி, விசாரணை மேற்கொள்ள உத்தரவு, WP (MD) No. 19918/2025, Hon’ble Madurai Bench Of Madras High Court, 22.07.2025

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அடமானக் கடன்கள் சட்டம்அடமானக் கடன்கள் சட்டம்

Views: 19 அடமானக் கடன்கள் சட்டம் சொத்துக்களை அடமானமாகக் கொடுத்து கடன் பெறுவது அடமானக் கடன்; பணம் கொடுப்பவரிடமே சொத்தை ஒப்படைத்து விடுவது; பணம் கொடுத்தவர் சொத்தை அனுபவித்து வருவார்; கடன் வாங்கியவர் எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாரோ அன்று அவர்

வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.வழக்கஞர் இன்றி, தன் வழக்கிலும் பிறர் வழக்கிலும், மனுதாரருக்காவும் எதிர் மனுதாரருக்காவும் வாதாடலாம்.

Views: 261 சட்டம் ஒர் அலசல்: 1) அரசியலமைப்பு சட்டம் 1950 உறுபு (Article) 19(1)(A) இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 70 குவிமுச(Cr.P.C.) பிரிவு 302(2) உவிமுக(CPC) கட்டளை (Order) 3 விதி (Rule) 1-ன் படி வழக்கறிஞர்

Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

Views: 18 தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்? தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது, அதனுடைய தாய் பத்திரம்