GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized CRPC குற்றவியல் நடைமுறை சட்டமும் அதன் அத்தியாயங்களும்.

CRPC குற்றவியல் நடைமுறை சட்டமும் அதன் அத்தியாயங்களும்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

உங்களது டைரியில் முதல் பக்கத்தில் இருக்க பட வேண்டிய விஷயங்கள்.

1) குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் பற்றி
(constitution of criminal courts and their powers) குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 6-35 ] கூறுகிறது.

2) நபர்களை கைதுசெய்தல் (arrest of persons பற்றி குற்றவியல் நடைமுறை ச் சட்டம் [ sec 41-60 ] கூறுகிறது.

3) ஆஜராவதை கட்டாயப்படுத்தும் நீதிமுறை கட்டளைகள் (process to compel appearance) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 61-69 ] கூறுகிறது.

4) கைது செய்வதற்கான பிடியாணை (warrant of arrest) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 70-81 ] கூறுகிறது.

5) பகிரங்க அறிவிப்பு மற்றும் ஜப்தி (proclamation and attachment) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம்
[ sec 82-86 ] கூறுகிறது.

6) பொருட்களை தாக்கல் செய்வதற்கான அழைப்பாணை (summons to produce) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம்
[ sec 91-92 ] கூறுகிறது.

7) பொருட்களை தாக்கல் செய்வதற்கான சோதனை பிடியாணை (search warrant) பற்றி
குற்றவியல் நடைமுறைச் சட்டம்.
[ sec 93-101 ] கூறுகிறது.

8) அமைதியை காப்பதற்கும் நன்னடத்தைக்குமான பிணையம் (security for keeping the peace and good behaviour) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 106-124 ] கூறுகிறது.

9) மனைவிமார்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குண்டான வாழ்க்கைப் பொருளுதவிக்கான உத்திரவு (order for maintance of wives,
children and parents) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 125-128 ] கூறுகிறது.

10) பொது ஒழுங்கு மற்றும் அமைதியை பேணிக்காத்தல் (maintenance of public order and tranquility) பற்றி குற்றவியல் நடைமுறை சட்டம் [ sec 129-148 ] கூறுகிறது.

11) சட்ட விரோதமான கூட்டங்கள் (unlawful assemblies) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 129-132 ] கூறுகிறது.

12) பொதுத்தொல்லைகள் (public nuisance) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 133-143 ] கூறுகிறது.

13) தொல்லை மற்றும் எதிர்னோக்கப்பட்ட அபாயம் குறித்த அவசரமான சூழ்நிலைகள் (urgent cases of nuisance or apprehended danger) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 144 ] கூறுகிறது.

14) அசையாச்சொத்து குறித்து தகராறுகள் (disputes as to improvable Property) பற்றி குற்றவியல் நடை முறை சட்டம் [ sec 145-148 ] கூறுகிறது.

15) காவல் துறையினரின் தடுப்பு நடவடிக்கை (preventive action of the police) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 149-153 ] கூறுகிறது.

16) காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தலும், புலனாய்வு செய்வதற்கு அவர்களுக்குள்ள அதிகாரங்களும் (information to the police and their powers to investicate) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 154-176 ] கூறுகிறது.

17) விசாரணை மற்றும் வழக்கு விசாரணைகளில் குற்றவியல் நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரவரம்பு (Jurisdiction of the criminal courts in inquiries and trials) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 177-189 ] கூறுகிறது.

18) நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன் தேவைப்படும் நிபந்தனைகள் (conditions requisite for initiation of proceedings)பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம்
sec 190-199 ] கூறுகிறது.

19) குற்றவியல் துறை நடுவர்களிடம் குற்ற முறையீடு செய்தல் (complaints to magistrates) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 200-230 ] கூறுகிறது.

20) குற்றவியல் துறை நடுவர்கள் முன்பு நடவடிக்கைகளை தொடங்குதல் (commencement of proceedings before megistrate) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 204-210 ] கூறுகிறது.

21) குற்றச்சாட்டுகளின் படிவம் (form of charges) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 211-217 ] கூறுகிறது.

22) குற்றச்சாட்டுகளின் சேர்கை (jointer of charges) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 218-224 ] கூறுகிறது.

23) செஷன்ஸ் நீதிமன்ற்த்தின் முன்பு வழக்கு விசாரணை (trial before a court of session) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 225-237 ] கூறுகிறது.

24) பிடியாணை வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கு விசாரணை செய்தல் (trial of warrant cases by magistrate) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 238-250 ] கூறுகிறது.

25) அழைப்பாணை வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கு விசாரணை செய்தல் (trial of summons cases by magistrate) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 251-259 ] கூறுகிறது.

26) சுருக்குமுறை விசாரணை (summary trial) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 260-265 ] கூறுகிறது.

27) சாட்சியம் எடுப்பதற்கும் அதனை பதிவு செய்வதற்குமான நடைமுறை (mode of taking and recording evidence) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 272-283 ] கூறுகிறது.

28) சாட்சிகளை விசாரிக்க ஆணை கட்டளைகள் (commissions for the examinations of witnesses) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 284-290 ] கூறுகிறது.

29) சாட்சியம் குறித்த சிறப்பு விதிகள் (special rules of evidence) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 291-299 ] கூறுகிறது.

30) விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்த பொதுவான வகைமுறைகள் (general provisions as to inquiries and trials) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 300-327 ] கூறுகிறது.

31) புத்திசுவாதீனம் இல்லாத குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பற்றி வகைமுறைகள் (provisions as to accused persons of unsound mind) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 328-339 ] கூறுகிறது.

32) தீர்ப்பு (the judgement) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 253-365 ] கூறுகிறது.

33) மேல்முறையீடுகள் (appeals) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 272-394 ] கூறுகிறது.

34) மேல்முடிவிற்கு அனுப்புதலும் சீராய்வும் (reference and revision) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 395-405 ] கூறுகிறது.

35) குற்ற வழக்குகளை மாற்றம் செய்தல் (transefer of criminal cases) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 406-412 ] கூறுகிறது.

36) தண்டனைகளை நிறைவேற்றுதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் குறைத்தல் மற்றும் மாற்றுதல் (execution suspension remission and commutation of sentences) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 413-435 ] கூறுகிறது.

37) பிணையங்கள் மற்றும் பிணைபத்திரங்கள் குறித்த வகைமுறைகள் (provisions as to bail and bonds) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 436-450 ] கூறுகிறது.

38) சொத்துக்கு வகை செய்தல் (disposal of property) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 451-459 ] கூறுகிறது.

39) முறைகேடான நடவடிக்கைகள் (irregular proceedings) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 460-466 ] கூறுகிறது.

40) சில குற்றங்களை புலன் கொள்வதற்கான கால வரம்பு (limitation for taking cognizance of cetain offences) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 467-473 ] கூறுகிறது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ரூ 40,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி வசூலர் கைது.ரூ 40,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி வசூலர் கைது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 ரூ 40,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி வசூலர் கைது. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின்

சட்டங்களும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகளும்.சட்டங்களும் அவை இயற்றப்பட்ட ஆண்டுகளும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகள். 1923 தொழிலாளர் இழப்பீட்டு சட்டம். 1926 இந்திய தொழிற்சங்கங்கள் சட்டம். 1936 ஊதிய தொகை சட்டம்.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.