நில அளவை செய்வதற்கு பணம் செலுத்தியும் அளவீடு செய்யவில்லையா.. கவலை வேண்டாம் நீங்களே சட்ட அறிவிப்பானை அனுப்பிவிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு தொகையை பெறலாம்..
மாதிரி அறிவிப்பானை:
வழக்குத் தொடருமுன் அறிவிப்பானை.
_ மாவட்டம், _ தாலுகா, கிராமம், __ தெரு, வீட்டு எண் – என்ற முகவரியில் வசிக்கும் S/O. மகனாகிய _______ (வயது __) ஆகிய நான்,
_ மாவட்டம், __ தாலுகா வட்டாட்சியர், வட்ட துணை ஆய்வாளர், தலைமை நில அளவயர் மற்றும் நில அளவயர் ஆகிய தங்களுக்கு அனுப்பும் வழக்கு முன்னறிவிப்பு யாதெனில்,
- கடந்த ஆம் தேதி மாவட்டம், தாலுகா, _ கிராமத்தில் அமைந்திருக்கும் எனக்கு சொந்தமான நிலத்தை (சர்வே எண்கள்: ) அளவீடு செய்ய வேண்டி ரூபாய்: ஐ ( ரசீது எண்: ___) மூலம் பணத்தை அரசு கணக்கில் செலுத்தினேன இதனால் நான்/ நுகர்வோர் ஆவேன். மேலும், அரசாணை 73 இன் படி 30 நாட்களுக்குள் மேற்படி இடத்தை அளவீடு செய்து, நுகர்வோராகிய எனக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து/தராமல், வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு, பணியில் அலட்சியமாக செயல்பட்டு மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளீர்கள்.
- தங்களது மெத்தனப் போக்கை அறியாத நான் கடந்த __ மாதங்களாக தங்களது அலுவலகத்திற்கும், தங்களது ஆளுமையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவை பிரிவு அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் 20 முறை நாயாக அலைந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், தாங்கள் கடமையை அறிந்து செயல்படாமல், அலட்சியமாக செயல்பட்டு தங்களது ஆளுமை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எனக்கு மன அழுத்தம் மற்றும், மன உளைச்சலை ஏற்படுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை அறிந்து கொண்டேன்.மேற்படி இத்தகைய செயல் மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993 இன் படி தண்டனைக்குரிய குற்றமும், அது மட்டுமல்லாமல் தங்களின் பதவி பிரமாணத்தின் போது செய்துகொண்ட உறுதிமொழியை மீறி தங்களது ஆளுமை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியில் அலட்சியமாக செயல்பட்டு கெட்ட எண்ணத்தோடு, என்னை அலைய வைக்கும் நோக்கத்துடன், பணம் செலவு செய்ய வைத்த, மேற்படி அநாகரிகமான செயல் இந்திய தண்டனைச் சட்டம் 166 இன் படி தண்டிக்கக்கூடிய குற்றமுமாகும்.
- இதனால், நாளது தேதி வரை எனக்கான சேவைகளை செய்து தராத தாங்கள் இனி மேலும் எதுவும் செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
- எனவே, இவ்வரிப்பாணை கண்ட 10 நாட்களுக்குள் என்னுடைய இடத்தை அளந்து கொடுக்காததற்கான உரிய விளக்கத்தை கொடுக்காத பட்சத்தில், தாங்கள் செய்த தவறை தாங்களே ஒத்துக் கொண்டதாக கருதி, அப்படியே, விளக்கம் கொடுத்தாலும், தாங்கள் கொடுக்கும் விளக்கம் எனக்கு திருப்தி அளிக்காத பட்சத்திலும், தங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாலும், அதனால் எனக்கு ஏற்படும் சகலவிதமான வழக்கு செலவினங்களுக்கும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் தாங்களே முழு பொறுப்பாவீர்கள், என்பதை இதன் மூலம் அறிவிக்கலாயிற்று.
இப்படிக்கு
மனதாரர்
நாள்:
இடம்:
விவிலியராஜா. வழக்கறிஞர்
9442243433
எனக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்.
நான் RTI சமூக ஆர்வலர் ஆவேன், பொது மக்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி சமூகவளைதளம் மற்றும் நேரடியாகவும் பதிவு செய்து வருகிறேன்.
நான் தங்களுடன் இணைந்து இச்சட்டத்தினை படிக்க விரும்புகிறேன். மேலும் நான் நீதிமன்றத்தில் சுய வழக்காளியாக வாதாட விரும்புகிறேன்.
நன்றி
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்