GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு.

பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு.

🙏பிழை வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு..!

பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658 to 669 காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்,குற்றவியல் நீதித்துறை நடுவர் அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெளிவாக கூறுகிறது. PSO-660 முறையாக புகார்தாரர்க்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.அதனை முதல் தகவல் அறிக்கையுடன் இணைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். PSO-661 இறுதி அறிக்கை ( RCS)களை வட்ட ஆய்வாளர் மூலமாக (I.O.) விசாரணை அதிகாரி அனுப்ப வேண்டும்.அதன் மீது ஆணை பிறப்பிக்கப்பட்டால் குறிப்புரை எழுதித் தாமதமின்றி குற்றவியல் நடுவர்க்கு அனுப்ப வேண்டும்.

மேற்கொண்டு விசாரணை செய்யுமாறு ஆய்வாளர் நிலைய அலுவலர்க்கு அணையிடலாம் அல்லது தானே விசாரணை செய்யலாம்.PSO-662 விசாரணை அலுவலர்(IO),ஒரு வழக்கை திட்டமிட்ட பொய்யென்றோ வன்ம்மான பொய்யென்றோ அறிக்கை செய்கையில் அவர், இறுதி அறிக்கையில் வாதிக்கு எதிராக நடவடிக்கைவெடுக்க உத்தேசிக்கிறாரா இல்லையா என்றும்,அப்படி உத்தேசிக்காவிட்டால் அவ்வாறு செய்யாத்தன் காரணங்களை கூற வேண்டும்.

PSO-664 இதச( IPC) 182 or 211 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளை, காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் உட்கோட்ட ( DSP) அலுவலரின் உத்தரவுகளின்றித் தொடங்கலாகாது.

PSO-665 Cr.P.C.,195 குற்றச்சாட்டு:-
(1) இதச(IPC) 211 ஆவது பிரிவின் தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காக அக்குற்றம் யாதேனுமொரு நடவடிக்கையில் ,அது சம்பந்தமாக செய்யப்பட்டிருப்பதாக சாற்றும்போது அந்நீதிமன்றமோ அல்லது அல்லது அது கீழ்ப்பட்டுள்ள வேறெந்த நீதிமன்றமோ எழுத்தில் கொடுத்த புகாரின் மேலன்றி மற்றப்படி,வழக்கு எதுவும் தொடரக்கூடாது.

(2)ஆகவே,கீழ்க்கண்டவநேர்வுகளில் அத்தகைய நீதிமன்றத்தின் எழுத்து மூலமான குற்றச்சாட்டு ஒன்று அவசியமாகும்.(அ) முதல் குற்றச்சாட்டு காவலருக்கு கொடுக்கப்பட்டு,அவர்களால் குற்றம் பொய்யென்று தீர்ப்பு செய்யப்பட்ட ஒரு வழக்கில்,குற்றவியல் துறை நடுவர் நீதிமன்ற நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கும்போது,
(ஆ) கு.வி.மு.ச.Cr.P.C.,159 ஆவது பிரிவின் கீழ்ப் புலனாய்வின்றி ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அது நீதிமன்ற நடவடிக்கையாக அமையாது.PSO-668 Orders of Magistrate on Final Reports- இறுதி அறிக்கைகளின் பேரில் குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள். குற்றவியல் வழக்கு நடைமுறை விதித்தொகுப்பு,173- ஆவது பிரிவின் கீழ் ஒரு வழக்கு பொய்யானதென்று குற்றவியல் துறை நடுவருக்குச் செய்யப்படும் இறுதி அறிக்கை மேல் அப்பிரிவே காட்டுகின்றபடி மேற்கொண்டு காவலர் விசாரணை செய்யும்படி குற்றவியல் துறை நடுவர் உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம்.ஆனால் ,அவ்வழக்கு,பொய்யானதென்று காவலரே செய்த அறிக்கைக்கு எதிராக அவ்வழக்கில் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்யும்படி காவலருக்குக் கட்டளையிட குற்றவியல் துறை நடுவருக்கு உரிமையில்லை.இவ்வழக்கு பொய்யானதென்று காவலர் செய்த அறிக்கையின் மேல் குற்றவியல் துறை நடுவர் மனநிறைவு அடையாவிட்டால்,CrPc 190- ஆவது பிரிவின் கீழ்,அவருக்குத் தானாகவே நடவடக்கை எடுத்துக்கொள்ள அதிகாரம் உண்டு.

விசாரணை முடியும் முன் வெப்பொழுதும் நீதிமன்றம் (Cr.P.C) பிரிவுவ216,385(2),386-ன் படி புதிய குற்றச்சாட்டை சேர்க்கவும்,மாற்றவும் முடியும் என உச்ச நீதிமன்றம் Bhimanna V/s State of Karnataka 2012(9)SCC 650; 2012 AIR SC 3026: 2012(7)SCR 909. 2012(8) Scale 457,2013AIAR( Crl.)861 வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

எதிர் வழக்கில் (Case in Counter)- ஒரு குற்ற வழக்கில் காவல்துறையினர் அறிக்கையைத் தாக்கல் செய்த்தற்கு பிறகு அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு ( further Investigation)காவல் துறையினருக்கு உத்தரவிடும் படி கோரி நிகழ்நிலைப்( Defecto Complaintant) ஓர் எதிர் விண்ணப்பத்தை Protest Petition தாக்கல் செய்யவதற்கு நிகழ்நிலை புகார்தார்ருக்கு உரிமையுள்ளது எனுச்ச நீதிமன்றம் பகத் சிங் எதிர் காவல்துறை ஆணையாளர் AIR 1985 SC 1285, 1985-2-SCC-537, 1985-1- MLJ- CRL-536 உத்தரவிட்டுள்ளது.

எதிரியாக உள்ள வழக்கில் CrPc 315 ல் சாட்சியாக குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சி கூறலாம். எதிர் வழக்கில்
(case in counter)ஒரே அரசு வழக்கறிஞர் APP இருவழக்கிற்கும் முன்னிலையாக முடியாது.
சென்னை உயர்நீதிமன்றம் கணேசன் A-1 Vs.அரசு State Rep. என்ற வழக்கில் 28-4-2011 ல் நீதியாரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

உரிமையியல் வழக்கின் தீர்ப்பு மாதிரி | CIVIL JUDGMENT MODELஉரிமையியல் வழக்கின் தீர்ப்பு மாதிரி | CIVIL JUDGMENT MODEL

Views: 16 CIVIL JUDGMENT MODEL (பரீட்சை / Drafting / Practical Exam க்கு Perfect Model) IN THE COURT OF THE DISTRICT MUNSIFF, MADURAI O.S. No. 0000 of 2025 A.B.C … Plaintiffvs.X.Y.Z

கோவில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லைகோவில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற தேவையில்லை

Views: 22 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURTDATED : 16.08.2022CORAMTHE HON’BLE MR.JUSTICE G.R.SWAMINATHANW.P(MD)No.18554 of 2022P.Seeni … Petitionerv.1.The District Collector, Virudhunagar,Virudhungar District.2.The Revenue Divisional Officer,Aruppukottai, Virudhunagar District.3.The Tahsildar, Thiruchuzi

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

Views: 11 அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத நிலையில் மனுதாரர் ஆகிய நீங்கள் கீழ்க்காணும் நினைவூட்டும் விண்ணப்பத்தை செய்ய முடியும் பயனடைய முடியும் நீங்கள்