High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”
-
by admin.service-public.in
- 56
தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் எனக் கூறுகிறது. தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் என்று, இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி அதிக வட்டி வசூலிப்பவர்களுக்கு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கவும், 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், கந்துவட்டி தடுப்பு சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டத்தின் கீழ் அதீத வட்டி மற்றும் அதற்கு கூடுதல் அபராதம் வசூலிக்கும் வட்டி காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில் தொடர்புடையவர் 15 நாட்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். பணம் கொடுத்த நபர் கூடுதல் வட்டி வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். கடன் பெற்றவர் செலுத்த வேண்டிய தொகை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும் என்கிறது தமிழக அரசின் சட்டம். வட்டி வசூலிப்பவர் கடன் பெற்றவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்தி இருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக் கொடுக்கும்.
ஆனால் அவையெல்லாம் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது ஒரு பெரிய சுரண்டல் தொழிலாக ஒரு இருட்டு தொழிலாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் சட்டத்தின் பிடியில் வருவத்தில்லை, கடந்த காலங்களில் கந்து வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் போட காரசாரமாக விவாதங்கள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கூட இது தொடர்பாக பல்வேறு ஆணைகளை ஆட்சித் தலைவர்களுக்கும் காவல்துறைக்கும் பிறப்பித்தார். ஆனாலும் அதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
கந்துவட்டி பிரச்சனையால் யாராவது தற்கொலை செய்ய நேர்ந்தால், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் கடுமையானது என்பதால் சாமானியர்கள் இதுபோன்ற கந்து வட்டிக்காரர்களை நாடுகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
கந்துவட்டி குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தி உள்ளது மேலும் கந்து வட்டி வசூலித்து அவர்களை கண்காணிக்க மாவட்டம், தாலுகா வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.
சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, இனியாவது எந்த உயிரும் பலியாகாமல் அரசும் காவல் துறையினரும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியத்தை நெல்லை சம்பவம் உணர்த்தி இருக்கிறது இருக்கிறது

🔊 Listen to this தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் எனக் கூறுகிறது. தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் என்று, இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி அதிக வட்டி வசூலிப்பவர்களுக்கு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை…
🔊 Listen to this தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் எனக் கூறுகிறது. தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் என்று, இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி அதிக வட்டி வசூலிப்பவர்களுக்கு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை…