சிறைகள் சட்டம் 1894-இன் அறிவுறுத்தல்கள் ஒரு பார்வை!
பிரிவு 9-இன்படி, சிறை அதிகாரிகள் கைதிகளுடன் வியாபாரத் தொடர்புகள் எதிலும் ஈடுபடக் கூடாது.
பிரிவு 10-இன்படி, சிறைக்கு வழங்கப்படும் பொருள்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடக் கூடாது.
பிரிவு 12-இன்படி, கைதிகளின் அனுமதி பதிவேடு, கைதி விடுதலையாகும் நாள் குறித்த பதிவேடுகள், சிறை குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்படம் பதிவேடு. கைதியின் உடைமைகளுக்கான் பதிவேடு மற்றும் சிறை விதிகளின் கீழான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
பிரிவு 13-இன்படி, மருத்துவ அதிகாரி சிறையின் சுகாதார நிருவாகத்திற்கும், சிறை விதிகளின் படி தனது கடமையைச் செய்ய வேண்டும்.
பிரிவு 16-இன்படி, கண்காணிப்பாளரின் எழுத்து மூலமான உத்தரவு இல்லாமல் சிறை அதிகாரி (ஜெயிலர்) சிறையில் குடியிருப்பதை தவிர்க்க கூடாது. சிறைத்துறை தலைவரின் எழுத்து மூலமான உத்தரவு இல்லாமல் வேறு பணியில் ஈடுபடக்
கூடாது.
பிரிவு 23-இன்படி, தண்டனை கைதிகளில் இருந்து சிறை அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கூட பொது
ஊழியர்கள் ஆவர்.பிரிவு 24-இன்படி, கைதி சிறையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்பாக சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பொருள்களை
கைப்பற்ற
வேண்டும். பெண் கைதிகள் பெண் சிறை
அதிகாரியால் மட்டுமே சோதனை செய்யப்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்தலும் அவசியம். கடுஞ்சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருந்தால் அவர் எந்த விதமான பணிக்கு தகுதியானவர் என்பதையும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
பிரிவு 25-இன்படி, சிறை அதிகாரி கைதியின் பணம் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாக்க வேண்டும்.
பிரிவு 26-இன்படி, வேறு சிறைக்கு கைதி மாற்றப் படுவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். மருத்துவ தகுதியில்லாதவர்கள். அதற்கான தகுதி பெறும் வரை வேறு சிறைக்கு மாற்றப்பட கூடாது.
பிரிவு 27-இன்படி, ஆண் கைதிகளிடம் இருந்து பெண் கைதிகளையும், பெண் கைதிகளில் வயதுக்கு வந்தவர்களிடம் இருந்து வயதுக்கு வராதவர்களையும், பொதுவாக தண்டனை பெற்ற கைதிகளிடம் இருந்து, விசாரணைக் கைதிகளையும், குற்றவியல் கைதிகளிடம் இருந்து உரிமையியல் கைதிகளையும், பிரித்து வைத்தல் வேண்டும்.
பிரிவு 28-இன்படி, சட்ட விதிகளுக்கு உள்பட்டு கைதிகளை தனியாகவும், கூட்டாகவும் சேர்த்து அடைக்கலாம்.
பிரிவு 30-இன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை மற்ற கைதிகளுக்கு தொலைவில் உள்ள சிறையில் தனித்தனியாக அடைத்து வைக்க வேண்டும். அவர்களை ஒரு பாதுகாவலர் காக்க வேண்டும்.
பிரிவு 31-இன்படி, விசாரணை மற்றும் உரிமையியல் கைதிகள் ஆகியோர் தங்களை தாங்களே பராமரித்து கொள்ள அனுமதி உண்டு.இந்த நோக்கத்துக்காக உரிய நேரங்களில் உணவு, உடை, படுக்கை மற்றும் இதர அத்தியாவசிய எண்ணெய்பொருள்களை சோதனையிட்ட பின் பெற்றுகொள்ள அனுமதி உண்டு.
சிறைகள் சட்டம் 1894-இன் அறிவுறுத்தல்கள் ஒரு பார்வை!
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.