முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”
- முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய கொடுக்கிறோம்.
- இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம் மேற்படி முத்திரை தாள்கள் அதன் நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது.
- முத்திரைத் தாள்கள் & முத்திரை ஸ்டாம்கள் மூலமாக அரசு தங்களுடைய வரியை வசூலிக்கின்றன.
- அஞ்சல்துறை தவிர்த்த ஸ்டாம்களை முத்திரைதாள் ஸ்டாம்ப்போடு எக்காரணம் கொண்டும் குழப்பி கொள்ள கூடாது.
- முத்திரைத்தாள் & ஸ்டாம்கள் இந்தியாவில் நாசிக் & ஹைதராபாத்தில் மட்டும் அச்சிட்டு இந்தியா முழுவதும் சப்ளை அனுப்பபடுகிறது.
- தமிழகத்தில் இவை கருவூலம், சார் கருவூலம் வழியாக முத்திரைதாள் விற்பனையாளர்கள் மூலமாக பொது மக்கள் கையில் தவழ்கிறது.
- முத்திரைத்தாள் A4 Size அகலமும் , Fullsape பேப்பருக்கு கொஞ்சம் குறைவான உயரத்தில் , 3 ல் ஒரு பங்கில் இந்திய அரசு முத்திரை அச்சிடப்படும். 2 பங்கு நாம் நம்முடைய கிரைய விவரங்களை எழுதுவதற்காக வைத்து இருப்பர்.
- முத்திரைத்தாள் Judicial & Non Judicial என்று இரண்டு வைகைப்படும்.
- ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் நீதித்துறைக்கு உள்ளே சொத்து வழக்குகள் உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுபவை.
- Non Judicial முத்திரைத்தாள்கள் என்பது நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரபதிவு அலுவலகம் , இன்சூரன்ஸ் அக்ரீமென்ட் போன்றவைகளுக்கு பயன்படுபவை.
- Court fee stamp, Revenue Stamp, Notorial Stamp, special adhesive stamp, foreign bill Stamp, broker’s note, Insurance Policy Stamp, Share Transfer Stamp போன்ற முத்திரைவில்லைகள், ஆவண உருவாக்கம் & பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களுக்கு பயன்படுகின்றன.
- முத்திரைத்தாள் சொத்து கைமாறுவதற்கு, ஷேர்களுக்கு, வியாபார பார்ட்னர்ஷிப் பத்திரங்களுக்ககு, பில் ஆப் எக்ஸேஜ், வாடகை , பிராமிசரி நோட் போன்ற அசையும் & அசையா சொத்துகளுக்கு பயன்படுத்தபடுகின்றன .
- மேலும் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம், தான பத்திரம், குத்தகை வாடகை, முதலீடு அதிகப்படுத்துதல், அக்ரீமென்ட் ஆப் பேங்க் கேரண்டி, வீட்டு கடன், கடன் ஒப்பந்தம், அடமானம் போன்ற வற்றிற்கும் முத்திரைதாள்கள் பயன்படுத்தபடுகின்றன.
- முத்திரைத்தாள் மதிப்பு சிலவற்றிற்கு Fixed ஆக இருக்கும் அவை adoption deed, affidavit, article of association , cancellation deed, copy of Extracts, Indemnity Bond, Power attiring, divorce .
- முத்திரைத்தாள் மதிப்பு நாம் பத்திரத்தில் காட்டுகின்ற பரிமாற்ற தொகையினை பொறுத்து அமையும், அவை அடமானம், குத்தகை ஒத்தி, ஹைப்போதிகேசன் டீட், ஆர்ட்டிகிள் ஆப் அச்சோலியேசன் போன்றவை.
- முத்திரைதாள்கள் மதிப்பு நாம் பத்திரத்தில் காட்டுகின்ற மதிப்பு அல்லது உண்மையான சந்தை மதிப்பு, இரண்டில் எது அதிகமோ அதனை காட்டுவது கிரைய ஒப்பந்தம், கிரையம் பரிமாற்றம் , பாகபிரிவினை போன்ற பத்திரங்கள் இப்படி நடக்கின்றன.
- முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு அதனை பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டால் அந்த முத்திரைத் தாள்களுக்கு காலம் முழுவதும் மதிப்பு இருக்கிறது.
- முத்திரைத்தாள்கள் வாங்கப்பட்டு அதனை எழுதாமலும், பத்திரப்பதிவு நடக்காமல் இருந்தால் அவை ஆறுமாதம் தான் செல்லும்.
- சொத்து வாங்கும்போது முத்திரைத்தாள் மதிப்பு சந்தை மதிப்பு விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை குறைக்க முத்திரைத்தாள் சட்டம் 47 (A) ன் கீழ் மனு செய்யலாம்.
- வீணாக்கப்பட்ட முத்திரைத்தாள், பயன்படுத்தப்படாத முத்திரைத் தாள்களை அரசிடம் கொடுத்து Refund வாங்கலாம்.
- மும்பையை சேர்ந்த தெல்கி என்பவரின் அதிக அளவு போலி முத்திரைத்தாள்களை உருவாக்கி இந்தியா முழுவதும் மோசடி செய்தான்.
- தெல்கி விளைவுக்கு பிறகு, முத்திரைத்தாள் ஒரிஜினாலா, போலியா என அதிக அளவு சோதனையிட ஆரம்பித்தனர்.
- பிராங்கிங், E.Stamp, ESBTR ( secular bank & treasury receipt ) போன்ற புதிய வழிகள் Non Judicial முத்திரைத்தாள்களுக்கு மாற்றாக உருவாகி இருக்கிறது.
- ESBTR என்பது வங்கியில் முத்திரைத்தாள்களை கட்டி விட்டால் அவர்கள் Printed Electronic Stamp தருவார்கள். தற்போது தமிழகத்தில் இவை இல்லை. மும்பை, டெல்லி பகுதிகளில் இவை நடைமுறையில் இருக்கிறது.
- பிராங்கிங் ( Franking) என்பது நாம் பணம் கட்டிய பிறகு, நாம் எழுதிவைத்து இருக்கிற பத்திரத்தில் முத்திரைத் தீர்வையை Frank செய்து தருவார்கள்.
- E Stamp என்பது அரசு சில தனியார் நிறுவனங்களை இதற்கு நியமித்து இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் E- Stamp நாம் கட்டிய தொகைக்கு தருகிறார்கள்.
- புதிய முறைகள் முத்திரைதாளில் வந்தாலும், பழைய முத்திரைத்தாளுக்கு இருக்கும் உணர்வு ரீதியான மதிப்பு புதியமுறைகளுக்கு இன்னும் ஏற்படவில்லை.
- அதிக மதிப்பிலான முத்திரைத்தாள்கள் வாங்கும்போது அரசு கருவூலத்திலே நேரடியாக சென்று வாங்கலாம் இதனால் கமிஷன் இருக்ககாது. பணம் மிச்சம்.
- கிரையப்பத்திரத்திற்கு , முழுவதும் வெள்ளை தாளில் எழுதி, முத்திரை தீர்வை பணமாக கூட கட்டலாம்.
- ரெவின்யு ஸ்டாம்ப், Court Fee Stamp, போன்ற முத்திரை வில்லைகளை எப்பொழுதும் கையிருப்பில் வைத்து கொள்வது நல்லது. அவசர நேரத்தில் நிச்சயம் உங்களுடைய டாகுமென்ட் (அ) இன்ஸ்ருமெண்டையோ லீகல் ஆக்க உதவும்.
- முத்திரை தாள் பயன்படுத்தாமல் ஸ்பெசல் அடிசிவ் ஸ்டாம்ப்யை பயன்படுத்திய பத்திரம்
- வெறும் வெள்ளை தாளில் பத்திரம் எழுதி முத்திரை தாள் கட்டணத்தை நேரடியாக பத்திர அலுவலகத்தில் கட்டிய பத்திரம்.
வழக்குரைஞர் :அ.அக்பர் பாஷா