GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம்2005 பிரிவு 19(1) படி முதல் மேல்முறையீட்டு மனு

தகவல் அறியும் உரிமைச் சட்டம்2005 பிரிவு 19(1) படி முதல் மேல்முறையீட்டு மனு

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தகவல் அறியும் உரிமைச் சட்டம்2005 பிரிவு 19(1)( இனி வரும் இடங்களில் RTI ACT என்று குறிப்பிடுகிறேன் ) படி முதல் மேல்முறையீட்டு மனு

அனுப்புநர்

பெறுநர்
முதல் மேல்முறையீட்டு அலுவலர்

பார்வை

1) இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19,14,21, & 51(A) படி மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழக்கு எண் AIR 1978 SC 597 (மேனகா காந்தி Vs இந்திய யூனியன்)

2)Govt of INDIA, Ministry of personnel,P.G & Pensions (Department of Personnel & Training) New Delhi Office memorandum , Dated 10-03-1995

3) Speaking order no 13023/1/94-At,dopt dt10-03-2005

4) தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (ஏ) துறை அரசாணை எண் 73/2018(11/06/2018)

5) மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் W.P.No 16108/2019 & W.M.P. No 15866/2019 Court Dated 14/10/2019

பொருள்: இணைப்பில் உள்ள மனுவை பெற்றுக்கொண்டு RTI ACT 7(1) படி 30 தினங்கள் கடந்ததும் முழுமையாக தகவல் அளிக்கவில்லை என்பதால் RTI ACT 7(2) படி கட்டணமின்றி பெற்று தர கோரியும், தனது கடமையை செய்ய தவறிய தங்களின் அலுவலக பொது தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி

அன்புடையீர் வணக்கம்
நான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 19 & 51 (A) வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் இணைப்பில் உள்ள RTI ACT 6(1) செய்த மனுவை பெற்றுக்கொண்ட தங்களின் அலுவலக பொது தகவல் அலுவலர் RTI ACT 7(1) படி 30 தினங்கள் கடந்ததும் முழுமையாக தகவல் அளிக்கவில்லை என்பதுடன் மனுதாரர் ஆகிய எனக்கு வீண் பணவிரையம் , மன உளைச்சல், கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளார். மாண்புமிகு உச்ச நீதிமன்றம் Cri A.1669/2009 வழக்கில் வீண் காலதாமதம் செய்வது இலஞ்ச /ஊழலை எதிர்நோக்குவதாக கருதலாம் என்று கூறியுள்ளதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நான் கோரிய தகவல்களில் பல RTI ACT 4 (1) (B) (I) (IX) (X)& 4(3), 4(4) கீழ் தாங்களின் அலுவலகத்தின் பொது தகவல் அலுவலரே தானே வெளியிட வேண்டிய தகவல் ஆகும் . அதை தங்களின் அலுவலகம் பொது தகவல் அலுவலர் RTI ACTயை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் தற்போது நான் கோரிய தகவல்களை எளிதாக அளித்து இருக்கலாம். அதையும் எனக்கு முழுமையாக அளிக்கவில்லை

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த நீதிப்பேராணையை அடுத்து கொண்டு வரப்பட்ட பார்வை 4 ல் கூறிய அரசாணை படி பொது மக்கள் அளிக்கும் மனுவிற்கு முப்பது தினங்களில் உரிய வகையில் எனக்கு தெரிவித்து இருக்கவேண்டும் அதையும் செய்ய தவறி விட்டார். (மனுதாரருக்கு தகவல் வழங்காதது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து) மனுதாரருக்கு தகவல் வழங்காதது / மறுக்க காரணமாக இருந்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை TNSIC வழக்கு எண் 6387& 51466/விசாரணை/டி/2014(26/02/2016) எடுக்க கோருகிறேன். மற்றும் தங்களின் அலுவலக பொது தகவல் அலுவலர் நான் கோரிய தகவல்களை முழுமையாக படித்து பார்க்காமல் தகவல்களை தெளிவற்ற முறையில் வழங்கியுள்ளார். (டெல்லி உயர்நீதிமன்றம் W.P(c) No 7232/2009/ நாள் 04.08.2011 மனுதாரர் கோரிய தகவல் தானா என்பதனை நன்கு உறுதி செய்த பின் தான் அதனை மனுதாரருக்கு அனுப்பவேண்டும் CIC/MP/CI2014/000138 (DATE 08.04.2015)

தங்களின் அலுவலக பொது தகவல் அலுவலர் செயல்பாடு ஊழலுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஊழலுக்கு உடந்தையாக பதில் தர மறுப்பது மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு மக்களுக்கும் மக்கள் நம்பியிருக்கும் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பை உருவாக்கும் விதத்தில் தங்களின் அலுவலக பொது தகவல் அலுவலர் நடந்து கொண்டுள்ளார் , ஆகையால் 30 நாள்கள் கடந்ததும் RTI ACT படி தகவல் அளிக்க தவறியதால் தங்களின் அலுவலக பொது தகவல் அலுவலரிடம் RTI ACT 19(8)(b) படி ரூபாய் 250 பெற்றுத்தர கோருகிறேன். (பொது தகவல் அலுவலர் மனு மீது தகவல் அளிக்கத நிலையில் முதல் மேல்முறையீட்டு அலுவலர் உத்தரவின் பேரில் தகவலை வழங்கினால் பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்கலாம் (மும்பை உயர்நீதிமன்றம் கோவா அமர்வு WP No 304/2011(dated 09/06/2011) இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு -20.- ன் படி குற்றம் செய்த எந்தவொரு அரசு ஊழியரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது . ஆகையால் தனக்கு வழங்கப்பட்ட பணியை முறையாக செய்ய தவறிய பொது தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.

CHECK AND BALANCE என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது.இந்திய அரசியல் சாசனம் யாருக்கும் எதேச்சதிகாரம் அளிக்கவில்லை. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட அரசாணை குறித்து நான் கோரிய தகவல்களை முழுமையாக அளிக்க மறுத்து விட்டார் . அது தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை நடைமுறையில் இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். அரசு அதிகாரி எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார் என்று குடிமக்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் படி தான் நான் தகவல்களை அளிக்க மறுத்து விட்டார் என்பதை விட வேறு ஏதோ ஒரு தகவலை வழங்கியுள்ளார். ஆகையால் எனக்கு முழுமையான தகவல்களையும், உரிய இழப்பீடும் பெற்று தர கேருகிறேன் .

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

1 thought on “தகவல் அறியும் உரிமைச் சட்டம்2005 பிரிவு 19(1) படி முதல் மேல்முறையீட்டு மனு”

  1. தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்து 4 மாதமாகியும் பதில் வரவில்லை. இதற்கு யாரிடம் எப்படி முறையிட வேண்டும் விளக்கம் தர வேண்டுகிறேன்.

Leave a Reply to S. Kamardeen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

அரசு இடத்தின் தனியார் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வழிமுறைகள்.அரசு இடத்தின் தனியார் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வழிமுறைகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 http://www.tniuscbe.org/download/go/go1090.pdf https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:26372dc8-23e6-42fc-8622-4abe5ee47728?sfnsn=wiwspwaஅரசுக்கு சொந்தமான இடத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பு செய்ய கூடாது மீறிய ஆக்கிரமிப்பு அகற்றம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அதன் வழிமுறைகள்[07/06,

COVID-19 | Fine is not necessary for not wearing the mask. கட்டாய முக்காகவசம் தண்டம் செலுத்த வேண்டாம்.COVID-19 | Fine is not necessary for not wearing the mask. கட்டாய முக்காகவசம் தண்டம் செலுத்த வேண்டாம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 2 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

RDO | court means? How can get solution for property and document issues | RDO கோர்ட் என்றால் என்ன மற்றும் சொத்து பத்திரம் நில பிரச்சனைக்கு எங்கே எப்படி தீர்வு காண்பதுRDO | court means? How can get solution for property and document issues | RDO கோர்ட் என்றால் என்ன மற்றும் சொத்து பத்திரம் நில பிரச்சனைக்கு எங்கே எப்படி தீர்வு காண்பது

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 1 https://landreforms.tn.gov.in/index.html குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)