நிலஅளவை மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் மற்றும் கால அளவுகள் | Procedure for Survey of the Land with Timeline
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண்.W.P.(MD)No.13465/2020 மற்றும் W.M.P.(MD)No. 11228/2020-ல் நீதிமன்றம் நில அளவைத் துறை சம்மந்நமாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல்.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் ஆணைப்படி, சென்னை-5, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.எண். 5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மற்றும் நிலஅளவை செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய கடைமைகள்.
- கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் நில அளவை/ மறுநில அளவை செய்ய வேண்டுமென்றும்,
- தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டுமென்றும்,
- தாமதத்துக்குக் காரணமான அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2,500 பிடித்தம் செய்ய வேண்டுமென்றும்,
- மேலும், ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்று,
- நில அளவீட்டுக்காக ட்ரோன் (Drone Camera) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப்படம், வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்திக் கேட்டால் வழங்கலாம் என்றும்,
- புல எல்லை மனுக்கள் தொடர்பான பதிவேட்டை பராமரித்து, மேல்நிலை அலுவலர்கள் (வட்டத்துணை ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர்) குறிப்பிட்ட காலங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை தினமும் சரிபார்த்திட வேண்டும். இந்த பதிவேட்டின் முழு தகவல்களையும் மனுதாரரோ/ சம்மந்தப்பட்டவர்களோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரும் பட்சத்தில் மறுக்காமல் வழங்கப்பட வேண்டும். நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரின் சுற்றறிக்கை நகல்: –
Commissionerate of Survey and Settlement Circular copy:-
அதை தொடர்ந்து நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.எண். 5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை என்னவென்றால்,
- கட்டணம் செலுத்தி இயன்றவரை 30லிருந்து 90 நாட்களுக்குள் நில அளவை/ மறுநில அளவை செய்ய வேண்டுமென்றும்,
- நிலஅளவை/ மறுநில அளவை பணிகளை மேற்கொள்வதை புகைப்படம்/ காணொளி (Video) எடுத்துக் கொள்வதற்கான செலவினை தொடர்புடைய மனுதாரர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், புகைப்படம் அல்லது காணொளி தொடர்பான பதிவுகளை உரிய கட்டணத்தினை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வழங்க வேண்டும்.
- வருவாய் துறை தொடர்பான பணிகளை ஒழுங்குபடுத்த வருவாய்த்துறையின் ஒவ்வொரு அலுவலர் மீதும் தொடர் கண்காணிப்பு செலுத்தப்பட வேண்டும். அவர்களும் குறிப்பாக நிலஅளவர்களும் கையூட்டு கோருவதை தடுப்பதற்காக இலஞ்ச ஒழிப்பு துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- நிலஅளவை பணி முடிவுற்று, பட்டா வழங்கக் கோரும் நிகழ்வுகளில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை மட்டுமின்றி, இந்நீதிமன்றம் வழக்கு எண் W.P.MD.No.7746/2020ல் வழங்கிய ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
Inspector of Surveyor – நில அளவை ஆய்வாளர்
Deputy Inspector of Surveyor – துணை நில அளவை ஆய்வாளர்
Head Surveyor – வட்டத் துணை ஆய்வாளர்
Deputy Surveyor/ Sub-Inspector Surveyor – சார் ஆய்வாளர் / வட்ட சார் ஆய்வாளர்
Firka Surveyor – குறுவட்ட நிலஅளவர்/ உள்வட்ட நிலஅளவர்
Senior Draftsman – முதுநிலை வரைவாளர்
Land Record Draftsman – நில ஆவண வரைவாளர்
Town Sub-Inspector – நகர் சார் ஆய்வாளர்
மேலும் நிலங்கள் சம்பந்தப்பட்ட சட்டம் ஆலோசனைகள் மற்றும் நிலங்கள் சம்பந்தப்பட்ட உதவிகளுக்கு நிரந்தர தீர்வு காண அழையுங்கள் தேசிய சட்ட நீதி இயக்கம் 9751438854 .;6379434453