GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றிய முழு விளக்கம்.

கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றிய முழு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றி ஒரு அலசல், தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் கிராம சபை ஒரு பார்வை.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 22.4.1994 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் படி ஊராட்சி அமைப்புகளில் பல்வேறு முக்கியமான மாறுதல்கள் கொண்டுவரப்பட்டது.

  1. தமிழ்நாட்டில் மூன்றடுக்கு ஊராட்சி முறை நடைமுறைக்கு வந்தது.
  2. கிராம ஊராட்சியின் தலைவரே, அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலராக செயல்படுவார். ஆதாரம்: அரசாணை நிலை எண்: 225 ஊ.வ.துறை நாள் 15.10.1996.
  3. கிராம ஊராட்சித் தலைவரின் பொறுப்புகள்.

 கிராம ஊராட்சி தலைவர் செயல் அலுவலராக செயல்பட வேண்டும்.

 கிராம சபை கூட்டங்களை வருடத்திற்கு நான்கு முறை கூட்ட வேண்டும். வரவு செலவு குறித்த விவரங்கள் கிராமசபையில் வைக்க வேண்டும்.

 கிராம ஊராட்சியின் கூட்டத்தினை மாதம் ஒரு முறை கூட்ட வேண்டும்.

 கூட்டங்களை தலைமை ஏற்று முழுமையாக நடத்தி தீர்மானங்களை பதிவு செய்ய வேண்டும்.

 புதிதாக பதிவி ஏற்கும் உறுப்பினர்களை உறுதிமொழி எடுக்கச் செய்து, தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 கிராம ஊராட்சி கூட்டங்களுக்கான தேதி மற்றும் கூட்டப் பொருட்களை முடிவு செய்வது, மற்றும் கூட்டத்தில் தீர்மானங்களை பதிவு செய்வது இவர் கடமையாகும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 92 இன் படி, தீர்மான நகல் கூட்டம் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள், ஊராட்சியின் ஆய்வாளருக்கு அதாவது மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.

 கிராம ஊராட்சிக்கான வளர்ச்சி திட்டம் தயார் செய்து, கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்.

 பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை, உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

 ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அடுத்த வருட நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் தயார் செய்து, பிப்ரவரி மாதத்திற்குள் கிராம சபை மற்றும் கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற வேண்டும்.

 தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில், தலைவருக்கான நியமிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுதல், மற்றும் அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணைகளை செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 43 கீழ் 7 ன் படி, தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒவ்வொருவருக்குரிய அனைத்து உரிமைகளும் தலைவர் பெற்றிருப்பார்

 நடந்து முடிந்த மாதத்தின் கணக்குகளை படிவம் எண் 30 ல் பதிவு செய்து, அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிக்கு அனுப்புதல்.

 கிராம ஊராட்சிக்கான 1 முதல் 6 வரையிலான கணக்குகளை பராமரித்தல்.

  1. ஊராட்சி செயலர்.

 கிராம ஊராட்சிக்கு ஒரு ஊராட்சி உதவியாளர் என்ற விதத்தில், பணி நியமனம் செய்யப்பட்ட ஊராட்சி உதவியாளர் பணியின் பெயரினை, ஊராட்சி செயலர் என்று மாற்றம் செய்து அரசு ஆணை வெளியிட்டது. ஆதாரம்::- அரசாணை நிலை எண்:175 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்: 05.12.2006, மற்றும் அரசாணை நிலை எண்: 52 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 29.08.2011.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110 ன் படி கட்டாய கடமைகள்.

 கிராம ஊராட்சியில் புதிய சாலைகள், சாலைகளின் தரம் உயர்த்துதல், பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் அமைத்தல், பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல் மற்றும் கிராமங்களின் தெருக்களுக்கு சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல்.

 குடியிருப்பு பகுதிகளில் பொது சாலைகள் தெருக்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்கள் போன்ற அவசியமான பகுதிகளில், புதிய தெரு விளக்குகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைக்க வகை செய்தல், கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசு அடைவதை தவிர்த்தல், இடுகாடு மற்றும் சுடுகாடு ஆகியவற்றை அமைத்து பராமரித்தல்.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன் படி விருப்பக் கடமைகள்.

 சாலைகளில் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிக்கு அருகிலுள்ள சாலைகளிலும் தெருவிளக்கு அமைத்து பராமரித்தல், புது சந்தைகள் அமைத்து பராமரித்தல், பொது விநியோக கடைகளை பராமரித்தல், உள்ளூர் திருவிழாக்களிலும், சந்தைகளிலும், பொது சுகாதார வசதிகளை கிராம ஊராட்சி நிதி மூலம் மேற்கொள்ளுதல், வண்டி நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம், கால்நடை தொழுவுங்கள் ஆகியவற்றை பராமரித்தல், இறைச்சிக் கூடங்கள் கட்டுதல், பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கும் இடங்களை அமைத்து அவற்றை பராமரித்தல், படிப்பகங்கள் ஏற்படுத்தி பராமரித்தல், வானொலி தொலைக்காட்சி ஆறுகள் விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்கள் அமைத்து அவற்றை பராமரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்து பராமரித்தல் மற்றும் மக்களின் பொது வசதிக்காக சமுதாய கூடங்கள் கட்டுதல்.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 112, 113 & 114 இன் படி ஒப்பளிப்பு பணிகள்.

 தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்”தாய்”, முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், ஊரக கட்டமைப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள், முழு சுகாதார இயக்கம், தூய்மையான கிராம இயக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல். ஆதாரம்: அரசாணை எண்: 886, நாள்: 20.10.1990.

  1. கிராம சபை.

தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 3 ன் கீழ் 6 ன் படி, கிராம ஊராட்சி தலைவர் கிராம சபையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89 ன் கீழ் 1 ன் படி, கூட்டத்திற்கு தலைவர் வருகை தராத போது, சம்பந்தப்பட்ட ஊராட்சியின் துணைத் தலைவர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்த வேண்டும், துணைத் தலைவரும் வருகை தராத போது, அக்கூட்டத்திற்கு வருகின்ற உறுப்பினர்களால், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தலாம்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89 ன் கீழ் 2 ன் படி, கிராம ஊராட்சி கிராம சபை கூட்டத்தின் தலைவர் கூட்டத்தின் ஒழுங்கை பாதுகாத்தல் வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89 ன் கீழ் 3 ன் படி, கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி துணைத்தலைவர், அல்லது கூட்டத்தை நடத்தும் உறுப்பினர் கூட்டத்தின் போது, கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றிருப்பார்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89, 90 & 91 இன் படியும் அரசாணை (நிலை) எண்:167, ஊரக வளர்ச்சி (சி4) துறை நாள்:09.08.1999 இல் கூறப்பட்டுள்ளது விதிகளை கடைப்பிடித்து கிராம ஊராட்சிகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 90 இன் படியும் அரசாணை (நிலை) எண்: 167 இன் படியும் கிராம ஊராட்சியில் இரண்டு கூட்டங்களுக்கு இடையேயான இடைவெளி அறுவது தினங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 கிராம ஊராட்சி கூட்டம் நடைபெறும் நேரம் முழுவதும் குறைந்தது மூன்று உறுப்பினர்களோ அல்லது கிராம ஊராட்சியில் அப்போது உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களோ இவற்றில் எது அதிகமோ அந்த அளவு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் எந்த ஒரு பொருள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க முடியாது.

 கூட்டம் நடத்த குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அரை மணி நேரத்திற்குள் தேவையான உறுப்பினர்கள் வரவில்லை என்றால் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உறுப்பினர்கள் மேலும் காத்திருக்க சம்மதித்தால் அன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும்.

 குறைந்த அளவு உறுப்பினர்கள் வரவில்லை என்று கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால் கிராம ஊராட்சி தலைவர் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தினை கூட்டுவதற்கு புதிய அறிவிப்பினை விதி 4 – ல் கூறப்பட்டுள்ளவாறு அனுப்ப வேண்டும்.

 தலைமை உறுப்பினர் கூட்டம் நடைபெறும் போது பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஒத்தி வைப்பதற்கான காரணங்களை கூட்டம் நடவடிக்கை புத்தகத்தில் எழுத்து மூலம் பதிவு செய்து கூட்டத்தினை ஒத்தி வைக்கலாம்.

 நியாயமான காரணங்கள் இருப்பின் நாள் குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால் கூட்டம் தொடர்ந்து நடைபெற கூடாது.

 கூட்டம் நடைபெறும் போது வருகை தந்துள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் தலைமை வகிக்கும் உறுப்பினர் கூட்டத்தினை ஒத்தி வைத்தால் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேதியில் நடைபெறும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தில் தொடர்ச்சியான கூட்டம் என்பதால் அதற்கு புதிய அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக கூட்டத்தினை தலைவர் ஒத்திவைத்து விவாதிக்க கொண்டிருந்த பொருளை விவாதிக்காமல் சென்றுவிட்டாள் கூட்டத்தில் இருக்கக்கூடிய எஞ்சியுள்ள உறுப்பினர்கள் சட்டப்படி கூட்டத்தை தொடர்ந்து நடத்தலாம். தலைவர் இல்லை எனில் துணைத் தலைவரோ, துணைத்தலைவர் இல்லை எனில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரே அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து கூட்ட நடவடிக்கைகளை தொடரலாம் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆலோசனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்க வேண்டும் இவ்வாறு எடுக்கப்படும் முடிவு சட்டப்படி செல்லக்கூடியதாகும்.

 உறுப்பினர்கள் மற்றும் தலைமை வகிக்கும் உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது அதற்கான வருகை பதிவேற்றில் கையொப்பமிட வேண்டும் கூட்டம் முடிந்தவுடன் தலைமை வகித்த உறுப்பினர் எத்தனை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று வருகை பதிவேட்டில் பதிவு செய்து வருகைப்பதிவேட்டை முடித்து அதன் பின் கடைசியில் கையொப்பமிட வேண்டும்.

 எந்த ஒரு தீர்மானமும் மூன்று மாதங்களுக்கு இடையே மாற்றம் செய்யப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ முடியாது இந்த காலகட்டத்திற்குள் ரத்து செய்ய வேண்டுமெனில் இதற்காக தனியாக கூட்டப்பட்ட ஒரு சிறப்பு கூட்டத்தில் கிராம ஊராட்சியின் அப்போது உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதி நபர்கள் ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் மாற்றம் அல்லது ரத்து செய்யலாம்.

தமிழ்நாடு ஊராட்சி சிக்கல் சட்டம் 1994 பிரிவு 92 இன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் மற்றும் அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடமிருந்து கூட்டம் முடிந்த 48 மணி நேரத்திற்குள்ளாக தரப்பட்ட மறுப்பு குறித்து ஆகியவற்றின் நகல் சம்பந்தப்பட்ட தலைவர்களால் கூட்டம் முடிந்த மூன்று நாட்களுக்குள்ளாக ஆய்வாளருக்கு(மாவட்ட ஆட்சியர்) அனுப்பப்பட வேண்டும்.

 கிராம ஊராட்சியின் கூட்ட நடவடிக்கை ஆவணங்களை தலைவரின் பொறுப்பில் இருக்கும் அதனை நிர்ணயிக்கக்கூடிய கட்டணங்களை செலுத்தினால் மேற்கூறிய நடவடிக்கை மற்றும் ஆவணங்களின் நகல்களை பெறலாம்.

 கிராம ஊராட்சி கூட்டங்களில் தீர்மானம் கொண்டு வருதல் குறித்து அரசாணை (நிலை) எண்: 180, ஊரக வளர்ச்சித் துறை நாள்:30.08.1999 இல் வெளியிடப்பட்டுள்ளது.

 கிராம ஊராட்சி கூட்டங்களில் கிராம ஊராட்சி தலைவரை உறுப்பினர்கள் இடைக்க கேள்வி கேட்பது குறித்து அரசு அரசாணை (நிலை) எண்:33, ஊரக வளர்ச்சித் துறை (சி4) நாள்:15.02.1999 இல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 202 இன் படி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் செயல்படுத்தவும் தொழில்கள் மேற்கொள்ள உரிமங்கள் வழங்கவும் கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கிகாரம் வழங்கும் வகையில் கிராம ஊராட்சியில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கும் அதன் அடிப்படையில் அரசால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்றாலோ அல்லது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்ப்ட்டுள்ளது என்றலோ ஊராட்சிகளின் ஆய்வாளர்(மாவட்ட ஆட்சியர்) அத்தகைய தீர்மானங்களையும் உரிமங்களையும் நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். அவ்வாறு ஆணையிடுவதற்கு முன் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 202 உட்பிரிவு 1 (அ) மற்றும் (ஆ) இன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 90 மற்றும் அரசாணை (நிலை) எண்:167, ஊரக வளர்ச்சித் துறை நாள்:09.08.1999 இன் படி கிராம ஊராட்சிகளில் (அவசர கூட்டம், சிறப்பு கூட்டம், வேண்டுகோள் கூட்டம் மற்றும்சாதாரண கூட்டம்) 4 வகையான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அரசாணை நிலையம் 167 இன் படி கிராம ஊராட்சி தலைவர் சிறப்பு கூட்டம் கூட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 கிராம சபை கூட்ட நாட்கள் குறித்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 (2) மற்றும் அரசாணை(நிலை) எண்:245 ஊரக வளர்ச்சி (சி1) துறை நாள்: 19.11.1998 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சியில் சட்டம் 1994 பிரிவு 3(1) இன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சிகளும், கிராம ஊராட்சி பகுதிகளில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட அனைவரையும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு அமைப்பாக கிராம சபை செயல்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 3 (2) (அ) வின் படி ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தையும் கிராம ஊராட்சி தலைவரால் கூட்டப்பட வேண்டும் கிராம ஊராட்சி தலைவரால் கிராம சபை கூட்டம் கூட்ட தவறினால் ஊராட்சியின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சித் தலைவர்) கிராம சபை கூட்டத்தை கூட்டுவார்.

 கிராம ஊராட்சிகளை கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்து அரசு நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளது. ஆதாரம்: அரசாணை (நிலை) எண்:150, ஊரக வளர்ச்சித் துறை (சி1) நாள்:13.07.1998.

 ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம சபை அந்த கிராம ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட ஏதேனும் ஒரு பொது இடத்தில் கிராம ஊராட்சி தலைவர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் குறிப்பிடும் நாளில் காலை 11 மணிக்கு கூட்டப்பட வேண்டும் ஆதாரம்:அரசாணை (நிலை) எண்: 150 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி4)துறை நாள்:25.09.2006. மாநில அரசு அல்லது மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் இல்லையெனில் விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்தக் கூடாது.

 கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மக்கள் தொகையின் அடிப்படையில் குறைவின்கள் வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: அரசாணை (நிலை) எண்: 130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி4) துறை நாள்:25.09.2006.

 கிராம சபையின் நோக்கம் மற்றும் அரசின் அனைத்து துறை நலத்திட்ட பணிகள் குறித்து விளக்கவும் அக்கூட்டங்களில் அரசு அலுவலர்கள் பற்றாளராக (NODAL OFFICER) கலந்து கொள்ள வேண்டும். ஆதாரம்: அரசாணை (நிலை) எண்: 245, ஊரக வளர்ச்சி (சி1) துறை நாள்: 19.11.1998.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(அ) இல் கிராம சபையின் கடமைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளது.

 கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.

 கிராம ஊராட்சி ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்

 கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையை பரிசீலித்தல்.

 கிராம ஊராட்சி இடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்தல்.

அரசாணை (நிலை) எண்: 152, ஊரக வளர்ச்சி துறை (சி1) நாள்: 20.7.1998 இன் படி பிறக்க கடமைகளையும் கிராம சபைக்கு வழங்க அரசு அதிகாரம் அளித்துள்ளது.

  1. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய துறைகள்.

 வேளாண்மை துறை.

 கால்நடை வளர்ப்புத் துறை.

 மீன் வளர்ப்பு.

 வனம்.

 தொடக்கக்கல்வி.

 பள்ளி சாராக் கல்வி.

 பொதுச் சுகாதாரம், தடுப்பு மருந்துகள்.

 வருவாய்த் துறை.

 குடிநீர் வழங்கல் (குடிநீர் வடிகால் வாரியம்).

 ஆதி திராவிடர் நலத்துறை.

 சமூகநலத்துறை.

 குடும்ப நலம்.

 கூட்டுறவு.

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்,

  1. கூட்டத்தின் நடைமுறைகள்.

அ) ஊராட்சியின் அனைத்து செயல்பாடுகளும் அல்லது ஊராட்சியின் கடமைகளை செயல்படுத்தும் போது கூட்டங்களின் மூலமாகத்தான் மேற்கண்ட பொருட்கள் விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

ஆ) கூட்டங்களை நடத்தவில்லை எனில் ஊராட்சி மன்றங்கள் செயலற்றதாக கருதப்படும்.

இ) அதனால் தலைவர்கள் கூட்டங்களை கூட்ட தவறக்கூடாது.

ஈ) ஊராட்சியின் கூட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் அல்லது இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலம் 60 நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

இப்படிக்கு
கிராம ஊராட்சிகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு அணுகவும் தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453.9751438854 வரப்பட்டது.
இதன் படி ஊராட்சி அமைப்புகளில் பல்வேறு முக்கியமான மாறுதல்கள் கொண்டுவரப்பட்டது.

  1. தமிழ்நாட்டில் மூன்றடுக்கு ஊராட்சி முறை நடைமுறைக்கு வந்தது.
  2. கிராம ஊராட்சியின் தலைவரே அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலராக செயல்படுவார் ஆதாரம்: அரசாணை நிலை எண்: 225 ஊ.வ.துறை நாள்: 15.10.1996.
  3. கிராம ஊராட்சித் தலைவரின் பொறுப்புகள்.

 கிராம ஊராட்சி தலைவர் செயல் அலுவலராக செயல்பட வேண்டும்.

 கிராம சபை கூட்டங்களை வருடத்திற்கு நான்கு முறை கூட்ட வேண்டும் வரவு செலவு குறித்த விவரங்கள் கிராமசபையில் வைக்க வேண்டும்.

 கிராம ஊராட்சியின் கூட்டத்தினை மாதம் ஒரு முறை கூட்ட வேண்டும்.

 கூட்டங்களை தலைமை ஏற்று முழுமையாக நடத்தி தீர்மானங்களை பதிவு செய்ய வேண்டும்.

 புதிதாக பதிவிற்கும் உறுப்பினர்களை உறுதிமொழி எடுக்கச் செய்து தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 கிராம ஊராட்சி கூட்டங்களுக்கான தேதி மற்றும் கூட்டப் பொருட்களை முடிவு செய்து மற்றும் கூட்டத்தில் தீர்மானங்களை பதிவு செய்வது இவர் கடமையாகும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 92 இன் படி தீர்மான நகல் கூட்டம் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் ஊராட்சியின் ஆய்வாளருக்கு(மாவட்ட ஆட்சியர்) அனுப்பப்பட வேண்டும்.

 கிராம ஊராட்சிக்கான வளர்ச்சி திட்டம் தயார் செய்து கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்.

 பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அடுத்த வருட நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் தயார் செய்து பிப்ரவரி மாதத்திற்குள் கிராம சபை மற்றும் கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற வேண்டும்.

 தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தலைவருக்கான நியமிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுதல் மற்றும் அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் ஆணைகளை செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 43 (7) இன் படி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒவ்வொருவருக்குரிய அனைத்து உரிமைகளும் தலைவர் பெற்றிருப்பார்

 நடந்து முடிந்த மாதத்தின் கணக்குகளை படிவம் எண் 30 இல் பதிவு செய்து அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிக்கு அனுப்புதல்.

 கிராம ஊராட்சிக்கான I முதல் VI வரையிலான கணக்குகளை பராமரித்தல்.

  1. ஊராட்சி செயலர்.

 கிராம ஊராட்சிக்கு ஒரு ஊராட்சி உதவியாளர் என்ற விதத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊராட்சி உதவியாளர் பணியின் பெயரினை ஊராட்சி செயலர் என்று மாற்றம் செய்து அரசு ஆணை வெளியிட்டது. ஆதாரம்: அரசாணை நிலை எண்:175 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (இ5) துறை நாள்: 05.12.2006 மற்றும் அரசாணை நிலை எண்:52 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (இ5) துறை நாள் 29.08.2011.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110 இன் படி கட்டாய கடமைகள்.

 கிராம ஊராட்சியில் புதிய சாலைகள், சாலைகளின் தரம் உயர்த்துதல், பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் அமைத்தல், பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல் மற்றும் கிராமங்களின் தெருக்களுக்கு சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல்.

 குடியிருப்பு பகுதிகளில் பொது சாலைகள் தெருக்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்கள் போன்ற அவசியமான பகுதிகளில் புதிய தெரு விளக்குகள் அமைத்தல், தெருவிளக்குகள் பராமரித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைக்க வகை செய்தல், கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசு அடைவதை தவிர்த்தல், இடுகாடு மற்றும் சுடுகாடு ஆகியவற்றை அமைத்து பராமரித்தல்.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 இன் படி விருப்பக் கடமைகள்.

 சாலைகளில் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிக்கு அருகிலுள்ள சாலைகளிலும் தெருவிளக்கு அமைத்து பராமரித்தல், புது சந்தைகள் அமைத்து பராமரித்தல், பொது விநியோக கடைகளை பராமரித்தல், உள்ளூர் திருவிழாக்களிலும் சந்தைகளிலும் பொது சுகாதார வசதிகளை கிராம ஊராட்சி நிதி மூலம் மேற்கொள்ளுதல், வண்டி நிறுத்துமிடம் பேருந்து நிறுத்துமிடம் கால்நடை தொழுவுங்கள் ஆகியவற்றை பராமரித்தல், இறைச்சிக் கூடங்கள் கட்டுதல், பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கும் இடங்களை அமைத்து அவற்றை பராமரித்தல், படிப்பகங்கள் ஏற்படுத்தி பராமரித்தல், வானொலி தொலைக்காட்சி ஆறுகள் விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்கள் அமைத்து அவற்றை பராமரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்து பராமரித்தல் மற்றும் மக்களின் பொது வசதிக்காக சமுதாய கூடங்கள் கட்டுதல்.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 112, 113 & 114 இன் படி ஒப்பளிப்பு பணிகள்.

 தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்”தாய்”, முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், ஊரக கட்டமைப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள், முழு சுகாதார இயக்கம் தூய்மையான கிராம இயக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல். ஆதாரம்: அரசாணை எண்: 886, நாள்: 20.10.1990.

  1. கிராம சபை.

தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 3 இல் (6) இன் படி கிராம ஊராட்சி தலைவர் கிராம சபையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89 (1) இன் படி கூட்டத்திற்கு தலைவர் வருகை தராத போது சம்பந்தப்பட்ட ஊராட்சியின் துணைத் தலைவர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்த வேண்டும், துணைத் தலைவரும் வருகை தராத போது அக்கூட்டத்திற்கு வருகின்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தலாம்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89 (2) இன் படி கிராம ஊராட்சி (கிராம சபை) கூட்டத்தின் தலைவர் கூட்டத்தின் ஒழுங்கை பாதுகாத்தல் வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89 (3) படி கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் அல்லது கூட்டத்தை நடத்தும் உறுப்பினர் கூட்டத்தின் போது கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றிருப்பார்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 89, 90 & 91 இன் படியும் அரசாணை (நிலை) எண்:167, ஊரக வளர்ச்சி (சி4) துறை நாள்:09.08.1999 இல் கூறப்பட்டுள்ளது விதிகளை கடைப்பிடித்து கிராம ஊராட்சிகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 90 இன் படியும் அரசாணை (நிலை) எண்: 167 இன் படியும் கிராம ஊராட்சியில் இரண்டு கூட்டங்களுக்கு இடையேயான இடைவெளி அறுவது தினங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 கிராம ஊராட்சி கூட்டம் நடைபெறும் நேரம் முழுவதும் குறைந்தது மூன்று உறுப்பினர்களோ அல்லது கிராம ஊராட்சியில் அப்போது உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களோ இவற்றில் எது அதிகமோ அந்த அளவு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் எந்த ஒரு பொருள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்க முடியாது.

 கூட்டம் நடத்த குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அரை மணி நேரத்திற்குள் தேவையான உறுப்பினர்கள் வரவில்லை என்றால் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உறுப்பினர்கள் மேலும் காத்திருக்க சம்மதித்தால் அன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும்.

 குறைந்த அளவு உறுப்பினர்கள் வரவில்லை என்று கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால் கிராம ஊராட்சி தலைவர் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தினை கூட்டுவதற்கு புதிய அறிவிப்பினை விதி 4 – ல் கூறப்பட்டுள்ளவாறு அனுப்ப வேண்டும்.

 தலைமை உறுப்பினர் கூட்டம் நடைபெறும் போது பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஒத்தி வைப்பதற்கான காரணங்களை கூட்டம் நடவடிக்கை புத்தகத்தில் எழுத்து மூலம் பதிவு செய்து கூட்டத்தினை ஒத்தி வைக்கலாம்.

 நியாயமான காரணங்கள் இருப்பின் நாள் குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால் கூட்டம் தொடர்ந்து நடைபெற கூடாது.

 கூட்டம் நடைபெறும் போது வருகை தந்துள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் தலைமை வகிக்கும் உறுப்பினர் கூட்டத்தினை ஒத்தி வைத்தால் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேதியில் நடைபெறும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தில் தொடர்ச்சியான கூட்டம் என்பதால் அதற்கு புதிய அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக கூட்டத்தினை தலைவர் ஒத்திவைத்து விவாதிக்க கொண்டிருந்த பொருளை விவாதிக்காமல் சென்றுவிட்டாள் கூட்டத்தில் இருக்கக்கூடிய எஞ்சியுள்ள உறுப்பினர்கள் சட்டப்படி கூட்டத்தை தொடர்ந்து நடத்தலாம். தலைவர் இல்லை எனில் துணைத் தலைவரோ, துணைத்தலைவர் இல்லை எனில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரே அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து கூட்ட நடவடிக்கைகளை தொடரலாம் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆலோசனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்க வேண்டும் இவ்வாறு எடுக்கப்படும் முடிவு சட்டப்படி செல்லக்கூடியதாகும்.

 உறுப்பினர்கள் மற்றும் தலைமை வகிக்கும் உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது அதற்கான வருகை பதிவேற்றில் கையொப்பமிட வேண்டும் கூட்டம் முடிந்தவுடன் தலைமை வகித்த உறுப்பினர் எத்தனை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று வருகை பதிவேட்டில் பதிவு செய்து வருகைப்பதிவேட்டை முடித்து அதன் பின் கடைசியில் கையொப்பமிட வேண்டும்.

 எந்த ஒரு தீர்மானமும் மூன்று மாதங்களுக்கு இடையே மாற்றம் செய்யப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ முடியாது இந்த காலகட்டத்திற்குள் ரத்து செய்ய வேண்டுமெனில் இதற்காக தனியாக கூட்டப்பட்ட ஒரு சிறப்பு கூட்டத்தில் கிராம ஊராட்சியின் அப்போது உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதி நபர்கள் ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் மாற்றம் அல்லது ரத்து செய்யலாம்.

தமிழ்நாடு ஊராட்சி சிக்கல் சட்டம் 1994 பிரிவு 92 இன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் மற்றும் அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடமிருந்து கூட்டம் முடிந்த 48 மணி நேரத்திற்குள்ளாக தரப்பட்ட மறுப்பு குறித்து ஆகியவற்றின் நகல் சம்பந்தப்பட்ட தலைவர்களால் கூட்டம் முடிந்த மூன்று நாட்களுக்குள்ளாக ஆய்வாளருக்கு(மாவட்ட ஆட்சியர்) அனுப்பப்பட வேண்டும்.

 கிராம ஊராட்சியின் கூட்ட நடவடிக்கை ஆவணங்களை தலைவரின் பொறுப்பில் இருக்கும் அதனை நிர்ணயிக்கக்கூடிய கட்டணங்களை செலுத்தினால் மேற்கூறிய நடவடிக்கை மற்றும் ஆவணங்களின் நகல்களை பெறலாம்.

 கிராம ஊராட்சி கூட்டங்களில் தீர்மானம் கொண்டு வருதல் குறித்து அரசாணை (நிலை) எண்: 180, ஊரக வளர்ச்சித் துறை நாள்:30.08.1999 இல் வெளியிடப்பட்டுள்ளது.

 கிராம ஊராட்சி கூட்டங்களில் கிராம ஊராட்சி தலைவரை உறுப்பினர்கள் இடைக்க கேள்வி கேட்பது குறித்து அரசு அரசாணை (நிலை) எண்:33, ஊரக வளர்ச்சித் துறை (சி4) நாள்:15.02.1999 இல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 202 இன் படி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் செயல்படுத்தவும் தொழில்கள் மேற்கொள்ள உரிமங்கள் வழங்கவும் கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கிகாரம் வழங்கும் வகையில் கிராம ஊராட்சியில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கும் அதன் அடிப்படையில் அரசால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்றாலோ அல்லது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்ப்ட்டுள்ளது என்றலோ ஊராட்சிகளின் ஆய்வாளர்(மாவட்ட ஆட்சியர்) அத்தகைய தீர்மானங்களையும் உரிமங்களையும் நிறுத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். அவ்வாறு ஆணையிடுவதற்கு முன் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 202 உட்பிரிவு 1 (அ) மற்றும் (ஆ) இன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 90 மற்றும் அரசாணை (நிலை) எண்:167, ஊரக வளர்ச்சித் துறை நாள்:09.08.1999 இன் படி கிராம ஊராட்சிகளில் (அவசர கூட்டம், சிறப்பு கூட்டம், வேண்டுகோள் கூட்டம் மற்றும்சாதாரண கூட்டம்) 4 வகையான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அரசாணை நிலையம் 167 இன் படி கிராம ஊராட்சி தலைவர் சிறப்பு கூட்டம் கூட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 கிராம சபை கூட்ட நாட்கள் குறித்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 (2) மற்றும் அரசாணை(நிலை) எண்:245 ஊரக வளர்ச்சி (சி1) துறை நாள்: 19.11.1998 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சியில் சட்டம் 1994 பிரிவு 3(1) இன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சிகளும், கிராம ஊராட்சி பகுதிகளில் வாக்காளராக பதிவு செய்யப்பட்ட அனைவரையும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு அமைப்பாக கிராம சபை செயல்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 3 (2) (அ) வின் படி ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தையும் கிராம ஊராட்சி தலைவரால் கூட்டப்பட வேண்டும் கிராம ஊராட்சி தலைவரால் கிராம சபை கூட்டம் கூட்ட தவறினால் ஊராட்சியின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சித் தலைவர்) கிராம சபை கூட்டத்தை கூட்டுவார்.

 கிராம ஊராட்சிகளை கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்து அரசு நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளது. ஆதாரம்: அரசாணை (நிலை) எண்:150, ஊரக வளர்ச்சித் துறை (சி1) நாள்:13.07.1998.

 ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம சபை அந்த கிராம ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட ஏதேனும் ஒரு பொது இடத்தில் கிராம ஊராட்சி தலைவர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் குறிப்பிடும் நாளில் காலை 11 மணிக்கு கூட்டப்பட வேண்டும் ஆதாரம்:அரசாணை (நிலை) எண்: 150 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி4)துறை நாள்:25.09.2006. மாநில அரசு அல்லது மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் இல்லையெனில் விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்தக் கூடாது.

 கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மக்கள் தொகையின் அடிப்படையில் குறைவின்கள் வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: அரசாணை (நிலை) எண்: 130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி4) துறை நாள்:25.09.2006.

 கிராம சபையின் நோக்கம் மற்றும் அரசின் அனைத்து துறை நலத்திட்ட பணிகள் குறித்து விளக்கவும் அக்கூட்டங்களில் அரசு அலுவலர்கள் பற்றாளராக (NODAL OFFICER) கலந்து கொள்ள வேண்டும். ஆதாரம்: அரசாணை (நிலை) எண்: 245, ஊரக வளர்ச்சி (சி1) துறை நாள்: 19.11.1998.

  1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(அ) இல் கிராம சபையின் கடமைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளது.

 கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.

 கிராம ஊராட்சி ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்

 கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையை பரிசீலித்தல்.

 கிராம ஊராட்சி இடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்தல்.

அரசாணை (நிலை) எண்: 152, ஊரக வளர்ச்சி துறை (சி1) நாள்: 20.7.1998 இன் படி பிறக்க கடமைகளையும் கிராம சபைக்கு வழங்க அரசு அதிகாரம் அளித்துள்ளது.

  1. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய துறைகள்.

 வேளாண்மை துறை.

 கால்நடை வளர்ப்புத் துறை.

 மீன் வளர்ப்பு.

 வனம்.

 தொடக்கக்கல்வி.

 பள்ளி சாராக் கல்வி.

 பொதுச் சுகாதாரம், தடுப்பு மருந்துகள்.

 வருவாய்த் துறை.

 குடிநீர் வழங்கல் (குடிநீர் வடிகால் வாரியம்).

 ஆதி திராவிடர் நலத்துறை.

 சமூகநலத்துறை.

 குடும்ப நலம்.

 கூட்டுறவு.

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்,

  1. கூட்டத்தின் நடைமுறைகள்.

அ) ஊராட்சியின் அனைத்து செயல்பாடுகளும் அல்லது ஊராட்சியின் கடமைகளை செயல்படுத்தும் போது கூட்டங்களின் மூலமாகத்தான் மேற்கண்ட பொருட்கள் விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

ஆ) கூட்டங்களை நடத்தவில்லை எனில் ஊராட்சி மன்றங்கள் செயலற்றதாக கருதப்படும்.

இ) அதனால் தலைவர்கள் கூட்டங்களை கூட்ட தவறக்கூடாது.

ஈ) ஊராட்சியின் கூட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் அல்லது இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலம் 60 நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதித்துறை / நீதிமன்ற – நடைமுறைகள் மற்றும் அவை சார்ந்த ஆவணங்கள் யாவும் பொது அவணங்களாகும், RTI மத்திய தகவல் ஆணையம்நீதித்துறை / நீதிமன்ற – நடைமுறைகள் மற்றும் அவை சார்ந்த ஆவணங்கள் யாவும் பொது அவணங்களாகும், RTI மத்திய தகவல் ஆணையம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 நீதித்துறை / நீதிமன்ற – நடைமுறைகள் மற்றும் அவை சார்ந்த ஆவணங்கள் யாவும் பொது அவணங்களாகும்,அவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்

Civil cases are not allowed inquiry of Police | சிவில் வழக்குகளில் காவல் துறை விசாரித்தால், காவல் நிலைய ஆணை PSO 562 படி நடவடிக்கை எடுக்கலாம்.Civil cases are not allowed inquiry of Police | சிவில் வழக்குகளில் காவல் துறை விசாரித்தால், காவல் நிலைய ஆணை PSO 562 படி நடவடிக்கை எடுக்கலாம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.