.ஒரு #அரசு_ஊழியர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி #இலஞ்சம் வாங்கினால் அவர்மீது தனிநபர் புகார் தாக்கல் செய்ய கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமா?
பொதுநல வழக்கு தொடர்புவர்களுக்கு ஏற்ற ஒரு தீர்ப்பு
அரசிடமிருந்து முன் அனுமதி பெற்றுத்தான் ஒரு அரசு ஊழியர் மீது மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக தாக்கல் செய்ய முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் “#இராஜேஸ்குமார் #மிஸ்ரா #Vs #பீகார் #மாநில #அரசு என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம்” பிரகாஷ் பாதல் பஞ்சாப் மாநில அரசு (என்ற வழக்கில் மேற்படி உச்சநீதிமன்ற வழக்கையும் சுட்டிக்காட்டி தீர்ப்பு பத்தி 49 ல் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.
” இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 467,468,471 மற்றும் 120(B) ஆகிய குற்றங்களை ஒரு பொது ஊழியர் தன்னுடைய அரசு கடமையை செய்யும் பொழுது தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்ய முடியும். இது போன்ற குற்றங்களுக்கு அரசிடமிருந்து கு. வி. மு. ச பிரிவு 197 ன் கீழ் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை “
மேற்கண்ட தீர்ப்பின்படி ஒரு பொது ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகார்களுக்கு அரசிடமிருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
(இது போன்ற பல சட்ட செய்திகள் service-public.in என்ற இணையத்தில் காணலாம்)
.
” “