GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வீணாண முத்திரைதாளை அரசிடம் கொடுத்து திரும்ப பணம்பெறுவது எப்படி?

வீணாண முத்திரைதாளை அரசிடம் கொடுத்து திரும்ப பணம்பெறுவது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

வீணாண முத்திரைதாளை அரசிடம் கொடுத்து திரும்ப பணம்பெறுவது எப்படி?

1) ஒரு சொத்து வாங்குவதற்காக கிரய பத்திரம் உருவாக்க முத்திரை தாள் சில இலட்சங்களுக்கோ சில ஆயிரங்களுக்கோ வாங்கிவிட்டீர்கள்.முத்திரைதாளில் கிரய ஷரத்துகள் எல்லாம் அடித்து வைத்துவிட்டீர்கள் ஆனால் கிரயம் நடக்கவில்லை நின்று போய்விட்டது .அடித்து வைத்த பத்திரம் வீணாகிவிட்டது.

2) இருபதாயிரம் ரூபாய்கு முத்திரைதாள் வாங்கி பத்திரம் உருவாக்கும் அன்று தேங்காய் எண்ணெய் பாட்டில் உடைந்து முத்திரைதாள் முழுதும் தேங்காய் எண்ணெய் அபிஷேகம் நடந்து முத்திரைதாள் வீணாகிவிட்டது.

3) 17 ஆயிரம் ரூபாய்கான பத்திர ஆபிஸ்கிற்கு டைப்பிங் அடித்து வைத்த முத்தரை தாளை வீட்டம்மாவுடன் சண்டை போட்டு துண்டு துண்டாக கிழித்துவிட்டார்.இன்னொரு அம்மா சங்கீதா ஓட்டல் சாம்பார் வடை பார்சல் டப்பாவுடன் 6ஆயிரம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரை வீணாக்கவிட்டார்.

4) இப்படி முத்திரை தாள்கள் எழுதியோ எழுதபடாமலோ இருந்து பதியமுடியாமல் அல்லது மேற்சொன்ன சம்பவங்கள்படி வீணாகிவிடும்.அப்பொழுது பணம் வீணாக போய்விட்டதே என்று அழுவார்கள்.

5) பத்திரம் வாங்கிய ஆறு மாத்த்திற்குள் சென்றால் கழிவு போக அரசிடம்பணத்தை திருப்பி வாங்கலாம்.அதன் வழிமுறைகள் பின்வருமாறு:

6) எப்பொழுது முத்திரைதாள் வாங்கினாலும் முடிந்தவரை அரசு கருவூலத்தில் வாங்க பாருங்கள்.முத்திரைதாள் விற்பனையாளரிடம் வாங்கினால் எந்த மாவட்டத்தில் பதிவு செய்கிறீர்களோ அந்த மாவட்டதிலேயே இருக்கும் அல்லது எந்த சார்பதிவகமோ அந்த சார்பதிவக முத்திரைதாள் விற்பனையாளரிடம் வாங்கினால் முத்திரைதாள் வீணாகிவிட்டால் திருப்புதொகை பெற ஏதுவாக இருக்கும்.

7) வீணாகி போன முத்திரை தாளை அனைத்தையும் ஒரு மனுவுடன் இணைத்து நீங்கள் எந்த முகவரியில் வசிக்கிறீர்களோ அந்த ஆட்சி எல்லைக்குட்பட்ட வட்டாட்சியருக்கு மனு செய்ய வேண்டும்.

8) மேற்படி மனுவை பரிசீலித்து வட்டாட்சியர் பதிவுதுறையின் மாவட்ட பதிவாளருக்கு முத்திரைதாள் எண்கள் மற்றும் அதன் வாங்கிய விவரங்களை கொடுத்து அதன் மெய்தன்மையை அறிந்து கொள்ள சான்றகேட்டு கடிதம் அனுப்புவார்கள்.

9) கடித்ததின் நகல் நமக்கும் நம் பகுதியின் வருவாய் ஆய்வாளருக்கும் கிடைக்கும் வருவாய் ஆய்வாளரும் நம்மை விசாரித்து வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்பிப்பார்.அதே நேரத்தில் மாவட்ட பதிவாளரும் சம்மந்தபட்ட முத்திரை தாள் விற்பனையாளரிடம் அறிக்கை பெற்று மேற்படி முத்திரதாள்கள் மெய்தன்மை உடையதா என்று சான்று அளித்து வட்டாட்சியருக்கு அனுப்புவார்.

10) மேற்படி வேலைகள் தானாக நடக்காது நாம்தான் மாவட்ட பதிவுதுறைக்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கும் நடந்து பைல்களை நகர்த்த வேண்டும்.

11) அனைத்து வேலைகளும் முடிந்த உடன் நம்முடைய பைல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு கிளர்க்கிடம் வந்து விடும் தொடர்பின் தொடரலைக்கு பிறகு கழிவு போக மீதி தொகையை காசோலையாக உங்களிடம் வட்டாட்சியர் வழங்கிவிடுவார்.

12) முடிந்தவரை முத்திரைதாளை வீணடிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது. அதிக கவனத்துடன் சமயோசித புத்தியுடன் பத்திரபதிவு நேரங்களில் இருத்தல் வேண்டும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.Police should not call anyone orally to enquiry | காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை

ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை!ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 25 காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கைகுற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41ல், பிடியாணை இல்லாமல்,

RTI | Private hospitals also liable. தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.RTI | Private hospitals also liable. தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 தனியார் மருத்துவமனைகளில் தகவல் பெறலாம் என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு..!! தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)