GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சட்டம் ஒரு பார்வை

குண்டர் சட்டம் என்றால் என்ன? மற்றும் குண்டர் சட்டத்திற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

குண்டர் சட்டம் என்றால் என்ன?

குண்டர் சட்ட கைதுகள் தொடரும் இந்த நேரத்தில் இதை பற்றி சற்று தெரிந்து கொள்வோம். குண்டர்கள் என அழைக்கப்படுபவர்கள் குற்ற செயலில் ஈடுபட கூடிய சமூக விரோதிகளை இவர்களை Goondas Act, 1923 என்ற சட்டத்தின் மூலம் அடக்குவதே அரசின் நோக்கம் அதற்காக தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

Goondas Act, 1923.தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள்வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டது தான் இந்த குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்.

தமிழகத்தில் நிகழும் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் கைது நடவடிக்கை

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை.

இதனால் கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு ஒன்று உள்ளது அந்த விசாரணை குழுவிடம் மட்டுமே அணுக முடியும்.

குண்டர் சட்டம் கைதுக்கு எதிரான முறையீடு எப்படி செய்வது

குற்றவாளிகள் கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

அடிதடி ஆசாமிகள் தவிர பிற குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்களா?

திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவை 2004ம் ஆண்டும், மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவை 2006ம் ஆண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்த மாதிரி குற்றம் செய்பவரும் குண்டர் சட்டத்தால் தண்டிக்கபடுவர்.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட இரண்டு திருத்தங்களில் தொடர் குற்றவாளி என்ற வரையறை நீக்கப்பட்டதுடன், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்யும் வாய்ப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது.

காவல்நிலைய வழக்குகளை சமரசம் செய்து கொள்ள முடியுமா

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிற அனைத்து புகார்களுக்கும் தண்டனை வழங்கி விட வேண்டும் என்று கட்டாயம் இல்லை, நீதிமன்றத்தின் அனுமதியோடு காவல்நிலையத்தில் போடப்படும் வழக்குகளில் சில வழக்குகளில் புகார் கொடுத்தவருக்கும் குற்றவாளிக்கும் இடையே சமரசம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.

இது குறிப்பிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும்

காவல் நிலைய வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற பிரிவுகள் யாவை?

நீதிமன்றத்தின் அனுமதியோடு காவல்நிலையத்தில் போடப்படும் வழக்குகளில் சிலவற்றை சமரசம் செய்துகொள்ள முடியும் அந்த மாதிரியான இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code) பிரிவுகள்

298, 323, 334, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506, 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் நீதிமன்ற அனுமதியோடு சமரசம் செய்துகொள்ள முடியும்.

பாதிக்கப்பட்டவரும் (victim) எதிரிகளும் (Accused) உள்ளூர் பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாமென குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தலே போதுமானதாகும்.

மனு, குற்ற விசாரணை முறை சட்டம், பிரிவு 320(1) –ன் கீழ் தாக்கல் செய்தல் வேண்டும். மனுவில் பாதிக்கப்பட்டவரும் (victim) எதிரிகளும் (Accused) கையொப்பமிடுதல் வேண்டும்.

சமரசத்தின் பொருட்டு மனு தாக்கல் செய்த பின்னர், நீதித்துறை நடுவர் (judicial Magistrate) பாதிக்கப்பட்டவரை விசாரித்து, அவர் வழக்கில் சமரசம் செய்து கொண்டதை சாட்சியமாக அளித்த பின்னர் எதிரிகளை விடுதலை செய்வார்.

பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராகவோ பிறவி மந்தராகவோ, (Idiot) பித்தராகவோ இருந்திடும்போது வழக்கொன்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது. அவர் பொருட்டு அவரது தாய் அல்லது தந்தை அல்லது காப்பாளர் (Guaridan) சமரசம் செய்து கொள்வார்.

குடமொன்றை சட்டப்படி சமரசமாக தீர்த்து கொள்ள மற்றைய வகையில் தகுதி வாய்ந்த நபர் ஒருவர் இறந்திருக்கும்போது, அவரின் பொருட்டு, உரிமையியல் விசாரணை முறை சட்டம் (Civil Procedure Code, 1908) கூறும் வரையறைகளின் படியுள்ள நபர்கள் சம்பவம் தொடர்பாக வழக்கில் சமரசம் செய்து கொள்ளலாம்.

குற்ற விசாரணை முறை சட்டம், பிரிவு 320(1) மற்றும் (2) ல் குறிப்பிட்டுள்ள குற்றங்களை தவிர மற்றைய குற்றங்களில் சமரசம் செய்து கொள்ளுதல் முடியாது. அது போன்ற குற்றங்களில் சாட்சிகளை பிறழ் சாட்சியாக (Hostile witness) ஆக்கியே விடுதல் பெறுதல் முடியும். தேவைப்படின், உயர்நீதிமன்றத்தில் (High Court) அனுமதி பெற்று சமரசம் செய்து கொள்ளலாம்.

சமரசம் செய்யக்கூடிய குற்றங்களின் தன்மைகள் என்ன

பிரிவு 298 : எவரது சமய உணர்வையேனும் வேண்டுமென்றே புண்படுத்தும் உட்கருத்தோடு சொற்களை சொல்லுதல் முதலியன.

பிரிவு 323,334 : காயம் விளைவித்தல்

பிரிவுகள் 352, 355, 358 : தாக்குதல் அல்லது வன்முறை தாக்குதல் குற்றம்

பிரிவுகள் 426, 427 : சொத்தழிப்பு, தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும்போது மட்டும்

பிரிவு 447 : அத்துமீறல் குற்றம்

பிரிவு 448 : வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்

பிரிவு 491 : ஊழிய ஒப்பந்த மீறுதல் குற்றம்

பிரிவு 497 : முறை பிறழ்ந்த புணர்ச்சி

பிரிவு 498 : திருமணமான பெண்ணை கடத்துதல்

பிரிவு 500: அவதூறு

பிரிவு 5௦1 : செய்தி ஒன்றை அவதூறானது என்று தெரிந்தே அச்சிடுதல் அல்லது செதுக்குதல்

பிரிவு 5௦2 : அவதூறான செய்திகள் அடங்கிய நூல்களை அல்லது பொருள்களை விற்பனை செய்தல்

பிரிவு 504 : அமைதி குலைவை தூண்ட கருதி அவமதிப்பு செய்தல்

பிரிவு 506 : மிரட்டல் குற்றம்; எழாண்டிற்கு உட்பட்டது.

பிரிவு 508 : ஒருவரை அவர் தெய்வத்தின் சினத்திற்கு ஆளாவார் என்பதாக நம்புமாறு செய்வதன் மூலம் விளைவித்த செய்கை இது போன்ற வழக்குகளில் சுலபமாக தீர்த்து வைக்க முடியும்.

தகவல்

என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்

உங்கள்

சா. உமா சங்கர், M.Com., M.B.A.,M.Phil,LLM.
சட்ட ஆலோசகர்
8778710779

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RBI Logo

As per RBI Rule, no lunch interval to banks, வங்கிகளுக்கு RBI விதிப்படி உணவு இடைவேளை கிடையாது.As per RBI Rule, no lunch interval to banks, வங்கிகளுக்கு RBI விதிப்படி உணவு இடைவேளை கிடையாது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு RBI விதி படி உணவு இடைவேளை என்பது கிடையாது.காசாளரோ அல்லது ஊழியர்களோ மதிய உணவருந்த செல்லும் பொழுது

RTI Case | The public information officer is ordered to provide Rs 1,000 as compensation to the complainer | பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்கிய வழக்கு.RTI Case | The public information officer is ordered to provide Rs 1,000 as compensation to the complainer | பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்கிய வழக்கு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

RTI short points | தகவல் பெறும் உரிமை சட்டக் குறிப்புகள்.RTI short points | தகவல் பெறும் உரிமை சட்டக் குறிப்புகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.