GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)

ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

ஆவண எழுத்தர் பற்றிய முக்கிய தகவல்…! (Important info about legal documents writer)

நாம் பதிவாளர் அல்லது சார் பதிவாளர் (பத்திரபதிவு) அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அந்த அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தர்கள் (டாக்குமென்ட் ரைட்டர்) என்று பெயர் போட்டு கிரையம் பத்திரம், விடுதலை பத்திரம், தான பத்திரம் தான செட்டில்மென்ட் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் என்று பாத்திரங்கள் பெயர் எல்லாம் வரிசையாக போட்டு பத்திரங்கள் எழுதி அல்லது அடித்து தரப்படும் அல்லது தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இப்படி ஆவணம் எழுதி தருபவர்களுக்கு பதிவுத்துறை உரிமம் அதாவது லைசென்ஸ் கொடுக்கிறது. அந்த லைசென்ஸ் பெற்றவர்கள்தான் ஆவண எழுத்தர்களாக ஆகமுடியும்.

ஆவண எழுத்தர்களுக்கு மூன்று வகையாக உரிமங்கள் வழங்கப்படுகிறது.

  1. மாநில உரிமம் :- (A – Licence)

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட பதிவகத்திலும் அல்லது அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இந்த உரிமம் பெற்றவர்கள் எழுதும் ஆவணங்கள் பதிவுக்கு அனுமதிக்கப்படும்.

  1. மாவட்ட உரிமம் :- (B – License)

எந்த பதிவு மாவட்டத்தில் உரிமம் பெறுகிறாரோ அந்த பதிவு மாவட்டம் முழுவதிலும் இந்த உரிமம் பெற்றவர் எழுதும் ஆவணங்கள் பதிவுக்கு அனுமதிக்கப்படும்.

  1. சார்பதிவக உரிமம் :- (C – Licence)

எந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உரிமம் பெறுகிறாரோ அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் இந்த உரிமம் பெற்றவர் எழுதும் ஆவணங்கள் பதிவுக்கு அனுமதிக்கப்படும்.

இந்த உரிம்ம் பெற கல்வி தகுதி: அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகத்திலுருந்து ஒரு பட்டம், கீழ்நிலை அல்லது உயர்நிலை தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சியும், கணிணி பயன்பாட்டில் (Diploma in computer application) டிப்ளமோவும் தேவைபடுகிறது.

சரி ஒரு ஆவண எழுத்தருக்கு கட்டாயம் என்னென்ன தெரிந்து இருக்க வேண்டும்…?

பதிவு சட்டம் 1908 முழுமையாக தெரிந்து இருத்தல் வேண்டும். முத்திரைதாள் சட்டம் 1899 ம் அதன் கீழ் இயற்றபட்ட விதிகள் தெரிந்து இருக்க வேண்டும்.

சொத்துமாற்று சட்டம் 1882 அதனுடைய மத்திய சட்டமான 4/1882 சட்டமும் நிலசீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961அதனுடைய தமிழ்நாட்டு சட்டம் 58/1961) தமிழ்நாடு நகர்புற நில உச்சவரம்பு சட்டம்1978 அதனுடைய தமிழ்நாட்டு சட்டம் 24/1978 போன்ற சட்டங்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆவண எழுத்தர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல. அரசின் பதிவுதுறையின் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் மட்டுமே உரிமம் வழங்கும் பதிவுத்துறை தலைவர் அல்லது அவர் நியமிக்கும் அதிகாரிகள் வைக்கின்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே ஆவண எழுத்தர்களாக அங்கீகரிக்கப் படுகின்றனர்.

யாரெல்லாம் ஆவணங்கள் எழுத உரிமம் பெற தேவையில்லை :-

  1. ஆவணத்தை எழுதி கொடுப்பவரால் எழுதப்படும் ஆவணங்கள்.
  2. Official Assignee or Official Receiver
  3. மத்திய மற்றும் மாநில அரசுகளினால் எழுதி கொடுக்கப்படும் ஆவணங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகள், வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியோர்களால் எழுதி கொடுக்கப்படும் ஆவணங்கள்
  4. வழக்கறிஞர்கள்.

உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:-

  1. ஆவண எழுத்தருக்கான பதிவேடு, ரசீது புத்தகம் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.
  2. பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் பதிவு அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட எவருக்காகவும் எவ்வித தொகையை கேட்பதோ அல்லது பெறுவதோ கூடாது. பதிவு அலுவலகத்துக்கு சம்மந்தப்பட்ட எந்தப் பணியாளர்களுடனும் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது.
  3. கணக்குகளை அன்றாடம் முறையாக எழுதி வர வேண்டும். பொதுமக்களிடத்தில் வாங்கும் பணத்திற்கு உண்மையான மற்றும் சரியான கணக்கு எழுத வேண்டும். இந்த பதிவேடுகளை துறை அதிகாரிகள் கோரும் போது ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
  4. ஆவணங்கள் அழகாகவும், தவறின்றியும், புரியாத வார்த்தைகளை பயன்படுத்தாமலும் எழுத வேண்டும். ஆவணங்கள் எழுதுவது குறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் ஆணைகளை பின்பற்ற வேண்டும்.
  5. கைமாறு தொகையை குறைக்காமலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தாமலும் ஆவணம் எழுத வேண்டும்.
  6. இடைத்தரகராக செயல்படக்கூடாது.
  7. ஆவணப் பதிவின்போது இன்னாரென்று நிரூபிக்கும் சாட்சியாக செயல்படக்கூடாது.
  8. சான்றிட்ட நகல் அல்லது வில்லங்க சான்று கோரி மனுதாக்கல் செய்யக்கூடாது.
  9. ஆவணத்தையோ, வில்லங்க சான்றிதழையோ அல்லது சான்றிட்ட நகலையோ பதிவு அலுவலகத்திலிருந்து திரும்ப பெற்று செல்லக்கூடாது.
  10. ஆவணம் எழுத அலுவலக வராண்டாவையோ அல்லது பொதுமக்கள் அமரும் இடத்தையோ பயன்படுத்தக்கூடாது.
  11. பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் எவருடனும் எந்தவித உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது.
  12. ஆவணத்தில் தேதி, கைமாறு தொகை, சர்வே எண், விஸ்தீரணம், பாதிக்கப்பட்ட விஸ்தீரணம் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றை எண்ணாலும், எழுத்தாலும் எழுத வேண்டும்.
  13. பதிவு அலுவலர் அழைத்தாலன்றி அலுவலகத்திற்குள் செல்லக்கூடாது.
  14. ஆவண எழுத்தர்கள் கட்சிக்காரர்களிடம் சொத்து மற்றும் ஆவண விபரங்களை கோரிப் பெற்று கட்டிடங்களை நேரில் சென்று அளந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்படாத வகையில் ஆவணங்களை எழுத வேண்டும். ( பதிவுத்துறை தலைவர் கடித எண் – 51164/15/94, தேதி – 21.12.1994)
  15. ஆவண எழுத்தர் உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
  16. கிரையம், பரிவர்த்தனை, செட்டில்மெண்ட் மற்றும் தான பத்திரங்களின் மதிப்பு ரூ. 10000/- வரை இருப்பின் கட்டணமாக ரூ. 25 பெற்றுக் கொள்ள வேண்டும்.

ரூ. 10000/- க்கு மேல் ரூ. 50000/- வரையிலான ஆவணங்களுக்கு ரூ. 50

ரூ. 50000/- க்கு மேல் ரூ. 100000/- வரையிலான ஆவணங்களுக்கு ரூ. 75

ரூ. 100000/- க்கு மேல் ரூ. 2 லட்சம் வரையிலான ஆவணங்களுக்கு ரூ. 100

ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான ஆவணங்களுக்கு ரூ. 150

ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 200 கட்டணமாக வசூலித்துக் கொள்ள வேண்டும். வாங்கும் கட்டணத்திற்கு ரசீது வழங்க வேண்டும். அதில் க
ட்சிக்காரரின் கையொப்பம் பெற வேண்டும்.

ஆவண வைப்பு ஆவணம், குத்தகை ஆவணம், அடமான ஆவணம், விடுதலை ஆவணம், கூட்டு வணிக ஆவணம், ட்ரஸ்ட் ஆவணம் ஆகியவைக்கு கட்டணமாக ரூ. 50 பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒப்புதல் ஆவணம், ரசீது ஆவணம், ரத்து ஆவணம், அதிகார ஆவணம், மணமுறிவு ஆவணம், புரோநோட், உடன்படிக்கை, அவார்டு ஆகியவைக்கு ரூ. 25 பெற்று கொள்ள வேண்டும்.

கட்டிட ஆவணங்களுக்கு, வீட்டை அளந்து இணைப்பு 1ஏ தயாரிக்க ஒவ்வொரு 1ஏ விற்கும் ரூ. 50 பெற்று கொள்ள வேண்டும்.

23.12.2004 ஆம் தேதியிட்ட கடிதத்தின்படி ஆவண எழுத்தர்கள் கட்டண விபரம் தொடர்பான விளம்பர பலகையை வைக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறி நடந்து கொள்ளும் ஆவண எழுத்தர்களின் உரிமத்தை ரத்து செய்ய உரிமம் வழங்கும் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு…

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Lok Adalat | THE LEGAL SERVICES AUTHORITIES ACT, 1987 Hand-book | லோக் அதாலத் சட்டம் 1987 கையேடு.(Pdf in English)Lok Adalat | THE LEGAL SERVICES AUTHORITIES ACT, 1987 Hand-book | லோக் அதாலத் சட்டம் 1987 கையேடு.(Pdf in English)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசுபொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 பொதுமக்கள் குறைகளை, 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. புதுடெல்லி: பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள்

Accused arrest is not mandatory for less than  7 (seven) years imprisonment said SUPREME COURT.  ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு, குற்றவாளியை, கைது செய்யத் தேவையில்லை, உச்ச நீதிமன்றம்.Accused arrest is not mandatory for less than  7 (seven) years imprisonment said SUPREME COURT.  ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு, குற்றவாளியை, கைது செய்யத் தேவையில்லை, உச்ச நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 125 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)