GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Model Reply notice to an Advocate |வழக்கறிஞருக்கு பதில் அறிவிப்பு மாதிரி

Model Reply notice to an Advocate |வழக்கறிஞருக்கு பதில் அறிவிப்பு மாதிரி

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

மனுதார்:
முத்துக்கிருஷ்ணன, த/பெ.வெங்கடாஜலம், முத்து மாரியம்மன் கோவில் தெரு,
கதவு எண் 111, பரிக்கல்பட்டு கிராமம், பெரும்பாக்கம் அஞ்சல் – 604304,
வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்

பெறுநர்:
திரு. C. தனபால் M.SC.,B. L., (வழக்கறிஞர்) அவர்கள்,
154, நேரு தெரு,
குரு காம்ளக்ஸ்,
திண்டிவனம் – 60 4001,
விழுப்புரம் மாவட்டம்.

மதிப்பு மிகுந்த அய்யா,
பொருள் :
இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 106வது பிரிவு படி பதில் சட்ட அறிவிப்பு

பார்வை :
16.06.2020 தேதியிட்ட தங்களது வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு கிடைக்கப்பெற்ற நாள் : 18.02.2020

வழக்கறிஞர் ஆகிய தங்களுக்கு தகவல் வழங்கிய விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பரிக்கல்பட்டு கிராமத்தில் வசிக்கும் வெங்கடாஜலம் மகன் ஜெயபாலன் என்பவர் தங்களின் உறவினர் என்ற அடிப்படையில் பொய்யான தகவலின் அடிப்படையில் பார்வையில் காணும் அறிவிப்பை எங்களுக்கு அனுப்பி தந்துள்ளீர்கள் என்பதையும்,

முத்துக்கிருஷ்ணன, த/பெ.வெங்கடாஜலம், முத்து மாரியம்மன் கோவில் தெரு, கதவு எண் 111, பரிக்கல்பட்டு கிராமம், பெரும்பாக்கம் அஞ்சல்,வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம், அஞ்சல் குறியீட்டுஎண். 604 304 இல் குடியிருந்து வரும் நான் தங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பரிக்கல்பட்டு கிராமத்தில் வசித்து வரும் வெங்கடாஜலம் குமாரர் ஜெயபாலன் என்பவரது தகவலின் பேரில் பார்வையில் காணும் அறிவிப்பை கடந்த 16.06.2020 தேதியிட்டு கடந்த 18.02.2020 ஆம் தேதியன்று கிடைக்கப்பெற்றது என்பதையும்,

மேற்படி அறிவிப்பில் தங்களின் கட்சிக்காரர் கூறியதாக தாங்கள் எனக்கு அனுப்பிய அறிவிப்பில் கண்டுள்ள நியாயமாக ஒப்புக் கொண்டுள்ள சங்கதிகள் தவிர அனைத்து தகவலுமே உண்மைக்கு புறம்பான தகவல்களாகும், இவை அனைத்தையும் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 101 மற்றும் 105வது பிரிவு படி தாங்களே நிரூபிக்க கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதையும்,

எங்களது கூட்டுக் குடும்ப சொத்து எங்கள் கிராம பெரியோர்கள் முன்னிலையில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின் பேரிலேயே முறையாக வாக்கரலாக பாகம் பிரிக்கப்பட்டு அதன் முதல் இன்று வரையிலும் பாகதாரர்கள் அவரவர்கள் பெயரில் சொத்து வரி முதலான ஆவணங்கள் இருந்து வருகிறது என்பதையும்,

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத்துறை மூலம் கிடைத்த சொத்துக்கள் அவரவர்கள் பெயரிலேயே வீட்டு வரி இரசீது, மற்றும் இதர ஆவணங்கள் இருந்து வருகிறது என்பதையும் வழக்கறிஞராகிய தாங்களே எங்களின் குடும்ப ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு மேற்படி தங்களுக்கு தகவல் தெரிவித்தவர்களுக்கு தவறான ஆலோசனை வழங்கி எங்களது குடும்ப சொத்தை வில்லங்க பாராதீனம் செய்ய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு இந்த வழக்கறிஞ்ர் சட்ட அறிவிப்பை வழங்கியுள்ளீர்கள் என்பதையும்

மேலும் உமது கட்சிக்காரர் கொடுத்த தகவலின் பேரிலான அறிவிப்பானது எந்தச் சட்டப் பிரிவின்படி அனுப்பப்பட்டது என்பதை குறிப்பிடாததும், உமது கட்சிக்காரர் தகவல் வழங்கியிருப்பதாக கூறியிருப்பதால் அதில் உமது கட்சிக்காரர் கையொப்பமிடாததும் வழக்கறிஞர் என்ற பகுதியில் நீவீர் மட்டுமே கையொப்பம் மட்டும் செய்துள்ளீர்கள் என்பதையும், மேலும் தமிழ்நாடு வழக்கறிஞர் அவையில் வழங்கப்பட்ட பதிவு எண்ணை குறிப்பிடாததும் எனக்கு மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வழக்கறிஞர் அவை விதி – 1961 க்கு எதிராக தாங்கள் செயல்படுவதாக சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.

ஆகையால் இப்பதில் அறிவிப்பை பெறும் நீவீர் வழக்கறிஞர் அவை விதி – 1961 இன் 18வது பிரிவுக்கு எதிராக ஒரு தவறான வழக்கு உருவாக காரணமாக தாங்கள் இல்லை என்பதையும், இது போல பொய்த் தகவல்களை கொண்டு பொய்யான ஆவணங்களை உருவாக்கி இந்திய தண்டனை சட்டம் 1860 இன் 193, 197 ஆகிய பிரிவுகள் படி குற்றமுறு நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 101 மற்றும் 106 ஆகிய பிரிவுகள் படி தங்களுக்கு உள்ளது என்பதையும் இதன் மூலம் அறிவிக்கலாயிற்று.
தங்கள் உண்மையுள்ள

                    பதில் அறிவிப்பாளர் /              பார்ட்டி இன் பெர்ஷன்

நகல்:
தகவலுக்காக அனுப்பப்படுகிறது
திரு. மாண்பமை நீதிபதி அவர்கள்,
சார்பு நீதிமன்றம்,
திண்டிவனம்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Wrong CIBIL score

Fault cibil core penalty 4 lakhs | தவறாக சிபில் பட்டியலில் சேர்த்ததற்கு 4 லட்சம் அபராதம்.Fault cibil core penalty 4 lakhs | தவறாக சிபில் பட்டியலில் சேர்த்ததற்கு 4 லட்சம் அபராதம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 தந்தை ஏற்ற வீட்டுக்கடனை தெரிவிக்காமல், மனைவி, மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.

கல்வி நிறுவனங்களில் இனிமேல் மாற்று சான்றிதழ் கட்டாயமில்லை உயர்நீதிமன்ற தீர்ப்புகல்வி நிறுவனங்களில் இனிமேல் மாற்று சான்றிதழ் கட்டாயமில்லை உயர்நீதிமன்ற தீர்ப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

Publics can conduct village meetings | கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167Publics can conduct village meetings | கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில், பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம். அரசாணை எண் 167. கிராம ஊராட்சி கூட்டங்கள். கிராம

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)