GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

Mother Documents தாய் பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தாய்பத்திரம் எந்த ஆண்டிலிருந்துக் கிடைக்கும்?

தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது, அதனுடைய தாய் பத்திரம் 1995-ல் உருவாக்கப்பட்டது. இப்படி தாய் பத்திரங்கள் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் கொண்டே இருக்கும்.

இப்படி ஆண்டுகள் பின்னோக்கி போய்க் கொண்டே இருக்கின்ற தாய் பத்திரங்களுக்குப் பின்னோக்கிய ஏதாவது ஒரு ஆண்டில் முற்றுப் புள்ளி இருக்கும் அல்லவா அதனைப் பற்றி பார்ப்போம்.

1800க்கு முன்பு இந்தியாவில் யாருக்குமே இந்த நிலம் எனக்கு உரிமையானது என்று பட்டாவும் கிடையாது, பத்திரமும் குடியானவர்களுக்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1800-களுக்கு முன்பு ஜமீன்கள், ஜாகீர்கள், சௌத்திரிகள், குரோரிகள் போன்றவர்களுக்கு செப்பேடுகளாக, ஓலைச்சுவடிகளாக, தங்கபட்டயங்களாக கூட நிலத்தின் மீதான மேல் வாரி உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது இருப்பது போல முத்திரைத் தாள் பத்திரங்க்கள் கிடையாது.

1800-களுக்கு முன்னாள் அரசு நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்ற வருவாய் துறை ஊழியர்களான கர்ணம், ஜேம்ஸ்பாண்டு, மஜும்தார்,பவுஸ்தார் போன்றவர்களுக்கு சம்மளத்திற்கு பதிலாக இந்தகிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாக அரசு கொடுத்திருக்கும் அந்த இனாம் உரிமைக்கானபட்டயங்கள் ஓலைச்சுவடிகள் மூலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.

1800 களுக்கு முன்பு சமஸ்கிருத வேதபடிக்கின்ற பிராமணர்களுக்கு ஸ்தோத்திரியம் என்றும், மசூதிகளில் இருக்கின்ற ஹாஜிக்களுக்கும் சில கிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாகபட்டயங்கள் மூலமும் ஓலைச்சுவடிகள் மூலமும் அரசுகொடுத்திருக்கும். அதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.
1800-களுக்கு முன்பு கிராமத்தில் வேலை செய்கின்ற வெட்டியான்கள், தச்சர்கள், நாவிதர்கள், கருமான்கள், கிராமகோவில் பூசாரிகள் ஆகியோர்களுக்கு சம்மளத்திற்கு பதிலாக மேல்வாரி உரிமை உள்ள சிறு அளவிலான நிலங்கள் அந்தந்த கிராமத்திற்குள்ளேயே இனாமாக கொடுக்கப்பட்டது. அதனுடைய விவரங்கள் எல்லாம் 1800-களுக்கு முன்னாள் பராமரிக்கப்பட்ட கர்ணம் பதிவேடுகளில் இருக்கிறது.

1800-க்கு பிறகு தான் காரன் வாலீஸ் பிரபுகாலத்திற்கு பிறகு சாஸ்வத செட்டில்மெண்ட் (PERMANENT SETTLEMENT)-ற்குபிறகு அனைத்து குடியானவர்களுக்கும் இந்த நிலம் உனக்கு தான் என்ற நிரந்தர பட்டா வழங்கப்பட்டது. ஆக 1800-க்கு முன்பு வரை எந்த ஒரு குடியானவருக்கும் இந்த நிலம்உனக்கு தான் என்ற பட்டாவே இல்லாத போது செப்பேடுகளோ, ஓலைச்சுவடிகளோ, பட்டயங்களோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.அதே போல முத்திரைத் தாள் பதித்த பத்திரங்களும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

1800-க்கு பிறகு தான் குடியானவர்களுக்கு பட்டா கொடுக்கபட்டதால் அவர்கள் அதனை பிற குடியானவர்களுக்கு கிரையம் கொடுப்பதற்கும் தானம் அளிப்பதற்கும், பாகப் பிரிவினை செய்வதற்கும், இன்னும் பிறவகையான பத்திரங்களை போடுவதற்கும் அவசியம் ஏற்பட்டது.

அதனால் 1840-களில் கல்கத்தாவில் முதன் முறையாக பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது. நம் தமிழ்நாட்டில் 1865-களில் பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது.
ஆக தமிழ்நாட்டில் குடியானவர்களுக்கு பழைய பத்திரம் வைத்திருந்தால் கண்டிப்பாக 1865-க்கு முன்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே இன்று இருக்கும் எல்லா சொத்துக்களுக்கும் தாய் பத்திரங்கள் பெரும்பாலும் பின்னோக்கி சென்றால் 1865-யோடு முடிந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி 1865-க்கு முன்னாள் சில பத்திரங்கள் இருக்கிறது என்றால் நன்கு ஆராய்ந்து பார்த்தால் அது குடியானவர்களுடைய பத்திரங்களாக இருக்காது, ஒரு ஜமீந்தாரரோ அல்லது ஒரு இனாம் தாரரின் மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்களாக இருக்கும். அந்த பத்திரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் பதிந்தவைகளாக இருக்கும், ஏனென்றால் அப்பொழுது சார்பதிவகம் என்று ஒன்று இல்லவே இல்லை.

1793 முதல் 1865 வரை நீதிமன்றத்தில் இருக்கின்ற திவான் இ அதாலத் என்ற நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தான் மேற்படி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆக சார்பதிவகத்திற்கு முன்பு நீதிமன்றம் தான் பதிவு அலுவலகமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக 1865-க்கு பிறகு தான் குடியானவர்களூடைய நிலங்களுக்கான பத்திரங்கள் பதியப்பட்டு இருக்கிறது. 1865-க்கு முன்னாடி இருக்கின்ற பத்திரங்கள் ஜமின் மற்றும் இனாம் தாரருடைய மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்கள் அவை நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. எனவே நீதி மன்றத்தில் பதியப்பட்ட பத்திரங்கள் எல்லாம் நீதிமன்ற ஆவண காப்பகங்களில் தேடிப்பார்த்து இருக்கின்ற பத்திரங்களின் மெய்த் தன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்.

1865-க்கு பிறகு ஆன பத்திரங்களை எல்லாம் பத்திரபதிவுத்துறையில் உறுதிசெய்து கொள்ளலாம். இறுதியாக இப்பொழுது இருக்கின்ற பத்திரங்களுக்கெல்லாம் முதல் தாய்பத்திரம் தமிழ்நாட்டில் 1865-ம்ஆண்டு வரை தான் இருக்கும் என்பதை மனதில் வைத்திருங்கள்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காதுஎந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது? ஏன் சில நிலம் வைத்துள்ளவர்கள் இன்று வரை அலைகிறார்கள்? சிலர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாலும்,

வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த ஒருவர் இறந்தபின் அவரின்

efiling | 1-9-23 முதல் நீதிமன்ற வழக்குகள் ஆன்லைனில் வாதியும் வசதி.efiling | 1-9-23 முதல் நீதிமன்ற வழக்குகள் ஆன்லைனில் வாதியும் வசதி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)