உங்கள் ஊரில் உங்கள் மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணியாமல் பணியாற்றிக் கொண்டிருந்தால் இதுபோல நீங்களும் புகார் செய்யலாமே? இந்த மனு மாடலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒப்புதலுடன் பதிவஞ்சல்
மனுதார்:
இரா. கணேaசன்,
மாநில தலைவர்,
பாதிக்கப்பட்டோர் கழகம்,
21-பி/6, சவுண்டு ராமலிங்கம் தெரு,
புளியம்பட்டி,
அருப்புக்கோட்டை-626101,
விருதுநகர் மாவட்டம்.
eraa.ganesan1964@gmail.com
பெறுநர்:
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விருதுநகர்-626002,
விருதுநகர் மாவட்டம்.
மதிப்பு மிகுந்த ஐயா,
பொருள்:
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் (Suomotu) W. P. No. 15640/2018 தீர்ப்பு நாள்.16.07.2018 மற்றும் பர்சனல் and Adminisrative Reforms (A) Department Secretariat, Chennai அரசாணை கடிதம் எண். 20948/A2/2018-1-தேதி: 23.08.2018 அரசாணை படியும் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் அதிகாரிகளும் கட்டாயமாக அடையாள அட்டை அணிவதை கண்காணித்து வருவதற்கான வேண்டுகோள் கடிதம்.
1) மனுதாரர் ஆகிய நான் பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950 இன் 51(அ) பிரிவு படி இந்திய திருநாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயலாற்றி வருகிறேன்.
2) தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், பணியாளர்களும் பணியாற்றும் சமயங்களில் அடையாள அட்டை அணிந்து பணி புரிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் (Suomotu) W. P. No. 15640/2018 தீர்ப்பு நாள்.16.07.2018 மற்றும் Personnel and Adminisrative Reforms (A) Department Secretariat Chennai அரசாணை கடிதம் எண்.20948/A2/2018-1- நாள்.23.08.2018 ஐ இயற்றி உள்ளது. ஒரு வலிமையான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை சட்டமாக மதிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 13 (3) இல் உறுதி படுத்தியுள்ளது. ஆனால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தாம் பணியாற்றும்போது அடையாள அட்டை அணிந்து பணியாற்றவில்லை என எங்கள் அமைப்பின் புலனாய்வு மூலம் தெரிந்து கொண்டுள்ளோம். இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக எங்கள் பாதிக்கப் பட்டோர் கழகம் கருதுகிறது.
3) ஆதலால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர் ஆகியோர் தாம் அரசுப்பணியில் பணியாற்றும்போது கட்டாயமாக அடையாள அட்டை அணிந்து வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டிய கடமையும், சுமையும் தங்களுக்கு உள்ளது என்பதை நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 159 இன்படி நினைவூட்டுகிறோம்.
4) ஆகையால் கீழ்காணும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் (Suomotu) W. P. No. 15640/2018 தீர்ப்பு நாள்.16.07.2018 மற்றும் Personnel and Adminisrative Reforms (A) Department Secretariat, Chennai அரசாணை கடிதம் எண். 20948/A2/2018-1-தேதி: 23.08.2018 ஆகிய மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரை மற்றும் தமிழ்நாடு அரசாணை முறையாக கடைபிடிக்கின்றனரா? என தொடர்ந்து கண்காணிக்கவும், அடையாள அட்டை அணியாமல் பணியாற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர்மீது தமிழ்நாடு அரசு குடிமை பணி விதிகள் 17(2) இன்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், அடையாள அட்டை அணிந்து பணிக்கு வராத அரசூழியர்கள் அனைவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1961,மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 இன் 2 மற்றும் 3இன் படி குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மனுதாராகிய எனது நீதியின் நோக்கம் நிறைவேற ஆவண செய்ய வேணுமாய் மிகவும் அன்புடன் வேண்டுகிறேன்.
மனுதார்
தேதி:
இடம்: அருப்புக்கோட்டை