GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167.

கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது நிர்வாகம், பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167.

கிராம ஊராட்சி கூட்டங்கள்.

கிராம ஊராட்சி அதன் அலுவல்களைச் செவ்வனே நடத்துவதற்கு கூட்டங்கள் நடத்துவது மிகவும் அவசியம். கூட்டங்கள் ஊராட்சி அலுவலகத்தில் கூட்டப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இரண்டு கூட்டங்களுக்கிடையேயான கால இடைவெளி 60 நாட்களுக்கு மேற்படக்கூடாது. விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்தக்கூடாது. ஒவ்வொரு வகையான கூட்டமும் ஒவ்வொரு தன்மையுடன்கூடியதாகும்.

ஊராட்சிக் கூட்டங்களின் வகை.

  1. சாதாரணக் கூட்டம்.
  2. சிறப்புக் கூட்டம்.
  3. அவசரக் கூட்டம்.
  4. வேண்டுகோள் கூட்டம்.
    • சாதாரணக் கூட்டம் நடத்தப்படும் முறை, குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும். கூட்ட அறிவிப்பு கூட்ட நாளிற்கு குறைந்தது 3 முழு நாட்களுக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டும். அறிவிப்பில் கூட்டம் நடைபெறும் இடம், தேதி, நேரம், விவாதப் பொருள்கள் இடம் பெற வேண்டும். சாதாரண கூட்டத்தில் எந்தப்பொருளையும் சேர்க்கலாம். கூட்டப்பொருள் தலைவரால் தயாரிக்கப்படவேண்டும். கூட்டப்பொருள் உறுப்பினர்களாலும் முன்மொழியப்படலாம். (கூட்டம் நடைபெறும் நாளுக்கு 7 நாட்களுக்கு முன்பு கிராம ஊராட்சித் தலைவருக்கு விவரம் தரவேண்டும்). வருகைப்பதிவேடு கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

கூட்டத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள்

மாதாந்திர வரவு செலவு அறிக்கையும், அனைத்து கணக்குகளும், அந்த மாதம் வரை நடைபெற்ற திட்டப்பணிகளின் முன்னேற்ற அறிக்கை, ஊராட்சியில் நடைபெறும் பணிகளைப் பார்த்து ஆய்வு செய்த அலுவலரின் ஆய்வு அறிக்கை. மாநில, மைய அரசு, மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு அறிக்கைகள், வழிகாட்டிகள் மற்றும் நடைமுறைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் சேர்க்கப்பட வேண்டிய கூட்டப்பொருட்கள்
நிதியாண்டு முடிந்ததும் நிர்வாக அறிக்கை ஆண்டு வரவு, செலவு அறிக்கை தணிக்கை அறிக்கை கிராம வளர்ச்சித் திட்டம் தேவையான பிற தீர்மானங்கள்.

கூட்டத்திற்கான அறிவிப்பு மற்றும் பொருட்கள் சார்வு செய்தல்

  1. கூட்ட அறிவிப்பையும் நிகழ்ச்சி நிரலையும் முடிந்தவரை உறுப்பினர்களிடம் நேரில் கொடுத்துத் தேதியுடன் கையொப்பம் பெற வேண்டும்.
  2. நேரில் சார்வு செய்ய இயலாதபொழுது உறுப்பினரின் குடும்பத்திலுள்ள வயது வந்த நபரிடம் கொடுக்கலாம்.
  3. மேற்கூறிய இரு முறைகளிலும் முடியாமல் போனால் ஒப்புகை பெற்ற பதிவஞ்சலில் உரிய நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்படி கூட்ட அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும் அனுப்பப்பட வேண்டும்.
  4. மேற்படி தபால் சேர்ப்பிக்கப்பட இயலவில்லை அஞ்சலகத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நபரின் கடைசி முகவரியில் ஒட்டி சார்வு செய்யப்பட வேண்டும்.
  5. உறுப்பினர் யாருக்கேனும் கூட்ட அறிவிப்பு உரிய காலத்திற்கு முன்பு சார்வு செய்யாமல் கூட்டம் நடத்தினால், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாதவையாகிவிடும்.
  6. சிறப்புக் கூட்டம்
  7. சிறப்புக் கூட்டம் என்பது ஒரே ஒரு பொருள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாகும்.
  8. சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று அரசால் அறிவிக்கப்பட்ட இனங்களில் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நடத்த வேண்டும்.
  9. அரசால் காலம் குறிப்பிடப்படாத இனங்களில் பொதுவாக 3 முழு நாட்களுக்குக் குறையாத கால அவகாசத்தில் நடத்தலாம்.
  10. தலைவர்/உறுப்பினர் பதவி ஏற்றல், துணைத்தலைவர் தேர்தல் பதவி ஏற்றல், வரிவீதம் உயர்த்துதல்/திருத்தியமைத்தல், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 3 மாதத்திற்குள் நீக்கல் (அல்லது) திருத்துதல், நம்பிக்கையில்லா தீர்மானம், தலைவர்/ துணைத்தலைவர்/ உறுப்பினர்கள் பதவி விலகல், தலைவர்/ துணைத்தலைவர்/உறுப்பினர்கள் பதவி நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சிறப்புக்கூட்டம் கூட்டலாம். கூட்டம்
  11. அவசரக் கூட்டம்
    24 மணி நேர கால அவகாசத்தில் அறிவிப்பு கொடுத்து கூட்ட வேண்டும். (உதாரணம் : வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (மற்றும்) இதர அவசரமான நிவாரணப் பணிகள் குறித்து முடிவெடுத்தல்). பத்து ரூபாய் இயக்கம்
  12. வேண்டுகோள் கூட்டம்
  13. பொதுவாகக் கூட்டம் கூட்டுவதும், கூட்டத்தில் கலந்துபேச வேண்டிய பொருட்களை கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் சேர்க்கும் கடமையும் பொறுப்பும் தலைவரைச் சார்ந்ததாகும். ஆனால், தலைவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக முறையாக கூட்டம் கூட்டவில்லை என்றாலோ அல்லது உறுப்பினர்கள் கொடுக்கும் பொருளைச் சேர்க்க மறுத்து வந்தாலோ அத்தகைய பொருட்கள் குறித்து விவாதிக்க உறுப்பினர்களே கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற விதிகளில் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டங்கள் வேண்டுகோள் கூட்டம் எனப்படும். வகை
  14. 1/3 பங்கு உறுப்பினர்கள் எழுத்து மூலம் கூட்டத்திற்கான வேண்டுகோள் கடிதத்தைத் தலைவரிடம் கொடுக்கவேண்டும்.
  15. அதில் தேதி மற்றும் விவாதிக்க வேண்டிய பொருள் குறிப்பிட வேண்டும்.
  16. விண்ணப்பத்தினை தலைவரிடம் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரிடம் அலுவலக நாளில்/அலுவலக நேரத்தில் வழங்கவேண்டும்.
  17. கூட்டம் நடத்தப்பட வேண்டிய 7 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும்.
  18. தலைவர், கடிதம் பெற்ற 48 மணி நேரத்திற்குள், வேண்டுகோள் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நாளிலோ (அல்லது) அதிலிருந்து 3 நாட்களுக்குள்ளாகவோ கூட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  19. தவறினால் கடிதத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர்களே கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கலாம். தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் அஜெண்டா சார்வு செய்யலாம்.
  20. கூட்டத்திற்கு தலைவர் வந்தால் அவர் தலைமை தாங்கலாம். இல்லையெனில், வந்துள்ளவர்களில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்த வேண்டும்.
  21. ஊராட்சித் தலைவர் மேற்படி கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், கூட்ட தீர்மான புத்தகம் (மற்றும்) கூட்ட வருகைப்பதிவேடு கேட்கப்படும் பட்சத்தில் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், அவ்விவரத்தை பதிவு செய்து வெள்ளைத்தாளில் தீர்மானத்தை பதிவு செய்யலாம். பத்து ரூபாய் இயக்கம் கூட்டம் நடத்துவதற்கான குறைவெண் வரம்பு
  22. கிராம ஊராட்சி கூட்டம் நடைபெறும் நேரம் முழுவதும், அப்போதைய மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது குறைந்தது மூன்று பேர், இதில் எது அதிகமோ அந்த எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை இருத்தல் வேண்டும்.
  23. கூட்டம் நடத்த குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு 12 மணி நேரத்திற்குள் குறைவெண் வரம்பு உறுப்பினர்கள் இல்லையெனில், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உறுப்பினர்கள் மேலும் காத்திருக்கச் சம்மதித்தால் அன்றி கூட்டத்தை ஒத்திவைக்கலாம். குறைவெண் வரம்பு என்பது கூட்டம் துவங்கியதிலிருந்து கூட்டம் முடிகிற வரை இருத்தல் வேண்டும்.
  24. குறைவெண் வரம்பு உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தினைக் கூட்டுவதற்குக் தலைவர் புதிய அறிவிப்பினை அனுப்ப வேண்டும்.
  25. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தலைவர் பெரும்பான்மை உறுப்பினர்கள் விருப்பத்துடன் உரிய காரணங்களைக் கூட்ட நடவடிக்கை பதிவேட்டில் எழுத்து மூலமாகப் பதிவு செய்து கூட்டத்தை ஒத்திவைக்கலாம். அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் மீள நடைபெறும் போது, அது ஏற்கனவே நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் என்பதால் அதற்கு புதிய அறிவிப்பு வழங்கவேண்டிய அவசியமில்லை.
  26. கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்னர் கூட்டப்பொருளை எழுத்து மூலமாக உறுப்பினர் அளிக்கலாம்.

கூட்டத் தீர்மானம்
1) ஓவ்வொரு கூட்டப்பொருளும் விவாதித்து முடிந்தவுடன் உடனுக்குடன் ஒவ்வொரு தீர்மானமும் அங்கீகரிக்கப்பட்ட விவரத்தை தலைவர் கைப்பட எழுதி கையொப்பமிட வேண்டும்.
2) தீர்மானத்தை உறுப்பினர்கட்குப் படித்துக் காட்ட வேண்டும்.

3) தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடந்தால் சமமான வாக்கு எண்ணிக்கை இருக்கும்போது தலைவர் 2வது வாக்கு அளிக்கலாம்.
4) கூட்ட இறுதியில் “அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன” எனவும், “படித்துக் காண்பிக்கப்பட்டது” எனவும் பதிவு செய்து தலைவர் கையொப்பமிட வேண்டும்.
5) தலைவரைத் தொடர்ந்து பிற உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.
6) நடவடிக்கை புத்தகம் தலைவரால் பாதுகாக்கப்பட வேண்டும்.
7) தீர்மானம் கொண்டு வர விரும்புகிற உறுப்பினர் தனது எண்ணத்தை குறைந்தது 10 முழு நாட்களுக்கு முன்பாக ஊராட்சி மன்றத்தலைவருக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்கவேண்டும்.
8) தீர்மானத்தை ரத்து செய்தல் / திருத்தம் மேற்கொள்ளுதல் : எந்த ஒரு தீர்மானமும் 3 மாதங்களுக்குள்ளாக ரத்து செய்யவோ (அல்லது) திருத்தம் செய்யவோ முடியாது. இந்த காலத்திற்குள் ரத்து செய்ய வேண்டுமெனில் இதற்காக தனியாக கூட்டப்பட்ட ஒரு சிறப்புக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின் அப்போதுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் ரத்து / திருத்தம் செய்யலாம்.

கூட்டத்திற்கு தலைமை வகித்தல் (பிரிவு 89)

  1. கிராம ஊராட்சித் தலைவர் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்த வேண்டும்.
  2. தலைவர் இல்லையெனில் துணைத் தலைவர் தலைமை வகிக்கலாம்.
  3. இருவருமில்லையேல் கூட்டத்திற்கு வருகைதந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் தலைமை ஏற்கலாம்.

கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை அனுமதி:

  1. கிராம ஊராட்சியின் அனைத்து கூட்டங்களிலும் பார்வையாளர்களாக பொது மக்கள் வருகை தரலாம்.
  2. இருப்பினும் கிராம ஊராட்சி தலைவர் அவராகவோ (அல்லது) கிராம ஊராட்சியின் வேண்டுகோளின் பேரிலோ சில குறிப்பிட்ட இனங்களில் அதற்கான காரணத்தை நடவடிக்கைக் குறிப்பில் பதிந்து பொதுமக்களோ (அ) குறிப்பிட்ட நபரோ கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது உத்திரவிடலாம்.
    (அரசாணை நிலை எண்.167 ஊ.வ.து. நாள் 09.08.1999) (1994 த.நா.ஊ.ச.பிரிவு 9
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 *விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல் – வழக்கும் தீர்வும்* Husband name change birth certificate la

தமிழ்நாடு வாடகை வீடு மற்றும் கட்டிடங்கள் சட்டம்1960தமிழ்நாடு வாடகை வீடு மற்றும் கட்டிடங்கள் சட்டம்1960

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 தமிழ்நாடு வாடகை வீடு மற்றும் கட்டிடங்கள் சட்டம்1960 அக்ரிமெண்ட் அவசியம். வாடகை ஒப்பந்தம் ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட

முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 40 முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்” வழக்குரைஞர் :அ.அக்பர் பாஷா குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள்,

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)