வாரண்ட் பாலாவின் மநுவரையுங்கலை எழுத்து மற்றும் ஒலி வடிவில்.

Editing in Progress—திருத்தம் நடந்துக்கொண்டு இருக்கிறது.—-

மநு வரையுங்கலை!

அடங்காதே!… அஞ்சாதே!… அடக்காதே!..

தத்துவம் .

அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும், காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!! வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!

ஆசிரியர்:-வாரண்ட் பாலா

நிதியுதவி:- மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், புதுதில்லி

வெளியீடு:- கேர் சொசைட்டி,

அஞ்சல் பெட்டி எண்:- 55

53,ஏரித்தெரு, ஓசூர்-635109

மநு வரையுங்கலை விவரம்

தலைப்பு:- மநு வரையுங்கலை!

தத்துவம்:- அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்,

காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!

வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!

(த,ந)ன்மை:- சட்டஞ்சார்ந்த விழிப்பறிவுணர்வு

கடமை:- தர்மப்படித் தட்டிக்கேட்டல்

கருத்து:- அரசூழியர்களைப் பணிய(ஈற்ற) வைப்பது

ஆசிரியர்:- வாரண்ட் பாலா

உரிமை:- பொதுவுடைமை

பதிப்பு:- முதற்பதிப்பு – 2016

படிகள்:- 5250 

மொழி:- புழங்குப் பேச்சுத் தமிழ்

எழுத்தளவு:- 10 – 11 புள்ளிகள்

நூல் அளவு:- கிரௌன் 120 – 180 – 240

ஒளி அச்சு:- கேர் கிராபிக்ஸ், ஓசூர்

காகிதம் வெள்ளை நியூஸ் பிரிண்ட்

பக்கங்கள்:- 768 

கட்டுமானம்:- தரமானது

வெளியீடு கேர் சொசைட்டி,

அஞ்சல் பெட்டி எண் – 55

53, ஏரித்தெரு, ஓசூர், தமிழ்நாடு-635109

நிதியுதவி:- சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், புதுடில்லி

முக்கிய குறிப்பு

இம்மநு வரையுங்கலை நூலானது, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் ஒப்புதலின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்கள், நீதிமன்றங்கள், சிறைச் சாலைகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்காக அச்சிடப்பட்டது.

ஆராய்ச்சி தத்துவ உரை

‘அரசு என்பது, மக்களுக்குச் சேவை செய்யத்தான்’ என்ற தவறான நிலைப்பாடு மக்களிடத்தில் நிலவி வருகிறது. மக்களுக்குள் சேவைக்கான தேவை இருக்கும்போது, எப்படி மக்கள் உற்ற உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும், நம்மைப் போன்ற முகந்தெரியாதவர்களுக்குள்ளும், அச்சேவைத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்களோ, அப்படியே தங்களுக்கு உள்ளேயும் நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.

அரசு என்பது, பெயரளவிற்கான ஏமாற்று அமைப்புதான். ஆமாம், எந்தவோர் அமைப்பும் அதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகத்தான் செயல்படும் என்பதை, பல இடங்களில் சொல்லியிருந்தாலுங்கூட, மிகமுக்கியமாக “கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலில் சொன்னது நினைவிருக்கும்.

உண்மையில், வக்கற்ற அரசுக்கு வாக்களித்தும், வரி செலுத்துவதன் மூலமும், மக்களே, அல்ல அல்ல; பிச்சைக்காரர்கள்கூட, அரசுக்குச் சேவையைச் செய்துகொண்டுதான்

இருக…-_______gape

இருக்கிறார்களே ஒழிய, பிச்சைக்காரர்கள் என்ற பெயரைக்

கொடுத்ததைத் தவிர எதையும் அரசு, இவர்களுக்குச் செய்த

தில்லை. ஆனாலுங்கூட, அப்படிச் செய்வதுபோல காட்டிக்

கொள்வது, வரிச்சட்டப்படி கொள்ளையடித்த கோடான

கோடியில், அற்பத்தனமான சில்லரைகளைச் செலவழிப்பதே

ஆகும்.

ஆகையால், இதனையெல்லாம் மறைக்கவும், தட்டிக்

கேட்காமல் தடுக்கவும், சட்டப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்

பட்ட அரசுக்கு எதிராகப் போராடுவது குற்றமென, அரசு

தனக்குத் தானே சட்டஞ்செய்து வைத்திருக்கிறது. இதனை

நிறைவேற்ற வேண்டியது, பெ(று, ருங் கூலிக்கு மாரடிக்கும்

நிதிபதிகளின் பொறுப்பு.

மொத்தத்தில், அரசு என்பதும், அரசின் அதிகாரம் பெற்ற அமைப்புக்

கள் என்பதும், மக்களுக்குப் பெருந்தொல்லை தரக்கூடியது.

ஆகையால், அது தேவையற்றது. அவ்வளவே!

அரசே பெருந்தொல்லையாக இருக்கும்போது, பொதுச்சேவை செய்வதற்காகவே அரசூழியத்திற்கும், ஆட்சி ஊழியத்திற்கும் (குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர்கள்) வருவதாக சொல்லிக்கொள்ளும் எவரும், எவ்வாறு இருப்பார்கள்?

இவர்கள், தங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகவே வருகிறார்கள். இதற்கான சிறு முதலீடாகத்தான், இலஞ்சங்கொடுத்துக் குறுக்கு வழியில் அரசூழியத்துக்கும், ஆட்சி ஊழியத்திற்கும் வருகின்றனர். இதனால், மக்களுக்கான எந்தவோர் ஊழியத்தையும் சரியாகச் செய்யாமல், தங்களால் என்னென்ன கயமைத் தனங்களை அரங்கேற்ற முடியுமோ, அவையனைத்தையும் அரங்கேற்றும் கோமாளிகளாக, வெள்ளையர்களை விஞ்சும் வகையில், அரசூழியர்களும், அவர்கள் நினைப்பவர்களும் மக்களைக் கொள்ளையடிக்கின்றனர், கொள்ளையடிக்கப் பெரிதும் துணை நிற்கின்றனர்.

கீழ்த்தரம், நடுத்தரம், மேல்தரம் என்று பொதுமக்களை மூன்று வகையாக அரசு பிரிப்பது போன்றே, நானும், அரசூழியர்களைக் கீழ்த்தர ஊழியர்கள், நடுத்தர ஊழியர்கள், மேல்மட்ட ஊழியர்கள் என மூன்றாகப்பிரித்து, இந்நூலுக்கென முன்மொழியும் தத்துவமிது!

அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்,

காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!!

வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!

ஆமாம், கீழ்த்தர ஊழியர்கள், காரிய அடிமைகள்! நடுத்தர ஊழியர்கள், கயமைக் கோமாளிகள்!! மேல்மட்ட ஊழியர்கள், வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்கள்!!!

பொதுமக்களில் நடுத்தர வர்க்கத்தினரே, எதிலும் பெரிதும் பாதிக்கப்படுவதுபோல, நடுத்தர ஊழியர்களான கயமைக் கோமாளிகளால் பாதிக்கப்படுவர்களே மிகமிக அதிகம். இத்தத்துவ விளக்கத்தை முன்வைத்தே, இம்மநு வரையுங் கலை நூலை எழுதியுள்ளேன். மேலும், சத்தியவான் காந்தியின், ‘இந்தியத் தன்னாட்சி’ நூலில் இருந்து எடுக்கப்பட்டு, மேற்கோளாக இம்மநு வரையுங்கலையின் நூலின் பின்பக்க அட்டையில் தொகுக்கப்பட்டுள்ள கருத்துக்களும் உங்களுக்கு இத்தத்துவ விளக்கத்தின் உண்மையை பல்வேறு விதங்களில் உணர்த்தும்.

எழுத்தாளர்களில் எத்தனையெத்தனையோ வகையினர் இருக்கின்றனர்.இவற்றில், தத்துவ எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாத வகையினர். ஒருவரின் வாழ்க்கைக்கு, மற்ற எழுத்தாளர்கள் எந்த அளவிற்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவியலாது.

ஆனால், தத்துவ எழுத்தாளர்கள், நிச்சயமாக ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டிகளாகத்தான் இருப்பார்கள் என்ற வகையில், இத்தத்துவ விளக்கத்தோடு தொடங்கும், இம்மநு வரையுங்கலை நூல், உங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்குமென்பது, என் தீர்க்கமான நம்பிக்கை. 

நீதித்துறை சீர்திருத்தத்திற்கான

சட்ட ஆராய்ச்சியாளர்

வாரண்ட் பாலா

வெளியீட்டாளர் உரை

இவ்வுலகில் எத்தனையெத்தனையோ கோடானுகோடி சங்கதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பற்றி, நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால்கூட, அதைப்பற்றி நன்றாக அறிந்தவர்களின் மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடியும். ஆனால், அதனை அறிந்தவர்கள் அவ்வளவெளிதில், நமக்குச் சொல்லிவிட மாட்டார்கள்; இரகசியங்காப்பார்கள்! இவ்வளவு ஏன்?

தொழிலதிபர்கள் தங்களது தொழிலாளர்களுக்கான பணி நியமன ஆணையில், ‘தாங்கள் செய்யுந்தொழில் குறித்து எக்கருத்தையும், தொழிற்சாலைக்கு வெளியில் வேறு எவருடனும் பரிமாறக் கூடாது; அப்படிப் பரிமாறினால் வேலை நீக்கம் செய்யப் படுவீர்கள்’ என்று எச்சரித்திருப்பார்கள். தொழிலதிபர்கள் எந்தளவிற்கு தொழில் இரகசியங்காப்பார்கள் என்பதற்கு இதுவோர் உண்மை!!

தொழில் செய்வோர்தாம், தொழில் இரகசியங்களை வெளியில் சொல்லமாட்டார் கள் என்றில்லை. எளிதாய்ப் புரியாத அளவிற்குப் பூடகமாய், ஏதோவொரு காரணத்திற் காகச் சித்தர்களே மூலிகைகளைப் பற்றிப் பாடிச் சென்றிருக் கிறார்கள். 

இதனாலேயே பாரம்பரியமிக்க நமது சித்த மற்றும் மூலிகை வைத்திய முறைகள் பலவும் நமக்குத் தெரியாமலேயே போய்விட, இதனையே காரணமாக வைத்து, ‘அதுதான் இது; இதுதான் அது’ என்று ஏமாற்றி, சித்த மருத்துவத்தொழிலைப் பிழைப்புக்காகச் செய்வோரே அதிகமாகி விட்டனர். சட்டமும் இப்படித்தான்!

சட்டத்தின் உன்னதமான நோக்கம், அதன் உட்பொருள் விளக்கமென எதையும் எடுத்துச் சொல்லப் பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் ஆளில்லை.

21 ஆம் நூற்றாண்டில், அவர் வருவார், இவர் வருவார் என மதப் பிரச்சாரங்கள் நடந்தனவே ஒழிய, எவரும் வந்தபாடில்லை. ஆனால், சட்டத்தை ஆராய்ச்சி செய்ய இப்படியொருவர் வருவார் என எவருமே சொல்லாமல் போனது துரதிருஷ்டமே என்றாலுங்கூட, இவர் வந்தது பொய்யர்களால், பொய்த்துப்போன நம் வாழ்வை யெல்லாம் வசந்தமாவதற்குத்தான்!

ஆமாம், மகாத்மா காந்தியும், பகுத்தறிவுப் பெரியாரும், கப்பலோட்டிய தமிழரும், தேசிக விநாயகம் பிள்ளையவர் களும் நியாயத்திருடர்கள் மற்றும் நிதிபதிகளின் தொழில் முறைகேடுகளையும், அதனால் நம் வாழ்வில் சந்திக்கும் அவலங்களையும் அப்பட்டமாக எடுத்துரைத்திருந்தாலுங்கூட, அவை எப்படி அரங்கேற்றப்படுகின்றன என்பதைச் சட்ட விதிகளோடு ஒப்பிட்டுச் சொல்லவில்லை.

ஆனால், இந்த அவலங்கள் எப்படியெல்லாம் அநீதியாக அரங்கேற்றப்படுகின்றன என்பதை, அதற்கான சட்ட விதிகளுடன் அணு அணுவாக விளக்கஞ்சொல்லி, அம்மகான்களது கூற்றிலுள்ள அப்பழுக்கற்ற உண்மைகளை, நம் மனதில் அழுத்தந்திருத்தமாக பதிய வைக்கிறார்.

இவ்விளக்கத்தையெல்லாம் அம்மகான்களேகூடச் சொல்லியிருக்க முடியுமா என்கிற நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருக்கிறோம். இதே நிலைப்பாட்டில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மெய்ப்பிப்பதுபோலப் பலரும் பல்வேறு வழிமுறைகளில் தத்தம் கருத்துக்களைப் பகிர்ந்திருந் தாலுங்கூட, “நீதியைத்தேடி..” இணைய முகப்புப்பக்கத்தில், திரு. தண்டபாணி என்பவர் தெரிவித்துள்ள கருத்து என்ன

வென்பதை, உங்களுக்காக இங்கு அப்படியே சொல்கிறோம்.

“அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது ஆண்டவன் அவதரித்துக் கொடுமைகளைக் களைந்து அமைதியை நிலை நாட்டுவான் எனப் படித்திருக்கிறேன். அதில் எனக்கு இப்போது நம்பிக்கை வந்துள்ளது”.

இதனைப் படிக்கும்போது, எப்படிப்பட்ட பலம் வாய்ந்த கொள்ளைக்கூட்டத்தையும் விரட்டியடிக்க அல்லது ஒழித்துக்கட்ட ஒரேயொரு கொள்கைவாதி போதுமென்பதற்கு ஆங்கிலேயர்களுக்கெப்படி, நம் தேசப்பிதா மகாத்மாகாந்தி நல்லதோர் உண்மையோ, அப்படித்தான் பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் கள்ளத்தனமான வல்லுறவால் நமக்கேற்படும் அநீதிகள் குறித்து எடுத்துரைத்துச் சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்ட, ‘திரு. வாரண்ட் பாலா’ என்றால், அது கடுகளவும் மிகையன்று!

இதற்காக இவரைக் கடவுளென்றோ அல்லது கடவுளின் அவதாரமென்றோ அல்லது மகாத்மாவைப் போன்று மகான் என்றோ நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் மட்டு மல்லோம்; நீங்களே சொன்னாலுங்கூட ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதைக் ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’ நூலின் முதல் அத்தியாயமான தலையாயக் கடமைகள் பகுதியில், ‘இப்படி… ஏன்… எப்படி? !’ என்ற கட்டுரையில் படித்துணர்ந்திருப்பீர்கள்.

அப்படியிருந்துங்கூட, இதை நாங்கள் உங்களுக்குச் சொல்வதற்கு காரணம், “இவர் சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கெனக் கையிலெடுத்திருக்கும் சட்ட ஆராய்ச்சிக் கடமை (அ,எ)த்தகையது என்பதை, அவ்வாசகர் எவ்வளவு தூரம் உணர்ந்துள்ளார்” என்பதையும், நாங்கள் உணர்ந்த தையும் உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்.

சட்டஞ்சார்ந்த சங்கதிகள் மட்டுமில்லாமல், இதுகுறித்து எழுதுங்கள், அதுகுறித்து எழுதுங்களென இவரைப் பலரும் கேட்டுக் கொண்டாலுங்கூட, இவருக்குச் சரியாகத் தெரியாத அல்லது புரியாத சங்கதியைப்பற்றி எழுதவேமாட்டார். அப்படியெழுதி இருந்தால், இது ஏழாவது நூலாக இருந்திருக்காது; மாறாக, எழுபதாவது நூலாகக்கூட இருந்திருக்கும்.

பல்வேறு இதழ்களில் மட்டுமல்லாமல், சட்ட விழிப்பறிவுணர்வு என்ற போர்வையில் பொய்யர்கள் நடத்தும் இதழ்களில்கூட, தொடர்ந்து கட்டுரைகள் எழுத இவரைக் கேட்டுக் கொண்டதை அடுத்து, “நியாயந்தான் சட்டம்! அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்” என்ற தலைப்பில் கட்டுரை யொன்றை எழுதியனுப்பவே, அவர்களும் பிரசுரம் செய்தார்கள் என்றால், பொய்யர்களே இவரது கருத்தை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

ஆனால், நம் “நீதியைத்தேடி…” நூல்கள் நூலகங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்ற தகவலைத் தங்கள் பொய்த் தொழிலுக்காக அக்கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டதால், இவரும் தனது கொள்கையின்படி, அப்பொய்யர்களின் இதழுக்குக் கட்டுரை எழுதுவதை அத்தோடு விட்டுவிட்டார்

உண்மையில், அப்பொய்யர்கள் இதழை நடத்துவது குடிமக்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காகத்தான் என்றால், நம் நூல்கள் குறித்து, இவரே எழுத மறந்திருந்தாலுங்கூட, அவர்களே அதையெழுதி, மக்களுக்கெல்லாம் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா?!

இவர் மட்டும் கொள்கையை கொஞ்சந்தளர்த்திக் கொள்வதாய் இருந்தால்கூட, எத்தனை எத்தனையோ இதழ்களில் எழுதலாம்; பேசலாம்; நிகழ்ச்சிகளை நடத்தலாம். இவரது கட்டுரைகளைக் கேட்டும், சட்ட விழிப்பறிவுணர்வு வகுப்புக்களுக்கு அழைத்தும், ஊடகங்களில் கருத்துரைக்கவும் அவ்வளவு அழைப்புக்கள் எங்களுக்கு வருகின்றன

ஆனால், ‘பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் தொழிலுண்மையைத் தோலுரித்துப் பகிரங்கமாகச் சொல்வதில் மட்டுமே உறுதியாய் இருப்பேன், எதற்காகவும் கொள்கையைத் தளர்த்தி அதிலுள்ள உண்மைகளைக் கொல்லமாட்டேன்’ என்று எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கிறார்

நம்மிடையே வாழ்ந்த கொள்கையாளர்கள் ஒவ்வொரு வருமே, தமக்கெனத் தனித்தனியாக இதழ்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததேன் என்பதும் இப்பொழுது தான் புரிகிறது. 

மேலும், உண்மை எப்பொழுதுமே ஆமை போன்று, மெதுவாகவே நகர்ந்து செல்லும். ஆனாலும், நீடித்து நிலைத்திருக்கும். ‘வேகமாக வளரும் எதுவுமே, விரைவில் அழிந்து போகும்’ என்பது இயற்கையின் இயல்பென்பதை அறியாதவரா,

இவர்?!

‘நீதியைத்தேடி…’ ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’ என்ற தலைப்புக்களை அடுத்துத் தற்போது ‘மநு வரையுங்கலை! என மிகமிகப் பொருத்தமாக, யாரும் எழுதாத தனிச்சிறப்பு மிக்க தலைப்புகளை எப்படித்தான் தேர்வு செய்கிறாரோ… ஒன்றுமே புரியவில்லை!

தன் நூல்களுக்கான பெயர்கள் மட்டுமல்ல; மங்களத்தை, ‘மக்கு மங்களம்’, அல்லியை, ‘அ(ல்)லி’, கே.சந்துருவைக் ‘கேனச் சந்துரு’, சதாசிவத்தைச் ‘சாதாசிவம் மற்றும் சதிசிவம்’, குமார சாமியைக் ‘கூட்டல் குமாரசாமி’, கிருபாகரனைக், ‘கிறுக்கு கிருபாகரன்’ எனத் தன்னிடம் சிக்கிய அறிவுவறுமை நிதிபதிகளுக்கு வைக்கும் மிகப்பொருத்தமான ஒப்பனைப் பெயர்களுங்கூட நம்மை ரசிக்க வைக்கின்றன.

இப்படியெல்லாம் எழுதியும், இவர்மீது எச்சட்ட நடவடிக்கையையும் எடுக்காமல் நிதிபதிகள் பொறுமையாக மௌனங்காப்பது ஏனென்றால், அவர்களின் கதை மென்மேலும் நாறிவிடும் என்ற அச்சத்தின் உச்சத்தால்தான் என்பதை, எங்களைப் போலவே, நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஒரே வார்த்தையில் சிறிது மாற்றஞ் செய்து, இரண்டு மூன்று பொருள்பட, நேரெதிர் அர்த்தம் தரும் வகையில் எழுதுதல், வார்த்தைகளைச் சேர்த்தெழுதுதல், பிரித்தெழுது தல் என்பதெல்லாம் அளப்பறிய ஆற்றலைக் கொண்டது. இதுபோன்று இவரெழுதும் வித்தியாசமான வார்த்தைகளைப் படிப்பதற்கென்றும், பிரத்தியேகக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளும் வாசகர் கூட்டம் உண்டென்றால், இதில் நாங்களும் உண்டு.

திருவள்ளுவரைப் போன்று, இவரும் ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’ நூலிலிருந்து நியாயக்குறள்கள் என்று பல்வேறு குறள்களை, இவரது விளக்கக் கருத்துக் கூறல்களுக் கிடையில், ஆங்காங்கே வேறுவகையில் எழுதி வருவதைப் பார்த்தால் இறுதியில், ‘நியாயக் குறள்கள்’ என்ற தலைப்பில் இதுவுமொரு சட்ட விழிப்பறிவுணர்வு நூலாகும்போல் தெரிகிறது. இப்படியும் எழுதிச் சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டினால், அது இந்திய சட்டச் சரித்திரத்தில் மகத்தான சாதனையே!

ஒருவருக்கு ஒரு சட்டத்தில் புலமையிருப்பதே அரிதிலும் அரிது. ஆகையால், எல்லாச் சட்ட விதிகளிலும் இவருக்கு இருக்கும் புலமை ஆச்சரியப்பட வைக்கிறது. இதுபோலவே, தொடர்புள்ள சங்கதிகளைப் பொருத்தமான இடங்களில் எல்லாம் நினைவூட்டி இணைப்பதும், இவரது கைவந்தக் கலை!

எது எதற்காகவோ எந்தெந்த காலக்கட்டங்களிலோ இவர் வரைந்த மநுக்கள்தான், இம்மநு வரையுங்கலை ஆகியுள்ளது! எனவே, இவர் என்னென்ன செய்வார், ஏன்

இனியும் செய்வார், எதற்காகச் செய்வார், எப்படிச் செய்வார், எப்பொழுது செய்வார், இதற்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கும், எப்படியெல்லாம் கிடைக்கும் என்பதைப் பற்றி யெல்லாம், யாமொன்றும் அறியோம் பராபரமே!!

பொய்யரான தன் கணவர் கேட்ட விவாகரத்தைப் பெற முடியாத அளவிற்கு, இவரது சட்டம் மற்றும் மனை வாழ்வியல் குறித்த ஆலோசனையால் கவர்ந்திழுக்கப்பட்டு, ஏழாண்டுக் காலம் சட்டப்படி போராடிக் கணவனை மீண்டும் தன்னோடு வாழவைத்த அமுதா என்கிற வாசகச் சகோதரி “தனது முனைவர் பட்டயத்திற்காக இவரைப் பற்றிய ஆய்வைச் செய்ய அனுமதி கேட்டபோது, அன்போடு மறுத்து விட்டார்” என்பது நிச்சயமாக வியப்பிலும் வியப்புதான்!

இதிலென்ன வியப்பிருக்கிறது என்கிறீர்களா? ஆமாம், இந்த இடத்தில், நாம் முக்கியமாக நினைவுகூர வேண்டியவொரு விடயம், ‘நீதியைத்தேடி…சட்ட அறிவுக்களஞ்சியம்’ நூலின் ஆய்வறிக்கையில், பல்கலைக் க(ல, ழ)கத்தில் ஆய்வியல்துறையில் ஆய்வு செய்பவர்கள் எல்லாம் படிப்பறிவைக் கொண்டவர்களே! இவர்கள் ஆய்வியல் துறையில் எதை ஆய்வு செய்கிறார்கள்? “யாரோ ஒருவர்,எதைப் பற்றியோ கண்டுபிடித்த கண்டுபிடிப்பை எடுத்துக்கொண்டு, எப்படி அவர் அந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தார் என்பதைத்தான் ஆய்வு செய்கிறார்களே ஒழிய, இவர்களாக எதையும் புதியதாக ஆய்வு செய்து கண்டு பிடிக்க வில்லை” என்ற இவரின் கூற்று எந்த அளவிற்கு, இவருக்கே உண்மையாகி விட்டது, பார்த்தீர்களா!

வாசக சகோதரி அமுதாவின் கூற்றுப்படி, இவரைப்பற்றி

ஆய்வு செய்யப்போனால், இப்படி எத்தனை எத்தனையோ

முனைவர் பட்ட(ய)ங்களைப் பெறலாம். ஆனால், இதனால்

நம் சமூகத்திற்கு எப்பயனுமில்லை. சமூகத்திற்கான பயன்

என்பது, பொய்யர்களை ஒழிப்பதன் மூலமான நிதிபதிகளின்

அரசூழியர்கள் சீர்திருத்தத்திலேயே அடங்கியிருக்கிறது. மற்றும் நிதிபதிகள் எப்படித்தான் நடந்து கொண்டாலும், அவர்களை அவதூறாக எழுதாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுக்கத்தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பலரும் உள்ளதால்தான், இதுவரையிலுங்கூட அவ்வூழியர்கள் தங்களின் தவறுகளைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை.

ஆனால், இவரோ இம்மநு வரையுங்கலையில் தொகுத்துக் கொடுத்துள்ள மனுக்களில், அவ்வூழியர்களின் சட்டவிரோத செயல்களுக்கேற்பச் சட்டத்திற்கு அல்லது நியாயத்திற்குட்பட்டு இவரது வார்த்தைகள் பச்சையாகவும், கொச்சை யாகவும், அழகாகவும், அடுக்கடுக்காகவும், அர்த்தமுடனும் தெறிக்க, தாங்கள் செய்துவிட்ட தவறுகள்தாம், இவ்வார்த்தைகளாய் உருமாறி நம்மைத் தாக்கியிருக்கின்றன என்பதை உணர்ந்து, தங்களது நிலைப்பாட்டில் இருந்து எப்படியெல் லாம் அவர்கள் பின்வாங்கியுள்ளனர் என்பதையும் ஆங்காங்கே விளக்கியுள்ளார்.

அ(ல்)லி என்கிற நிதிபதி, நம் வாசகருக்கு உள்நோக்கத்தோடு கொடுத்த தவறான தண்டனையை எதிர்த்து, இவர்எழுதிய மேல்முறையீட்டு மனுவில், அ(ல்)லியின் தீர்ப்புரை

யில் உள்ள தவறுகளை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துச்சொல்லியபின், இறுதியாக அ(ல்)லியை “மனநிலை சரியில்லாதவர்” என்றே குறிப்பிட்டு, நம் வாசகர்கள் இருவரையும்,

சட்டப்படியே விடுவிக்கும்படியான நெருக்கடி தரும் மேல்முறையீட்டு மனுவைத் தயார்செய்தும், தாக்கல் செய்தும், விடுதலை செய்யவைத்தும் சாதித்திருக்கிறார்.

இதன் மூலம், அ(ல்)லி போன்ற பெண் நிதிபதிகள் தெரிந்தும், துணிந்தும் தவறு செய்வதற்குக் காரணம், ‘அவர்கள் மீது விசாரணை என்று வந்தால், விசாரணை அதிகாரிகளிடம் பல்லைக் காட்டி விடலாம், தேவைப்பட்டால் படுத்தும் விடலாம் என

எண்ணுவார்கள் போலும்” என 2010 ஆம் ஆண்டில், வெளியிட்ட, “நீதியைத்தேடி…சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி” நூலில், “நடை முறையில் உள்ள நட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ளது அப்பழுக்கற்ற உண்மையாகி விட்டது. இல்லையில்லை; ‘இவரெழுதும் ஒவ்வொரு எழுத்துமே உண்மைதான்’ என்பதை, நீங்கள் ஏற்கெனவே இவரது ஒவ்வொரு நூலிலும் உணர்ந்ததைப் போன்றே இந்நூலில் மட்டுமல்லாது, இனிவரும் ஒவ்வொரு நூலிலுங்கூட உணருவீர்கள்.

தெரிந்தே தவறு செய்கிற பெண் நிதிபதிகளைப் பற்றி இவரது கருத்துக்கு, மேலும் வலுச்சேர்க்கும் விதமாய் கடந்த காலங்களில், உச்சநீதிமன்ற நிதிபதி கங்கூலி உள்ளிட்ட

நிதிபதிகள் மீது, அவர்களிடம் பயிற்சி பெற்ற பொய்யினிகளும், பெண் நிதிபதிகளுங்கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களே தக்க ஆதாரம்.

இது மாத்திரமில்லாமல், இதில் அனுபவப்பட்ட சில வாசக வாசகிகள், அரசூழியர்கள், காவலூழியர்கள், பொய்யர்கள், நிதிபதிகள் எனப் பல்வேறு தரப்பினர்களின் ஆதாரங்களும், இவர் வசமிருக்க தேவைப்பட்டால் வெளிவரும். நமக்கெல்லாம் ஊக்கந்தரும் வகையில் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் பங்களிப்பு நிதி கிடைப்பது போலவே, உங்களின் ஒத்துழைப்பும், மீதி நிதியுங்கிடைத்தால்

இன்னும் பற்பல சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை வெளிக்கொண்டு வருவோம்.

இம்மநு வரையுங்கலையில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகளை முன் மாதிரியாகக்கொண்டு, உங்களது தொனியில் ம(னு, நு)க்களை வரைவதன் மூலம், நியாயத்திருடர்களான பொய்யர்கள் ஒழிந்து, (நி, நீ)தித்திருடர்களான நிதிபதிகள் உண்மையிலேயே நீதிபதிகளாக மனம்மாறி, யாவருக்குமான சமநியாயத்தை வாரிவழங்க, ‘நீங்களே வாதாடுங்கள்; உங்களது நியாயத்திற்கும் மேலான தர்மத்தை வென்றெடுங்கள்’ என்று உங்களை மனதார வாழ்த்தி நிறைவு செய்கிறோம்.       நல்வாழ்த்துக்களுடன்: கேர் சொசைட்டி அங்கத்தினர்கள்

ஆவணக்களஞ்சியம்

ஒரு நூலில் சொல்லப்படும் சங்கதிகளின் உண்மைத் தன்மையை, உள்ளங்கை நெல்லிக்கனியாக வாசகர்களுக்கு எடுத்துக்காட்டத் தக்க சட்டப்படியான ஆதாரச்சான்றுகளை கொடுக்கவேண்டியது, அந்நூலாசிரியரின் கடமையாகும்.

இது மற்ற நூல்களைவிடச் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களுக்கு மிகமிக முக்கியம் என்பதால், “நீதியைத்தேடி… பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி” நூலில், அந்தந்த சங்கதி களின் ஊடே, அதற்கேற்ற பல்வேறு ஆதாரச்சான்றுகளை வழங்கியது, உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த வகையில், இம்மநு வரையுங்கலை நூலிலும், பல்வேறு ஆதாரச்சான்றுகளை, அந்தந்த சங்கதிகளின் ஊடே கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படிக் கொடுப்பது, ஓரிரு சிறு ஆவண ஆதாரங்களைத்தவிர, மற்றவைக்குச் சாத்தியமில்லாமல் போனதற்குக்காரணம், இந்நூலின் அளவிற்கேற்ப, அதனைச் சுருக்கி அச்சிடமுடியாத, அப்படியே அச்சிட்டாலுங்கூடப் படிக்கவோ, பயன்படுத்தவோ முடியாத அளவிற்கு, அவ்வாதாரச் சான்று களின் பெரிதான அளவும், பக்கங்களின் அதிக எண்ணிக் கையுமே ஆகும். மேலும், உங்களின் தேவையை அறிந்து,

இவ்வாதாரச் சான்றுகளைச் தனியாக அச்சிட்டு வழங்கு வதும் இயலாத காரியமாக இருக்கிறது.

ஆகையால், நம் “நீதியைத்தேடி… சட்டப்பல்கலைக் கழகத்” தின் www.neethiyaithedy.org என்கிறப் பிரத்தியேக இணையப் பக்கத்தில், ஆவணக்களஞ்சியம் என்ற பகுதியில், ஒவ்வொரு நூலுக்கும் உ(ய)ரிய ஆதாரச்சான்றுகளைத் தொகுத்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எனவே, உங்களுக்குத் தேவையான ஆதாரங்களை, இதிலிருந்து நீங்களே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தி, தரவிறக்கம் செய்து கொள்ளத்_____ gape 

பங்களிப்பாளர்கள் உரை! 

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட நாங்கள், அமெரிக்காவில் மென்பொருள் சார்ந்தப்பணியில் இருந்தோம்.நம்மைப்போல வெளிநாட்டில் இருந்து, அமெரிக்காவில் குடியேறுபவர்களிடம் பிடிக்கப்படும் வரிப்பணம், அவர்களுக்கே திருப்பி தரப்பட வேண்டும். ஆனால், இந்த விபரம் பெரும்பாலும் நமக்கு தெரியாததால், ஏமாற்றப்படுகிறோம். சட்ட ஷரத்துக்களை எழுதும்போது, தெளிவாக புரியும் வண்ணம் எழுதவே மாட்டார்கள். இரண்டு, மூன்று பொருள்படவே குழப்பி எழுதுவார்கள் என்பதால், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வார்கள். எப்படி பொருள் புரிந்து கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், “திரு.குவாமி” என்பவர் நண்பரானார்.

அமெரிக்க நீதித்துறையில் நுழைந்த கறுப்பினத்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால், எந்த அளவிற்கு ஆர்வத்தோடு நுழைந்தாரோ, அந்த அளவிற்கு அதிலிருந்து வெளியில் வந்தவர். காரணம், அத்துறைக்குள் இருந்துகொண்டு நியாயமாக எதையுஞ் செய்யமுடியாது என்பதுதான். 

ஆனால், இதனை தன் ஞானோதயத்தால் அறிந்த திரு. வாரண்ட் பாலா, நீதித்துறைக்குள் சென்று சிக்கிக்கொள்ளாமல் மிகவும் சமயோசித்தமாக வெளியில் இருந்து, நமக்கெல்லாம் சட்டத்தை போதித்து, நம்மையே வாதாட வலியுறுத்தி வருகிறார்.

இவரைப்போலவே, அமெரிக்க நீதித்துறையில் இருந்து வெளியில் வந்த திரு. குவாமியும், அமெரிக்க வாழ் அந்நிய மக்களுக்கு, அந்நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்த விழிப்பறிவுணர்வை ஏற்படுத்தி வருகிறார். என்னே, பொருத்தம்! 

குவாமியை கருப்பினத்தவர் என்று சொல்வதை விட, நம் தமிழர் என்று சொல்வதுகூட பொருத்தமானது.

ஆமாம், நம் மீதுள்ள மதிப்பால் அவரது பெண் குழந்தைக்கு, ‘கல்யாணி’ என்று பெயரைச் சூட்டியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நமது பாரம்பரியப் பண்டிகைகளான பொங்கல் விழாவைக் காணவேண்டும், நம்மோடும் சில மாதங்கள் தங்கியிருக்க வேண்டுமென விரும்பியுள்ளதால், விரைவில் வருவார். 

2011 ஆம் ஆண்டில், நம் தாயகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் நாங்கள் நாடு திரும்பியதும், சட்டங்குறித்து தெளிவானதொரு விளக்கத்தை அளிக்கும், வக்கீலை அறிமுகப்படுத்துமாறு எங்களது அண்ணன் திரு.

ராமானுஜம் அவர்களிடம் கேட்டோம். அவர்தான் எங்களுக்கு திரு. வாரண்ட் பாலா அவர்களை அறிமுகம் செய்தார். 

இவரோடு உரையாடியதில் இருந்து, திரு. குவாமியும், இவரும் ஒரே மாதிரியான, மிகச் சவாலான சட்ட விழிப்பறிவுணர்வுக் குறிக்கோளை கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தோம். 

இருமொழிப்புலமை இன்மை காரணமாக, இவ்விருவரும், தங்களின் சட்ட ஆராய்ச்சிக் கருத்துக்களை நேரடியாக பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருப்பதால், இவர்களிருவரின் வழியாக நமக்கு கிடைக்க வேண்டிய அரிய பல கருத்துக்கள் கிடைக்கவில்லை எனலாம்.

ஆனாலும், சாதாரண சாமானிய பாமர மக்கள் சட்டத்தில் செய்துள்ள சாதனைகள் குறித்து, இவர் ஆதாரப்பூர்வமாக சொன்னபோது, வியப்பின் உச்சிக்கே சென்றதால், இவரது சட்ட விழிப்பறிவுணர்வில், எங்களின் பங்காக, இவரைப் பேட்டியெடுத்து, “Be A Smarter Indian” என்றப் பெயரில் பத்துப்பதிவுகளை யுடியூப் என்னும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டோம். இதன்பிறகு, நெருங்கிய நண்பர்களானோம்.

ஏற்கெனவே, அமெரிக்காவில் வசித்தபோது சில குறும் படங்களை இயக்கி விருதுகளைப் பெற்றதன் அடிப்படை தாக்கத்தில், ஒட்டுமொத்த உலகலாவிய பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கக்கூடிய பணத்தைப்பற்றி,

ஐநூறும் ஐந்தும் (500-5)’ என்ற குறும்படத்தை தயாரித்தபோது, நண்பர் வாரண்ட் பாலா, எவ்வித எதிர்ப்பார்ப்பு மின்றி பல்வேறு வகைகளில் உதவியதோடு, நம் “நீதியைத்தேடி…” வாசகர்கள் சிலரை, இக்குறும் படத்தில் நடிக்கவும் ஏற்பாடு செய்தும், தானே பணத்தை எண்ணிக் கொடுக்கும் காட்சியின் மூலம் தொடங்கியும் வைத்துள்ளார்.

ஆனாலுங்கூட, பணத்துக்கு எதிரான இப்படம், நம் சமூகத்தில் வெளிவந்திருக்க வாய்ப்பிருந்திருக்காதே என்ற,, உங்களின் யூகமும் சரியே. ஆனாலும், எப்படியாயினும்

இப்படத்தை உங்களுக்கு காண்பிப்போமென நம்புகிறோம்! 

அதிசயமும், வியப்பும் ஒருங்கே இணைந்த வாரண்ட் பாலாவின் ஆக்கப்பூர்வமான சட்ட ஆராய்ச்சி மற்றும் விழிப்பறிவுணர்வு போதனை முயற்சியே, எங்களது நண்பர்கள் வட்டத்தில் நிதியைச் சேகரித்து தரவேண்டுமென, எங்களைத் தூண்டியது.

இந்த வகையில், எங்களால் திரட்டப்பட்ட சிறியதொகை

50,000 (ஐம்பதாயிரம் மட்டும்)ஐ எங்கள் அனைவரின் சார்பாகவும்

கொடுத்து மகிழ்கிறோம்! இதில் நம் குவாமியின் பங்களிப்பும்

உண்டு!!

இயன்றதை, இணைந்து செய்வோம், வாருங்கள்!

அன்புடன்

வாரண்ட் பாலாவின் நண்பர்கள்

www.accessiblehorizonfilms.com

அத்தியாயத்தைத் தொடங்கும் முன்!

நமது பழமையான பண்பாட்டு மிக்க கொள்கையிலிருந்து மாறி, ஆங்கிலேயரின் ஆரம்ப அடிமைக் காலத்திலிருந்து, சுமார் முந்நூறு ஆண்டுக்காலமாக நம்மைப் புண்படுத்திவரும்பாழாய்ப் போன, (க, ந, இ)ஷ்ட நடைமுறைகள் அனைத்தையும் “நியாயந்தான் சட்டம்” என்ற தார்மீக அடிப்படையில் உடைத்தெறிந்து, ‘நமக்கான நியாயத்தைப்பெற உதவும் பொதுப் புரட்சிக்கான புதுப்கொள்கைக்கு வழி வகுப்பதாகும்’.

“நீதியைத்தேடி…” நூல்களில் இருந்து, “கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூல்வரை, நான் எழுதியுள்ள வார்த்தைப் பிரயோகங்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் கடுமையானதாகக்கூடிக்கொண்டே வந்திருக்கிறது என்பதை நீங்கள் நன்றாய் உணர்ந்திருப்பீர்கள்.

எதைப்பற்றிப் பேசும்போது எப்படி வேண்டுமானாலும் பேசலாம். தேவைப்பட்டால், நான் அப்படிப் பேசவேயில்லை என்றும் மறுக்கலாம். சட்டத்தொழில் புரியும், பொய்யர்கள், நிதிபதிகள் குறித்து பேசுபவர்கள் எவருமே, அவமதிப்புக்

குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவாறு, அவர்களை ஒட்டுமொத்த மாகவோ அல்லது பெயரைக் குறிப்பிட்டோ குற்றஞ்சாட்டாமல், வெகுசிலர் என்றுகூறித் தப்பித்துவிடுவர்.

உண்மையில், இச்சட்டத்தொழிலில் ஒருவர் யோக்கியமாக, தன் சட்டக்கடமையை எவ்விதமான குறுக்கீடுமின்றி,(தா,ஏ)ராளமாகச் செய்யமுடியுமென்று, இவர்களைப்பற்றிய எனது ஆராய்ச்சியில் சிறுதுளியேனும் நம்பியிருந்தால், நானும் நிச்சயம் இச்சட்டத் தொழிலில், வக்கீலாக அன்று; நீதிபதியாகவே நுழைந்திருப்பேன். இது எனது நம்பிக்கை மட்டுமன்று; வாசகர்கள் பலரும், என்னிடம் வெளிப்படையாக மனம்விட்டு பகிர்ந்துகொண்ட கருத்துங்கூட ! இதில், கருத்தைப் பகிர வாய்ப்பில்லாத நீங்களுங்கூட ஒருவராக இருக்கலாம்!!

சரி, பொய்யர்களும் நிதிபதிகளும் எப்படிப்பட்ட உண்மைகளையும் திரித்தெழுதும் குணங்கொண்டவர்கள் என்பதை உள்ளே, வழக்கு விவரங்களை விவரிக்கும்போது மிக விரிவாகச் சொல்லத்தான் போகிறேன். ஆனாலும், ஒரு சிறிய விளக்கமாக நம் நூலை முன்வைத்தே சொன்னால் உங்களின் புரிதலுக்கு மிகவும் நன்றாக இருக்குமென நம்புகிறேன்.

இதற்காக,”நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம் ” குறித்து, 05-04-2009 அன்று தினமலர் நாளிதழில் பின்னலூரான் என்பவர், எழுதிய மதிப்புரையை இங்குச் சொல்கிறேன். 

இந்நூல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொதுநூலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு அச்சடிக்கப்பட்டுள்ள தென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நம் வாழ்க்கை நம் கையில், நம் வழக்கு நமது வாதத்தில்’, நீங்க யார் என்று யார் கேட்டாலும், இந்திய அரசமைப்புக்கோட்பாடு 5 இன்படி, இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்று சொல்லிப் பாருங்க; உங்கமேல அவங்களுக்கு ஒருதனி மரியாதையே வந்து விடும்’ என்று, தனக்குத் தோன்றியதையெல்லாம் சட்ட அறிவுக்களஞ்சியம் என்ற பெயரில் நியாயப்படுத்த முனைந்துள்ளார். 

வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் அவநம்பிக்கை கொண்டுள்ள இந்நூலாசிரியரின் கருத்துக்கள் பல, நூலின் தலைப்புக்கு முரணாக உள்ளன. நிதிஉதவி கிடைத்தால், எப்படியும் எழுதலாம் என்பதற்கு, இந்நூல் ஓர் அத்தாட்சி.

இதுவே, மதிப்புரையின் முழுமையான சாரம். இதனைப் படித்ததுமே, இதனையெழுதிய பின்னலூரான் ஒரு பொய்யராகத்தான் இருக்கமுடியுமென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருந்தால், அது முற்றிலுஞ் சரியே!

“வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத் தரகர்களே!!” என்ற தத்துவத்தை, ஏன் முன்மொழிந்தேன் என்பதற்கான பதிலும் இம்மதிப்புரையில் உள்ளது. அது என்னென்ன?

முதலில், “தனக்குத் தோன்றியதையெல்லாம் சட்ட அறிவுக் களஞ்சியம் என்ற பெயரில் நியாயப்படுத்த முனைந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்கொள்வோம்.

இந்திய சாசனக்கோட்பாடு 5-இன்படி, “நாமெல்லாம் இந்திய குடிமக(ன், ள்) என்பதும், இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்” என்ற கூற்றும், இந்திய அரசு அங்கீகரித்ததுதானே! இதில் என்னுடைய தான்தோன்றித்தனம். என்னவிருக்கிறது?

உண்மையில், சட்ட விதிகள் எப்படியிருந்தாலுங்கூட “நியாயந்தான் சட்டம்” என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் நிதிபதிகள் தீர்ப்புச் சொல்லமுடியும் என்ற நிலையில், பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளோ, தங்களுக்குத் தோன்றியதையெல்லாம், சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்புகளாகச் சொல்லி வருகிறார்கள் என்பதை..,

அதே சட்டங்களின் அடிப்படையில் விளக்குவதே நம் சட்ட விழிப்பறிவுணர்வு என்பதை, “நீதியைத்தேடி… மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூல்களைப் படித்ததன் மூலம், நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பீர்கள்.

அடுத்ததாக, ”வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் அவநம்பிக்கை கொண்டுள்ள இந்நூலாசிரியரின் கருத்துக்கள் பல, நூலின் தலைப்புக்கு முரணாக உள்ளன’ என்ற கருத்தை எடுத்துக் கொண்டால், இதே, “நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம்’ நூலின் பின்பக்க அட்டையில்தான், “இப்பொய்யர்கள் மற்றும் நிதிபதிகள் குறித்த காந்தியின் கருத்தைத் தொகுத்துள்ளேன்”. அதனைப்பற்றிக் கருத்துக் கூறாமல், என்னை அவநம்பிக்கை கொண்டவன் எனச் சொல்லி இருப்பது, மகாத்மா காந்தியும் கடுஞ் சொற்களால் சாடியுள்ளார் என்பதை மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்ட, பொய்ச் செயல்தானே!

இறுதியாக, “நிதியுதவி கிடைத்தால், எப்படியும் எழுதலாம் என்பதற்கு, இந்நூல் ஓர் அத்தாட்சி” என்பதை எடுத்துக் கொள்வோம். நம் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் அத்தனைக்கும் நிதியுதவி செய்வது, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தாரோடு, ஆர்வமுள்ள வாசகர்களான நீங்களுந்தாம்!

ஒவ்வொரு நூலை வெளியிட்ட பிறகும், அதுகுறித்த சட்டப்பூர்வ ஆவணங்களோடு, ஐந்து நூல்களையும் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தாருக்குச் சமர்ப்பிக்கிறோம்.

மேலும், நானே இரண்டுமுறை அவர்களை நேரில் சந்தித்து, பொது நம் விழிப்பறிவுணர்வு குறித்த விபரங்களை எடுத்துக்கூறி, உங்களையெல்லாம் நிதிகேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே, அதிகபட்ச நிதியை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அதன்படியே இம்மநு வரையுங் கலைக்கு, அதிகபட்சமாக ரூ.70,000 (ரூபாய் எழுபதாயிரம் மட்டும்) பெற்றுள்ளோம். 

இந்நூலை வெளிக்கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதங் குறித்துங் கூட 09-03-2016 அன்று நேரடியாகச் சந்தித்து எடுத்துச்சொன்னேன். இதுபோன்று எந்தவொரு திட்டத்திற்காகவும் நாம் கேட்கும் தொகையில், அதிகபட்சமாக பத்து சதவிகிதத்தை மட்டுமே வழங்க வேண்டுமென்பதை எழுதப்படாத ஒரு கொள்கையாகவே அரசு வைத்திருக்கிறது என்பது தற்போதே எனக்குத் தெரிந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான “கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலுக்கு நாம் நிதியுதவி எதையுங்கோரி விண்ணப்பிக்கவில்லை என்பதும், அமைச்சகத்தாரே நம்மைத்தொலைபேசியில் அழைத்து, குறைந்த நிதியைக் கொடுத்து நூலொன்றை வெளியிடுங்கள் எனக்கேட்டுக் கொண்டதையடுத்து, அதனையேற்று, உங்களின் அதிகபட்ச நிதியைப்பெற்று, அந்நூலைத் தொகுத்தெழுதி வெளியிட்டுள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தார், நமக்கு ஒதுக்கும் நிதிக்குழுவில், யார்யார் இடம் பெற்றுள்ளனர் என்ற விபரத்தை இதுவரையிலும் எழுதாமல் தவிர்த்து இதற்கடுத்த தலைப்பில், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளுக்காக மட்டுமன்று; உங்களின் புரிதலுக்காகவும் அதைப்பற்றிச் சொல்லப்போகிறேன்.

பின்னலூரான் யோக்கியராக இருந்திருந்து, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு, இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்லியிருந்தால், ‘இப்படி யொரு நூலுக்கு, எப்படி மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் நிதியுதவி செய்யும்’ என்று, அதனைப் படித்த பாமர மக்கள்                         கூடத் தெளிவாகச் சிந்தித்திருக்க முடியும்.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 30 

ஆனால், மதிப்புரையென்ற பெயரில், பொய்யுரையை எழுதியதால், இதுபற்றி அறிவார்ந்த மக்கள்கூடச் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. பின், எதற்காக இம்மதிப்பில்லா உரையை எழுத வேண்டுமென்றால், தனக்குக் கிடைக்கும் கூலிக்கு, தன்னாலியன்ற பொய்புரட்டுத் தனத்தை வெளிப்படுத்தத் தானேயன்றி வேறொன்றுமில்லை. 

இப்படிப் பொய்யுரை எழுதிய, பின்னலூரான் அவநம்பிக்கை கொண்டுள்ள என்மீது, சட்டப்படி அவதூறு அல்லது அவமதிப்பு நடவடிக்கையை எடுத்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. மேலும், நம் நூல்கள் நிதிபதிகளுக்கும் கொடுக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அவர்களும் சட்ட நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதன் மூலம், நம் கருத்துக்களை ஒப்புக்கொண்டார்கள் என்றே சொல்லமுடியும்.

ஏனெனில், இதே “நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம்” நூலின் 22 கூடுதல் பிரதிகளைக் கோரி கடலூர் மாவட்ட நிதிபதியின் நேர்முக உதவியாளர் நமக்குக் கடிதமே எழுதியுள்ளார். உண்மைகள் இப்படியிருக்க, நம் கருத்துக்கள் அப்பட்டமான உண்மை என்பதாலேயே, இப்படி கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். உண்மையில், பல பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கும், நாம் செய்யமுடியாததை, சட்டம் படிக்காத நான், செய்கிறேனே என்று வியக்கும் நிலையிருந்தாலும், அவர்கள் பல்வேறு விதங்களில் அடிமைகளாக இருப்பதால், வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. தனிப்பட்ட முறையில் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அவ்வளவே!

நம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பற்றி மதிப்புரை எழுதிய பல்வேறு இதழ்களிலும், அதனை எழுதியவர்கள், “மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி, பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் சட்ட விரோதமான செயல்களை, பாமரருக்கும் புரியும் வகையில் எடுத்துரைக்கும் எனது தைரியம், மேன்மேலும் இதுபோன்ற சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை நானெழுத வேண்டுமென்கிற அவர்களின் விருப்பம்” ஆகியவை உட்பட, பல்வேறு செய்திகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இவற்றை நம் மறு பதிப்பு நூல்களிலும் தொகுத்துள்ளேன் என்பதை நீங்களுங்கூட அறிந்திருப்பீர்கள்.

பக்கம்-31

எனவே, வக்கீல்கள் என்கிற பொய்யர்களும், இவர்கள் வழிவந்த நிதிபதிகளும் தங்களின் தொழிலில் ஒருபோதும் உண்மையைப்

பேசவே மாட்டார்கள்.

ஏனெனில், மகாத்மா காந்தி, பகுத்தறிவுப் பெரியார் மற்றும் பல சமூகச் சிந்தனையாளர்கள் கூறியுள்ளபடி, அவர்களின் பிறப்பே அப்படித்தான்! இப்பிறப்புப் பிறவிக்குணத்தை யாராலும் மாற்றமுடியாது.

இதையெல்லாம் எதற்காக விளக்குகிறேன் என்றால், பொய்யர்கள் எப்படி உண்மையை மறைத்து பொய்யாய் திரித்தெழுதும் அற்பத்திறன் பெற்றவர்கள் என்பதையும், அவர்களின் எப்படிப்பட்ட பொய்யய்யும், நீங்கலெப்படி அற்புதமாய் புரட்டிப்போட்டு, அவர்களை வார்த்தைகளால் புரட்டியெடுக்க வேண்டுமென்பதை, இரத்தின சுருக்கமாக உணர்த்தவே!

“நாய், தானும் படுக்காது; தள்ளியும் படுக்காது” என்றொரு பழமொழியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்த வரை இது, நாய்க்கு அடுத்தபடியாக நியாயத்திருடர்களான பொய்யர்களுக்கும், அவ்வழிவந்த நீதித்திருடர்களான நிதிபதிகளுக்கு மட்டுமே சாலப்பொருந்தும். ஆமாம், இவர்கள் எதையும் நியாயப்படி செய்யமாட்டார்கள், செய்யவும் முடியாது.

இதனால்தான், நம் சமுதாய விடுதலைக்கு விடிவெள்ளிகளாகத் திகழ்ந்த, மகாத்மா காந்தி, பகுத்தறிவுப் பெரியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரே, “இவர்களை விபச்சாரிகள், ஈனப்பிறவிகள், கொள்ளையர்களென மிகக்கடுஞ் சொற்களை உபயோகித்தும், விமர்சித்தும் சாடியுள்ளனர்”. இதுபோலவே, இன்னும் யார்யாரெல்லாம் விமர்சித்து உள்ளார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து, அம்பலப்படுத்த வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.

ஆங்கிலேய அடிமையாட்சிக் காலத்திலேயே, இவர்கள் இவ்வளவு தூரம் துணிந்து விமர்சித்து இருக்கிறார்கள் என்றால், நாம் தேர்ந்தெடுத்துள்ள நமக்கான ஆட்சியில், நாமின்னும் அதிக உரிமையை எடுத்துக்கொண்டு, இவர்களை இன்னும் தேவையான அளவிற்கு அக்குவேறு, ஆணிவேறாகத் தேவையான அளவிற்கு அநாகரீகமாக விமர்சிக்க வேண்டாமா என்று சிந்தியுங்கள்.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 32

பொய்யர்களையும், நிதிபதிகளையும், அரசூழியர்களையும் இப்படித் திட்டித் தீர்த்துத்தான் எழுதவேண்டுமென்பது எனது ஆசையில்லை. மாறாக மோசமான பச்சையாகவும், கொச்சையாகவும் வார்த்தைகளைப் கையாளும் தகுதி எனக்கில்லை என்பதே, எனக்குப் பெருங்குறையாக இருக்கிறது. இவர்கள் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் வார்த்தைகளால் வடித்திட இயலாது என்கிற அளவுக்கு அக்கிரமங்களைச் செய்கிறார்கள். நான் எழுதுவதெல்லாம் சிறுபகுதியே!

ஆம், கடுஞ்சொற்களுக்கு சொந்தக்காரர் எனச் சொல்லப் படும் பகுத்தறிவுப் பெரியாரேகூட, “நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும், வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக்கூட தகுதியுடவை அன்று” என்றே கூறி உள்ளார்.

ஆகையால், என்னாலியன்ற அளவிற்கு வழிகாட்ட, தேவைக்கேற்ற கடுஞ்சொற்களைக் கையாண்டுள்ளேன். இது இவர்களைப் போன்றே செயல்படும் மக்களுக்கும், நம் வாசகர்களுக்குங்கூடச் சாலப்பொருந்தும்.

நம் நூல்களின் தனிச்சிறப்பு !

நம் சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வுக்கு என. மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் நிதியுதவி செய்வது குறித்து விளக்குவதாகச் சொன்னேன். இந்த நிதியுதவி கிடைப்பதால் தான், பொய்யர்களையும், நிதிபதிகளையும் தைரியமாக விமர்சிக்கிறேன் என்றுகூட சிலர் கருதலாம். ஆனால், இதைப்பற்றி நேரடியாக இதுவரை யாரும் என்னிடம் கேட்டதில்லை. உண்மையாக, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திடம் இருந்து, நாம் முதன்முதலாக நிதி உதவியைப் பெற்றது 2006 ஆம் ஆண்டில்தான்.

ஆனால், சட்ட ஆராய்ச்சியைத் தொடங்கிய 2000 ஆம் ஆண்டில்

இருந்தே இவர்களை விமர்சிக்க ஆரம்பித்து விட்டேன்.

பக்கம் – 33

ஆதாரப்பூர்வமாகச் சொல்ல வேண்டுமென்றால், 31-10-2003 அன்று, மக்கு மங்களம் என்ற பெண் நிதிபதி, சிறையில் அடைப்பேன் எனச் சொல்லி, என்னை மிரட்டி விடலாம் என நினைத்து தான்தோன்றித்தனமாக என்மீது வாரண்டைப் பிறப்பித்து விட்டுக் கைது செய்யமறுத்த நகைச்சுவைச் சம்பவத்தை முன்வைத்து, 2004 ஆம் ஆண்டில், எழுதி வெளியிட்ட “நீதியைத்தேடி… பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி” நூலைச் சொல்லலாம்.

“கட்மையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலில், அப்துல் கலாமும் அதிகார துஷ்பிரயோகிதான் என்ற தலைப்பில் சொன்னதன் சுருக்கமான சங்கதிகளை, முதன் முதலில் இந்நூலில் தான் தொகுத்தேன் என்பதை ஆரம்பகால வாசகர்கள் நன்கறிவர். மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதி உதவியோடு எழுதுவதால்தான், வார்த்தைகளை மிகுந்தக் கட்டுப்பாட்டோடும், எனக்கே உ(ய)ரியப் பொறுப்புணர் வோடும் எழுதுகிறேன்.

எது எப்படி இருப்பினும், சட்டத்திற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத இயந்திரவியல் தொழிலாளியான நான், சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கியதும், இதற்கேற்றவாறு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி கிடைத்ததும், இச்சமூகத்தின் தேவையறிந்து காலம் ஒருங்கிணைத்த செயலேயன்றி வேறில்லை! இதற்கு நான் முழுக்க முழுக்கத் தகுதியானவனா என்பதைத் தீர்மானிக்க, இவையிரண்டுக்கும் இடையில் காலம் எனக்கு வைத்த சோதனைதான், குற்றம் புரிந்தவர்களேக்கூட போக விரும்பாத சிறையென்னும் களத்தில் சிக்கித்தவித்த, அப்பாவிகளின் தேவையறிந்து, அக்களத்திற்கேச் சென்று விழிப்பறிவுணர்வூட்டும் துணிவு எனக்கு உண்டா என்பதும், உண்டென நிரூபித்ததும் ஆகும்!!

இப்படி, இனியும் சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களைத்தாம் எழுதப்போகிறேனா அல்லது காலம் அளிக்கப்போகும் நெறியோன் ஊழியத்தை (நீதிபதி) ஏற்கப் போகிறேனா அல்லது இவ்விரண்டு ஊழியங்களையும் வருசேரச் செய்யப்போகிறேனா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 34

மநு வரையுங்கலை!

“மனு வரையுங்கலை” என்று முன்பாகத் திட்டமிட்ட, இந்நூலின் தலைப்பைத்தான் தற்போது ‘மநு வரையுங்கலை’ என்று மாற்றியிருக்கிறேன். இதன் வார்த்தை உச்சரிப்பில்

மாற்றமில்லை என்றாலுங்கூட, உட்கருத்தில் மிகப்பெரிய மாற்றமிருக்கிறது. 

மனு என்றால் சாதாரண விண்ணப்பத்தைக் குறிக்கும் என்பதை அறிவீர்கள். ஆனால், மநு என்பதைத் தர்மத்தின் அடிப்படையில் சொல்லப்படும் வழிகாட்டு நெறிமுறை என்று சொல்லலாம் என்பதே, என் கருத்து.

இதனாலேயே, மநு தர்மம் என்று சொல்லக்கூடிய, இந்து தர்மத்தின் அடிப்படையில் எதையோ சொல்லப்போகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். மாறாக, இதனை வேறு எப்படி யும் சொல்ல முடியாததாலேயே, இப்படிச் சொல்கிறேன். 

மற்றபடி, இதில் சொல்லும் சங்கதிகள் எல்லாம், “நியாயந்தான் சட்டம்” என்ற அடிப்படைத் தத்துவத்தில் இருந்து மாறாதவை என்று சொல்வதைவிட, அதைவிடவும் மேலான தர்மத்தின் அடிப்படையில், சட்டத்தை நெறிப்படுத்தும்.முயற்சி என்று சொல்லலாம்.

ஆமாம், காலங்கள் மாறலாம். ஆனால் தர்மங்கள் எக்காலத்திலும்

மாறுவதில்லை!

சாதாரணக் குடிமகன் சட்டத்தை மதிக்க வேண்டும். ஆனால், உண்மையிலேயே சட்டத்தை மதிக்க வேண்டிய நிலையில் உள்ளோரெல்லாம் சட்டத்தை மதிக்காமல், மிதிக்கலாமென்ற மனநிலையில் உள்ளதை நீங்கள் அறிவீர்.

இம்மனநிலைக்கு அடிப்படைக் காரணமே, “நியாயந்தான் சட்டம்” என்றும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றும் அடிப்படை உரிமையில் உறுதியளித்து விட்டு, சட்டத்தைச் சரியாக அமல்படுத்த வேண்டிய அனைத்து அரசூழியர்கள், பொதுவூழியர்களான ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், உயர் மற்றும் உச்ச நிதிபதிகள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஊழியங்களுக்குத் தக்கவாறு, நியாயத்திற்குப் புறம்பான விதிவிலக்குகளை இந்திய சாசனத்திலும், இதன்கீழ் உருவாக்கப்பட்ட இன்னபிற சட்ட விதிகளிலும் ஏற்படுத்தி வைத்திருப்பதுதான்.

பக்கம் – 35

இதனால், இந்திய சாசனத்தையும், இதர சட்ட விதிகளையும் முதலில் மதித்து நடக்க வேண்டிய அவ்வூழியர்களே, அவற்றை முதலில் மிதிக்கிறார்கள் என்பதே எனது பகிரங்கக்குற்றச்சாட்டு என்பதோடு, மக்களாகிய நாம்தாம், இதனைக் களைந்தெடுக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே, எனக்குத் தெரிந்த நியாயத்திற்கும் மேலான தர்மத்தின் அடிப்படையில் இம்மநு வரையுங்கலையை வரைவு செய்துள்ளேன். எனவே, இது நிச்சயம் சம்பந்தப்பட்ட அவ்வூழியர்களுக்கு அதர்மம் ஆகவேத்தான் தெரியும்.

உங்களில் வெகுசிலருக்குங்கூட, கௌரவம் மிக்க பதவிகளில் உள்ளவர்களை, இப்படி ஊழியர்கள் என்றெல்லாம் விளிக்கலாமா என்று, இப்பொழுது தோன்றினாலும், போகப்போக தர்மமாகத்தான் தெரியும்.

கௌரவம் என்பது தான்செய்யும் செயலில்தான் இருக்கிறதே அன்றி, அமர்ந்திருக்கும் பதவியால் அன்று. இதனால்தான், பதவியில் இருப்பவர்களை விட, இல்லாதவர்களின் கெளரவம் என்றுமே உயர்ந்ததாய் இருக்கிறது.

சட்டத்தை இப்படித் தர்மத்தின் அடிப்படையில் எடுத்துச் (சொ, செ)ல்லும் தகுதி எனக்கு இருக்கிறதா என்பதை, நானே முடிவு செய்வது தான்தோன்றித்தனமாகிவிடும் என்பது போலவே, நீங்களும் முடிவு செய்யமுடியாது. மாறாக, காலமே முடிவு செய்யும்.

மநுதர்ம ஐயர்வாள்களும், மனுதர்ம ஐயர்வால்களும்...

மன்னராட்சிக் காலத்தில் அமலில் இருந்த மநு தர்மத்தை, இன்றும் வாய்கிழியக் குறைகூறி வாழ்வைத் தொலைத்துக் கொண்டு இருப்பவர்கள், மக்களாட்சியில் உள்ள பெரும்பா(ழா, லா)ன வேற்றுமைகளைக் களைய முற்படாமல், அம்மநு தர்மத்தில் உள்ளது போலவே, அவ்வேற்றுமைகளைக்கலைகளாக நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். எனவேதான், “அரசூழியர்கள் சாதி” என்ற ஆணவச் சாதியால் விளைகிற கேடுகளால் மக்கள்படும் பெரும்பாட்டையும்

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 36

நம் நூல்கள் விளக்கி, அவற்றிலிருந்து தீர்வுபெறும் சட்ட விழிப்பறிவுணர்வைத் தருகிறது. இதுகுறித்து, “கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலில், “தண்டனையில் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில், தேவையான அளவிற்கு மட்டுஞ்சொன்னது நினைவிருக்கும்.

மனித இனத்தைத் திறமையின் அடிப்படையில் நான்குவகையாகப் பிரிக்கும் மறு தர்மத்தைக் குறைகூறுபவர்கள்,தற்போது நடைமுறையில் இருக்கும் ஒரு சாதியில், நாற்பது உட்பிரிவுச் சாதிகளென, நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சாதிகள் பல்கிப் பெருகியுள்ளதற்கு, மநுதர்மம் காரணமில்லையே! மாறாக, அந்தந்தச் சாதிகளைச் சார்ந்தவர்கள் தாமே காரணம்?!

ஆமாம், தமிழ்நாடு அரசு காலங்காலமாகக் கையில் வைத்திருக்கும், இட ஒதுக்கீட்டுச் சாதிகளின் பட்டியலில் 6 மட்டும் சுமார் அறுநூற்று ஐம்பது சாதிகளும் (அப்பட்டியலில் இடம்பெறாத பல சாதிகளும் உண்டு), இந்தியா முழுவதும் ஐந்தாயிரம் சாதிகளும் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தங்களது சாதியை வளர்த்தெடுத்து, அச்சாதிக்குத் தலைவர்களாக இருக்க விரும்புவதும், தன் தலைமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தங்களது சாதிச்சதிக்கு இட ஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்பதும், தங்களது சாதிமக்கள் நிறைந்த தொகுதியில் அல்லது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டும், வெற்றிபெற்றும்

சாதிகளை வ(ள, லு)ப்படுத்தி..,

மநுதர்மத்தால் சிறப்பான அதிகாரம்பெற்று மேல்சாதிஐயர்வாள்களாக வலம்வந்தவர் களைப்போலவே, ‘அரசாங்கத்தின் சிறப்பான அதிகாரம்பெற்ற ஐயர்வால்களாக’ வலம் வரும் இவர்கள், சாதிகளை ஒழிக்க வேண்டுமென முழக்கமிடுவது நகைச்சுவைமிக்க கேலிக்கூத்துத்தான்! இதனாலேயே, இட ஒதுக்கீடு என்னும் அரசாங்க ஐயர் சாதியில் தங்களது சாதிகளையும், மதங்களையும் இணைக்க வேண்டு மென்கிற போராட்டம், இந்தியா முழுவதும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பியுள்ளது.

பக்கம் – 37

தங்களின் சாதி, மதம் ஆகியவற்றால், இட ஒதுக்கீடு பெறுபவர்கள், அரசாங்க ஐயர்வால்களில் இரண்டாம் வகையினரே!

சாதி, இன, மத, மொழி, பேதம் என எல்லாவற்றாலும் வேறுபாடின்றி ஒன்றிவிட்ட அரசூழியர்கள் என்ற புது உயர்சாதியினர், அரசாங்க ஐயர்வால்களில் முதலாம் வகையினராவர்!!

உழைக்கும் மக்களின் உழைப்பில், ஒரேயொரு சதவிகிதங்கூட உழைக்காத, அரசூழிய சாதியினருக்குக் கொடுக்கப்படும் கூலியோ, ஊழியத்திற்குத் தகுந்தாற்போல லட்சத்தி லட்சம் அல்லது கோடானுகோடி மடங்கு அதிகமென்றால், அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பது கணக்கிட இயலாததாகவே இருக்கிறது.

இதில் மேலுமோர் ஒற்றுமையாக, இப்படிப்பட்டவர்கள் யாவரும், அரசூழியர்கள் என்கிற அடிப்படையில், ஒருவருக்கொருவர் தங்களின் சாதியினர் என்பதால், நியாயந்தான் சட்டம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கொள்கைக்கு நேர்விரோதமாக சட்ட நடவடிக்கைகளில் இருந்து, பல்வேறு விதங்களில் அரசால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, நாளுக்குநாள் ஜனநாயகம் பலவீனப்படுத்தப் பட்டு வருகிறது.

இதனாலேயே, இந்த அரசூழியச் சாதியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்கிற ஆர்வத்தில், ஓராயிரம் காலி இட அரசூழியங்களுக்கு நடைபெறும் தேர்வில், பல லட்சக்கணக்கான, இலட்சியமே இல்லாத சோம்பேறி மாக்கள் போட்டிப்போடும் அவலநிலையும் நிலவுகிறது.

இப்படிப்பட்ட சிறுபான்மையென்னும் குறுகிய மனப்பான்மை கொண்ட அரசூழியச் சாதியினரை, பெரும்பான்மை என்னும் பெரும்மனப்பான்மை மிக்க மக்கள், தக்க சட்ட விழிப்பறிவுணர்வோடு தவிர்த்து, தேவையான அளவிற்குச் சட்டத் தாக்குதலைத் தொடுத்தால் மட்டுமே, தத்தம் உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதோடு, பலவீனப்பட்டுக் கிடக்கும் குடியரசை பலப்படுத்தவும் முடியும்.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 38

பித்தர்களாகும், பக்தர்கள்!

இதுபோலவே, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதிகளாகக் களமிறங்கிய தோழர் பகத்சிங் உள்ளிட்டோரை, மகாத்மா காந்தி நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காப்பாற்றவில்லை என்ற பல்லவியை, (இ, எ)ன்றும் பாடிக்கொண்டிருக்கும் அதே தீவிரவாதக் கொள்கை வழியில் போராடுபவர்களுக்குத் துணையும் நிற்பதில்லை; ஆதரவும் அளிப்பதில்லை அகப்பட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடப்பவர்களைக் கண்டு கொள்வதும் இல்லை.

தோழர் பகத்சிங் போன்ற போராட்டக்காரர்கள் எவரும், தங்களின் செயலால், தங்களுக்கு என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை அறியாதவர்கள் அல்லர். இதனால்தான், தங்களைக்காப்பாற்றும்படி யாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்காமல், வீரமரணத்தைத் தழுவி, நாம் நினைவு கூறுமளவிற்கு, அவர்களே வரலாறு படைத்துள்ளார்கள்.

ஒரு பக்கம் இதனைப் பெருமையோடு எடுத்துச்சொல்லும்அவர்களது பக்தர்களே, மறுபுறம் பித்தர்கள் போன்று மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தும் விதமாகக் காப்பாற்றவில்லையென்று கூறி, அவர்களின் உயிர்த்தியாகத்தை முதலீடாக வைத்து, பிழைப்பு நடத்துகிறார்களோ என்றே எண்ணவேண்டியுள்ளது.

பழைய

பலரும்,

வரலாற்றுப் பக்கங்களில் மாவீரர்களாகத் தடம்பதித்தவர்களைக் கோழைகளாகச் சித்தரிக்காமல், அவர்களது பித்தர்களே ஓயமாட்டார்கள் போலிருக்கிறது!

தீவிரவாதம்’ நமக்குத் தேவையே!

இப்படிப்பட்ட போராட்டக்காரர்களைத் தீவிரவாதிகள், நக்சல் பாரிகள், மாவோயிஸ்டுகள் எனப் பல்வேறு பெயர்களில் முத்திரை குத்தி, அவர்கள் மனித குலத்திற்கே எதிரானவர்கள் என்ற மாயையைக் குடியரசைத் தாங்கி நிற்பதாகச் சொல்லும் நான்கு தூண்களும், சமுதாயத்தில் விதைத்துவிட்டதால், மக்களும் அவர்களது போராட்டத்தில் நமக்கு எவ்விதப் பங்கும், பொறுப்பும் இல்லையென்று கருதி, அப்போராட்டக்காரர்களைக் கண்டுகொள்வதே இல்லை. 

உண்மையில் நாம் ஒவ்வொருவருக்கும் தீவிரவாதம் தேவையே என்று நான் சொன்னால், ‘என்னடா இவன்.., சட்ட விழிப்பறிவுணர்வு என்று சொல்லிவிட்டு, அதுவும் நியாயத்தைத் தாண்டிய தர்மத்தின் அடிப்படையில் கேள்வி கேளுங்கள் என்று சொல்லிவிட்டுத் தற்போது அதர்மமாகத் தீவிரவாதம் தேவையே என்கிறானே’ என்றுதான் எண்ணத்தோன்றும்.

ஏனெனில், நம் குடியரசைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களும், உங்களைச் சிந்திக்கத் தூண்டும் மூளையில், தவறாகப் பதிய வைத்துள்ள சொல்லே, ‘தீவிரவாதம்”. உண்மையில், நானொரு தீவிரவாதி என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதுதான் உண்மை. நான் மட்டுமன்று; என்னைப் போலவே, நாட்டில் பல்வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இதில் நீங்களுங்கூட ஒருவராக இருக்கலாம் அல்லது இதற்குப் பிறகு, தீவிரவாதியாகவும் மாறலாம்! ஆமாம், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் தீவிரமாகச் செயல்படுபவர்கள் அனைவருமே, தீவிரவாதிகள்தாம்!!

ஆனால், தீவிரவாதிகள் என்று முற்றிலுந்தவறான அர்த்தத்தில் அழைக்கப்படுபவர்கள் அனைவரும், மனித குலத்திற்கு எதிராக, யாருமே எதிர்பார்க்காத குண்டு வெடிப்புப் போன்ற படுபயங்கரமான பாதகச் செயல்களைச் செய்யும், “பயங்கர

வாதிகளே!”

இப்படி, ஒருவர் அல்லது ஒரு குழு செய்யும் செயல்களின் நோக்கத்தையும், அதனால் சமூகத்தில் விளையும் தாக்கத்தையும் பகுத்தறியாமல், அனைவரையும் தீவிரவாதிகள் என்று கூறிப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து (வரு, விடு)கின்றனர். இந்த வகையில், உங்களின் நியாயத்திற்காக, இப்புதிய சட்ட விழிப்பறிவுணர்வோடு, புதிய கோணத்தில் போராடப்போகும் உங்களைக்கூடத் தீவிரவாதியென்று சொல்லிப் பயமுறுத்தப் பார்க்கலாம்.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 40

அப்படி யாரேனுஞ் சொன்னால், ‘ஆமாம், நானொரு சட்டத்தீவிரவாதி’ என்றுசொல்லி, அதற்குமேல் எதுவும் சொல்லவோ, செய்யவோ முடியாதபடிக்கு வாயடைக்கச் செய்து விடுங்கள். ஆங்கிலேய அடிமை அடக்குமுறையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடியவர்களைத் தியாகிகள் என்று கூறிச் சிறப்பிக்கும், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, அதே மாதிரியான அடக்கு முறைகளை எதிர்த்துப்போராடும் நம்மைத் தீவிரவாதிகள் என்று பயங்கரவாதிகள்போலச் சித்திரிப்பதும் நகைச்சுவை மிக்க கேலிக்கூத்துத்தான்.

அமைப்புத் தடையும், அதிகார அமைப்பின், தடையின்மையும்…

நம் நாட்டில், அரசு அமைப்புக்கள், அரசு சாரா அமைப்புக்கள்எனச் சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்புக்கள் இரண்டு உள்ளன.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள அரசுகளையும், இந்த அரசுகளின் கீழ் இயங்கும் காவல்துறை, நீதித்துறை போன்ற பல்வேறு, பல்நோக்கு அமைப்புக்களையும் அரசு அமைப்புக்கள் என்றுசொல்லலாம். இதுபோன்றே, அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட அரசுசாரா அமைப்புக்கள் பலவும் அரசின் அனுமதியுடனோ அல்லது அனுமதியில்லாமலோ செயல்படுகின்றன.

மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகளும், அரசின் அமைப்புக்களும் ஒழுங்கான முறையில், ஆக்கப்பூர்வமான வழியில் இயங்கியிருந்தால், அரசுசாரா அமைப்புக்களே தேவையில்லை என்கிற நிலையே நிச்சயம் உருவாகியிருக்கும். அரசின் அமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட அரசுசாரா அமைப்புக்களாவது, அரசின் அமைப்புக்களை ஒழுங்குபடுத்தினவா என்றால், இல்லை என்பதோடு, அவையும் எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றன.என்பதைக் “கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலில், “தன்னார்வ அமைப்புக்களின் (கட, மட)மையும் !?” என்கிற நான்காம் அத்தியாயத்தில், எனது அனுபவ ஆராய்ச்சியின் அடிப்படையில் மிகவும் விரிவாகச் சொன்னது, உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்.

பக்கம் – 41

அரசின் அமைப்புக்கள் தங்களின் இஷ்டம்போலச் செயல்படத் தேவையான சட்டத்தை இயற்றியும், தேவைப்பட்டால் இஷ்டப்படிச் சட்ட விரோதமாகச் செயல்பட அனுமதித்தும், அவ்வூழியர்களுக்குச் சட்டப்பாதுகாப்பை அளித்தும், தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களை (கஷ்ட, காய)ப்படுத்தும் அரசு, அரசுசாரா அமைப்புக்களைச் சுதந்திரமாகச் செயல் பட அனுமதிக்காமல், தங்களின் கடுமையான சட்டக் கட்டுப் பாட்டில், அடிமையாக வைத்திருக்கவே முயல்கின்றன. 

அரசின் அமைப்புக்களான காவல்துறை மற்றும் நீதித்துறையை எடுத்துக்கொண்டால், இவை என்ன நோக்கத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பதோடு, இவையே அநியாயங்களை ஆதரிக்கின்றன என்றும், இவை இருக்கும் தைரியத்தில்தான் அநியாயங்களே அரங்கேற்றப் படுகின்றன என்று சொன்னால் சற்றும் மிகையன்று!

இதைத்தான், பகுத்தறிவுப் பெரியார், “வலுத்தவன் இளைத்தவனை நேருக்குநேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதைவிட, நீதிமன்றம் மூலமும், வக்கீல்கள் மூலமும், பிடுங்கிக் கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும், மிகவும் சுலபமானதும், சட்டப்பூர்வமான காரியமாகவுமே இருந்து வருகிறது” என்று 10-05-1931 தேதியிட்ட குடியரசு வாரயிதழின் தலை யங்கத்தில் சிறுபத்தியாகத் (தி, தீட்டியுள்ளார்.

பெரியாரின் முதல் குருவான மகாத்மா காந்தி, உச்சக்கட்டக் காட்டமாக இந்திய தன்னாட்சி நூலின் 11-ஆவது கட்டுரையில், “மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு. தங்களின் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புபவர்கள் நீதிமன்றங்கள் மூலம் அதைச்செய்து வருகின்றனர்” என்று ஆங்கிலேயஆட்சியைப்பற்றி குறிப்பிட்டிருந்தாலும், அதே சட்ட வழி

முறைகளையும், நீதிமன்றங்களையும் பின்பற்றிவரும் நம் குடியரசுக்கும், அவ்வரிகள் சாலப்பொருந்தும்.

ஆக, அரசாலும், அரசின் பாலான பொதுமக்களுக்குபயனில்லை என்பதோடு, பாழாய்ப்போன. அமைப்புக்களாலும், பெரும் அன்றுபோலவே (இ, எ)ன்றும் பாதிப்புத்தான். நமக்கெல்லாம் மிச்சமென்பதுதான் வெட்டவெளிச்சம்.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 42

இப்படிப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, பல்வேறு வகையான அரசுசாரா அமைப்புக்களையுந் தடைசெய்யும் அரசு. இதிலும் “நியாயந்தான் சட்டம்” என்பதை அடிப்படை உரிமையாக வழங்குவதாக இந்திய சாசனத்தில் உறுதியளித்துள்ள அரசு, இதன்படி நியாயமான, யோக்கியமான அரசாக இருந்திருந்தால், ன் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டும் அல்லது அவை மக்களின் முன்னேற்றத்திற்கும் நியாயத்திற்கும் தடையாக இல்லாத,பாதுகாப்புப் படையாக இருக்கும்படி செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதையுஞ் செய்யவில்லை.

ஆங்கிலேயர் வழிவந்த நம் அரசும், தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் தனக்கு அதிகாரத்தை வழங்கிய மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது என்பதைத்தவிர, இதற்கு வேறென்ன பொருளிருக்க முடியும்?

அரசுக்கு அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு, அந்த அரசைத் தட்டிக் கேட்கும் உரிமையோ, தட்டிக்கேட்டும் பலனில்லை என்றால் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெறும் உரிமையோ எப்படியில்லாமற் போகுமென்ற நியாயக்கேள்வியை அன்றன்று; நாம் தர்மத்தின் அடிப்படையில் எழுப்ப வேண்டியிருக்கிறது.

இச்சீர்திருத்தங்களைச் செய்யவேண்டியது யார்?

தன்னுடைய ‘இந்தியத் தன்னாட்சி’ நூலில், ‘இங்கிலாந்தின் நிலைமை’ என்ற தலைப்பில், சத்தியவான் காந்தி எழுதியுள்ள (கு, க)ட்டுரையில், இங்கிலாந்துப் பாராளுமன்றம் மற்றும் பத்திரிகைகள் குறித்தும், இன்று நம் சமூகத்தில் நடை முறையில் உள்ள பல்வேறு எதார்த்தங்களையும், தீர்க்கதரிசியாக அப்பொழுதே எழுதிவிட்டு, இறுதியாக., “இங்கிலாந்தைப் போல், இந்தியா நடப்பதென்று ஆரம்பித்து விட்டால், இந்தியா அழிவுறும் என்பதே என்னுடைய உறுதியான அபிப்பிராயம்” என்று கூறியுள்ளார்.

இவைகுறித்த விரிவான விவரங்களையும், இந்தியக் குடிகார மக்களின் தலைவராக விளங்கும், ‘இந்தியத் தலைமைப் பொதுவூழியருக்கு’ (குடியரசுத் தலைவருக்கு)

எழுதிய கடிதத்தைப் பற்றியும், இந்நூலின் பிற்பகுதியில் விரிவாகச் சொல்ல உள்ளதால், இங்குத் தவிர்க்கிறேன்.

பக்கம் – 43

பொதுப்புரட்சிக்கான புதுக்கொள்கைகள்! இதேபோல, பகுத்தறிவுப் பெரியாரும், 10-05-1931 தேதி யிட்ட குடியரசு வார இதழின் தலையங்கத்தில், “வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள். இவையிரண்டும் இந்த நாட்டில் பிரபுத்தன்மையை காப்பாற்ற இருக்கின்றனவே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை” என்றுகூறித் தன் தலையங்கத்தைத் தொடங்கி, இத்தொழில்களின் அடுத்தடுத்த அயோக்கியத்தனங்களை அடுக்கடுக்காக எழுதியுள்ளார்.

இதனை ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலில், “மகாத்மாக்களை மன்னிப்போம்!” என்கிற தலைப்பில் நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும்.

ஆனாலுங்கூட, சமுதாயத்தில் நிலவும் சீர்கேடுகளை களையப் பெரியார் முயற்சி மேற்கொண்டாரே ஒழிய, சட்டத்திலன்று என்பதை அவரே ஒப்புக்கொள்ளும் விதமாக, “வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத்துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஓர் அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது” என்று கூறியுள்ளதும் நினைவிருக்கும். 

மேலும், இவரது கருத்தின்படி, காந்தி உட்பட, வேறு யாருமே சட்டத்தில் சீர்திருத்தஞ் செய்யும் முயற்சியில் களில் மிறங்கவில்லை. இதனால்தான், இவ்விருவரையும் இணைத்து, மேற்சொன்ன மகாத்மாக்களை மன்னிப்போம் என்ற தலைப்பையே எழுதினேன்.

ஆக, இதுவே நீதித்துறைச் சீர்திருத்தத்திற்கான களத்தில், நாம் களமிறங்க வேண்டிய சரியான தருணமென்பதைவிட, நமக்குக் கிடைத்துள்ள அரியதொரு நல்வாய்ப்பு என்பதை உணர்ந்து, ஏற்கெனவே பலரும், தானே தனக்காக வாதாடும் களத்திலிறங்கிக் கலக்கிக் கொண்டிருப்பதும், உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

இதனாலேயே, நான்தான் நீதித்துறையைச் சீர்திருத்த வந்துள்ள சீர்திருத்தவாதி என்று நினைத்து விடக்கூடாது.

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 44

ஏனெனில், இதையெல்லாம் செயல்படுத்தப் போவது, நீங்களுந்தாம் என்பதால், உங்களை வேண்டுமானால், சீர்திருத்தவாதியென்று எண்ணிக்கொள்ளுங்கள்; தவறில்லை. ஆனால், என்னையோ அல்லது மற்றவர்களையோ, ஒருபோதும் அப்படித் தவறாகக்கருதாதீர்கள்.

ஏனெனில், எப்படிச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவராலும், சமூகச்சீர்திருத்தம் என்பது அனுசரிக்கப்பட வேண்டியதோ, அப்படியேதான் நீதித்துறைச் சீர்திருத்தமென்பதும் குறைந்த பட்சம் நீதித்துறையை நாடும் ஒவ்வொருவராலும் அனுசரிக்கப்பட வேண்டியதேயன்றி, அது குறித்து அலசி ஆராய்ந்து, அச்சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் என்னால் மட்டுமே அனுசரிக்கப்பட வேண்டியதன்று.

இதனை மக்கள் உணராததால்தான், தாத்தாக்கள் காந்தி, பெரியார் காலத்திலேயே சீர்திருத்தம் அடைந்திருக்க வேண்டிய நீதித்துறை, அப்படியாகாமல், மேன்மேலும் சீர் கெட்டுப்போய்க் கிடக்கிறது.

இந்த வகையில், “இந்தத் துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஓர் அரசியல் வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது” என்ற பகுத்தறிவுப் பெரியாரின் கருத்துக்கூட சரியானதன்று. மாறாக, ‘இத்துறைகளில், சீர்திருத்தத்திற்கான

வழிமுறையை எடுத்துச் சொல்லவும், அதனைச் செயல்படுத்தவும் ஆள்களே கிடையாது’ என்றே சொல்லியிருக்க வேண்டும்.

சரி, இனி இச்சீர்திருத்தங்களை எல்லாம், நம் ஊழியர்களின் ஊழியப்பெயர்களில், நடைமுறைப்படுத்துவதில் இருந்து படிப்படியாய்ச் சொல்கிறேன்.

நடப்பது மன்னராட்சியா… மக்களாட்சியா?!

அரசுக்கு அதிகாரத்தை வழங்குவதே, பொதுமக்களாகிய நாம்தாம் என்பதை முன்பே சொன்னேன். இப்படித் தன்னிடம் இருப்பதை அடுத்தவனுக்குத் தாரைவார்த்து விட்டு, தன் தேவைக்குக் கொடுத்தவனிடமே யாராவது திரும்பக் கேட்பானா… அப்படிக் கேட்பதாக இருந்தால், முட்டாளாகவும், பிறருக்கு அடிமையாகவும் இல்லாமல், அவன் வேறெப்படி இருப்பான்?!

இந்த அவலச் சூழலைத்தான், நம்மை அடிமைப்படுத்த எண்ணிய ஆங்கிலேய அரசு, மறைமுகமாக உருவாக்கி மக்களை அடிமைப்

பக்கம் – 45

படுத்தியது. அவ்வாங்கில ஆட்சியைப் பின்பற்றியே, அவ்வழி வந்துள்ள நமது இந்தியக் குடியரசும், மக்களாட்சியென்ற பெயரில், மக்களைக் கோலோச்சிக் கொடுங்கோன்மைச் செய்யும் ஆட்சியைச் செய்துவருகிறது.

இதனால், பெரும்பாலான மக்களுக்கு, ஆங்கிலேய ஆட்சியேமேலென்று எண்ணத்தோன்றுகிறது.

இப்படிச் சொல்வது, ஏதோ எனது கற்பனையென்றோ அல்லது அரசூழியர்களின் மீதான காழ்ப்புணர்ச்சி என்றோஎண்ணி விடக்கூடாது என்பதற்காகவே, விடுதலைக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தி, பகுத்தறிவுப் பெரியார் போன்ற

சமூகச் சிந்தனையாளர்கள் சொன்னதைச் சீர்திருத்தங்குறித்த கடந்த பகுதியில் சொன்னேன். இனியும் தேவைக்கேற்ப ஆங்காங்கே சொல்லவிருக்கிறேன்.

இப்படி, வேறு யார்யார் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இதைக்குறித்து மேலும் நீங்க அறிய முற்பட்டால், அவை போன்ற கருத்துக்கள் நிறையவே கிடைக்கும் என்பதை மட்டும், எனதுஅனுபவத்தில் உறுதியாகச் சொல்கிறேன்.

மேலுமெனக்கு வாசித்தறியும் ஆர்வத்தைவிட, ஆராய்ந்தறியும் ஆர்வமே மிகமிக அதிகமென்கிற வகையில், சட்டத்துடன் சமூகத்தைக் குறித்து ஆராய்வதற்கும், ஆராய்ச்சியில்கிடைத்த அற்புதமான சங்கதிகளை, உங்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லவுமே நேரம் போதவில்லை.

மேலும், இவ்விருவரின் கருத்துக்களும் நம் தாய்மொழித்தமிழில் கிடைப்பதால், எளிதாகப் படித்து, எனது சட்ட ஆராய்ச்சியோடு சேர்த்து, அவ்விரு மகாத்மாக்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து, உங்களுக்கு எடுத்துச்சொல்ல முடிகிறது. அவ்வளவே!

சத்தியவான் காந்தி இந்தியத் தன்னாட்சி நூலை எழுதிய போது, உலகின் முதல் குடியரசு நாடான இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் வயது எழுநூறு என்று கூறியுள்ளார். அக்குடியரசின் கீழ்தான் இந்தியாவையும் ஆட்சி செய்தார்கள் என்னும்போது, அவர்கள் நம்மை மட்டும், அடிமைப்படுத்தி வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டதற்கு காரணங்கள் என்ன?

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 46

முதலாவதாக, அவர்கள் நமக்கு அந்நிய நாட்டினர்என்பதால், இங்கிருந்த செல்வ வளங்களையெல்லாம் கொள்ளையடித்து, அவர்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றார்கள் என்பது கடுங்குற்றச்சாட்டாகவே இன்றுவரை இருக்கிறது. 

இன்றுள்ள நம் ஆட்சியாளர்களுங்கூட, நமது இயற்கை வளங்களையும், நம்மையுஞ் சுரண்டிக் கொள்ளையடித்த கோடானுகோடிப் பணத்தை, சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்பதும், அதனை மீட்டு மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற பரவலான கருத்தும், இதற்கான மத்திய அரசின் முயற்சியும் யாவரும் அறிந்ததே.

ஆனால், அக்கோடானுகோடிப் பணமும், அவ்வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கோ அல்லது அவர்களது வாரிசுகளுக்கோகூட, இனியொருபோதும் திரும்பக் கிடைக்காது என்பது, அவர்களுக்கே தெரியாத ரகசியம். அவர்களுக்கே’ கிடைக்காதது, இந்திய அரசுக்கு மாத்திரம் எப்படிக் கிடைத்து விடும் என்பது குறித்த விரிவான அம்பலக் கட்டுரையை, ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்” நூலின் அடுத்தடுத்த தொகுதிகளில் விரிவாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

இதனைச் சுருக்கமாகச் சொன்னால், இந்தியனின் ஒற்றுமையைப் பிளவுப்படுத்திக் கொள்ளையடித்துத் தன்னினத்தை ஆங்கிலேயன் வாழ வைத்தான். ஆனால் இந்தியனோ, ஆங்கிலேயன் விதைத்த விதையை அறுவடை செய்யும் விதமாக, இந்தியனின் பிளவை நங்கூரமிட்டுக் கொள்ளையடித்து, ஆங்கிலேயனையும், அயல் நாட்டவனையும் வாழ வைக்கிறான். 

ஆகவே, நமக்குத் துரோகிகள் வெளியில் இல்லை; நமக்கு உள்ளேயேதாம் இருக்கிறார்கள். இனியும், நம்மை உறிஞ்சும் இத்தேசத்துரோகிகளைக் களையெடுக்காமல் விடலாமா என, நீங்களெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் என்பதற்கான ஆழ்ந்தபதிவேயிது!

இரண்டாவதாக அரசின் மிகமுக்கிய தலைமை ஆளுநர் பதவி மற்றும் இதர ஆளுநர் பதவிகள், முறையே கவர்னர் ஜெனரல் மற்றும் கவர்னர் என்ற ஆங்கிலப் பெயர்களில் ஆங்கிலேயர்கள் வசமே இருந்தன..

பக்கம் – 47

 பொதுப்புரட்சிக்கான புதுக்கொள்கைகள்! மேலும், நீதியரசர்கள் என்ற ஜஸ்டிஸ் (Just + Ice) பதவிகளும் ஆங்கிலேயர்கள் வசமே இருந்தன.

இம்முக்கிய பதவிகளுக்குக் கீழான வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு வகையான அதிகாரிகள், நடுவர்கள், நீதிபதிகள் போன்ற பதவிகளில், அரசு ஊழியர்கள் என்ற ஆசை வார்த்தையைக் காட்டி, அவர்கள் கொண்டுவந்த அடிமைக் கல்வித்திட்டத்தில் நம்மைப் படிக்கவைத்தும், பதவிகளுக்கான தேர்வுகளில் போட்டிபோட வைத்தும், அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப்பதவிகளை வழங்கியும்…,

அவர்கள் என்றென்றும் அரசுக்கு விசுவாசிகளாக, ஆள்காட்டிகளாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பணியில் சட்டப்பாதுகாப்பை அளித்தும், மக்களிடம் லஞ்சம் வாங்குவதை வேண்டுமென்றே அனுமதித்தும், உழைக்கும் மக்கள் பெறும் ஊதியத்தைவிடப் பன்மடங்கு கூடுதல் ஊதியத்தைக் கொடுத்தும், ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்றபின், ஓய்வூதியப் பலன்கள் என்று வாழ்நாள் முழுவதும் பணப்பலனை வழங்கியும்..,

அவ்வூழியர் இறந்த பின், அவரது மனைவி மற்றும் மக(ன்களு, ள்களு)க்கும், அந்த ஓய்வு ஊழியத்தை வழங்கியும், பணியில் இருக்கும்போது அவ்வூழியர் இறந்தால், அவரது வாரிசுக்கு அந்த வேலையை அல்லது தகுதியான அரசு வேலையை வழங்கியும், ஒற்றுமையாய் வாழ்ந்த நமக்குள் பிரிவினைகளை உருவாக்கி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளு, ல்லு)ம் வகையில் கொம்பைச்சீவி, சிண்டு முடியும் வேலையைச் செய்து, நம்மையடக்கி ஆண்டார்கள். இதில், சற்றேனும் நமது இந்தியக் குடியரசில் மாற்றந் தெரிகிறதா என்றால், கொடி ஆட்சி மாறி, கட்சி ஆட்சிகள் தாம் மாறியிருக்கின்றனவே ஒழிய, காட்சிகள் எதுவும் மாறாமல், ஆங்கிலேய அடிமையாட்சியைவிடக் கொடியளில் ஆட்சியாகத்தான் நீடிக்கிறதேயொழிய, நமக்கான

குடியாட்சியாக மாறவேயில்லை என்று சொல்லுமளவிற்கு,

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 48

அப்பழுக்கற்ற அதே ஆங்கிலேய வழி ஆட்சிதான் நடந்து வருகிறது என்பதற்கு எத்தனையோ உண்மைகளைச் சொல்லமுடியுமென்றாலும், மிகப்பொருத்தமாக ஒரேயொரு உண்மையைச் சொல்கிறேன்.

ஆங்கிலேயனின் வரிவிதிப்பை எதிர்த்து, “நீ எனக்கு மாமனா, மச்சானா… மானங்கெட்டவனே” என்று வீரவசனம் பேசிய, வீரபாண்டிய கட்டபொம்மனைச் சுதந்திரப் போராட்ட தியாகி என்றுகூறும் நம் இந்திய விடுதலை வரலாறு, இப்பொழுதுள்ள நம் அரசைப் பார்த்து, அதே கேள்வியைக் கேட்டால், தேசத்துரோகி என்று முத்திரைகுத்தி சிறையில் அடைப்பார்களா அல்லது சுதந்திர இந்தியாவிலும் விடுதலைக்காகக் குரல்கொடுத்த வீரத்திருமகன் என்றும், தியாகியென்றும் போற்றுவார்களா?!

ஆக, உலகின் எந்த ஒரு குடியரசும், மக்களின் நல்வாழ்வுக்காக ஆண்டவன் ஏற்படுத்தித் தந்த அமைப்பன்று; மாறாக, மக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அம்மக்களையே மாக்களாக அடக்கியாளத் துடிக்கும் சுயநல அரசியல்வாதிகளின் அற்பத்தனமான அமைப்பே என்பதில், இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை!

இது இந்திய அரசுக்கு மட்டுமன்று, உலகிலுள்ள எல்லா அரசுகளுக்கும் சாலப் பொருந்தும். ஏனெனில், எல்லா அரசுகளின் எதார்த்த நிலையும், மக்களை அடக்கி ஆள்வதுதானே ஒழிய, இயற்கை வழங்கிய சுதந்திரத்தோடு வாழவிடுவதன்று!!

ஆமாம், இந்த அற்புதமான உலகில் மனிதனாகப் பிறந்து உள்ள நாம், இந்திய அரசு தனக்கென்று வரையறை செய்து உள்ள நிலப்பரப்பில் பிறந்ததால், இந்தியன் என்று முத்திரை

குத்தப்பட்டு, இந்திய அரசின் சட்ட விதிகளுக்குக் கட்டுப் பட்டு வாழவேண்டிய கட்டாயத்திற்கு தாமாகவே தள்ளப் பட்டுள்ளோம் என்பதே, நாம் பிறப்பதற்கு முன்பாகவே நம் சுதந்திரம் பறிபோய்விட்டது என்று நான் சொன்னதற்கு சிறந்ததோர் உண்மை.

இப்படித்தான், இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் தன்னையறியாமலேயே, அந்தந்த அரசுகளாலும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்நிர்ப்பந்தம் இவ்வுலகில்

பக்கம் – 49

பிறந்த மனிதர்களுக்கு மட்டுந்தானே அன்றி, மற்ற உயிரினங்களுக்கில்லை.

ஆமாம், நான் எந்த நாட்டையும் சார்ந்தவன் அன்று; மாறாக, இயற்கையை மட்டுமே சார்ந்தவன் என்று சொல்லமுடியாத அளவிற்கு, அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த உலகையும் தங்களின் தன்னலனுக்காகக் கூறுபோட்டு வைத்துக்கொண்டு, இப்படிக் கூறுபோட்ட சக அரசியல் எதிரிகளிடமிருந்து, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, நம்மையெல்லாம் பாதுகாப்பதாகக் கூறி, நம்மிடம் இருந்து வரியென்ற பெயரில் சுரண்டும் வரிப்பணத்திலேயே, நமக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கியும், நம்மைப் பாதுகாப்புப் பணியில் அடிமைப்படுத்தியும், இயற்கை தந்த ஈடுஇணையில்லா உயிரை, எதிரிகளது போரில் இழக்கச்செய்தபின், நம் வரிப்பணத்தில் இருந்தே, நம் உயிருக்கான இழப்பீட்டையும் வழங்கி விடுகிறார்கள்.

ஒவ்வொரு நாடும் வைத்திருக்கும் இராணுவப்படை உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய எப்பாதுகாப்புப் படையும் எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும், உள்நாட்டில் வாழும் குடிமக்களைப் பாதுகாக்கவும் என்கிற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

ஆனால், உண்மைநிலை இதுவன்று, ஆம், உள்நாட்டுப்பாதுகாப்பு என்பது, மக்களைப் பிரித்தாண்டு, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கே என்பதை, “நீதியைத்தேடி… சட்ட அறிவுக் களஞ்சியம் ” நூலில் “மக்களைப் பிரித்தாளவே காவல்துறை” என்ற தலைப்பில் சொன்னது நினைவிருக்கும்.

இதுபோலவே, தேவைப்பட்டால் உள்நாட்டிற்குள்ளேயே இராணுவத்தையும் ஆங்காங்கே களமிறக்கி பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்துவதையும் பார்த்திருப்பீர்கள். எனவே, தேவைப்பட்டால், சொந்தக் குடிமக்களுக்கு எதிராகவே இராணுவத்தை ஏவுவார்கள்.

இதற்கு வசதியாகத்தான், பெரும்பான்மையான உழைக்கும் சாதாரணக் குடிமக்கள் கனவிலும் கற்பனை செய்துபார்க்க

வாரண்ட் பாலாவின் மநு வரையுங்கலை! பக்கம் – 50

முடியாத அளவிற்குச் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலமும், பயிற்சியுடன் கூடிய ஆயுதங்களை வழங்கியும், ‘இந்த ஆயுதங்களை ஏந்துவதே தனக்குப் பெருமை’ என்பது போலவும், ‘அந்த ஆயுதங்களைக் கொண்டு எதிரில் இருப்பவர்கள் யாராயினும் அவர்களைச் சுட்டுவீழ்த்துவதே கௌரவம்’ என்பது போலவும், நம் இளைய குடிமக்களாகிய இராணுவ இளைஞர்கள் நன்றாகவே மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளனர்.

இதன் விளைவாக, உத்தரவிட்டால், எதிரில் நிற்போர் நியாயத்துக்காகப் போராடும் சொந்தக் குடிமக்களாகிய உற்ற உறவுகளே ஆயினும், ‘தாங்கள் யாரைப் பாதுகாப்பதாகச் சொல்கிறார்களோ, அதே குடிமக்களையே இப்படியெல்லாம் செய்கிறோமே’ என்பதைக்கூடச் சிந்திக்க முடியாத அளவிற்கு, ஈவு இரக்கமின்றிக் குடிமக்களைக் கடுஞ்சித்திரவதை செய்யவும், அவர்கள் மீது பாலியல் பலாத்காரங்களை அரங்கேற்றவும், உச்சக்கட்டமாய் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் போல, எத்தனை எத்தனையோ பிணங்களைக் குவிக்கச் சிறிதும் தயங்காமல் தயாராய் இருக்கிறார்கள்.

நாமேன் இப்படிச் சொந்தக் குடிமக்களைக் கொல்ல வேண்டுமெனச் சிந்தித்தாலோ அல்லது இட்ட உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்தாலோ, அவர்கள் மீது ஆயுதப்படை நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டு, உடனடியாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதோடு, இந்திய சாசனக்கோட்பாடு 136(2) இன்படி, தண்டிக்கப்பட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்திலுங்கூட மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதியில்லை.

ஆகையால், இதுவரை எத்தனைபேர் என்னென்ன விதங்களில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற புள்ளி விவரங்கள், சக வீரர்களுக்குங்கூடத் தெரியவராமல் இரகசியம் காக்கப்படுகிறது என்றால், ‘தங்களைத் தாங்களே உயர்வாகக் கருதும், ஆயுதம் ஏந்திய ஆயுதப்படையினர் எவ்வளவு தூரம் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்’ என்பதைப் புரிந்துக் கொள்ளுங்களேன்!


பக்கம் – 51

பொதுப்புரட்சிக்கான புதுக்கொள்கைகள்!

இப்படி, இந்நூலுக்கென முன்னட்டையில் முன்மொழிந்துள்ள தத்துவத்தின் சாராம்சத்தை. எந்தவோர் இடத்தில் பொருத்திப் பார்த்தாலும், அதன் உண்மைப்பொருள் விளங்கும்.

உலகின் மிகப்பெரிய குடியரசு என்று சொல்லக்கூடிய நம் நாட்டிலேயே ஆயுதப் படையினரின் நிலைமை இதுதான் என்றால், மற்ற நாடுகளின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

உண்மையில், உலக நாடுகளுக்கிடையேயான எந்தவொரு யுத்தத்தின் பிரதான நோக்கமும், முதலில் எதிரி நாடுகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தானே தவிர, அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் சொல்வது போல், எதிரி நாட்டு மக்களைக் கொன்று குவிப்பது அன்று.

ஏனெனில், மக்கள் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தமுடியாது. ஆகையால், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போரில், அந்நாட்டு மக்களைக் கொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, எந்நாட்டுக் குடிமக்களுக் குள்ளும், எப்பகையும் கிடையாது.

இதனால்தான், எந்தவொரு நாட்டைச் சேர்ந்த குடிமக்களும், வேறு எந்தவொரு நாட்டிலும் குடியுரிமை பெற்றுப் பிழைப்பு நடத்த முடிகிறது. ஆனால், இப்படி எந்தவோர் அரசியல் வியாதியாலும், வேறொரு நாட்டில், தன்னுடைய ஆட்சியை அமைக்கமுடியாது.

மேலும், உலகளவில் அரசியல்வாதிகள் யாரும் தம் வாரிசுகளுக்கு நாட்டுப் பற்றையூட்டி, இதுபோன்ற நாட்டின் பாதுகாப்புப் போன்ற உயிருக்கு ஆபத்தான பணியிலோ அல்லது அரசூழியத்திலோ அமர்த்துவதில்லை.

மாறாகத் தனக்கு அடுத்ததாக ஆட்சியைப்பிடிக்கும் அரசியல் வாரிசாகத்தான் வளர்த்தெடுக் கிறார்கள் என்பதை, நம் பாட்டன் காலத்தில் இந்தியா குடியரசான அரசியலிலிருந்து, இன்றைய கொள்ளுப் பேரனது அரசியல்வரை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பல கட்சிகளில், பரவலான காட்சிகள் இதுவே!

வாரிசு இல்லாத அரசியல்வியாதிகளைத் தவிர, மற்ற அரசியல் வியாதிகளின் நிலையென்பது வாரிசு அரசியல்தான். ஆனாலும், இதனை உணர மறுத்துப் போர்வீரனாக நாட்டைக் காப்பதாகப்

Updates soon

AIARA

🔊 Listen to this Editing in Progress—திருத்தம் நடந்துக்கொண்டு இருக்கிறது.—- மநு வரையுங்கலை! அடங்காதே!… அஞ்சாதே!… அடக்காதே!.. தத்துவம் . அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும், காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!! வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!! ஆசிரியர்:-வாரண்ட் பாலா நிதியுதவி:- மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், புதுதில்லி வெளியீடு:- கேர் சொசைட்டி, அஞ்சல் பெட்டி எண்:- 55 53,ஏரித்தெரு, ஓசூர்-635109 மநு வரையுங்கலை விவரம் தலைப்பு:- மநு வரையுங்கலை!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *