பட்டா (patta) தொடர்பான முக்கிய தீர்ப்புகள்
- வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது
நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018
சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018
W. P. No – 491/2012, dt – 4.6.2014
W. P. No – 16294/2012, dt – 4.4.2014
- சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால் அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாக கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.
S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019
- விஏஓக்கள் மீதான புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 13916/2019, dt – 1.7.2019
- சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த்துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமையியல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.
W. P. No – 18489/2009, dt – 1.7.2011
- பட்டா உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.
S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்
- பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.
S. A. No – 2060/2001, dt – 2.11.2012
S. A. No – 1715/1989, dt – 25.6.2002
W. P. No – 16294/2012, dt – 3.4.2014
- கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
Madras High Court
W. P. No – 18754, 20304, 2613/2005
DT – 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)
- பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)
- போலி பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court
- பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய தாசில்தாருக்கே (#Tahsildar) அதிகாரம் உண்டு. வருவாய் கோட்டாட்சியா் பட்டா மாற்றம் செய்ய முடியாது. கோட்டாட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.