How to cancel False FIR from police

FIR Cancel | How to cancel the falsely put-up FIR | பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.

  • விளக்கம் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் K. அன்புச்செல்வன்.
  • கே. காவல் நிலையங்களில் எப்படி புகார் அளிப்பது?
  • ப. எழுத்து பூர்வமாகவோ, அல்லது வாய் மொழியாகவோ கொடுக்கலாம். அதேசமயம், ஒரு விபத்து அல்லது அடிதடி என்னும்பச்சத்தில் தொலைபேசி 100 மூலமாக புகார் அளிக்கலாம்.
  • கே. பகார் எவ்வாறு கொடுக்க வேண்டும், அந்த புகாரில் என்னென்னன அம்சங்கள் இடம் பற்று இருக்கவேண்டும்?
  • ப. ஒரு புகாரில் சம்பவம் நடந்த இடம், தேதி, நேரம் மற்றும் சாட்சிகள் சரியாக இடம் பெற்று இருக்கவேண்டும்.
  • புகார் அளித்த பிறகு, காவல் நிலையத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பார்கள்?
  • ப. புகார் கொடுத்த உடன், CSR எனப்படும் புகார் ஏற்பு மனு, உடனே கொடுக்க வேண்டும். அடுத்து அந்த புகாரானது, Cognizable Offence எனப்படும் கைது செய்யகூடிய குற்றமாக இருந்தால் மட்டுமே, FIR (First Information Report) எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள்.
  • கே. FIR பதுவு செய்த பிறகு, எப்படி FIR காப்பியை ஏறுவது?
  • ப. FIR பதிவு செய்த உடன், CRPC Criminal Procedure Code எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம் 154(2) ன் படி, காவல் துறை உடனே இலவசமா காப்பி வழங்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில், 24 நேரத்தில் அந்த பகுதி நீதி மன்றத்தின் வாயிலாக FIR காப்பியை சுயமாக மனு அழித்தோ அல்லது ஒரு வழக்கறிஞர் உதவியுனடனோ பெறலாம்.
  • கே. காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்தாலோ, அல்லது ஏற்ற புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டாலோ என்ன செய்ய வேண்டும்?
  • ப. அந்த வட்டாரத்தில் காவல் மேல் அதிகாளுக்கு நேரக சென்றோ, அல்லது தபால் மூலமாகவோ மேல் முறையீடு செய்யலாம்.
  • கே. மேல் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன செய்யவேனுட்ம்?
  • ப. CRPC 153(4) ன் படி, மேல் அதிகாரி தானாகவோ அல்லது தனக்கு கீழ் இயங்கும் காவல் நிலையம் மூலமாகவோ நடவடிக்கை எடுப்பார்.
  • கே. யாருமே நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாம் எங்கு செல்லவேண்டும்.
  • ப. அதிகார்கள் (காவல் ஊழியர்கள்) யாரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அந்தந்த வட்டார கிழமை நீதி மன்றங்களில் CRPC 156 (3)ன் படி மனு அளித்து நடவடிக்கை எடுக்க சொல்லலாம்.
  • கே.கிழமை நீதி மன்றமும் நம்முடைய மனுவை தள்ளுபடி செய்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்.
  • ப. CRPC 482ன் படி உயர்நீதி மன்றத்தை நாடலாம்.
  • கே. காவல் துறை நம் மீது பொய் வழக்கு பதிவு செய்தால் என்ன செய்வது?
  • ப. பொய் வழக்கை பற்றி நாம் கவலை பட தேவையில்லை . உயர்நீதி மன்ற அதிகார வரம்பை பயன்படுத்தி CRPC 482ன் படி ரத்து செய்ய கோரலாம். அல்லது அதே உயர்நீதி மன்ற அதிகாரத்தை பயன்படுத்தி, வேறு ஒரு காவல் நிலையத்தில் மறு விசாரணை செய்ய மாற்றகோரி மனு அளிக்கலாம். அல்லது காவல்துறை முழுவதுமாக நம்பிக்கை இல்லாத பட்சத்தில், CBCID வழக்கை மாற்றக்கோரி கேட்கலாம். கடைசியாக CBI பரிந்துரையையும் கேட்க முடியும்.
AIARA

🔊 Listen to this விளக்கம் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் K. அன்புச்செல்வன். கே. காவல் நிலையங்களில் எப்படி புகார் அளிப்பது? ப. எழுத்து பூர்வமாகவோ, அல்லது வாய் மொழியாகவோ கொடுக்கலாம். அதேசமயம், ஒரு விபத்து அல்லது அடிதடி என்னும்பச்சத்தில் தொலைபேசி 100 மூலமாக புகார் அளிக்கலாம். கே. பகார் எவ்வாறு கொடுக்க வேண்டும், அந்த புகாரில் என்னென்னன அம்சங்கள் இடம் பற்று இருக்கவேண்டும்? ப. ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *