⚖️குடும்ப உறுப்பினர் ஒத்துழைக்காவிட்டாலும் வாரிசுச் சான்றிதழ் பெறலாம்…!
வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate) விண்ணப்பிக்கும்போது, குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் மட்டும் தனது ஆதார் அட்டை அல்லது வேறு அடையாள ஆவணத்தை (ID Proof) வழங்க மறுத்தால், அதற்காக மற்ற வாரிசுகள் விண்ணப்பிக்க முடியாது என்று அர்த்தமல்ல. நிச்சயமாக விண்ணப்பிக்க முடியும்…! (And / Or) ஒருவர் இறந்த பிறகு அவருடைய சட்ட வாரிசுகள் அனைவரின் ஆதார் அட்டை அல்லது அடையாள ஆவணங்களைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு இல்லாதபோது சட்ட வாரிசுச் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், விண்ணப்பதாரர் ஒரு பிரமாண வாக்குமூலம் (Affidavit) தாக்கல் செய்து, இறந்த நபரின் பெயர், அவருடன் விண்ணப்பதாரருக்கு உள்ள உறவுமுறை, உயிருடன் உள்ள அனைத்து வாரிசுகளின் பெயர்கள், வயது, முகவரி, திருமண நிலை உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட நபர் அடையாள ஆவணத்தை வழங்க மறுப்பதற்கான காரணத்தையும் விளக்கலாம்.
மற்றொரு சட்ட வாரிசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவோ, அவருடைய ஆவணங்களைப் பெற முடியவில்லை என்பதற்காகவோ சட்ட வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை விசாரிக்காமல் நிராகரிப்பது சரியான அணுகுமுறை அல்ல.
இதன் அடிப்படையில், வட்டாட்சியர் (Tahsildar) அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடலாம். விசாரணையில் வாரிசுகளின் உறவுமுறை உறுதிப்படுத்தப்பட்டு, உரிய ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் சட்ட விதிகளின்படி வாரிசுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.
ஒருவேளை விண்ணப்பம் உரிய காரணமின்றி நிராகரிக்கப்பட்டாலோ அல்லது பரிசீலிக்கப்படாமல் இருந்தாலோ, மேல்முறையீடு மற்றும் தேவையான சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 226-ன் கீழ் ரிட் மனு தாக்கல் செய்து உரிய நிவாரணம் கோரலாம். நீதிப்பேராணை மனு எண். W.P.No.32241 of 2026 – இல் நாள்: 17-08-2026 அன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தால் தெளிவான விளக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.👇🏽
