⚖️போலீஸ் பொய் வழக்கு போட்டு 6 வருடம் ஜெயிலில் வைத்ததால் அரசு ரூ.6 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நீதிப்பேராணை மனு எண். Special Leave Petition (Crl.) No.4859 of 2026 – இல் நாள்: 26-10-2026 அன்று மாண்பமை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
📌 நீதிமன்ற விவரம்:
- நீதிமன்றம்: இந்திய உச்சநீதிமன்றம் (Supreme Court of India)
- வழக்கு: Arun @ Deepak vs State of Uttar Pradesh
- தீர்ப்பு நாள்: 26 அக்டோபர் 2026
- அமர்வு: நீதிபதிகள் J.B. Pardiwala மற்றும் K. Vinod Chandran
- சட்டம்: அரசியல் சட்டம் பிரிவு 21 (வாழும் உரிமை), BNSS பிரிவு 528 (பழைய CrPC 482), பாரதிய சாட்சிய சட்டம் பிரிவு 63 (பழைய Evidence Act 65B)
- முந்தைய முக்கிய தீர்ப்பு: State of Haryana vs Bhajan Lal – 1992 – பொய் FIR-ஐ ரத்து செய்ய 7 விதிகள்
வழக்கின் சுருக்கம்:
உத்தரபிரதேசம் ஆக்ராவில் அக்டோபர் 2019-ல் ஒரு கடத்தல் + கொலை வழக்கில் FIR போடப்பட்டது. அந்த FIR-ல் அருண் பெயரே இல்லை. புகார்தாரர் வாக்குமூலத்திலும் அவர் பெயர் இல்லை.
பிறகு போலீஸ் “CCTV-ல் இருக்கிறார், கூட இருந்தவர் சொன்னார்” என்று சொல்லி 14.11.2019-ல் அருணை கைது செய்தது. 6 வருடம் விசாரணை கைதியாக ஜெயிலில் வைத்திருந்தார்கள்.
விசாரணையில் தெரிந்தது: CCTV-க்கு சட்டப்படி தேவையான 65B சான்றிதழே இல்லை. அந்த CCTV தெளிவாகவே இல்லை. கூட இருந்தவரின் வாக்குமூலம் மட்டும் வைத்து வழக்கு நடத்தினார்கள். கடைசியில் நீதிமன்றம் அருணை முழுமையாக விடுதலை செய்தது.
உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
1. போலீஸ் வேலை தண்டனை வாங்கி தருவது மட்டுமல்ல:
“போலீஸ், விசாரணை அமைப்பு என்பது எப்படியாவது தண்டனை வாங்கி தருவதற்காக மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கும் வரை அவர் நிரபராதி தான்.”
2. இது கற்பனை கதை – Slipshod Investigation:
“6 வருடம் ஒரு மனிதனின் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது. வெறும் யூகத்தின் அடிப்படையில், கற்பனை கதையை வைத்து கட்டப்பட்ட வழக்கு. அடிப்படை விசாரணை கூட செய்யவில்லை. இது நீதிக்கே அவமானம் – Travesty of Justice.”
3. ரூ.6 லட்சம் நஷ்ட ஈடு:
பொய் / அரைகுறை விசாரணையால் 6 வருடம் ஜெயிலில் இருந்ததற்கு உ.பி. அரசு 1 மாதத்தில் ரூ.6,00,000 நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் 18% வட்டியுடன் கொடுக்க வேண்டும்.
4. DGP-க்கு உத்தரவு:
உ.பி. DGP மற்றும் உள்துறை செயலாளர் அனைத்து விசாரணை அதிகாரிகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். இந்த தீர்ப்பை அனைத்து ஸ்டேஷன்களுக்கும் அனுப்ப வேண்டும்.
5. பொய் FIR-ஐ ரத்து செய்யும் Bhajan Lal 7 விதிகள் (1992):
FIR-ல் சொன்னதை அப்படியே உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் குற்றமே வரவில்லை என்றால், FIR-ஐ உயர்நீதிமன்றம் ரத்து செய்யலாம். பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட FIR, சிவில் பிரச்சனையை கிரிமினல் ஆக்கிய FIR – இவற்றையும் ரத்து செய்யலாம்.
மக்களுக்கான பயன் – பொய் வழக்கு போட்டால் நீங்கள் என்ன செய்யலாம்?
✅ Step 1 – முன் ஜாமீன்: கைது செய்வார்கள் என்று தெரிந்தால் உடனே முன் ஜாமீன் (Anticipatory Bail – BNSS பிரிவு 482) வாங்குங்கள்.
✅ Step 2 – FIR ரத்து மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் BNSS பிரிவு 528-ன் படி FIR-ஐ ரத்து செய்ய மனு போடலாம். விசாரணை ஆரம்ப நிலையில் இருந்தாலும் கூட உயர்நீதிமன்றம் தலையிடலாம் – Kulandaisamy vs State – உச்சநீதிமன்றம் 2025 தீர்ப்பு.
✅ Step 3 – ஆதாரம் வையுங்கள்: நீங்கள் சம்பவ இடத்தில் இல்லை என்பதற்கு CCTV, அலுவலக வருகை பதிவு, டிக்கெட், வங்கி Transaction – இது போன்ற மறுக்க முடியாத ஆதாரம் இருந்தால் அதை வைத்தே FIR-ஐ ரத்து செய்யலாம் – Rahul vs UP – உச்சநீதிமன்றம் 11.08.2026 தீர்ப்பு.
✅ Step 4 – நஷ்ட ஈடு கேளுங்கள்: விடுதலை ஆன பிறகு, பொய் வழக்கு போட்டவர் மீது, போலீஸ் மீது Malicious Prosecution வழக்கு போட்டு நஷ்ட ஈடு கேட்கலாம். BNSS பிரிவு 273 (பழைய CrPC 250) – நீதிமன்றமே நஷ்ட ஈடு கொடுக்கலாம்.
✅ Step 5 – பொய் புகார் கொடுத்தவர் மீது வழக்கு: BNS பிரிவு 233 (பழைய IPC 211) – பொய் வழக்கு போட்டவருக்கு 2 வருடம் வரை சிறை தண்டனை உண்டு.👇🏽
