GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் Jurisdiction of Criminal Courts | குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு | Part – I | BNSS

Jurisdiction of Criminal Courts | குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு | Part – I | BNSS

பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கீதா என்ற இந்தச் சட்டம் பல்வேறு துறைகளுக்கும் பொருந்தக்கூடியது. குற்றவியல் வழக்குகளைக் கையாளக்கூடிய வழக்கறிஞர்கள், அரசு இயந்திரங்கள், நீதிமன்றங்கள் அத்தனையையும் கட்டுப்படுத்தக்கூடியது, நெறிப்படுத்தக்கூடியது. இந்தத் துறைகள் எப்படிச் செயல்பட வேண்டும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வது பாரதிய நாகரிக சுரக்ஷா சங்கீதாதான்.

காவல்துறையாக இருந்தாலும் சரி, ப்ராசிக்யூஷன் துறையாக இருந்தாலும் சரி, டிஃபென்ஸ் கவுன்சில் எதிர்த் தரப்பில் ஆஜராகக்கூடிய வழக்கறிஞருடைய நடவடிக்கையையும் நெறிப்படுத்தக்கூடியது பாரதிய நாகரிக சுரக்ஷா சங்கீதா.

மேஜிஸ்திரேட், அமர்வு நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அதற்கு மேலாக இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளையும் எடுத்துச் சொல்வது பாரதிய நாகரிக சுரக்ஷா சங்கீதா.

அதுபோல சிறைத் துறை, சிறை அதிகாரிகள், அவர்களுடைய நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. கடைசியாக, சீர்திருத்தல் செய்யக்கூடிய அதிகாரம் பெற்ற அமைப்புகள், ஒரு குற்றவாளியைச் சீர்திருத்தல் செய்வதற்கு அரசாங்கத்தால் இருக்கக்கூடிய நிர்வாக அமைப்புகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது.

அந்த வகையில், 14-வது அத்தியாயம் வந்து, ஒரு குற்ற வழக்கினை விசாரிப்பதற்கும், சாட்சி விசாரணை செய்வதற்கும், குற்றவியல் நீதிமன்றங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பற்றிப் பேசுவோம். இன்குயரி அண்ட் ட்ரையல். அதைப் பற்றிப் பேசக்கூடிய அத்தியாயம் அத்தியாயம் 14. ஜூரிஸ்டிக்ஷன் ஆஃப் கிரிமினல் கோர்ட்ஸ் இன் இன்குயரிஸ் அண்ட் ட்ரையல்ஸ்.

இன்குயரி என்றால் என்ன என்பதை பி.என்.எஸ்.எஸ். செக்ஷன் 2k-ல் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்குயரி, ட்ரையல் என்று இரண்டு வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ட்ரையல் என்பது நீதிமன்றத்தில் சாட்சிகளை விசாரணை செய்து, சாட்சியத்தைப் பதிவு செய்வது, சான்றாவணங்களைக் குறியீடு செய்வது, சான்றுப் பொருட்களைக் குறியீடு செய்வது. இதெல்லாம் ட்ரையலில் நடக்கக்கூடிய விஷயங்கள்.

அப்படியென்றால் இன்குயரி என்றால் என்ன? பி.என்.எஸ்.எஸ்.-ல் செக்ஷன் 2, சப்செக்ஷன் k, 2k. இன்குயரி மீன்ஸ் எவரி என்குயரி அதர் தன் எ ட்ரையல். சாட்சி விசாரணையைத் தவிர மற்ற எல்லாமும் விசாரணை, இன்குயரி எனப்படும். அதாவது, இன்குயரி மீன்ஸ் எவரி என்குயரி அதர் தன் எ ட்ரையல் கண்டக்டட் அண்டர் திஸ் சங்கீதா பை எ மேஜிஸ்திரேட் ஆர் கோர்ட்.

நீதிமன்றத்தார் அல்லது நீதித்துறை நடுவராக இந்தச் சங்கீதாவுக்குக் கீழே சொல்லப்பட்டிருக்கக்கூடிய நடைமுறைகளைச் செய்வது, சாட்சி விசாரணைகளைத் தவிர்த்து மீதி எல்லாம், எல்லா நடவடிக்கைகளும் இன்குயரி எனப்படும். ட்ரையலைத் தவிர எல்லாமே இன்குயரிதான். அந்த அளவுக்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படியென்றால், ஒரு குற்ற வழக்கினை விசாரிப்பதற்கு டு கண்டக்ட் என்குயரி, சாட்சிகள் விசாரணை செய்வதற்கு டு கண்டக்ட் ட்ரையல். குற்றவியல் நீதிமன்றங்களுக்கு இருக்கக்கூடிய அதிகார வரம்பு அத்தியாயம் 14-ல் சொல்லப்படுகிறது.

ஒரு குற்ற வழக்கு எந்த நீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும்? ஒரு குற்றச்சம்பவம் நடந்துவிட்டு, இந்தக் குற்றச்சம்பவத்தைப் பொறுத்து போலீசார் புலன் விசாரணை செய்து, குற்ற இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்கள். அந்தக் குற்ற இறுதி அறிக்கையின் பெயரில் காக்னிசன்ஸ் எடுப்பதற்கு எந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது? அந்தக் குற்ற இறுதி அறிக்கையின் அடிப்படையில் இன்குயரி நடத்துவதற்கு, ட்ரையல் நடத்துவதற்கு எந்த நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருக்கிறது? அப்படிங்கிற இந்த அத்தியாயம் 14-க்குக் கீழ் சொல்லக்கூடிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில்தான் நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கும்.

வழக்கு சம்பவம் நடந்த இடமா? எதிரி குடியிருக்கிற இடமா? புகார்தாரர் குடியிருக்கிற இடமா? அப்படிங்கறதுக்கு செக்ஷன் 197-ல் விடை இருக்கிறது. வழக்கு விசாரணை, இன்குயரி, சாட்சி விசாரணைக்காக இடம் எது? என்குயரி நடத்துவதற்கும், ட்ரையல் நடத்துவதற்கும் அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றம் எது என்பதைத் தீர்மானிப்பதைப் பற்றி முதலில் செக்ஷன் 197 பாரதிய நாகரிக சுரக்ஷா சங்கீதாவில் பார்க்கலாம்.

197-ல் தான் இந்த நீதிமன்றங்களுடைய அதிகார வரம்பு தொடர்பான அத்தியாயம் 14 ஆரம்பமாகிறது. டைட்டில் ஆஃப் செக்ஷன் 197, பிளேஸ் ஆஃப் என்குயரி அண்ட் ட்ரையல். சாதாரணமாக வழக்கு விசாரணை, சாட்சி விசாரணை நடக்கக்கூடிய இடம், ஒவ்வொரு குற்றமும் அது எந்த இடத்தில் நிகழ்ந்ததோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்பு கொண்டுள்ள நீதிமன்றத்தில் சாதாரணமாக வழக்கு விசாரணையும் சாட்சி விசாரணையும் நடக்கும். இதுதான் செக்ஷன் 197.

எங்கே குற்றம் நடந்ததோ, அந்த நீதிமன்றத்திற்கு மட்டும்தான் வழக்கை விசாரிக்க அதிகாரம் இருக்கிறது என்பது செக்ஷன் 197. நாம் ட்ரையல் என்றதை நிறைய பார்த்திருக்கிறோம். செஷன்ஸ் ட்ரையல், வாரண்ட் ட்ரையல், சம்மன்ஸ் ட்ரையல், சம்மரி ட்ரையல். இதெல்லாம் எந்த நீதிமன்றத்தில் நடக்க வேண்டும் என்று சொல்லுதுன்னா, அந்தக் குற்றம் எந்த ஊரில் நடந்ததோ, அந்த ஊர் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட இடத்தில் அமைந்திருக்கிறதோ, அந்த நீதிமன்றத்தில்தான் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும், வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்பது செக்ஷன் 197.

இதற்கு விதிவிலக்குகள் உண்டு. இது பொதுவான விதி. செக்ஷன் 197 பொதுவான விதி. இதற்கு விதிவிலக்கை எங்கே போய்ப் பார்க்க வேண்டும்? அத்தியாயம் 33 ஆஃப் பாரதிய நாகரிக சுரக்ஷா சங்கீதா. இது ட்ரான்ஸ்ஃபர் ஆஃப் கிரிமினல் கேசஸ். ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையை மாற்றுவது தொடர்பாக அத்தியாயம் 33 பேசுகிறது.

இங்கே வந்து செக்ஷன் 446, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்திற்கு வழக்குகளையும் அப்பீல்களையும் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பேசுகிறது. இதுதான் விதிவிலக்கு. குற்றச்சம்பவம் அந்த நீதிமன்றத்தில்தான் நடத்த வேண்டும் என்று சொல்கிற விதிக்கு விதிவிலக்காக இருக்கக்கூடியது அத்தியாயம் 33.

உச்ச நீதிமன்றம் வந்து எந்த வழக்கானாலும் சரி, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரம் பெற்ற அமைப்பு உச்ச நீதிமன்றம். அது வழக்கு விசாரணையாக இருந்தாலும் சரி, மேல்முறையீடாக இருந்தாலும் சரி, காவல்துறை புலனாய்வாக இருந்தாலும் சரி, இன்வெஸ்டிகேஷன், ட்ரையல், அப்பீல் இந்த மூன்றையும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரம் பெற்ற அமைப்பு, செக்ஷன் 446-க்குக் கீழ் மாண்புமிகு உச்ச நீதிமன்றம்.

அதே மாதிரி செக்ஷன் 447 பி.என்.எஸ்.எஸ். வந்து மாண்புமிகு உயர் நீதிமன்றங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பற்றிப் பேசுகிறது. ட்ரான்ஸ்ஃபர் ஆஃப் கேசஸ். இது வந்து ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வழக்குகளை மாற்றுவது. இன்வெஸ்டிகேஷனா இருந்தாலும் சரி, ட்ரையலா இருந்தாலும் சரி, அப்பீலா இருந்தாலும் சரி, ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு அதை மாற்ற வேண்டும் அப்படின்னா, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பது 447.

அதே மாதிரி மாவட்ட அமர்வு நீதிபதிக்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. செக்ஷன் 448-க்குக் கீழ் பவர் ஆஃப் செஷன்ஸ் ஜட்ஜ் டு ட்ரான்ஸ்ஃபர் கேசஸ். ஒரு மாவட்டத்துக்குள்ளேயே இருக்கக்கூடிய பல்வேறு நீதிமன்றங்களில், ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக்கூடிய அதிகாரம் வந்து யாருக்கு இருக்கிறது? மாவட்ட நீதிபதிக்கு இருக்கிறது. இது 448.

அதே மாதிரி செக்ஷன் 449-ல் அந்த வித்ட்ராயல் ஆஃப் கேசஸ் அண்ட் அப்பீல்ஸ் பை செஷன்ஸ் ஜட்ஜ். செஷன்ஸ் நீதிமன்றம் மேட் ஓவர் பண்ணி இருக்கக்கூடிய வழக்குகளை வந்து வித்ட்ராயில் பண்ணிட்டு மற்றொரு நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொடுக்கக்கூடியதைப் பற்றி செக்ஷன் 449 பேசுகிறது.

அதே மாதிரி ஜூடிசியல் மேஜிஸ்திரேட் வந்து கேசஸ் வித்ட்ராயில் பண்ணக்கூடிய சூழ்நிலைகள் பற்றி செக்ஷன் 458-ல் சொல்லுது. அதே மாதிரி மேக்கிங் ஓவர் ஆர் வித்ட்ரா ஆஃப் கேசஸ் பை எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்திரேட். எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்திரேட்டிடம் சில கேசஸ் விசாரணைக்கு இருக்கும். அதை ஒரு எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்திரேட்டிலிருந்து வித்ட்ராயில் பண்ணி மற்றொரு எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்திரேட்டுக்கு மாத்துறது சம்பந்தமானது செக்ஷன் 451.

இப்போ இந்த மாதிரி ஒரு நீதிமன்றத்தில் கேஸ் இருக்கு. செக்ஷன் 197-க்குக் கீழ் குற்றச்சம்பவம் எங்கே நடந்ததோ, அந்த ஊர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை மற்றொரு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ, செஷன்ஸ் நீதிமன்றமோ மாற்றி உத்தரவு பிறப்பிக்கும் போது, அவ்வாறு மாற்றுவதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். ரீசன் டு பி ரெக்கார்டட் அப்படிங்கறது செக்ஷன் 458 பி.என்.எஸ்.எஸ். இதுதான் அந்த 197.

இப்போ ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குற்றம் நிகழும் போது என்ன செய்ய வேண்டும்? வழக்கு விசாரணை அல்லது சாட்சி விசாரணை நடைபெறும் இடங்கள் எது எது அப்படிங்கறதை செக்ஷன் 198-ல் சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் நான்கு வகையான சூழ்நிலைகள். இந்த நான்கு சூழ்நிலைக்கும் எது அதிகார வரம்புடைய நீதிமன்றம் அப்படிங்கறதைப் பார்க்க வேண்டும்.

எந்த இடத்தில் நிகழ்ந்தது எனச் சந்தேகம் இருக்கும்போது, இது முதல் சூழ்நிலை. அதாவது செக்ஷன் 198 எதைப் பற்றிப் பேசுதுன்னா, மல்டிபிள் ஆக்ட். ஒன்றுக்கு மேற்பட்ட செயல். ஒரு குற்றத்தை நிகழ்த்துவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட செயல்கள் செய்யப்படுகிறது. மல்டிபிள் பிளேசஸ். மல்டிபிள் லொகேஷனில் அந்தக் குற்றம் நடக்கிறது. வெவ்வேறு பகுதியில் நடக்கிறது. இது தொடர்பாக செக்ஷன் 198-ல் சொல்லுது.

அப்படியென்றால் சம்பவம் வந்து பல்வேறு இடங்களில் நடக்கிறது. பல்வேறு நேரங்களில் நிகழ்வு. ஆனால் ஒரே குற்றம்தான் இருக்கு. அப்படி இருக்கும்போது, இந்தக் குற்றச்சம்பவம் எந்த இடத்தில் நிகழ்ந்தது எனச் சந்தேகம் இருக்கும்போது, எந்தெந்த பகுதியில் எல்லாம் கண்டறியப்பட்டதோ, இந்தச் செயல் வந்து எந்தெந்த நீதிமன்ற எல்லைக்குள் நடந்ததோ, எல்லா நீதிமன்றத்துக்கும் விசாரிக்கிறதுக்கு அதிகாரம் உண்டு.

ஒரு குற்றம் நடக்கிறது. பல செயல்களை உள்ளடக்கி இருக்கு. அந்த ஒரு குற்றத்துக்குள் பல செயல்கள் உள்ளடங்கி இருக்கு. உதாரணமாக, ஆளைக் கடத்துவது, கிட்னாப்பிங், அந்த ஆளை மறைத்து வைப்பது, அந்த ஆளைக் கொன்று விடுவது, மறு கிணத்தை அழித்து விடுவது, அந்த டெட் பாடியை வந்து டெஸ்ட்ராய் பண்றது. இது ஒவ்வொன்றும் எந்த ஆள் வரை உடைய நீதிமன்ற எல்லைக்குள் நடந்திருக்குன்னு உறுதியாகக் கண்டுபிடிக்க முடியல அப்படின்னா, ஒவ்வொரு சம்பவமும் எந்தெந்த நீதிமன்றத்துக்குள் நடந்ததோ, அத்தனை நீதிமன்றத்துக்கும் அதிகாரம். பல ஜூரிஸ்டிக்ஷன் இன்வால்வ் ஆகுது. எதுன்னு உறுதியாத் தெரியல அப்படின்னா, இது முதல் சூழ்நிலை.

குற்றத்தின் ஒரு பகுதி ஒரு ஏரியா, மற்றொரு பகுதி மற்றொரு ஏரியால நடக்கும். இது இரண்டாவது சூழ்நிலை. தொடர்ச்சியாக நடக்கிற குற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு நீதிமன்ற எல்லைக்குள் நடந்திருக்கு. இது மூணாவது சூழ்நிலை. நான்காவது சூழ்நிலை வந்து, பல்வேறு செயல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட எல்லையில நடக்குது. இப்படி இந்த நான்கு சூழ்நிலைகள் இருக்கும்போது, இந்தக் குற்றச் செயல் நடந்துள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் அந்த வழக்கைப் பொறுத்து விசாரணையை நடத்தலாம்.

பல்வேறு பகுதி, பல்வேறு நீதிமன்றம். இப்போ எல்லா நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இருக்கு. அப்படியென்றால் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளலாம். இது செக்ஷன் 193.

அடுத்ததாக நாம் செக்ஷன் 199 பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவு உண்டு அப்படின்னு நமக்குத் தெரியும். அதே மாதிரி ஒவ்வொரு குற்றத்திற்குமான விளைவுகள் உண்டு. எஃபெக்ட் உண்டு. குற்றம் ஒரு நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும். அந்தக் குற்றச்சம்பவத்திற்கான விளைவு வந்து மற்றொரு நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியிலே இருந்ததுன்னா, எந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்துவது? எந்த நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இருக்கு? அப்படின்னு பார்த்தா, இரண்டு நீதிமன்றத்திற்குமே அதிகார வரம்பு உண்டு அப்படிங்கறது செக்ஷன் 199.

குற்றம் நிகழ்ந்த இடம் அல்லது அதன் விளைவு ஏற்பட்ட இடங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை செய்யவும் ட்ரையல் நடத்தவும் அதிகாரம் இருக்கு. இரண்டில் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் நடத்தலாம். அதை இரண்டில் எந்த நீதிமன்றம் அப்படிங்கறதை வந்து, முதலில் வந்து காவல்துறையில் சார்ஜ் ஷீட்டை பைல் பண்றாங்க. அதுக்குப் பிறகு வந்து பாதிக்கப்பட்டவங்களோ அல்லது எதிரியோ இந்த இரண்டு இடத்தில் நடத்துறதுக்கு சட்டத்தில் இடம் இருக்கு. அதனால இந்த நீதிமன்றத்திலிருந்து அந்த நீதிமன்றத்துக்கு மாத்தித் தரணும் அப்படின்னு மாவட்டத்துக்குள்ளேயே இருந்தா செஷன்ஸ் கோர்ட்லயும், மாநிலங்களுக்கு உள்ள இருந்தா உயர் நீதிமன்றத்தையும், வெவ்வேறு மாநிலமா இருந்ததுன்னா உச்ச நீதிமன்றத்தையும் நாடலாம்.

சம்பவம் நடந்த இடத்தை வைத்துதான் ஒரு குற்றத்தை விசாரிக்க அதிகாரம் உள்ள நீதிமன்றம் எது என்பது தீர்மானிக்கப்படும். சுருக்கமாகப் பார்த்தா, செக்ஷன் 197, 198, 199 குற்றச்சம்பவம் நடந்த இடத்தை வைத்துதான் அந்தக் குற்றத்தை விசாரிக்க அதிகாரம் உள்ள நீதிமன்றம் எது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதைச் சொன்னது வந்து மாண்புமிகு நீதிமன்றம். இது முன் தீர்ப்பு முபாரக் அலி எதிர் ஸ்டேட் ஆஃப் பாம்பே.

முபாரக் அலி எதிர் ஸ்டேட் ஆஃப் பாம்பே அப்படிங்கிற வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கக்கூடிய விஷயம் இது.

செக்ஷன் 200. ஒரு செயல் நடக்குது. அந்தச் செயலுக்கும் ஒரு குற்றத்திற்கும் தொடர்பு இருக்கு. இந்தச் செயலைக் குற்றமாக எடுத்துக்கொள்கிறபோது, குற்றத்தை எந்த நீதிமன்றம் விசாரணை செய்கிறதோ, அதே நீதிமன்றம் விசாரணை செய்யலாம். இப்போ ஒரு செயல் நடக்குது. ஏற்கனவே நடந்த குற்றத்தோடு அல்லது பின்னால நடக்க இருக்கிற குற்றத்தோடு இந்தச் செயலுக்கு ஒரு தொடர்பு இருக்கு. அப்போ செயல் நடந்தது ஒரு இடமா இருக்கு. அந்தக் குற்றச்சம்பவம் நடந்தது வேறு ஒரு நீதிமன்ற அதிகாரம்.

இப்போ இதையும் இந்த இரண்டு நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இருக்கு. இந்தச் செயல் நடந்த இடத்தின் மீது அதிகாரம் கொண்டிருக்கக்கூடிய நீதிமன்றம் அல்லது அந்தக் குற்றச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள நீதிமன்றம், ஏதாவது ஒரு இடத்தின் மீது அதிகார வரம்பு கொண்டுள்ள நீதிமன்றம் வழக்கை விசாரிக்கலாம் அப்படிங்கறது செக்ஷன் 200.

இப்போ செக்ஷன் 201. இந்த 201-ல் வந்து ஒரு நாலு உட்பிரிவு இருக்கு. நான்கு உட்பிரிவுகள் பர்டிகுலர் அபென்சஸ் பற்றிப் பேசுது. ஒரு குறிப்பிட்ட வழக்குகள் தொடர்பான வழக்கு விசாரணையை எந்த நீதிமன்றத்தில் நடத்தலாம் அப்படின்னு ஸ்பெசிபிக் அபென்சஸ் சொல்லப்படுகிறது.

இப்போ டகாய்தி, டகாய்தி வித் மர்டர், கேங் ஆஃப் டகாய்ட்டி, எஸ்கேப்பிங் பிரம் கஸ்டடி. இந்த டகாய்ட்டில இருக்கிறவங்க வந்து தப்பிச்சு போற இடம், டகாய்ட்டி நடந்த இடம், டகாய்ட்டி வித் மர்டர் நடந்த இடம். இந்த மாதிரி கேஸ்ல, அதாவது டகாய்ட்டி, டகாய்ட்டி வித் மர்டர், கேங் ஆஃப் டகாய்ட்டி, எஸ்கேப்பிங் பிரம் டகாய்ட்டி இந்த நான்கு வகையான குற்றம் வந்து, குற்றம் நிகழ்ந்த இடம் எதுவோ அந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் உண்டு. அதே மாதிரி எதிரி எங்கு கண்டுபிடிக்கப்படுகிறார்களோ, எதிரி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் மீது அதிகாரம் கொண்டுள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தணும். இது சப்செக்ஷன் ஒன்னு.

சப்செக்ஷன் இரண்டு வந்து கிட்னாப்பிங் அபென்ஸ் பத்திப் பேசுது. ஆள் கடத்தல் குற்றம். கிட்னாப்பிங், அப்டக்ஷன், கன்வே. இப்போ வந்து ஒரு குழந்தையை மாமா வந்து கடைக்குக் கூட்டிட்டு போறேன்னு கூட்டிட்டு வராங்க. கொண்டு வந்து ஒரு ஆள் கடத்தக்கூடிய நபர்ட்ட அந்தக் குழந்தையை ஒப்படைச்சிடுறாங்க. அந்த ஒப்படைக்கிறது கன்வே. கன்வே, கன்சீல்டு. எங்க மறைச்சு வச்சிருக்காங்களோ, கடத்திட்டு போனவங்க, அதே மாதிரி கடத்திட்டு போனவங்களை எங்க அடைச்சு வச்சிருக்காங்களோ, டீடைன்ட். கிட்னாப்பிங் நடந்த இடம், அப்டெக்ஷன் நடந்த இடம், கன்வே இடம், கன்சீல்டு மறைச்சு வச்சிருக்கிற இடம், டீடைன்ட்டு அடைச்சு வச்சிருக்கிற இடம். இதுல ஏதாவது ஒரு இடத்தின் மீது அதிகாரம் கொண்டிருக்கக்கூடிய நீதிமன்றத்தில் வந்து இந்த வழக்கு விசாரணை நடத்தலாம் அப்படிங்கறது சப்செக்ஷன் இரண்டு.

சப்செக்ஷன் மூணு வந்து தர்ட், திருட்டு, எக்ஸ்டார்ஷன், வழிப்பறி, ராபரி இதைப் பற்றிப் பேசுது. இரட்டி பறிக்கிறது. இது வந்து குற்றம் நடந்த இடம், திருட்டுக்குள் மறைத்து வைக்க இருந்த இடம், திருட்டுப் பொருள் எனத் தெரிந்தே அந்தத் திருட்டுப் பொருளை ஒருவர் பெற்றுக்கொண்ட இடம். இந்த மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கக்கூடிய நீதிமன்றத்தில் வழக்கை நடத்தலாம்.

இப்போ நான்காவது உட்பிரிவு வந்து கிரிமினல் மிஸ் அப்ராப்ரியேஷன், கிரிமினல் பிரீச் ஆஃப் டிரஸ்ட் குற்றம் வரும். நம்பிக்கை மோசடி. இந்தக் குற்றம் வரும் நம்பிக்கை மோசடி வந்து பணம் சம்பந்தமாக இருக்கும், சில பொருள்கள் சம்பந்தமா. அப்போ இந்தக் குற்றங்கள் வந்து எந்த இடத்தில் நடந்ததோ அந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் வருகிறது. அதே மாதிரி இந்தக் குற்றத்தில் தொடரக்கூடிய பொருள் எங்கு கண்டறியப்படுகிறதோ அந்த இடத்தில. இப்போ இந்த கிரிமினல் பிரீச் ஆஃப் டிரஸ்ட்ல வந்து ஏதோ மெயின் கீழோ, சில நகைகளோ இன்வால்வ் ஆகும். இந்த நகை அல்லது வாகனம் வந்து எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படுதோ, அப்படிக் கண்டுபிடிக்கிற இடத்தின் மீது அதிகாரம் கொண்டுள்ள நீதிமன்றத்துக்கும் அதிகாரம் உண்டு.

அதே மாதிரி அது வந்து திருடப்பட்ட பொருள் அப்படின்னா, திருடுன இடம், திருட்டுப் பொருளைப் பதுக்கி வச்சிருக்கிற இடம், திருட்டுப் பொருளும் எதிரியும் எங்க இருக்காங்களோ அந்த இடம். அதைத்தான் 201-ல் சப்செக்ஷன் அஞ்சு, திருட்டுப் பொருள் சம்பந்தமா. இது எல்லாம் செக்ஷன் 201, ஸ்பெசிபிக் அபென்சஸ் பற்றி ஒரு லீட் பண்றதுக்கு அதிகார வரம்பு எங்க இருக்கு, எப்படி இருக்குன்னு சொல்லக்கூடியதா இருக்கு.

இப்போ செக்ஷன் 202 பி.என்.எஸ்.எஸ். செக்ஷன் 202, மின்னணு தகவல் தொடர்பு. எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன். அதாவது ஈமெயில்ல அனுப்புறோம், எஸ்எம்எஸ்ல அனுப்புறோம். இதுதான் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன். அடிப்படையா நடக்கக்கூடிய குற்றங்களை எந்த நீதிமன்றத்தில் விசாரிக்கணும்? அல்லது கடிதங்கள். கடிதத்தை எழுதி அதை வந்து போஸ்ட் ஆபீஸ் பாக்ஸ்ல போடுறோம். அது ஒரு முகவரியில் இருக்கிற நபருக்குப் போய்ச் சேரும். அப்போ இந்த மாதிரி மின்னணு தகவல் தொடர்பு, ஈமெயில், எஸ்எம்எஸ், கடிதங்கள் மூலமா நடக்கிற குற்றத்தை எந்த நீதிமன்றம் விசாரிக்கலாம் அப்படின்னா, இந்தத் தகவலை வந்து தயாரித்து அனுப்பிய இடம், இந்தத் தகவல் போய்ச் சேர்ந்த இடம். அனுப்பிய இடம், பெற்றுக்கொண்ட இடம் என இரண்டு இடம் இருக்கு.

தகவல் தொடர்பு சீட்டிங் மோசடி செய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகவலை அனுப்புன இடம் எங்க இருக்கோ அந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் வரப்போகுது. அந்தத் தகவல் எங்க போய்ச் சேர்ந்ததோ, அப்படிப் போய்ச் சேர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய நீதிமன்றத்துக்கும் அதிகாரம் வந்திருக்கு.

இப்போ இந்த வெறும் தகவலா இருந்ததுன்னா, நமக்கு வந்து கேஸ் எதுவும் வரப்போறதில்லை. இந்தத் தகவல் வந்து எப்படிப்பட்ட தகவலா இருக்கணும்? தகவல் வந்து சீட்டிங் மோசடி செய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டிருக்கணும். அல்லது தண்டிக்கத்தக்க வேறு வகையான குற்றத்தைச் செய்வதற்கான தகவலா இருக்கணும். லெட்டர் மிரட்டுற மாதிரி, டெஃபமேஷன், அவைலபிள் லெட்டர், வஞ்சகமாக ஒரு சொத்தை ஒப்படைக்கப் போறது, டிசானஸ்ட்லி இன்டியூசிங் டு டெலிவர் எ ப்ராப்பர்ட்டி. சொத்தை கொடு, பணம் கொடுன்னு கேக்குறது. எங்கே சொத்து கொடுக்கப்பட்டதோ அந்த இடத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு அதிகாரம்.

இப்படி வஞ்சகமா மிரட்டுறது மூலமா தகவல் அனுப்புன இடம், தகவல் போய்ச் சேர்ந்த இடம், அப்புறம் இந்தப் பொருள் வந்து எந்த ஊர்ல வச்சுக் கொடுக்குறாங்களோ. இப்போ சென்னையிலிருந்து தகவல் அனுப்புறோம். தஞ்சாவூர்ல உள்ளவருக்கு மிரட்டல் போயிருக்கு. இப்போ தஞ்சாவூர்ல உள்ளவர் வந்து பணத்தைக் கொண்டு வந்து திருச்சியில வச்சுக் கொடுக்கிறார். அப்போ சென்னைக்கு அதிகாரம் உண்டு. தஞ்சாவூர்ல உள்ள நீதிமன்றத்துக்கும் உண்டு. திருச்சியில் உள்ள நீதிமன்றத்துக்கும் ஜூரிஸ்டிக்ஷன் உண்டு. எங்கே வைத்து சொத்து கொடுக்கப்பட்டதோ அந்த இடத்தில் உள்ள நீதிமன்றத்துக்கும் உண்டு. எதிரியால் பெற்றுக்கொள்ளப்பட்ட இடம், அந்தப் பணத்தை வந்து எதிரி எந்த இடத்துல வச்சுப் பெற்றுக்கொண்டாரோ அந்த இடத்துக்கும் உண்டு.

இப்போ செக்ஷன் 202 சப்செக்ஷன் 2-ல் வந்து ஒரு குறிப்பிட்ட குற்றத்தைப் பத்திப் பேசுது. பாரதிய நியாய சங்கீதா இருக்கக்கூடிய செக்ஷன் 82. மேரிங் அகைன் டூரிங் லைஃப் டைம் ஆஃப் ஹஸ்பண்ட் ஆர் வைஃப். ஒரு கணவன் இருக்காரு. அவருடைய மனைவி உயிருடன் இருக்கும்போதே, அந்த மனைவியுடனான திருமணம் ரத்து செய்யப்படாமல், நடைமுறையில் இருக்கும்போதே, இன்னொரு திருமணத்தைச் செஞ்சுக்கிறார். அது குற்றம் தானே. அது வந்து செக்ஷன் 82 பி.என்.எஸ்.-க்குக் கீழ் குற்றமாக, அப்படிப் பிரிவு 82-ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் ஒன்று நிகழும் போது, இந்தக் குற்றத்தை விசாரிப்பதற்கு எந்த நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இருக்கு அப்படின்னு பார்த்தா, மூன்று விஷயம் தீர்மானிக்கும்.

முதல் விஷயம், குற்றம் நடந்த இடம். அதாவது செகண்ட் மேரேஜ் நடந்த இடம். அடுத்தது, அந்த முதலாவது மனைவி அல்லது முதலாவது கணவருடன் கடைசியாகக் கூடியிருந்த இடம். இப்போ உயிரோட இன்னொரு ஸ்பௌஸ் இருக்கிறாங்க இல்லையா, அவங்க கூட கடைசியா எங்க குடித்தனம் நடத்தினாரோ அந்த இடம். அப்புறம் இரண்டாவது திருமணம் நடந்த பிறகு பாதிக்கப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ நிரந்தரமாகப் போயிருக்கும் இடம்.

இப்போ இந்த இரண்டாவது திருமணத்தினால யாரோ ஒருத்தர் பாதிக்கப்பட்டு இருக்காங்க இல்லையா. இப்போ ஆம்பளையா இருந்ததுன்னா, முதல் மனைவி பாதிக்கப்பட்டவங்க. இந்த ஹஸ்பண்ட் செகண்ட் மேரேஜ் பண்ணிட்டாரு அப்படின்னு சொல்லி, முதல் மனைவி எங்க போய் நிரந்தரமா தங்கி இருக்கிறாங்களோ, அப்படிக் குடியிருக்கிற இடத்துல உள்ள நீதிமன்றத்திலேயே வந்து அவங்க வந்து கேஸ பைல் பண்ணலாம். அந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் வரப்போகுது. செக்ஷன் 82 ஆஃப் பி.என்.எஸ். உள்ள குற்றம் தொடர்பா இந்த செக்ஷன் 202 சப்செக்ஷன் இரண்டு பேசுது.

அப்புறம் செக்ஷன் 203. இது வந்து கடல் பயணம், வாயேஜ் அல்லது தலைவழி பயணம், ஜானி இதைப் பற்றிப் பேசக்கூடியது. வாயேஜ் அண்ட் ஜானியின் போது நடக்கக்கூடிய குற்றங்கள். இப்போ இந்தப் பயணம், டிராவலிங் நடந்துகிட்டு இருக்கு. பாதிப்பு மனிதர்களுக்கும் ஏற்படும் அல்லது அந்தப் பயணம் இருக்கக்கூடிய பொருட்களுக்கு ஏற்படும்.

இப்போ ஒரு லாரில சரக்குப் பொருள்கள் கொண்டு போறாங்க. அந்தச் சரக்குப் பொருள்களைத் தேடிட்டாங்க. அப்போ அது டிராவலிங்ல அந்தப் பொருள்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட. இப்போ ஒருத்தர் வந்து கப்பல்ல போயிட்டு இருக்கிறார். கப்பல்ல போயிட்டு இருக்கக்கூடிய மனிதருக்கு தாக்குதல், காயம் ஏற்படுது. அது மனிதருக்கு எதிரான குற்றம். அப்படிப் பயணத்தில் ஒரு நபர் இருந்து அவர் பாதிக்கப்பட்டால், இந்தப் பாதிக்கப்பட்ட நபர் குடியிரு இருக்கிற இடம், அவர் அந்த ஜாயின்ல போய்ச் சேர வேண்டிய இடம், அந்த இடத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு அதிகாரம் வரணும், உண்டு.

அதே மாதிரி பயணத்தில் இருக்கும் பொருள், அந்தப் பொருள் எங்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமோ. இப்போ தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொல்கத்தா காணிக்கட்டுன்னு சொல்லக்கூடிய கொல்கத்தாவுக்கு எடுத்துட்டு போறாங்க. அப்படின்னா இந்தக் கப்பல்ல போகிற அந்தப் பொருட்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்ததுன்னு சொன்னா, அது வந்து கல்கத்தாவில் உள்ள நீதிமன்றம் விசாரிக்கிறதுக்கும் அதிகார வரம்பு உண்டு அப்படின்னு இந்தச் செக்ஷன் 203-ல் சொல்றாங்க.

இப்போ சில உதாரணங்கள் மூலமா பார்க்கலாம். ஒரு மைனர் பெண், மைனர் கேர்ள், தகப்பனாருடன் மதுரையில வசிக்கிறார். எதிரியுடன் பழக்கம் ஏற்பட்டு, எதிரியுடன் மதுரையிலிருந்து ஒரு இன்னோ கார்ல கிளம்பி திருநெல்வேலியில போய்ச் சேர்றார். சில காலத்துக்குப் பிறகு இந்த மைனர் கேள் அவர் வந்த நகருடன் போய் சாத்தூர்ல குடியேறுறார். மதுரையில அப்பாவும் மைனர் கேளும் குடியிருக்கிறாங்க. மதுரையிலிருந்து ஒரு எதிரி கூட பழக்கம் ஏற்பட்டு திருநெல்வேலிக்கு கிளம்பி வராங்க. திருநெல்வேலியில கொஞ்ச நாள் இருந்த பிறகு சாத்தூர்ல போய் குடியேறுறாங்க. அப்படி சாத்தூர்ல குடியேறும்போது அவர் மைனராவே இருக்கிறார். இது ஒரு கிட்னாப்பி, குழந்தை கடத்தல். இந்தக் கடத்தல் குற்றத்தை எந்த ஊர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்? மதுரையில, திருநெல்வேலியில, சாத்தூர்ல இருக்கக்கூடிய மூன்று நீதிமன்றங்களுக்குமே அதிகாரம் உண்டு. இந்த மூன்றில் ஏதாவது ஒரு நீதிமன்றத்துல இந்த வழக்கு தொடர்பான குற்ற இறுதி அறிக்கையை நாங்கள் செய்யலாம். இது ஒரு உதாரணம் பார்த்தோம்.

அடுத்தது, குற்றம் செய்வது அல்லாமல் குற்றத்துக்கு உடந்தையா இருக்கிறது. அபாட்மென்ட். இந்தக் குற்ற உடந்தை எங்கு வைத்து நிகழ்ந்ததோ, அவ்வாறு நிகழ்ந்த இடத்தின் மீது அதிகாரம் கொண்டிருக்கக்கூடிய நீதிமன்றத்துக்கு அந்தக் குற்ற உடந்தையை விசாரிப்பதற்கு அதிகாரம் உண்டு.

இப்போ இன்னொரு விதமான உதாரணத்தைப் பார்க்கப் போறோம். A, B அப்படின்னு இரண்டு நபர்கள். A-யும் ஒரு நபர், B-யும் ஒரு நபர். A என்கிறவர் சென்னையிலிருந்து ஒரு ஈமெயில் அனுப்புறார். நாகர்கோவில்ல இருக்கக்கூடிய B அப்படிங்கிற நபருக்கு விரட்டல் விடுகிறார். என்ன விரட்டல் விடுறாரு? இந்த B என்கிற நபர் வந்து ஒரு பெண்ணுடன் தகாத நிலையில் இருக்கிற மாதிரி ஒரு புகைப்படம், ஒரு பெண்ணும் B-யும் சேர்ந்து இருக்கிற ஒரு புகைப்படம். இந்தப் புகைப்படத்தை வெளியிட்டா இந்த B-யோட குட்வில் பாதிக்கப்படும். அதனால A என்ன சொல்றாரு? B கிட்ட இந்த மாதிரி புகைப்படத்தை அனுப்பி, இதை வந்து நான் வந்து வெப்சைட்ல வெளியிட்டு விடுவேன் அல்லது வாட்ஸ்அப்புலயோ, பேஸ்புக்லயோ, சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணிருவேன் அப்படின்னு ஈமெயில் மூலமா விடுறாங்க. நீங்க ஒரு ₹10 லட்சம் ரூபாய் கொடுத்துட்டீங்கன்னு சொன்னா, இந்தப் படத்தை நான் உங்ககிட்டயே ஒப்படைச்சேன்.

அப்போ A-ங்கிற நபர் ஈமெயில் அனுப்புனது சென்னை. நாகர்கோவில்லையில் இருக்கக்கூடிய B வந்து அவருடைய வீட்டுல இருக்கிற கம்ப்யூட்டர்ல அதைப் பார்க்கிறார். அப்போ எந்த நீதிமன்றில் இந்தக் கேஸை விசாரணை செய்கிறது அப்படின்னா, A-ங்குற நபர் சென்னையிலிருந்து அனுப்புனதுனால சென்னையில இருக்கக்கூடிய நீதிமன்றத்துக்கு விசாரிக்கக்கூடிய அதிகாரம். இது B நாகர்கோவில்ல இருக்கிறார். அப்போ நாகர்கோவில்லில் இருக்கக்கூடிய நீதிமன்றத்துக்கும் இதை விசாரிக்கிறதுக்கு அதிகாரம் இருக்கிறது அப்படின்னு இரண்டு நீதிமன்றத்துக்குமே அதிகாரம் இருக்கு. இது செக்ஷன் 202-க்குக் கீழ் வருது. செக்ஷன் 202-க்கு ஒரு உதாரணமா இதைப் பார்க்கலாம். சென்னையில இருக்கக்கூடிய நீதிமன்றத்துக்கும் அதிகாரம் உண்டு. நாகர்கோவில்லையில் இருக்கக்கூடிய நீதிமன்றத்துக்கும் அதிகாரம் வரப்போகுது அப்படிங்கறதுனால, இந்த இரண்டுல ஏதாவது ஒரு நீதிமன்றத்துல வழக்கு விசாரணை நடத்தலாம்.

திருட்டு சம்பவத்துக்குப் பார்த்தீங்கன்னா, மூணு இடம் வருது. திருட்டு நடந்த இடம், எதிரி திருட்டுப் பொருளுடன் பிடிபட்ட இடம், மூணாவதா திருடப்பட்ட பொருள் மறைத்து வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் அப்படின்னு மூன்று இடங்கள் வருது.

இப்படி இந்த மாதிரி குற்றவியல் நீதிமன்றங்களுடைய அதிகார வரம்பு தொடர்பாக செக்ஷன் 197-லிருந்து 203 வரைக்கும் நாம் வந்து பார்த்திருக்கிறோம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Application for certified copies in the Court (Model / Form in pdf)Application for certified copies in the Court (Model / Form in pdf)

Views: 75 Model-1 Model-2 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய விளக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய விளக்கம்.

Views: 18 நுகர்வோர் யார் என்பதன் விளக்கம்.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நுகர்வோர் என்பதன் விளக்கம், “காசு கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ, தன் சொந்த உபயோகத்திற்காக பெறும் ஒருவர் நுகர்வோராவார். அவர் அப்பொருளுக்கான விலையை முழுமையாகவோ, பகுதியாகவோ செலுத்தி

Patta is to be issued who residing in PORAMPOK land for more than 5 years. Tamilnadu Govt issued GO. புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசானை வெளியிட்டதுPatta is to be issued who residing in PORAMPOK land for more than 5 years. Tamilnadu Govt issued GO. புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசானை வெளியிட்டது

Views: 19 புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசானை வெளியிடபட்டதுஅரசுக்கு தேவையில்லா புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கிட அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நீர்நிலைகள் புறம்போக்கு உள்ளாட்சிக்கு