GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட மனுக்கள் பார்க்கில் விளையாடும் குழைந்தைகளை தடுத்ததற்காகவும் திட்டியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் மனு .

பார்க்கில் விளையாடும் குழைந்தைகளை தடுத்ததற்காகவும் திட்டியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் மனு .

புகார் 

புகார்தாரர்கள் தேதி: 09-09-2026 

குடியிருப்பு வாசிகள் 

வள்ளல் சீதக்காதி வீதி 

காரைக்கால்-609602

பெறுநர்:

ஆய்வாளர் அவர்கள் 

நகர காவல் நிலையம் 

காரைக்கால்-609602

ஐயா,

மேற்படி தெருவில் குடியிருக்கும் எங்களுடைய குழந்தைகளை, (8 வயது முதல் 18 வயது வரை) பள்ளி முடித்து வீட்டுக்கு திரும்பியதும், வீட்டுப்பாடங்கள் முடித்துவிட்டு, சுமார் மாலை 10:00 வரை தெருவில் விளையாடுவது,  பல வருடங்களாக வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், அதே தெருவில், சுமார் 20,000 சதுரடிகள் கொண்ட, ஒரு இடம், அதே தெருவை சேர்ந்த திரு MM. யாகூப் மகன் MMY ஹமீது மரைக்கார் அவர்களுடைய அனுபோகத்தில் இருந்ததை, திரு MMY ஹமீது அவர்கள் தானே முன் வந்து மேற்படி இடத்தை காரைக்கால் நகராட்சி விட்டுக்கொடுத்து, இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் திரு AMH நாஜிம் அவர்களுக்கு, கோரிக்கை வைத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 22,11,000 லட்சத்திற்கு  ஒரு சிறுவர்கள் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைத்து கொடுத்தார். 

மேற்படி, சிறுவர் விளையாட்டு பூங்கா, ஒன்றரை வருடத்திற்கு முன்பாக தெற்குக்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு AMH நாஜிம் தலைமையில் திறக்கப்பட்டுவிட்டது. அதில் எங்கள் வீட்டு  சிறுவர்கள் விளையாட தொடங்கினர். 

ஆனால், எண்-50, வள்ளல் சீதக்காதியில் வசிக்கும் திரு உமர் ஹத்தா, என்ற நபர், மேற்படி விளையாட்டு பூங்காவின் பெரிய கேட்டை, தன்னிச்சையாக ஒரு பூட்டை போட்டு பூட்டி வைத்துள்ளார், இந்த செயலை நாங்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கிறோம். அதனால் சிறிய கேட் வழியாக எங்கள் வீட்டு  சிறுவர்கள் அவ்வப்போது சென்று விளையாடி வருகிறார்கள். ஆனால், மேற்படி திரு உமர் ஹத்தா, எங்கள் பிள்ளைகளை தினமும் கொச்சை வார்த்தைகளை கொண்டு (எந்த தேவடியா பிள்ளைகளும், எந்த ஹராமியும் இங்கே விளையாடக்கூடாது என்றும், என்ன மயிருக்குடா இந்த பார்க்குக்கு வரீங்க, என்றும், உங்களை விளையாட விட்டுவிட்டு, வாப்பா, உம்மா, என்ன புடுங்கிகிட்டா இருக்காங்க போன்ற வார்த்தைகளை கொண்டு) தினமும்  திட்டுவதோடு, கல் மற்றும் கட்டைகளை எடுத்து அடித்து,  வெளியே விரட்டி விடுகிறார். மேலும், விளையாடும் பிள்ளைகளின் செருப்புக்களை எடுத்து தூரமாக வீசி விடுகிறார். பிள்ளைகள் தொடர்ந்து விளையாடாமல் இருக்க டியூப் லைட்டை உடைத்து கொட்டிவிடுவேன் என்று பெற்றோர்களையும் மிரட்டுகிறார். 

இதனால், தெருவில், அவருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் அடிக்கடி வாய் சண்டை வருகிறது, சில நேரங்களில் அந்த வாய் சண்டை முற்றி, கைகலப்பு முதல் சென்றுவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக 08-09-2026 மாலை சுமார் 9:00 மணிக்கு, விளையாட்டு பூங்காவிலும், தெருவிலும் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை பல தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி விரட்டி விட்டார். அதனால், தெரு மக்கள் ஒன்று கூடி சண்டையாகிவிட்டது. 

எங்களுடைய பிள்ளைகள் மாலை 10:00 மணிவரை விளையாட பெற்றோர்களாகிய நாங்கள் அனுமதிக்கிறோம், மேலும், மாலை 10:00 மணிவரை விளையாட எந்த சட்டமும் தடுக்கவில்லை. 

காண்க: 

The Right to Play vs. Public Nuisance

  • Fundamental Right: Courts view recreation as an integral part of a child’s development under Article 21 (Right to Life and Personal Liberty) of the Constitution of India. Residents cannot completely lock children out of public parks or common playgrounds.
  • Noise Regulations: Under the Noise Pollution (Regulation and Control) Rules, 2000, the use of loud equipment or activities causing severe disturbance in residential areas is restricted, especially after 10:00 PM. Playing quietly or normally until 9:00 PM or 10:00 PM is generally acceptable, but shouting or causing a heavy disturbance late into the night can sometimes be contested by residents as a “public nuisance” under Section 268 of the Indian Penal Code (now Section 290 of the Bharatiya Nyaya Sanhita, 2023).

எனவே,  மேற்படி விளையாட்டு பூங்காவை தன்னிச்சையாக பூட்டியதற்காகவும், எங்கள் பிள்ளைகளை தகாதா வார்த்தைகளை கொண்டு திட்டியதற்காகவும், விளையாடும் பிள்ளைகளில் சுதந்திரத்தில் இடையூறு செய்ததற்காகவும்  திரு உமர் ஹத்தா மீது தகுந்த முறையில், நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பூங்கா கேட் சாவியை பெற்று, சிறுவர்களில் பொறுப்பான எவருக்கேனும் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு வள்ளல் சீதக்காதி தெருவாசிகள்.

எண் பெயர் விலாசம்  கையொப்பம் 
1
2
3
4
5
6
7
8
9
10
11
12

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை மீது சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்.கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை மீது சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்.

Views: 48 *அரசுக்கு கோரிக்கை மனு வழங்கி எந்தவொரு நடவடிக்கையும் – பதிலும் அரசுத்துறை வழங்காமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நீதி நடவடிக்கை மேற்கொள்ள சட்ட அறிவிப்பு எனும் லீகல் நோட்டீஸ் மாடல்* *சட்டம் அறிவோம்! மக்கள் அதிகாரத்தை பயன்படுத்துவோம்!*

பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம்.பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம்.

Views: 113 பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி 2023 மாதிரி விண்ணப்பம் தகவல்அறியும்உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் 7(1)ன்கீழ்பதிவுஅஞ்சல் மூலம் தகவல் வேண்டி மனு.* அனுப்புனர்: பெறுநர்: பொதுத் தகவல் அலுவலர்

இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 இன் கீழ் மாதிரி மனு :இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 இன் கீழ் மாதிரி மனு :

Views: 48 இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 இ ன் கீழ் மாதிரி மனு : அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள், “இந்திய சாட்சிய சட்டம் 1872-ன் பிரிவு 74” – ன் கீழ்