GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் காவல்துறை பதிவு செய்த பொய் வழக்கை நிருபிக்க தேவையான ஆதாரங்களை காவல் துறையிடம் இருந்தே பெற்று பொய் வழக்கு என்று நிருபிக்கலாம்.

காவல்துறை பதிவு செய்த பொய் வழக்கை நிருபிக்க தேவையான ஆதாரங்களை காவல் துறையிடம் இருந்தே பெற்று பொய் வழக்கு என்று நிருபிக்கலாம்.

காவல்துறை பதிவு செய்த பொய் வழக்கை நிருபிக்க தேவையான ஆதாரங்களை காவல் துறையிடம் இருந்தே பெற்று பொய் வழக்கு என்று நிருபிக்கலாம்.
(AWARENESS INFORMATION)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6 உட்பிரிவு 1 இன் கீழ் மனு.

மனுதாரர்..

பெறுநர்.

பொதுத் தகவல் அலுவலர்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,

பொருள்..மாவட்டம்,…..உட்கோட்டம், ………..காவல் நிலையத்தில் தொடர்பான கீழ்காணும் தகவல்களை வழங்க வேண்டுகிறேன்.

பார்வை..

…..காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை எண்: —– / 202. நாள்:

கோரப்படும் ஆவணங்கள்.

  1. புகார்தாரர் அளித்த புகார் மனுவின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  2. முதல் தகவல் அறிக்கையின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  3. புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு அனுப்பிய அழைப்பாணை யின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  4. புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்களிடம் விசாரணை செய்து விசாரணை அலுவலர் பெற்ற வாக்குமூலத்தின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  5. விசாரணை அலுவலர் இறுதியில் தயார் செய்து தங்கள் மேல் அலுவலர்களுக்கு அனுப்பிய விசாரணை இறுதி அறிக்கையின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  6. மேற்படி முதல் தகவல் அறிக்கையில் கைதாகி பிணையில் வந்த அந்த பிணை ஆவணங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  7. மேற்படி முதல் தகவல் அறிக்கை மீது கு.வி.மு.ச 1973 பிரிவு 161(3) இன் படி அரசு தரப்பு சாட்சியாக எத்தனை நபர்கள் விசாரிக்கப்பட்டனரோ அவர்கள் ஒவ்வொருவரும் அளித்த வாக்குமூலங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  8. மேற்படி முதல் தகவல் அறிக்கையில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை முகப்புரை கடிதத்துடனான ஆவணங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  9. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமான வழக்கு எந்த நீதிமன்றத்தில் எந்த தேதியில் எண்ணிப் பட்டுள்ளது என்ற விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  10. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக புலன் விசாரணை நடத்திய புலன் விசாரணை அலுவலரின் பெயர், பதவி, தொடர்பு எண், தற்போது பணிபுரியும் காவல் நிலையம் மற்றும் பதவி ஆகியவற்றை வழங்க வேண்டுகிறேன்.
  11. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக தயார் செய்த படிவம் – 93 இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  12. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173 இன் கீழ் தயார் செய்த இறுதி அறிக்கையின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  13. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக ———— ஆம் தேதி முதல் —————நளது தேதி வரை பராமரிக்கப்பட்ட பார்வை மகஜர் (Observation Mahazar) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  14. ————-ம் தேதி முதல் ————–நளது தேதி வரை பராமரிக்கப்பட்ட வழக்கு நாட்குறிப்பு (Case Diary) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  15. ——————–ஆம் தேதி முதல் ——————நளது தேதி வரை பராமரிக்கப்பட்ட பொது நாட்குறிப்பு (General Diary) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  16. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட சமுதாய பணிப் பதிவேட்டின் (Community Service Register – CSR) இன் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  17. ——–ஆம் தேதி முதல் ——-நளது தேதி வரை பராமரிக்கப்பட்ட உயர் அலுவலர்கள் ஆய்வு பதிவேட்டின் (Inspection Register) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  18. ——ஆம் தேதி முதல் —-நளது
    தேதி வரை பராமரிக்கப்பட்ட அலுவல் பதிவேடுகள் (Duty Register) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  19. —————-ஆம் தேதி முதல் ——————-நளது தேதி வரை பராமரிக்கப்பட்ட பணப் பதிவேடுகள் (Cash Register) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  20. முதல் தகவல் அறிக்கை அட்டவணைப் பதிவேடு (FIR Index Register) இன் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  21. ——–ஆம் தேதி முதல் —-நளது தேதி வரை பராமரிக்கப்பட்ட கட்டளைப் பதிவேடுகளின் (Process Register) அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  22. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக விசாரணை அலுவலர் தயார் செய்த பார்வை மகஜர் இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  23. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமான படிவம் 81 (பொது நாட்குறிப்பு) இன் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  24. மேற்படி முதல் தகவல் அறிக்கை சம்பந்தமாக விசாரணை அலுவலர் குற்றம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தயார் செய்த மாதிரி வரைபடத்தின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.
  25. மேற்படி FIR இல் சொல்லப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தால் பிணைப்பத்திரத்தின் ஒளிநகல்கள், பிணை வழங்கியதற்கான ஜாமீன் மனுவின் ஒளி நகல்கள் or ஜாமீன் பெறப்பட்டு இருக்குமாயின் நீதிமன்ற உத்தரவு நகல்களை தர வேண்டுகிறேன்.
  26. மேற்படி முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரிகளுக்கு அனுப்பிய 41A அழைப்பாணை யின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்க வேண்டுகிறேன்.

இடம்.

நாள்.

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Domestic Violence Act | By Senior Advocate N.Swaminathan, Mannarkudi | Trichy Bar Association |Domestic Violence Act | By Senior Advocate N.Swaminathan, Mannarkudi | Trichy Bar Association |

Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

உச்ச நீதிமன்றமும் அதான் தீர்ப்புறைகளும்.உச்ச நீதிமன்றமும் அதான் தீர்ப்புறைகளும்.

Views: 16 நம் நாட்டின் நீதியமைப்பில் உச்ச நீதிமன்றமே தலை. இந்திய அரசமைப்புச் சட்டம் அதனை உறுதி செய்யும் வகையில், ”உச்ச நீதிமன்றத்தால் விளம்பப்பட்ட சட்டம் இந்திய ஆட்சிப் பரப்பிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுறுத்துதல் வேண்டும்” [அரசமைப்புச் சட்டப் பிரிவு141] எனப் பரந்த அதிகாரத்தை

SARFAESI Act மூலம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்திற்கு Recovery Tribunal (DRT) வழியாக நிவாரணம் பெற முடியும்.SARFAESI Act மூலம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்திற்கு Recovery Tribunal (DRT) வழியாக நிவாரணம் பெற முடியும்.

Views: 15 SARFAESI Act மூலம் சொத்து பறிமுதல் செய்யப்பட்டவர், தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணரும்போது, Debt Recovery Tribunal (DRT) வழியாக நிவாரணம் பெற முடியும். கீழே அதன் முழுமையான விளக்கம் மற்றும் நடைமுறை வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது: ✅ நிவாரணம் பெறும்