GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் இனாம் நிலங்கள் என்றால் என்ன? இனாம் ஒழிப்பு என்றால் என்ன?

இனாம் நிலங்கள் என்றால் என்ன? இனாம் ஒழிப்பு என்றால் என்ன?

இனாம் நிலம்( inam land)

இனாம் நிலங்கள் என்றால் என்ன
இனாம் ஒழிப்பு என்றால் என்ன
என்பதை எளிமையாக மக்களுக்கு
புரியவைப்பதற்காக இந்த பதிவு

ஆங்கில ஆட்சிக்கு முன்பு
இந்தியா 562 சமஸ்தானங்களாக இருந்தது.
இந்து மற்றும் முஸ்லிம்
மன்னர்கள் அந்த சமஸ்தானங்களை
ஆட்சி செய்து வந்தார்கள்.

அன்றைய காலத்தில் அனைத்து
சமஸ்தானங்களிலும் முக்கிய தொழிலாக
இருப்பது விவசாயமாகவே இருந்தது.

மன்னர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட
நிலங்களை பல்வேறு தரப்பினருக்கு தானமாக
அல்லது பரிசாக கொடுப்பதை வழக்கமாக
வைத்திருந்தார்கள் அதற்கு இனாம் நிலங்கள்
என்றும் மானிய நிலங்கள் என்றும்
சொல்லப்படுகிறது.

இனாம் என்ற சொல் உருது மொழி
சொல்லாகும் மானியம் என்பது வடமொழி
சொல்லாகும் இரண்டுக்கும் ஒரே பொருள்
தான்.

இந்த இனாம் நிலங்கள்
பல்வேறு வகையான பெயர்களில்
அழைக்கப்பட்டது.

தச்சர்கள், சலவை தொழிலாளர்கள்,
புலவர்கள், படை வீரர்கள், தேவதாசிகள்,
என்று தனிமனிதர்களுக்கும் தேவஸ்தானங்கள்
கோயில்கள் சர்ச்கள் போன்ற மதவழிபாட்டு தலங்களுக்கும் குளம் குட்டை ஏரிகள் போன்ற
நீர்நிலைகளை ஏற்படுத்துவதற்கு என்றும்
பல்வேறு தனி நபர்களின் பெயரிலும் அல்லது
குழுக்களின் பெயரிலும் அல்லது பொதுவாக
தர்ம காரியங்கள் மத வழிபாட்டு தளங்களுகானது என்று பொதுவாகவும்
இனாம் நிலங்கள் வழங்கப்பட்டன.

ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் என சிறு
நிலங்கள் தொடங்கி முழு கிராமத்தையும்
இனாமாக கொடுக்கும் வழக்கமும்
இருந்தது.

இந்த இனாம் நிலங்களுக்கு மன்னர்கள்
வரி வசூலிக்க மாட்டார்கள் அரசுக்கு வரி
செலுத்தாமல் இனாம் நிலத்தை அனுபவிக்கும்
உரிமை பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை
தொடர்ந்தது.

அரசுக்கு விவசாய நிலங்களில் இருந்து
கிடைக்கும் வரி வருமானத்திற்கு ரெவன்யூ
என்று அழைக்கப்பட்டது அதன்படி வரி விதிக்கப்படும் நிலங்கள் ரெவன்யூ நிலங்கள்
என்றும் வரி விதிக்கபடாத நிலங்களை
இனாம் நிலங்கள் என்றும் சொல்கிறோம்.

இந்த வரி விதிக்கப்படாத இனாம்
நிலங்கள் யாருக்கு கொடுக்கப்படுகிறதோ
அவர்கள் இனாம்தாரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இந்த இனாம் நிலங்களை கணக்கிட்டு
பதிவு செய்து பராமரிக்க B Register என்றும்
வரி செலுத்தப்படும் நிலங்களை பராமரிக்க
A Register என்றும் அரசு நிர்வாக தஸ்தாவேஜூகளாக பராமரிக்கபட்டன.

ஆங்கிலேயே அரசு
இனாம் நிலங்கள் மீது வரி விதித்து வரி வசூலித்து
அரசுக்கு வருவாய் ஏற்படுத்துவதற்காக
அவற்றை ரயித்வாரி நிலங்களாக
மாற்றுவதற்காக

இனாம் நிலங்களை கணக்கிட்டு
பதிவு செய்தார்கள்

Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1963
என்கின்ற சட்டத்தை இயற்றி இனாம்
நிலங்களை ரயித்வாரி நிலங்களாக மாற்றினார்கள்.

ரயித்வாரி என்றால் விவசாயநிலவரி
என்று பொருள். ரயித் என்ற அரபு சொல்லிற்கு
விவசாயம் என்று அர்த்தம்.

இனாம் ஒழிப்பு சட்டப்படி
இனாம் தாரர்களிடம் இருந்து நிலங்களை
ஆங்கிலே அரசு பிடுங்கி கொண்டு
இனாம் நிலங்களை ஒழித்துவிட்டார்கள்
என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்‌

உண்மை என்னவென்றால்
இனாம் அபாலிஷன் சட்டபடி
யாருடைய இனாம் நிலங்களும் அரசு
எடுத்துகொள்ளாது
இனாம் நிலங்களின் உரிமையாளர்களின்
உரிமை மாறாது
வரி மட்டும் வசூலிக்கபடும்.

இதுவரை
வரி செலுத்த வேண்டிய அவசியம்
இல்லை என்கின்ற இனாம் நிலங்கள் வரி செலுத்தக்கூடிய நிலங்களாக மாற்றம்
பெற்று அனைத்து இனாம் நிலங்களும்
B Register பதிவேடுகளில் இருந்து
A Register பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டன .

இனாம் நிலங்களில்
Inam village என்பது ஒட்டுமொத்த
கிராமமே இனாமாக தர்ம காரியத்திற்காக கொடுக்கப்பட்டு இருக்கும்.
அப்படிப்பட்ட இனாம் நிலங்களை
இனாம் அபாலிஷன் சட்டம் institution
என்று குறிப்பிடுகிறது.

இந்தவகை இனாம் நிலங்கள் தான்
தற்சமயம் திருச்சி அருகே உள்ள இனாம்
கிராமங்களான வக்ஃபு வாரியத்தால்
இனம் காண பட்டவை .

இந்த வகை இனாம் கிராமங்கள்
எந்த மதத்தின் பெயரால் வழங்கபடுகிறதோ
அந்த மத சட்டபடி நிர்வகிக்கப்படும்.

திருச்சி அருகே உள்ள வக்ஃபு வாரியத்தால்
இனம் காணப்பட்ட இனாம் கிராமங்கள் ‌
வக்ஃபு நிறுவனத்தின் கட்டுபாட்டில்
வருபவை.

இந்த இனாம் கிராமங்களில்
விவசாய நிலங்களாக பயன்படுத்த படும்
நிலங்களை பொருத்தவரை
தொடர்ந்து விவசாயிகள் அனுபவத்தில்
இருக்கலாம் ஆனால் அவர்கள்
வக்ஃபு வாரியத்திற்கு உரிய
குத்தகை தொகையை செலுத்தவேண்டும்.

மேற்படி நிலங்கள்
வக்ஃபு நிலங்கள் என்பதால்
0 மதிப்பு செய்யப்பட்டு
வாங்குதல் மற்றும் விற்பனை
தடைசெய்யப்பட வேண்டும்.

ஆனால் இந்த இனாம் கிராமத்திற்கு
சொந்தமான நிலங்களின் எல்லை மற்றும்
சரியான பரப்பளவு அறியாமல்
தமிழக வக்ஃப் வாரியம் செய்வது
அறியாமல் நிற்கிறது.

இந்த இனாம் நிலங்கள் பற்றிய
ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பு
மாவட்ட துணை ஆட்சியர் மற்றும்
மாவட்ட ஆட்சிதலைவரிடம் கொடுக்கப்பட்டு
உள்ளது.

தமிழகத்தில் சேலம் கோவை சென்னை தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் ஆவண காப்பகங்கள்
இருக்கின்றன .
இந்த ஆவண காப்பகங்களில் இனாம் நிலங்கள் சம்பந்தமான டைமில் டீடு
பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
இதை தவிர ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இனாம் நிலங்கள் சம்பந்தமான ஆவணங்கள்
பராமரிக்கப்பட்டு வரப்படுகின்றது.

இந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் இனாம் வக்ஃபு நிலங்களின்
ஆவணங்களை முறையாக வக்ஃபு வாரியம் கண்டறியாமலும் பராமரிக்காமலும் சரியாக நில அளவை செய்யாமலும் இருக்கின்றது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும்
மேற்பட்ட இனாம் கிராமங்கள் இருக்கின்றன
அவைகளை கண்டறிந்து
வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து தரிசாக கிடக்கும்
நிலங்களை ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு
உகந்ததாக மாற்றியமைக்க
வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.


எம்.ரஹ்மத்துல்லா B.A,B.L.,
தலைவர்
தமிழ் நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில்

8610496476

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கிராம நிர்வாக அலுவலகம் (VAO) பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்கிராம நிர்வாக அலுவலகம் (VAO) பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்

Views: 35 கிராம நிர்வாக அலுவலகம் (VAO), பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள். கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள, வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராம கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. தாலுக்கா “அ” பதிவேடுடன், கிராம

பெற்றோரை பராமரிக்காமல் விட்டால், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்படும்!”பெற்றோரை பராமரிக்காமல் விட்டால், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்படும்!”

Views: 11 🚨”பெற்றோரை பராமரிக்காமல் விட்டால், பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்படும்!” மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், 2007-ன் Section 23-ன் கீழ், பெற்றோரை கைவிட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வருவாய் கோட்டாட்சியர்

Benami Transactions (Prohibition) Amended Act, 2016 பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016Benami Transactions (Prohibition) Amended Act, 2016 பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016

Views: 19 பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016 பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016 (Benami Transactions (Prohibition) Amended Act, 2016), ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில் உள்ள பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம்