GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் புதிய வழக்குகள் ஈபைலிங் கட்டாயம் உயர் நீதிமன்ற அறிவிப்பு

புதிய வழக்குகள் ஈபைலிங் கட்டாயம் உயர் நீதிமன்ற அறிவிப்பு

வழக்குகள் ஈபைலிங் கட்டாயம் உயர் நீதிமன்ற அறிவிப்பு

e-filing தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற IT &Statistics பதிவாளரின் கடிதம் திருத்தப்பட்ட தமிழாக்கம் பின்வருமாறு :

அனுப்புநர்:
எஸ். கணபதிசாமி, B.A., B.L.,
பதிவாளர் (IT-cum-Statistics),
உயர்நீதிமன்றம், சென்னை – 104

பெறுநர்:

  1. சென்னை நகர சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி
  2. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் / மாவட்ட நீதிபதிகள்
  3. முதன்மை நீதிபதி, புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம்

மதிப்பிற்குரியவர்களுக்கு,

பொருள்: e-Courts Project – District Judiciaryயில் அனைத்து வழக்குகளுக்கும் e-Filing கட்டாயம் – திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியீடு – மாவட்ட நீதித்துறையில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குதல் குறித்து.

உயர்நீதிமன்றம் அறிவிப்பு எண் 265/2025 (24.09.2025) மூலம் அனைத்து வகை வழக்குகள், மனுக்கள், ப்ளீடிங்ஸ் மற்றும் ஆவணங்களுக்கும் e-Filing கட்டாயமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் திருத்த அறிவிப்பு எண் 327/2025 (10.12.2025) வெளியிட்டுள்ளது. அதன் படி:

  1. அனைத்து புதிய வழக்குகளும் e-Filing portal மூலம் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  2. தீர்ப்பு வழங்கப்பட்ட (disposed) வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் / petitions கைமுறையில் (physical mode) தாக்கல் செய்யலாம்.
  3. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் மனுக்கள் / petitions ‘Hybrid mode’ (physical + e-mode) இரண்டு முறையிலும் ஏற்கப்படும்.
  4. Family Court மணமுறிவு / matrimonial cases litigant (Party-in-Person) தாமே login உருவாக்கி e-File செய்ய வேண்டும்; பின்னர் Advocate நீதிமன்ற அனுமதியுடன் இணைந்து தொடரலாம்.
  5. Staff concerned வேலை நாட்களில் தினசரி SR Number வழங்க வேண்டும்; e-Filed வழக்குகளின் Scrutiny 3 working days இல் முடிக்கப்பட வேண்டும்.

மாவட்ட நீதிபதிகள் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்:

  1. e-Filed வழக்குகளுக்கு Filing No./SR No. தினசரி வழங்கப்பட வேண்டும்; எந்த pendencyயும் இருக்கக் கூடாது. Scrutiny Filing number கொடுத்த பிறகே செய்ய வேண்டும்.
  2. Advocates data / Certificates / EC / Sale Deed / Bank Statement போன்ற Digital வடிவில் இருக்கும் documents print எடுத்து மறுபடியும் scan செய்யாது நேரடியாக upload செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
  3. தேவைப்பட்டால் e-Seva Kendra வசதி பயன்படுத்தி ஆவணங்களை digitize செய்ய அறிவுரை வழங்க வேண்டும்.
  4. Signature ஏற்கனவே உள்ள ஆவணங்களுக்கு OTP பெறுவதை தவிர்த்து, Digital Signature / e-Signature பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
  5. Scrutinizing Officers e-Filed வழக்குகளின் Scrutinyயை 3 working days உள்ளே முழுமையாக செய்ய வேண்டும்; piece-meal return தவிர்க்க வேண்டும்.
  6. Scrutiny நேரத்தில் e-Filed வழக்குகளுக்கு physical copies பெறக்கூடாது; hearing/trial போது தேவையானால் மட்டும் பெறலாம்.
  7. Pending e-Filed cases இல் Bench Clerks உடனடியாக e-Filed documents verify செய்ய வேண்டும்.
  8. Manual filing செய்யப்பட்ட pending cases இல் மனுக்கள் Hybrid modeஇல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்; e-modeல் வந்த ஆவணங்களுக்கு physical copy insist செய்யக்கூடாது.
  9. Advocate entries சரியாகப் பதிவேற்றப்பட்டு, e-Filed documents எதிர்கட்சிக்கும் portal மூலம் பிரதிபலிக்க வேண்டும்.
  10. Documents அனைத்தும் தனித்தனியாக (petition, affidavit, sale deed etc.) upload செய்ய வேண்டும்; single file ஆக upload செய்யக் கூடாது.
  11. Advocates மற்றும் Staffக்கு e-Filing தொடர்பான periodical training வழங்க வேண்டும்.

மேலதிகமாக, மேற்கண்ட அனைத்து அறிவுறுத்தல்களும் மாவட்ட நீதித்துறையிலுள்ள Judicial Officers மற்றும் Technical team பின்பற்றுவதற்கான தேவையான உத்தரவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எஸ். கணபதிசாமி, B.A., B.L.,
பதிவாளர் (IT-cum-Statistics),
உயர்நீதிமன்றம், சென்னை – 104.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTI தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2J மற்றும் 2F படி நேரில் ஆய்வு.RTI தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2J மற்றும் 2F படி நேரில் ஆய்வு.

Views: 84 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் முழு விளக்கம்.

Views: 30 (இந்த பதிவு இன்னும் சரியாக திருத்தம் செய்யப்படவில்லை. எனவே, ஒலி வடிவில் கேட்பது சிரமம் ) தாய் பத்திரம் மூல பத்திரம் ஆதி பத்திரம் பற்றி தெரிந்து கொள்வோம் பத்திரம் எழுதும் போது சொத்தினை எழுதி கொடுப்பவர், தனக்கு

சென்னை மாநகராட்சியில் வீடுகளில் நிகழும் இயற்கை மரணங்களைத் தகனம்செய்ய மருத்துவரின் சான்றிதழ் அவசியமா?சென்னை மாநகராட்சியில் வீடுகளில் நிகழும் இயற்கை மரணங்களைத் தகனம்செய்ய மருத்துவரின் சான்றிதழ் அவசியமா?

Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.